சீத்தா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

 

சீத்தா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

Top 10 Health Benefits Of Custard Apple Tamil.


அந்தந்த சீசனில் கிடைக்கக்கூடிய பழங்களில் மிக முக்கியமான பழம் சீதாப்பழம். பார்ப்பதற்கு அதிக சதைப்பற்று உள்ள பலமாகவும் அதிக மருத்துவ தன்மை கொண்ட பலமாகவும் இருக்கிறது.  பலரும் சிறு வயதில் மட்டுமே சீதாப்பழத்தை சாப்பிட்ட அனுபவம் உடையவர்களாக இருக்கிறோம். சாதாரணமான சளி முதல் கேன்சர் நோய் வரை விரட்டக்கூடியது இந்த சீத்தாப்பழம்.


சீத்தாப்பழம் அதிக சதைப்பற்றுள்ள பழம் என்பதனால் சற்று கனிந்த பழங்கள் கொல கொலவென்று இருக்கும். இதனால் பலரும் சீத்தாப்பழத்தை விரும்புவதில்லை. ஆனால் அதனுடைய நன்மைகளையும் மருத்துவ பயன்களையும் தெரிந்து கொண்டால் கண்டிப்பாக ஒவ்வொரு சீசனிலும் வாங்கி சாப்பிட தவறமாட்டீர்கள். 

சீதாப்பழத்தை சாப்பிடறதினால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? மற்றும் குணமாகக்கூடிய நோய்கள் என்ன? என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

ஒன்று : சீதாப்பழத்தில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது.

 சீதாப்பழத்தில் விட்டமின் சி மட்டுமே அதிக அளவில் இருக்கிறது. இது உடலில் இருக்கக்கூடிய ஃப்ரீ ராடிகல்ஸ் அதாவது உடல் செல் கழிவுகளை  நீக்குவதற்கு பயன்படுகிறது. இது தவிர சீதாப்பழத்தில் கால்சியம் மெக்னீசியம் இரும்பு நியாஸின் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கிறது.

சீதாப்பழத்தினால் கிடைக்கக்கூடிய டாப் 10 ஹெல்த் பெனிஃபிட்ஸ் என்ன  என்பதை தெரிந்து கொள்வோம். 

ஒன்று : உடல் எடை குறையும்.


அதிக உடல் எடையினால் அவதிப்படுபவர்கள் சீதாப்பழத்தை சாப்பிட்டு வர உடல் எடை நல்ல அளவில் குறையும் அதிலும் தைராய்டினால் உண்டான உடல் எடையை குறைக்க சிறப்பாக செயல்படக்கூடியது சீதாப்பழம். அதிக உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் சீதாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் உடல் எடை குறையும் .


இதையும் படிக்கலாமே ; சௌசௌ சாப்பிடறதினால் கிடைக்கக்கூடிய 10 சிறந்த நன்மைகள்

இரண்டு : கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. 


கர்ப்பிணி பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்று சீதாப்பழம். ஏன் என்றால் இது உடலுக்கு அதிக குளிர்ச்சியை கொடுக்கக்கூடியது. அதனால் கருச்சிதைவு போன்ற பிரச்சனைகள் இருக்காது. அதோடு சிசுவின் வளர்ச்சிக்கு உதவும் கூடியது. சிசுவின் மூளை வளர்ச்சி, நரம்பு மண்டல அமைப்பு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் எலும்புகளின் வளர்ச்சி ஆகியவற்றிற்கு மிகவும் சிறந்தது சீதாப்பழம். மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய வாந்தி குமட்டல் மற்றும் பசியின்மை போன்ற பிரச்சனைகளை தடுக்கும். இதனால் கர்ப்பிணிப் பெண்கள் சீதாப்பழத்தை சாப்பிடுவது  மிகவும் நல்லது. 

மூன்று : ஆஸ்துமா நோய் வராமல் தடுக்கும் 


சீதாப்பழத்தில் விட்டமின் பி6 அதிக அளவில் இருக்கிறது. இது மூச்சு குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். அதிலும் குறிப்பாக வீசிங் போன்ற பிரச்சினைகளினால் அவதிப்படுபவர்கள் சீதாப்பழத்தை சாப்பிட வேண்டாம் 

நான்கு : மாரடைப்பை தடுக்கும்


சீத்தாப்பழத்தில்  அதிகமான மெக்னீசியம் இருக்கிறது. இது இதயச் சுவர்களை வலுப்படுத்தும் அதோடு இருதயம் சீராக சுருங்கி விடுவதற்கு உதவி செய்வதோடு மாரடைப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது.


இதையும் படிக்கலாமே ; நினைத்ததை 10 நாட்களில் நிறைவேற்றும் கல் உப்பு பரிகாரம்

ஐந்து : செரிமான பிரச்சனைகள் குணமாகும்.



செரிமான பிரச்சனைகளான அஜீரணம் குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கொடுக்கக்கூடியது சீதாப்பழம். அதிலும் சிலருக்கு சாப்பிட்டவுடன் வயிற்று வலி ஏற்படும் அப்படிப்பட்டவர்கள் சீதாப்பழத்தை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. சீதாப்பழத்தில் இருக்கக்கூடிய தாமிரம் மற்றும் டயட்டின் போன்ற நார்ச்சத்துக்கள் குடலின் இயக்கத்தை சீராக இயக்கி உணவு நன்கு செரிமானம் ஆவதற்கு உதவி செய்கிறது. மேலும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கப்படுகிறது.

ஆறு : சர்க்கரை நோய் தடுக்கப்படும்.


சீதாப்பழத்தில் இருக்கக்கூடிய டயட்டரின் நார்ச்சத்து சர்க்கரை உறிஞ்சப்படும் அளவை குறைக்கும் இதனால் அவதிப்படுபவர்கள்  சீதாப்பழத்தை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. 

ஏழு : ரத்த அழுத்தம் கட்டுப்படும்.


அதிக ரத்த அழுத்த பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் சீதாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் இதில் இருக்கக்கூடிய பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரண்டுமே ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.


இதையும் படிக்கலாமே ; ஒரு பைசா செலவில்லாமல் ஒரே நாளில் பைல்ஸ் முற்றிலுமாக மறைந்து விடும்

எட்டு : கொலஸ்ட்ரால் அளவுகளை சீராக்கும். 


சீத்தாப்பழத்தில் இருக்கக்கூடிய நியாசின் மற்றும் டயட்டரின் நார்ச்சத்துக்கள் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.  கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள்  சீதாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் வரும்.

ஒன்பது: அனிமியா குணமாகும்.


ரத்தச் சோகை பிரச்சினை அவதிப்படுறவங்க சீதாப்பழத்தை சாப்பிட்டு வர சீதாப்பழத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான இரும்புச்சத்து உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த அளவை சீராக்கும்.

பத்து : தோல் புற்றுநோய் தடுக்கும்.


சீத்தாப்பழத்தில் இருக்கக்கூடிய அச்சிடோஜனின் தோல் புற்றுநோய் அறிகுறியான சரும சிதைவை நீக்கும் மேலும் சரும புற்றுநோயை உண்டாக்கக்கூடிய செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கும். மேலும் புற்றுநோய் உண்டாக்கக்கூடிய செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கும் அது மட்டுமில்லாமல் புற்று நோயினால் அவதிப்படுபவர்கள்  சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *