மறந்தும் இந்த 5 பொருட்களை யாருக்காவது தானம் கொடுத்தால் லட்சுமி சென்றுவிடுவாள்

 

மறந்தும் இந்த 5 பொருட்களை யாருக்காவது தானம் கொடுத்தால் லட்சுமி சென்றுவிடுவாள்.




சுமங்கலி கைகளால் தானம் பெறுவதும் சுமங்கலி கைகளால் தானம் கொடுப்பதும் மிகுந்த நன்மைகளை கொடுக்கக்கூடிய ஒரு பரிகாரமாக இருந்துகொண்டு இருக்கிறது. ஆனால் ஒரு சில ஐந்து பொருட்களை சுமங்கலி பெண்கள் தானமாகவோ பரிசாகவோ கொடுக்க கூடாது என்று சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  தானம் கொடுக்க கூடாத பொருட்கள் என்னென்ன எதனால் தானம் கொடுக்கக் கூடாது. அந்த முக்கியமான ஐந்து பொருட்கள் என்னென்ன?


சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தானமாக கொடுக்க கூடாத பொருட்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.


சுமங்கலி பெண்கள் வீட்டிற்கு வந்தால் வெறும் கையோடு அனுப்பக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். சுமங்கலி பெண்கள் மட்டும் அல்ல விருந்தினராக யார் வீட்டுக்கு வந்தாலும் அவர்களை நாம் வெறும் கையோடு அனுப்பாமல் தாம்பூலம் கொடுத்து அனுப்புவோம். அது மட்டும் இல்லாமல் பசியுடன் அனுப்ப கூடாது என்றும் சொல்லி இருக்கிறார்கள் நம்முடைய முன்னோர்கள். விருந்தினராக வந்தவர்களுக்கு ஒரு சொம்பு தண்ணீர் அல்லது நீர்மோர் கொடுத்து வழி அனுப்ப வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.


 இப்படி தானம் கொடுப்பதின் சிறப்பம்சங்களை நம்முடைய முன்னோர்கள் பல வகைகளில் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அப்படி இருந்தும் ஏன் ஐந்து பொருட்களை சுமங்கலி பெண்களின் கைகளால் தானம் கொடுக்க கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த ஐந்து பொருட்கள் என்னென்ன? 


ஒன்று : கண்ணாடி பொருட்களை தானம் கொடுக்கக் கூடாது.



குறிப்பாக முகம்பார்க்கும் கண்ணாடியை சுமங்கலி பெண்கள் யாருக்கும் தானமாக கொடுக்கக் கூடாது. முகம் பார்க்கும் கண்ணாடியில் மகாலட்சுமி வசிப்பதாக ஐதீகம். எப்பொழுதும் சுமங்கலி பெண்கள் கிழக்கு நோக்கி முகம் பார்க்கும் கண்ணாடியில் நெத்தியின் வகிடில் குங்குமத்தை வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் லட்சுமி கடாட்சம் பெருகும், வருமானம் உயரும், கைராசியாகும், பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. எனவே ஒருபோதும் கண்ணாடியை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கக் கூடாது. கண்ணாடி உடைந்தால் வீட்டில் இருக்கக் கூடாது என்று சொல்வதற்கும் இதுதான் காரணம்.


இரண்டு : குங்குமச்சிமிழ் 



இதையும் படிக்கலாமே : வழிபாடும் பரிகாரமும் – எதிரிகள் தொல்லையா? கோர்ட் கேஸ் பிரச்சனையா?


குங்குமச்சிமிழ் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு பொதுவாக தானமாக கொடுக்கிறார்கள் ஆனால் சுமங்கலி பெண்களுடைய கைகளால் குங்குமச்சிமிழ் தானம் கொடுக்கக் கூடாது அப்படி கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த வீட்டில் இருக்கும் ஆண்கள் கையால் கொடுப்பதுதான் நல்லது.


மூன்று : குத்துவிளக்கு



குத்துவிளக்கை யாருக்குமே தானமாக கொடுக்கக் கூடாது பல இடங்களில் இன்றும் பரவலாக குத்து விளக்கை பரிசாக அல்லது தானமாக கொடுக்கப்பட்டு வருகிறது. குத்து விளக்கை சுமங்கலி பெண்கள் தங்களுடைய கைகளால் மற்றவர்களுக்கு தானம் கொடுக்க கூடாது என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது அதில் மகாலட்சுமி பரிபூரணமாக நிறைந்திருப்பதால் உங்களுடைய கைகளால் குத்து விளக்கை தானம் கொடுத்தால் மகாலட்சுமி கடாக்ஷம் உங்களை விட்டு நீங்கி விடுவதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டு இருக்கிறது. 


நான்கு : கிழிந்த நிலையில் இருக்கும் ஆடைகள்.



ஒருவர் பயன்படுத்திய வஸ்திரத்தை கிழிந்த நிலையில் மற்றொருவற்கு தானம் கொடுப்பது மகா பாவமாக கருதப்படுகிறது. அதிலும் சுமங்கலி பெண்கள் கிழிந்த வஸ்திரங்களை மற்றவர்களுக்கு தானம் கொடுத்தால் அந்த வீட்டில் தரித்திரம் தாண்டவம் ஆடும். மூதேவி வந்து குடியேறுவாள் என்பது போன்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள உண்மை. எனவே எந்த காரணத்தைக் கொண்டும் கிழிந்த துணிமணிகளை எவருக்கும் தானம் கொடுத்து பாவத்தை சேர்த்துக் கொள்ளாதீர்கள். முடிந்தால் புதிய துணி அல்லது பழைய நல்ல நிலையில் இருக்கக்கூடிய துணிகளை தானம் கொடுப்பது நல்லது.


ஐந்து : லட்சுமி, லட்சுமி குபேரர் படங்கள்



செல்வ கடவுள்களாக இருக்கக்கூடிய லட்சுமி மற்றும் லட்சுமி குபேரர் படங்களை ஒருபோதும் சுமங்கலி பெண்கள் மற்றவர்களுக்கு தானம் கொடுக்கக் கூடாது. அதிலும் சுவாமி படங்களை தானமாக கொடுப்பவர்கள் கண்ணாடி போட்ட பிரேம் வைத்த படங்களை தானம் கொடுப்பது நல்லதல்ல.


இதையும் படிக்கலாமே :இதையும் படிக்கலாமே : வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 அதிர்ஷ்டம் தரும் மரங்கள்


சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மற்றவர்களுக்கு தானமாக அல்லது கடனாக கொடுக்க கூடாத பொருட்கள் என்ன என்று தெரிந்து கொள்வோம். 


பொதுவாகவே மாதக் கடைசியில் பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் நாம் ரேஷன் பொருட்களை கடன் வாங்குவதும் அவர்கள் நம்மிடம் கடன் கேட்கிறதும் வழக்கம். ஆனால் நாம் அப்படி கடன் கொடுக்கும் பழக்கம் வாஸ்துபடி தவறு என்பது உங்களுக்கு தெரியுமா? நாம் அப்படி கடனாக கொடுக்கும் சில பொருட்களால் லட்சுமி தேவி கோவம் அடைவார் என்று கூறப்பட்டுள்ளது. 


அவசர தேவை என்றால் மட்டுமே நாம் முதலில் நாடுவது அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களை மட்டும்தான் எதனால் என்றால் அவர்கள் நமக்கு உதவுவதும் நாஞ அவங்களுக்கு உதவுறதும் வழக்கமான விஷயம் தான். அது பணமாக இருந்தாலும் சரி பொருளாக இருந்தாலும் சரி மாதக் கடைசியில் நம்மிடம் இல்லாத பொருட்களை நாம் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கேட்போம். அதுபோல் அவர்கள் கேட்கும் போது நாமும் யோசிக்காமல் அவர்கள் கேட்கின்ற பொருட்களை கொடுத்து விடுவோம் ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி அது தவறு என்று  கூறப்பட்டிருக்கிறது. 


சில பொருட்களைசூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பகிர வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள். உங்கள் வீட்டின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் நேரடியாக தொடர்புடையது. ஒரு சில பொருட்கள் உங்கள் வீட்டின் நிம்மதியும் மகிழ்ச்சியும் நீங்கள் வீட்டினுள் வைக்கும் பொருட்கள், நடவு செய்யும் மரங்கள் மற்றும் செடிகள் நாம் மற்றவர்களுக்கு தானமாக வழங்கும் பொருட்கள் என அனைத்து விஷயங்களுடனும் தொடர்புடையது.


அரிசி



தானத்தில் சிறந்தது அன்னம் வழங்குவது என்று கேள்விப்பட்டிருப்போம் ஒருவரின் பசியை ஆற்றும் அன்னத்தை நாம் தானம் செய்வதன் மூலம் நமக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் தானத்தை பற்றி புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூறப்பட்டுள்ளது. ஆனால் வீட்டில் வைத்திருக்கும் அரிசியை அக்கம் பக்கத்தினர் கேட்டால் கொடுக்கக் கூடாது வாஸ்து சாஸ்திரத்தின் படி அரிசி சுக்கிர கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. அதனால் உங்கள் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு நீங்கள் அரிசியை கடனாக கொடுத்தால் உங்களுக்கு சுக்ரதோஷம் கிடைக்கும். இந்த சுக்ர தோஷம் காரணமாக உங்கள் வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். எதிர்மறை ஆற்றல் அதிகரித்து வீட்டில் உள்ளவர்களுக்கு மனமும் உடலும் பாதிக்கும்.


மஞ்சள் 



இதையும் படிக்கலாமே : அதிக சக்திவாய்ந்த பிரம்மமுகூர்த்த நேரத்தில் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்.. இப்படி வழிபாடு செய்யுங்கள்.


சமையலறையில் எப்போதும் காணப்படும் பொருட்களில் ஒன்று மஞ்சள். மஞ்சள் இல்லாமல் எந்த ஒரு சமையலும் முழுமையடையாது. மஞ்சள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். மஞ்சள் குரு பிரகஸ்பதி கடவுளுடன் தொடர்புடையது. அதாவது ஜோதிட சாஸ்திரத்தின் படி மஞ்சள் வியாழபகவானுடன் தொடர்புடையது எனவே மஞ்சள் தானம் செய்தாலோ அல்லது கடன் கொடுத்தாலோ குரு தோஷம் உண்டாகும். வியாழன் சிறந்த பலன் தரும் கிரகம் எனவே சமையலறையில் வைக்கப்படும் மஞ்சளை அஸ்தமனத்திற்கு பிறகு அண்டை வீட்டாரிடம் கடனாக கொடுக்கக்கூடாது.


உப்பு 



உப்பு நம் எல்லாருக்குமே தெரிந்த ஒரு விஷயம் தான். உப்பை எப்பொழுதுமே மற்றவர்களுக்கு கடனாக கொடுக்க கூடாது என்று சொல்லுவார்கள். உப்பை கொட்டுவது மற்றும் கடனாக கொடுப்பது இரண்டுமே அசுபமாக கருதப்படுகிறது. உப்பை மற்றவர்களுக்கு கடனாக கொடுத்தால் உங்களுக்கு நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அத்துடன் பல இன்னல்கள் குடும்பத்திற்கு ஏற்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.


பூண்டு 



பூண்டு கேது கிரகம் பூண்டு வெங்காயத்துடன் தொடர்புடையது உங்கள் பக்கத்து வீட்டாருக்கு பூண்டு, வெங்காயத்தை கடனாக கொடுத்தால் உங்கள் வீட்டின் செழிப்பு நின்றுவிடும். அத்துடன் பண பிரச்சனைகளும் ஏற்படும். உங்கள் வீட்டில் உள்ள மகிழ்ச்சியையும் இது சீர்குலைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே சமையலறையில் வைத்துள்ள பூண்டு வெங்காயத்தை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு யாரிடமும் கடனாக கொடுக்காதீர்கள்.


வாஸ்து சாஸ்திரத்தின் படி மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை மற்றவர்களுக்கு கடன் கொடுத்தால் பெரும் தீங்கு ஏற்படும் ஏனென்றால் சமையல் அறையில் உள்ள ஒரு சில பொருட்கள் ஒருவரின் தலைவிதியுடன் தொடர்புடையது. அத்தகைய சூழ்நிலையில் உங்கள் சமையலறையில் இருந்து அண்டை வீட்டாருக்கு இவற்றை ஒருபோதும் கொடுக்காதீர்கள். இதனால் லட்சுமி தேவி கோபமடைந்து வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் குறையக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *