மாரடைப்பு வராமல் தடுக்கும் 10 உணவுகள்.

மாரடைப்பு வராமல் தடுக்கும் 10 உணவுகள்.



மாரடைப்பு


மாரடைப்பு என்றால் இதயத்தில் இருக்கக்கூடிய ரத்த குழாய்களில் கொழுப்புகள் படியும் பொழுது இதயத்தில் ரத்த ஓட்டம் குறைந்து இதயத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி செயல் இழந்து போகும் இதன் விளைவாக கடுமையான நெஞ்சுவலி  உண்டாகும். இதைத்தான் மாரடைப்பு என்று சொல்கிறோம் சமீப காலமாக  இந்த மாரடைப்பு அதிகரித்து வருகிறது  மட்டும் இல்லாமல் இளம் வயதிலேயே பலரும் இருதயம் சார்ந்த பிரச்சினைகளினால் மரணம் அடைவதை நாம் கேள்விப்படுறோம். 


இதற்கு என்ன காரணம் என்றால் மாறி வரக்கூடிய உணவுப்பழக்கம், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, கட்டுப்பாடு இல்லாத ரத்த சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போதிய உடற்பயிற்சி மற்றும் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமான காரணம்  இரத்தக்குழாய்களில் கொழுப்புகள் படிவதும் தினசரி நாம் சாப்பிடும் உணவுகளில் இருதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு போதிய சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடாமல் இருப்பது தான் முக்கியமான காரணம்.


ரத்த குழாய்களில் கொழுப்புகள் படியாமல் இருக்கவும் இருதயம் ஆரோக்கியமாக இருக்கவும் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.


ஒன்று : பச்சை காய்கறிகள் 


பச்சை காய்கறிகளான கீரைகள் பிரக்கோலி குடமிளகாய் போன்ற காய்கறிகளில் வைட்டமின் ஏ சி பி விட்டமின்ஸ் பாலிப்பினால் ஆன்டி-ஆக்சிடென்ட் என இருதயம் ஆரோக்கியமாக இருக்கிறது. தேவையான சத்துக்கள் அதிக அளவில் இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் எந்த ஒரு 100 கிராம் பச்சை காய்கறிகள் எடுத்துக்கொண்டாலும் அதில் ஐந்து கிராம் வரைக்கும்  நார்ச்சத்து இருக்கும் இது உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொழுப்பை கரைத்து ரத்தக்குழாய்களில் கொழுப்புகள் படிவதை தடுக்கும். அதனால் தினசரி சாப்பிடும் உணவுகளில் இந்த பச்சை காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்வது மூலமாகவும் இருதயம் சம்பந்தமான பிரச்சினைகள் வராமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.


இரண்டு : பெர்ரி பழங்கள்


ப்ளூபெர்ரி ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரிபோன்ற பழங்கள்  இருதயத்திற்கு மிகவும் நல்லது. இதிலே இருக்கக்கூடிய அதிகப்படியான பாலிபினால் மற்றும் ஆன்டிஆக்சிடென்ட் இரத்த குழாயில் உண்டாகக்கூடிய இன்ஃப்ளமேஷனை குறைப்பதும் மற்றும் கொழுப்புகள்  படியாமல் தடுக்கும். மேலும்  இருதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இருக்கவும் இதயம் சார்ந்த பிரச்சினைகள் வராமல் தடுக்கவும் மிகவும் உதவக்கூடியது பெரிஸ் பழங்கள். இந்த பெரிஸ் வகை பழங்களை சாப்பிடுவது மூலமாகவும் இருதய ஆரோக்கியத்தை  மேம்படுத்தலாம்.


மூன்று : மீன் 




அசைவ உணவுகளில் மிகவும் முக்கியமான ஒரு உணவு மீன். மீனில் ஒமேகா 3 ஒமேகா 6 போன்ற நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் இருக்கிறது. இது இருதயக் குழாய்களில் அடைப்பு உண்டாக்கக்கூடிய கெட்ட கொழுப்பை கரைத்து எஜுடிஎல் என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். குறிப்பாக மீன் வகைகளில் சால்மன் மத்தி கானாங்கெளுத்தி சூரை போன்ற மீன்களில் ஒமேகா 3 என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் இருக்கிறது. இந்த வகை மீன்களை வாரத்திற்கு ஒன்றில் இருந்து இரண்டு முறை சேர்த்து சாப்பிட்டு வந்தால் இருதயம் சார்ந்த பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.



இதையும் படிக்கலாமே ; கேன்சர் வருவதற்கான அறிகுறிகள்


நான்கு : பீன்ஸ் வகைகள்


பிளாக் பீன்ஸ், கிரீன் பீன்ஸ்,கிட்னி பீன்ஸ் சோயா பீன்ஸ் போன்ற பீன்ஸ் வகைகள் ரெசிஸ்டன்ஸ் டார்ச் என்று சொல்லக்கூடிய ஒரு வகை டார்ச்  அதிக அளவில் இருக்கிறது. இது வயிற்றில் இருக்கக்கூடிய நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்களுக்கு உணவாக அமையும். இது மட்டும் இல்லாமல் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கும் வயிற்றில் இருக்கக்கூடிய நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்களை அதிகரிக்கிறதனால்  இரத்தத்தில் இருக்கக்கூடிய கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதன் மூலமாகவும் இது சார்ந்த பிரச்சினைகள் வராமலும் நாம்  பாதுகாக்கலாம். 


ஐந்து : ஆப்பிள்


ஆப்பிளில் சாலிபுல் பைபர் என்று சொல்லக்கூடிய கரையக்கூடிய நார்ச்சத்து அதிக அளவில் இருக்கிறது. இது ரத்தத்தில் இருக்கக்கூடிய அதிக கொலஸ்டிராலை குறைக்கும் மற்றும் இதில் இருக்கக்கூடிய ஃப்ளோவனைட்ஸ் பாலிபினால்ஸ் என்கிற ஆன்டி ஆக்சிடென்ட் போன்றவற்றால் இருதயம் பாதிக்கப்படாமல்  பாதுகாக்கும்.


இது மட்டும் இல்லாம உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும் எல்டிஎல் என்று சொல்லக்கூடிய கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து ஹெச்டி என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் இதுபோன்ற ஏராளமான நன்மைகளை தரக்கூடியது ஆப்பிள். தினசரி ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டு வருவதன் மூலமாகவும் ஒரு 20% ஹார்ட் சம்பந்தமான பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும்.


ஆறு : மாதுளை 


மாதுளம் பழத்தினுடைய முக்கியமான பண்பு என்ன என்றால்  இரத்த நாளங்களில் இருக்கக்கூடிய அதிகப்படியான அழுத்தத்தை  குறைத்து இரத்த நாளங்கள் சீராக சுருங்கி விரியவும் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக இருக்கவும் உதவக் கூடியது மாதுளம் பழம். இருதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முக்கியமான ஒரு காரணம் ரத்த குழாய்களில் உண்டாகக்கூடிய இன்ஃப்ளமேஷன் தான். இந்த இன்ஃபிளமேஷனை தடுக்கும் ஆற்றல் மாதுளம் பழத்துக்கு உண்டு. மாதுளம் பழத்தை பழமாகவோ அல்லது ஜூஸாகவோ காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இருதயம் ஆரோக்கியமாக இருக்கும். 


இதையும் படிக்கலாமே ; ஆயுசுக்கும் கால்சியம் குறைபாடு வராமல் தடுக்கும் 10 உணவு வகைகள்


ஏழு : பாதாம் மற்றும் வால்நட்


 



பாதாம் மற்றும் வால்நட் இந்த இரண்டு நட்களில் நல்ல கொழுப்பு அமிலங்கள்  அதிக அளவில் இருக்கிறது. இதயத்திற்கு நன்மை தரக்கூடிய கொழுப்புகள் என்று சொல்லக்கூடிய அன்சாச்சினேட்டட் பேட்ரியாசிட் மறறும் மோனோ அன்சாச்சினேட்டட் பேட்ரியாசிட்  அதிக அளவில் பாதாம் மற்றும் வால்நட்டில் இருக்கிறது. விட்டமின் ஏ மற்றும் ஒமேகா திரி என்று சொல்லக்கூடிய கொழுப்பு அமிலங்களும் அதிக அளவில் இருக்கிறது. இது ரத்தத்தில் இருக்கக்கூடிய எல்டிஎல் என்னும் பேட் கொலஸ்ட்ரால் குறைத்து எச் டி எல் சொல்லக்கூடியது. இதன் மூலமாகவும் இரத்த குழாய்களில் கொழுப்புகள் படிவதை தடுக்க கூடியது பாதாம் மற்றும் வால்நட் தினசரி ஒரு கை பாதாம் அல்லது வால்நட் சாப்பிடுவதினால் இருதயம் சார்ந்த பிரச்சினைகள் வராமல்  பாதுகாக்கலாம்.


எட்டு : லவங்கப்பட்டை 


சின்ன மண் என்று சொல்லக்கூடிய  லவங்க பட்டைபல நூறு ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே உடல் எடையை குறைக்கவும் உடலில் இருக்கக்கூடிய அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைப்பதற்கும்  மக்கள் பயன்படுத்தி வரும் ஒரு அற்புதமான ஒரு வாசனை பொருள் லவங்க பட்டை. ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ராலால் அவதிப்படுபவர்கள் கால் டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடியுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவுகள் நார்மல் ஆகும்.  இதனால்  இருதயம் சார்ந்த பிரச்சினைகள் வராமல் தடுக்கக்கூடியது இலவங்கப்பட்டை.


ஒன்பது: பூண்டு 


பூண்டில் அல்லி சின் என்று சொல்லக்கூடிய பவர்ஃபுல்லான ஆன்டிசன் இருக்கிறது. இது நரம்புகளை பலப்படுத்தவும் நரம்புகள் சீராக சுருங்கிரியவும் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு  ரொம்பவே உதவக்கூடியது. இந்த பூண்டு இது மட்டும் இல்லாமல் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து இருதயத்தையும் பாதுகாக்க கூடியது பூண்டு. இதனால் தான் இருதயத்தின் நண்பன் என்று பூண்டை  சொல்கிறார்கள். தினசரி நான்கு பல் பூண்டுகள் சாப்பிட்டு வந்தால்  இருதயம் சார்ந்த பிரச்சினைகள் வராமல்  பாதுகாக்கலாம் .


இதையும் படிக்கலாமே ;நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த 10 காய்கறிகள்


பத்து : வெந்தயம் 


வெந்தயத்தில் 48%  நார்ச்சத்து நிறைந்திருக்கிறது இது ஒரு சிறந்த ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி ஏஜெட்டாக செயல்பட்டு இதயத்தில் உண்டாகக்கூடிய இன்ஃப்ளமேஷனை குறைக்கும்.   இரத்த குழாய்களில் கொழுப்புகள் படிவதையும் சுலபமாக கரைக்கக்கூடிய தன்மை இந்த வெந்தயத்திற்கு உண்டு. குறிப்பாக அதிக உடல் எடை மற்றும் சர்க்கரை நோய் போன்ற பிரச்சினைகள்  இருதயம் சார்ந்த பிரச்சினைகள் வராமல் தடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வெந்தயத்தை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த வெந்தயத்தையும் நீரையும் சேர்த்து பருகிவர சர்க்கரை நோய் கட்டுப்படுவது மட்டுமில்லாமல் சர்க்கரை நோயினால் வரக்கூடிய இருதயம் சார்ந்த பிரச்சனைக்களும் வராமல் பாதுகாக்கலாம்.


மாரடைப்பு என்று சொல்லக்கூடிய ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க என்ன மாதிரியான உணவுகள் சாப்பிடவேண்டும் என்பது பற்றி விரிவாக தெரிந்து கொண்டோம். 


மேலும் பல விபரங்கள் தெரிந்து கொள்ளஅதிகன் தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *