சோற்று கற்றாழையின் மருத்துவ பயன்கள்.

(Top 10 Health Benefits of Aloe Vera)

சோற்று கற்றாழையின் மருத்துவ பயன்கள். ஆலுவேரா சோற்றுக்கற்றாழை அனைத்து இடங்களிலும் மிக எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு தாவரம் சோற்றுக்கற்றாழை. கற்றாழையில் கருங் கற்றாழை, செங்கற்றாழை, பெருங்கற்றாழை, சிறுகற்றாலை என நிறைய வகையான கற்றாழை இருக்கிறது. அதில் ஒருவகைதான் இந்த சோற்றுக்கற்றாழை. ஆலுவேராவிவ்ர வைட்டமின் ஏ, சி, இ வைட்டமின் பி12, ஃபோலிக் ஆசிட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் மற்றும் ஏராளமான ஆன்டி-ஆக்சிடென்ட் என்சிஎம்சி என சுமார் 75க்கும் மேற்பட்ட நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்தது இந்த ஆலுவேரா.

ஆலுவேராவில் ஏராளமான சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்தது என்பதினால் இதை சித்தர்கள் காயகல்ப மூலிகை என்று அழைக்கிறார்கள். சோற்றுக்கற்றாழை நம் உடலில் ஏற்படக்கூடிய பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது என்பதினால் இது சர்வ லோக நிவாரணி என்று சொல்கிறார்கள்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த சோற்றுக்கற்றாழையை பயன்படுத்துவதன் மூலமாக கிடைக்கக்கூடிய 10 சிறந்த நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

ஒன்று: செரிமான கோளாறுகளை குணமாக்கும்

செரிமானம் சார்ந்த கோளாறுகளான அஜீரணம் நெஞ்செரிச்சல் வயிறு உப்புசம் என செரிமானம் சார்ந்த பல பிரச்சினைகளை குணமாக்கும் ஆற்றல் இந்த சோற்றுக்கற்றாழைக்கு உண்டு. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பிராப்பர்ட்டீஸ் அதிகம் கொண்டது இந்த சோற்றுக்கற்றாழை என்கிறதால் வயிற்றில் இருக்கக்கூடிய புண்களையும் எளிதில் குணமாக்கும். இதன் மூலமாக அல்சரையும் குணமாக்கும் ஆற்றல் இந்த சோற்றுக்கற்றாழைக்கு உண்டு. செரிமானம் சார்ந்த எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும்   சோற்றுக்கற்றளையை ஜூஸாக அருந்தி வருவது மிகவும் நல்லது.

இரண்டு: மலச்சிக்கல் குணமாகும்

செரிமான மண்டலம் தொடர்பான பிரச்சனைகளில் மிக முக்கியமான ஒரு பிரச்சனை மலச்சிக்கல். மலச்சிக்கல் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்றால் சாப்பிடக்கூடிய உணவுகளில் போதுமான அளவு நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் இல்லாமல் இருப்பதுதான் முக்கியமான காரணம். இந்த சோற்றுக்கற்றாழையில் அதிக அளவிலான நீர்ச்சத்தும் நார்ச்சத்தும்  நிறைந்திருக்கிறது. இது செரிமானத்தை ஒழுங்குபடுத்தும் மற்றும் இதில் இருக்கக்கூடிய வளவளப்பு தன்மை வயிற்றில் பெருசு சாலிக் மூவ்மெண்ட் சொல்லக்கூடிய குடல் இயக்கத்தை சீராக்கும். இதன் மூலமாக மலக்குடலில் இருக்கக்கூடிய கழிவுகள் விலகி எளிதாக வெளியேறுவதோடு மலச்சிக்களும் குணமாகும்.

மூன்று: உடல் சூட்டை குறைக்கும்

பொதுவாகவே அதிக வறட்சியை தாங்கி வளரக்கூடிய தாவரங்கள் எல்லாமே உடலை நன்கு குளிர்ச்சியாக்கக் கூடியதாக தான் இருக்கும். அந்த வகையில் மிக முக்கியமான ஒரு தாவரம் ஆலுவேரா. அதிக உடல் சூட்டினால் அவதிப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் ஆலுவேராவை சாப்பிட்டு வர உடல் நன்கு குளிர்ச்சியாவதோடு உடல் சூடு  குறையும். அதோடு உடல் சூட்டினால் வரக்கூடிய அடி வயிற்று வலி, சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

நான்கு: ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் என்ன என்றால் இரத்த நாளங்களில் தேவையில்லாத கொழுப்புகள் தேங்கி இருப்பதுதான்.  சோற்றுக்கற்றாழையில் இருக்கக்கூடிய B விட்டமின்  என்சைம்ஸ் போன்ற சத்துக்கள் இரத்த நாளங்களில் இருக்கக்கூடிய கொழுப்புகளை  கரைக்கும். அதோடு ரத்த நாளங்களை  பலப்படுத்தும் இதன் மூலமாக உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக இயங்குவதோடு இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஐந்து: ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்



சர்க்கரை நோயினால் அவதிப்படுறவங்களுக்கு மிகவும் நல்லது சோற்றுக்கற்றாழை. மிகக் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டது என்கிறதால் சர்க்கரை நோயாளிகள் எந்த பயமும் இல்லாமல் சாப்பிடலாம். சோற்றுக்கற்றாழை சாப்பிட்ட உணவின் மூலமாக வரக்கூடிய ரத்த சர்க்கரையை குடல் உறிஞ்சும் வேகத்தை குறைக்கும். இதன் மூலமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவுகள் வேகமாக ஏறுவதை தடுப்பதோடு இரத்த சர்க்கரை அளவையும் சீராக வைக்கக் கூடியது இந்த சோற்றுக்கற்றாழை.

ஆறு: கல்லீரலை சுத்தப்படுத்தும்

ஆலுவேராவில் அதிகபடியான நீர்ச்சத்தும் பைட்டோ நியூட்ரியன்ட்ஸும் அடங்கியிருக்கிறது. இது கல்லீரலில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்றும். கல்லீரலில் இருக்கக்கூடிய செல்களையும்  புதுப்பிக்கும். அதோடு உடலில் அமில காரத் தன்மையை  ஒழுங்குபடுத்துவதோடு கல்லீரலை சுத்தமாக்கும். இதன் மூலமாக கல்லீரல் செயல்பாடு அதிகரிக்கும்.

ஏழு: மாதவிடாய்களை குணமாக்கும்

பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் வலி, அதிக உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல், முறையற்ற மாதவிடாய் போன்ற பிரச்சினைகளை குணமாக்கும் ஆற்றல் இந்த சோற்றுக்கற்றாழைக்கு உண்டு. இது போன்ற கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் காலையில் வெறும் வயிற்றில் சோற்றுக்கற்றாழை ஜூஸுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கர்ப்பப்பை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் மறையும்.

எட்டு; பற்களின் ஆரோக்கியம் மேம்படும்.

ஆலுவேராவில் அதிகபடியான ஆன்டி பாக்டரியல் பிராப்பர்ட்டீஸ்  நிறைந்திருக்கு. இது பற்களில் இருக்கக்கூடிய கிருமிகளை எளிதாக  அழிப்பதற்கு உதவியாக இருக்கும்.  சோற்றுக்கற்றாழையில் இருக்கக்கூடிய ஜெல்லை தனியாக பிரித்து எடுத்து தண்ணீருடன் கலந்து வாய் கொப்பளித்து வந்தாலே பற்களில் ஏற்படக்கூடிய மஞ்சள் கரை பிளேக்கி என்னும் பல் காரை ஏற்படுவது, பல் சொத்தை, பல் ஈறுகள் வலுவிழப்பது, பல் ஈறுகள் வீக்கம் போன்ற பல் சார்ந்த பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும். மேலும் வாய்ப்புண் போன்ற பிரச்சினைகளையும் குணமாகக்கூடியது இந்த சோற்றுக்கற்றாலை.

ஒன்பது: சரும நோய்களை குணமாக்கும்



சருமத்தில் ஏற்படக்கூடிய பருக்கள், படர்தாமரை, சொரியாசிஸ் என அனைத்து விதமான தோல் நோய்களையும் குணமாக்கு ஆற்றல்  சோற்றுக் கற்றலைக்கு உண்டு. குறிப்பாக வெயில் காலங்களில் வரக்கூடிய வேர்க்குரு, தோல் சிவந்து காணப்படுவது, தோள்களில் அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கும் கூட இந்த சோற்றுக்கற்றாழையை பயன்படுத்தி வந்தால் நல்ல ஒரு நிவாரணம் கிடைக்கும். இது மட்டும் இல்லாமல் தீக்காயங்கள் ஏற்படும் போதும். இந்த சோற்றுக்கற்றாழையை தேய்த்து வர தீக்காயம் விரைவில்  குணமாகும்.

பத்து: ஆண்மை குறைபாடை குணமாக்கும்

ஆண்களுக்கு ஏற்படக்கூடிய விறைப்பு தன்மை குறைபாடு, விந்தணு குறைபாடு போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு தரக்கூடியது இந்த சோற்றுக்கற்றாழை. ஆலுவேராவில் இருக்க கூடிய அதிகப்படியான மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை  அதிகப்படுத்தும் மற்றும் இதில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் புதிய விந்தணு உற்பத்திக்கு உதவி செய்யும். ஆண்மை குறைபாட்டினால் அவதிப்படுபவர்கள் இந்த சோற்றுக்கற்றாழையை காலையில் வெறும் வயிற்றில் நாட்டுச்சர்க்கரை உடன் ஜூஸாக சாப்பிட்டு வர ஆண்மை குறைபாடு நீங்கும். சோற்றுக்கற்றாழை இதுபோன்ற ஏராளமான நன்மைகளை தரக்கூடியது என்றாலும் அதை சாப்பிடுவதில் அதிக கவனம் தேவை.

சோற்று கற்றாழையின் மருத்துவ பயன்கள். சோற்றுக்கற்றாழையில்  இருக்கக்கூடிய சதைப்பகுதியை மட்டும்தான் பயன்படுத்தினோம். பார்ப்பதற்கு நொங்கு போல் இருக்கும் அந்த பகுதியை மட்டும் பிரித்தெடுத்து குறைந்தது ஒரு ஸ்பூனில் இருந்து அதிகபட்சம் இரண்டு ஸ்பூன் வரையிலான ஆலிவேரா ஜெல்லை பயன்படுத்தினாலே போதுமானது. சோற்றுக்கற்றாழையை சாப்பிடுவதற்கு முன்பு குறைந்தது 7 லிருந்து 10 முறையாவது கழுவி தான்  சாப்பிடணும். சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால்   வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக சோற்றுக்கற்றாழை ஜூஸ் பருகுபவர்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகுந்த பலனை தரும். அதோடு இந்த சோற்றுக் கற்றாழை சாப்பிட்ட பிறகு குறைந்தது ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் பிற உணவுகளையோ பிற பானங்களையோ அருந்தாமல் இருப்பது அதிக நன்மை தரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *