ட்ரோன் வாங்க விவசாயிகளுக்கு 4லட்சம் மானியம்.
விவசாயிகளுக்கு ட்ரோன் வாங்க நான்கு லட்சம் வரைக்கும் மானியம் கொடுக்கிறதாக வேளாண் அமைச்சர் அறிவித்திருக்கார்.
விவசாயிகள் அதிகமாக சந்திக்கின்ற பெரிய பிரச்சனைகளில் ஒன்று வேலையாட்கள் கிடைக்கிறது. இந்த நேரத்திற்கு தகுந்தது போல் வேலை ஆட்கள் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக இயந்திரங்கள் உள்ளே வர ஆரம்பித்திருக்கிறது. நாற்று நடுவதில் இருந்து அறுவடை வரைக்கும் இயந்திரங்களை அதிகமாக உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால தமிழ்நாடு அரசு வேளாண் இயந்திரம் ஆக்குதல் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு மானியத்தில் கொடுத்து வருகிறார்கள்.
அரசு இயந்திரங்களை மானிய விலைக்கு கொடுக்கிறதினால் விவசாயிகளுக்கு முக்கியமாக வேலை ஆட்கள் பற்றாக்குறையை குறைக்கவும், விவசாயிகள் சரியான நேரத்திற்கு சாகுபடி செய்யவும் பயிர் உற்பத்தி திறன் அதிகரிக்கவும் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கிறது.
சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் முதலான பணிகளில் முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் மதிப்பில் செயல்பட்டு வந்தது.
இப்பொழுது இரண்டாம் கட்டமாக எழுபது கோடி ரூபாய்க்கு நிதி விடுவிக்கப்பட்டிருக்கிறது. ட்ரோன்களை விவசாயிகள் எந்த மாதிரி பயன்படுத்தலாம் என்றால் பயிர்களில் பூச்சிகள் நோய் தாக்கத்தை கண்காணிப்பது, பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிப்பது மாதிரியான வேலை எல்லாம் ட்ரோன் மூலமாக செய்து கொளாளலாம்.
ஆதிதிராவிடர் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்ச மானிய தொகையான ஐந்து லட்சம் வரை கொடுக்கிறார்கள்.மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது அதிகபட்ச மானிய தொகையான நான்கு லட்ச ரூபாய் வரைக்கும் கொடுக்கிறார்கள்.
இது இல்லாமல் ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிரிவு சார்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் மத்திய அரசு நிதியிலிருந்து கொடுக்கிறார்கள்.
இதையும் படிக்கலாமே: இலவச மாட்டு கொட்டகை திட்டம்
விண்ணப்பிப்பது எப்படி?
வாடகைக்கு விட ஆசைப்படும் விவசாய குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் கிராமப்புற இளைஞர் மூலம் மானியத்தில் அமைக்கப்பட்ட வட்டாரம் மற்றும் கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்களில் வாடகைக்கு வாங்கிக்கொள்ளலாம்.
நீங்கள் வேளாண் பட்டதாரிகளாக இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு சலுகை இருக்கிறது. ட்ரோன்களை கொண்டு வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க அல்லது ஏற்கனவே அமைக்கப்பட்ட வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அல்லது உயர் தொழில்நுட்ப வாடகை மையங்கள் எல்லாம் ட்ரோன்களை வாங்க விரும்பும் வேளாண் பட்டதாரிகளுக்கு ட்ரோன்களின் அடிப்படை விலையில் 50 சதவீதம் அல்லது ஐந்து லட்ச ரூபாய் இது இரண்டில் எது குறைவாக இருக்கிறதோ அது மானியமாக வழங்கப்படும்.
விவசாயிகள் அதனை இயக்குவதற்கான பயிற்சியை முடித்து அதற்கான உரிமத்தையும் பெற்று இருக்க வேண்டும். இல்லையென்றால் ஏற்கனவே பயிற்சி பெற்று உரிமம் பெற்ற இளைஞர் மூலமாக இதை இயக்கிக்கொள்ளலாம்.
நீங்கள் வங்கியில் இருந்து லோன் வாங்கவேண்டும் என்றால் விவசாயிகளுக்கு வேளாண் உட்கட்டமைப்பு நிதியிலிருந்து 3% வட்டி மானியமாக வழங்குகிறார்கள்.
ட்ரோன் வாங்குவதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம்
கீழே இருக்கும் இணைய தளத்தில் உள்ளே சென்றால் உங்களுடைய போன் நம்பர் கேட்கும். ஃபோன் நம்பர் கொடுத்தால் ஓடிபி வரும். பெயர் மட்டும் போட்டால் போதும். மற்ற விபரங்கள் தானாகவே வந்து விடும்.பிறகு உங்களுடைய விபரங்கள் கேட்பதை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.