ஒரே இரவில் 3 வெண்டைக்காயை தண்ணீரில் ஊறவைத்து குடித்தால் என்ன நடக்கும் எனதெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
அழகான பெண்களின் விரல்களை பார்க்கும்போது என்ன ஞாபகம் வரும். நாம் தினசரி பயன்படுத்தும் ஒரு காய்கறியின் பெயரை வைத்து தான் கூப்பிடுவோம். இப்ப உங்களுக்கு ஞாபகம் வந்திருக்குமே. ஆம் லேடீஸ் ஃபிங்கர் அதான் வெண்டைக்காய். அதைப்பற்றி இன்றைக்கு தெரிந்து கொள்ளலாம்.
காய்கறிகளில் எத்தனையோ சத்துக்கள் இருக்கிறது என்பது எல்லாருக்குமே தெரியும். இதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. நம்முடைய கண் பார்வையை பலப்படுத்துகிறது. சர்க்கரை ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கிறது.
இப்பொழுதெல்லாம் சாதத்தை குறைவாக எடுத்துக் கொண்டு காய்கறிகளை அதிகமாக சாப்பிட சொல்கிறது மருத்துவம். அனைவருக்கும் பிடித்தமான காய் வெண்டைக்காய். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் குழம்பு, வெண்டைக்காய் வற்றல், வெண்டைக்காய் ஃப்ரை, பக்கோடா இன்னும் நிறைய இருக்கிறது. விட்டமின் மினரல் பைபர் போன்ற சத்துக்களும் இருக்கிறது. இந்த வெண்டைக்காயை சாப்பிட்டால் நமது உடல் எடையும் குறையும். கொலஸ்ட்ரால் கண்ட்ரோலில் இருக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். இந்த மாதிரி சொல்லிக்கொண்டே போகலாம். வெண்டைக்காயில் எத்தனையோ நன்மைகள் இருக்கிறது.
இதையும் படிக்கலாமே ; கருஞ்சீரகம் யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது
இதில் போலிக் ஆசிட் ஆன்டி ஆக்ஸிடென்ட் இருப்பதினால் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும்..கணித பாடம் நன்றாக வரும் என்று நம் பெற்றோர்கள் கூறுவார்கள். அதனால் அவர்கள் குழந்தைகளுக்கு அதிகமாக கரியாக செய்து கொடுப்பார்கள்.
வெண்டைக்காயை பச்சையாக சாப்பிட்டாலும் நம் உடலுக்கு நல்லது. சிலர் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவார்கள். தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். இதயம் பலமாகும் கெட்ட கொழுப்பு குறையும் அதனால் இதயம் நன்றாக இயங்கும். அதனால் ஹார்ட் அட்டாக் வருவதும் குறைகிறது.
இவ்வளவு நன்மைகள் வெண்டைக்காயில் இருக்கிறது. முக்கியமாக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.. அதனால சளி இருமல் காய்ச்சல் ஆஸ்துமா போன்ற நோய்கள் வருவது குறைகிறது. பெண்களுக்கு பீரியட்ஸ் நேரத்தில் வரும் பிரச்சினை இருக்காது.. வெண்டைக்காயில் விட்டமின் சி அதிகமாக இருக்கிறது.
இதையும் படிக்கலாமே ; அனைத்து தோல் நோய்களும் குணமாக அருமையான மருந்து
ஜீரணம் சம்பந்தமான பிரச்சினை வராது.
வெண்டைக்காயை முதல் நாள் இரவு தூங்க போகும் முன் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெண்டைக்காய் ஊரிய தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் நிறைய நன்மைகள் கிடைக்கும். அதனால் ஜீரணம் சம்பந்தமான பிரச்சனை மற்றும் அசிடிட்டி மலச்சிக்கல் போன்றவை இருக்காது. வெண்டைக்காய் இருக்கிறதினால் எதை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகும்.
வெண்டைக்காயில் விட்டமின் சி விட்டமின் ஏ விட்டமின் பி இசட் பி11 இருக்கிறது. இது நம் உடலுக்கு மிகவும் நல்லது செய்கிறது. விட்டமின் ஏ நம்முடைய கண்பார்வை அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். எண்ணிக்கை அதிகமாகவே குளோபின் அதிகமாகவே எந்தவித நோயும் பக்கத்துல கூட வராது. விட்டமின் பி ஆல் நமது உடலில் ரத்தத்தில் சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும்.
ஒரு விதமா சொல்லணும்னா இந்த வெண்டைக்காயில் அனைத்து விதமான போஷாக்கு நிறைந்த சத்துக்களும் கிடைக்கிறது. அதனால் வெண்டைக்காயை சர்வ லோக நிவாரணி என்றும் சொல்லலாம். வெண்டைக்காயில் கர்ப்பிணிகளுக்கு தேவையான பைபர் போலிக் ஆசிட் அதிகமாக இருக்கிறது.
இது வரைக்கும் வெண்டக்காயில் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொண்டோம். அடுத்து நாம் எதை எதையெல்லாம் சாப்பிடக்கூடாது ஒரு வேளை சாப்பிட்டால் என்ன நடக்கும் என்ற விஷயத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
வெண்டைக்காயை சாப்பிட்ட உடனே நாம் சாப்பிட கூடாத உணவு பாகற்காய் முள்ளங்கி. இந்த காய் கறிகளை வெண்டைக்காய் சாப்பிட்ட உடன் சாப்பிட கூடாது. சாப்பிட்டால் நம்ம உடலில் வெள்ளை மச்சம் வர வாய்ப்புள்ளது. வெள்ளை மச்சம் மீன் சாப்பிட்ட உடன் பால் தயிர் சாப்பிட்டாலும் வரும்.
இதையும் படிக்கலாமே ; நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள்
வெள்ளை மச்சம்
வெள்ளை மச்சம் சிலருக்கு உடனே போய்விடும் சிலருக்கு உடனே போகாது. மேலும் வாய்வு பிரச்சனை வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. வெண்டைக்காயை சாப்பிட்ட உடனே முள்ளங்கி பாகற்காய் புடலங்காய் போன்ற காய்கறிகளை சாப்பிடக்கூடாது.
உங்களுடைய ஆரோக்கியம் குடும்பத்தில் இருக்கிறவர்களோட ஆரோக்கியத்தை காப்பாத்துவது உங்கள் கையில தான் இருக்கிறது. இப்பொழுது எல்லாம் ஹார்ட் அட்டாக் வருவதும் சாதாரண விஷயமாக இருக்கிறது. நாம் காய்கறிகளை குறைத்துவிட்டு கோழி இறைச்சி ஆண்டு இறைச்சி போன்றவற்றை அதிகமாக உட்கொள்கிறோம். இனிமேல் அசைவம் சாப்பிடுவதை குறைத்துக் கொண்டு காய்கறிகள் கீரைகள் பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டு நலமுடன் வாழ்வோம்.
