நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த 10 காய்கறிகள்
Top 10 Vegetables for Diabetes patients in Tamil | Diabetes Fighting Vegetables | Healthy Vegetables
வீட்டுக்கு உதவக்கூடிய 10 காய்கறிகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம். காய்கறிகளை பொறுத்தவரை பொதுவாக சர்க்கரை நோயாளிகள் பூமிக்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகை காய்கறிகள் மற்றும் இனிப்பு சுவை கொண்ட காய்கறிகளை தவிர அனைத்து காய்கறிகளுமே சர்க்கரை நோயாளி தாராளமாக சாப்பிடலாம்.
ஆனால் வெகு சில காய்களுக்கு மட்டும்தான் இந்த இரத்த சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. அவை என்னென்ன என்பதை பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
ஒன்று : கோவக்காய்
கோவக்காய் பலரும் அறிந்திடாத ஒரு காய் என்று சொல்லலாம் பார்ப்பதற்கு சிறிய வெள்ளரிக்காய் போன்று இருக்கும் மற்றும் லேசான கசப்பு சுவை கொண்டது பொதுவாக கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்ட காய்கறிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அந்த வகையில் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற ஒரு காய் கோவக்காய் மேலும் கோபக்காயில் அதிகப்படியான நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்திருக்கு கோவக்காயில் இருக்கக்கூடிய கசப்பு சுவையும் நார்ச்சத்தும் இரத்த சர்க்கரை அளவு வேகமாக ஏறுவதை தடுக்கும்.
இதன் மூலமாக இரத்த சர்க்கரை அளவுகள் கட்டுப்பாட்டில் இருக்க மிகவும் உதவக்கூடிய ஒரு காய் கோவக்காய் சர்க்கரை நோயாளிகள் வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் இந்த கோவக்காயை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
இதையும் படிக்கலாமே ; உடல் எடை குறைய சுலபமான வழி
இரண்டு : பச்சை பப்பாளி அல்லது பப்பாளி காய்
பப்பாளி பழம் நம் அனைவருமே சாப்பிட்டு இருப்போம் ஆனால் பப்பாளியை காயாக பயன்படுத்திருக்க மாட்டோம். இந்த பப்பாளிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பப்பாளி காயில் அதிகப்படியான விட்டமின் மினரல்ஸ் ஆன்டிஆக்சன் மற்றும் பைபர் சத்து நிறைந்திருக்கு. இது ரத்த சர்க்கரை அளவுகளை நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவி செய்யும். இது மட்டுமில்லாமல் பப்பாளி காயில் இனிப்பு சுவை கிடையாது என்பதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக இந்த பப்பாளிக்காயை சாப்பிட்டு வரலாம்.
இரத்த சர்க்கரை அளவுகளை நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவி செய்யும்.
மூன்று : வாழைத்தண்டு
பொதுவாகவே வாழையில் இருந்து கிடைக்கக்கூடிய வாழைப்பூ வாழைக்காய் வாழைத்தண்டு இந்த மூன்றுமே சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். இதில் வாழைத்தண்டு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வாழைத்தண்டில் விட்டமின் பி6 அதிக அளவில் இருக்கு இது கணையத்தில் இருக்கக்கூடிய பீட்டா செல்களை தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் இதன் மூலமாக இரத்த சர்க்கரை அளவுகள் சீராக இருக்கவும் உதவி செய்யும். மேலும் லிசித்தின் என்னும் ஒரு வகை புரதம் இந்த வாழைத்தண்டில் நிறைந்திருக்கு இது ரத்தத்தில் இருக்கும் அதிக சர்க்கரை விளைவாக உடலில் சேரக்கூடிய கெட்ட கொழுப்பை தடுக்கும் இதன் மூலமாக கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக இருக்க மிகவும் உதவக்கூடியது. வாழைத்தண்டு.
நான்கு ; கத்தரிக்காய்
குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட காய்களில் மிக முக்கியமான ஒரு காய் கத்தரிக்காய். அதிகப்படியான நார்ச்சத்து நிறைந்திருக்கு 100 கிராம் கத்திரிக்காயில் 6.3 கிராம் நார்ச்சத்து இருக்கு நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் வேகமாக ஏறுவதை தடுக்கும். இதன் மூலமாக இரத்த சர்க்கரை அளவுகளை நன்கு கட்டுப்படுத்தக் கூடியது கத்திரிக்காய்.
மேலும் கத்திரிக்காயினுடைய தோலில் ஆன்டோ சைன் என்னும் பினாலே காம்புடன் அதிக அளவில் இருக்கு இது சர்க்கரை நோயினால் வரக்கூடிய இருதய பாதிப்பை தடுக்கும். சர்க்கரை நோயாளிகள் தினசரி சாப்பிடக்கூடிய உணவில் கத்தரிக்காய் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
இதையும் படிக்கலாமே ; ஐந்து நிமிடங்களில் உங்களுடைய முகத்தை வெண்மைப்படுத்த அழகு குறிப்பு.
ஐந்து : வெண்டைக்காய்
சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற ஒரு காய் வெண்டைக்காய் விட்டமின் சி போலிக் ஆசிட் கால்சியம் மற்றும் அதிகப்படியான நார்ச்சத்தும் நிறைந்திருக்கு. இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்குவதோடு இரத்த சர்க்கரை அளவுகள் சீராக இருக்க உதவி செய்யும். சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காயை நீளவாக்கில் கீரி முதல் நாள் இரவே நீரில் ஊறவைத்து பின் மறுநாள் காலையில் வெண்டைக்காய் ஊரிய அந்த நீரை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்த சர்க்கரை அளவுகள் நன்கு குறையும்.
வெண்டைக்காயிலிருந்து வரக்கூடிய அந்த வழவழப்பு தன்மையில் தான் அத்தனை மருத்துவ குணங்களும் நிறைந்து இருக்கு. வெண்டைக்காயை சமையல் பயன்படுத்தும் போது அதன் வழவழப்பு தன்மையை நீக்காமல் அப்படியே சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
ஆறு : பாகற்காய்
பாகற்காயில் இருக்கக்கூடிய கசப்பு சுவை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என நம் எல்லோருக்கும் தெரியும். பாகற்காயில் இருக்கக்கூடிய விட்டமின் மினரல் பைபர் இதெல்லாம் தாண்டி ஆன்ட்டி டயாபடிக் ப்ராபர்டீஸ் அதிகம் கொண்ட ஒரு காய் பாகற்காய். பாகற்காய் நியூட்ரியன்ட்ஸ் என்று சொல்லக்கூடிய ஆன்டி டயாபட்டிக் பிராப்பர்டீஸ் நிறைந்திருக்கு இது கணையத்தில் இன்சுலின் சுறப்பை தூண்டி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவி செய்யும். சர்க்கரை நோய் இருக்கிறவங்க அடிக்கடி உணவில் பாகற்காய் சேர்த்துக் கொள்வது மட்டுமில்லாமல் காலை வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் ஆக குடித்து வர ஆரம்பகட்ட சர்க்கரை நோய் எளிதில் கட்டுப்படும்.
ஏழு : கீரைகள்
பொதுவாகவே சர்க்கரை நோயாளிகளுக்கு குறைந்த கலோரி மற்றும் குறைந்த மாவுசத்து மற்றும் அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு. அந்த வகையில் மிகவும் ஏற்ற ஒரு உணவு கீரைகள். கீரைகள் அதிகப்படியான நார்ச்சத்து மட்டும் இல்லாமல் இரும்புச்சத்து கால்சியம் மெக்னீசியம் என நம் உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய சத்துகளும் நிறைந்த ஒரு உணவு கீரைகள்.
கீரைனுடைய கிளைசிமிகு ஐந்துக்கும் குறைவுதான். தாராளமா சர்க்கரைல முருங்கைக்கீரை பசலைக்கீரை வெந்தயக்கீரை போன்ற கீரைகள் இரத்த சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் தினசரி ஒரு வேலை உணவில் கீரையை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
இதையும் படிக்கலாமே ; கேன்சர் வருவதற்கான அறிகுறிகள்
எட்டு : நீர் காய்கறிகள்
நீர் காய்கள் ஆன சுரைக்காய் புடலங்காய் பீர்க்கங்காய் வெள்ளரிக்காய் மற்றும் வெண்பூசணி போன்ற காய்கறிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது 90% அதிகமான நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்தது. நீர் காய்கறிகள் தொடர்ச்சியாக ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அதிகமாக இருக்கும் போது உடலில் ஏற்படக்கூடிய ஆக்ஸிடெட்டிவ் மற்றும் இன்பர்மேஷனில் தடுக்கும் ஆற்றல் இந்த நீர் காய்களுக்கு உண்டு. இதன் மூலமாக சர்க்கரை நோயினால் வரக்கூடிய கண்பார்வை குறைபாடு சிறுநீரக பாதிப்பு இருதய பாதிப்பு என பல்வேறு விதமான ஆபத்தான நோய்கள் வராமலும் பாதுகாக்கக்கூடியது இந்த நீர்க்காய்கறிகள்.
ஒன்பது : சிலுவை காய்கறிகள்
சிலுவை காய்கறி என்று சொல்லக்கூடிய முட்டைக்கோஸ் காலிபிளவர் பிரக்கோலி போன்ற காய்களில் குளுக்கோ சைனைட் மற்றும் ஐசோதனசிட் போன்ற ஆன்டிஆக்சிடென்ட் அதிக அளவில் இருக்கு. இது ஒட்டுமொத்த உடல் மெட்டபாலிசத்தை ஒழுங்குபடுத்துவது மட்டுமில்லாமல் இன்சுலின் சுறப்பை அதிகப்படுத்தும் இதன் மூலமாக இரத்த சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்தக்கூடியது சிலுவை காய்கறிகள்.
இந்த வகை காய்கறிகளை பொரியல் செய்து சாப்பிடுவது மட்டும் இல்லாமல் வெள்ளை அரிசிக்கு மாற்றாக காலிபிளவர் ரைஸ் கேபேஜ் ரைஸ் என சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வர ரத்த சர்க்கரை அளவுகள் உயர்வது தடுக்கப்படும்.
பத்து ; குடமிளகாய்
இந்த பெல் பட்டர் ஸ்வீட் பேப்பர் என பல பெயர்கள் சொல்லுவாங்க குடமிளகாயில் விட்டமின் ஏ பி சி கே மற்றும் டயட்ரிபைபர் அதிக அளவில் இருக்கு. குடைமிளகாய் சிவப்பு மஞ்சள் பச்சை என பல வண்ணங்களில் கிடைக்கும் ஒவ்வொரு விதமான வண்ணங்களில் இருக்கக்கூடிய குடமிளகாய்களுமே வெவ்வேறு விதமான பைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் நியூட்ரியன்ட்ஸ் நிறைந்திருக்கும்.
இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவி செய்றது மட்டுமில்லாமல் சர்க்கரை நோயினால் உண்டாகக்கூடிய பல ஆபத்தான நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்க கூடியது குடமிளகாய்.