(symptoms of diabetes | sakkarai noi arikurigal | High Blood sugar symptoms)
சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் வருவதற்கான அறிகுறிகள். பெரும்பாலான மக்கள் பலரும் அவதிக்குள்ளாக கூடிய ஒரு நோய் சர்க்கரை நோய், சர்க்கரை நோய் என்றால் என்ன? ரத்தத்தில் சர்க்கரையின் அளவுகள் அதிகமாக இருப்பது தான் சர்க்கரை நோய் என்று சொல்கிறோம். சர்க்கரை நோயில் இரண்டு வகையான சர்க்கரை நோய் இருக்கிறது. ஒன்று டைப் ஒன் டயபடீஸ் இரண்டு டைப் டு டயபடீஸ். டயபடீஸ் என்றால் என்ன என்றால் நம் உடம்பில் இருக்கக்கூடிய பான்கிரியாஸிஸ் என்னும் உறுப்பிலிருந்து இன்சுலின் ஹார்மோன் சுரக்கும். இந்த இன்சுலின் ஹார்மோன் சுத்தமாக சுரக்காத நிலையைத்தான் டைப் ஒன் டயபடீஸ் என்று சொல்கிறோம்.
இது பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய சர்க்கரை நோய்.
டைப் டு டையபடிஸ்
பெரும்பாலான மக்களுக்கு அதிலும் குறிப்பாக வயது 40ஐ கடந்து ஏற்படக்கூடியது சர்க்கரை நோய், மாறிவரும் உணவு முறை மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை காரணமாக கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் உடலில் வேலை செய்யாத நிலை உருவாகிறது. இதன் மூலமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவுகள் அதிகமாக இருக்கும். இதுதான் டைப் 2 டயாபடிஸ் என்று சொல்கிறோம். இந்த சர்க்கரை நோய் ஒரு சாதாரண நோய் கிடையாது மெல்ல மெல்ல நம் உடம்பில் இருக்கக்கூடிய அனைத்து உறுப்புகளையும் பாதித்து இறுதியில் மரணத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு கொடிய நோய். இந்த சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மட்டும் தான் அதற்கு சரியான சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
ஒருத்தருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்றால் என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
சர்க்கரை நோய் அறிகுறிகள் என்னென்ன?
ஒன்று: அடிக்கடி சிறுநீர் கழித்தல்
ரத்தத்தில் அதிக சர்க்கரை இருக்கும் போது அந்த சர்க்கரையை வெளியேற்றுவதற்காக உடல் அதிக நீரை சுரக்க செய்யும். இதனால் சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு அதிக சிறுநீர் உருவாகிறது. இதனாலேயே அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள். சாதாரணமாக ஒருவருக்கு இரவில் நான்கு முதல் ஐந்து முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது என்றால் அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இரண்டு: அதிக தாகம் மற்றும் நாவில் அதிக வறட்சி
ரத்தத்தில் அதிக சர்க்கரை இருக்கும்போது அடங்காத தாக உணர்வு மற்றும் நாவில் வறட்சியும் இருக்கும். ஏன் என்றால் உடலில் இருக்கும் திரவம் அடிக்கடி சிறுநீர் வழியாக வெளியேறி கொண்டே இருக்கிறதினால் உடம்பில் நீர் இழப்பு ஏற்பட்டு அதிக தாகம் மற்றும் நாவில் வறட்சியும் உண்டாகிறது. ஒருவருக்கு தொடர்ச்சியாக நாவில் அதிக வறட்சியும் அதிக தாகமும் இருக்கிறது என்றால் இதுவும் ஒரு சர்க்கரை நோய்க்கான அறிகுறிதான்.
மூன்று: மங்களான கண் பார்வை
அதிக சர்க்கரையினால் உடலில் உள்ள திசுக்கள் மற்றும் செல்களில் உள்ள நீர் வெளியேறுவதன் விளைவாக கண்களில் வறட்சி உண்டாகிறது. அதிக சர்க்கரை உடலில் இருக்கும் நரம்புகளை எளிதில் பாதிக்கும். இதன் விளைவாக கண்கள் பாதிக்கப்பட்டு மங்கலான கண் பார்வை உருவாகிறது. மங்கலான கண் பார்வையும் சர்க்கரை நோய்க்கான ஒரு அறிகுறிதான்.
நான்கு: உடல் எடை கூடுதல் அல்லது குறைதல்
சர்க்கரை நோயைப் பொறுத்தவரை உடலில் இன்சுலின் வேலை செய்யாத நிலை உருவாகும் போது உடல் எடை கூடும். அதே போன்று உடலில் இன்சுலின் சுரப்பு சுத்தமாக இல்லாத நிலையில் உடலில் எடை இழப்பு உருவாகும். அப்நார்மலான வெயிட் இருக்கிறது என்றால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அடிக்கடி எடை கூடுவது அல்லது குறைவது சர்க்கரை நோய்க்கான ஒரு அறிகுறியாக கூட இருக்கலாம்.
ஐந்து: உடல் சோர்வு
இரத்தத்தில் அதிகமாக சர்க்கரை இருக்கும் போது அதிக உடல் சோர்வு எந்த வேலையும் செய்யும் மனமின்மை போன்ற பிரச்சனைகள் இருக்கும். ஏன் என்றால் நாம் சாப்பிடும் உணவில் இருக்கக்கூடிய குல்கோஸ் செல்களுக்குள் நுழைவதற்கு இன்சுலின் மிகவும் அவசியம். இந்த இன்சுலின் உடலில் பற்றாக்குறை உருவாகும்போது செல்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காமல் செல்கள் சரியாக இயங்காது. இதன் காரணமாகத்தான் எந்த வேலையையும் செய்ய எனர்ஜி இல்லாமல் அதிக உடல் சோர்வாக இருக்கிறது. உடல் சோர்வும் சர்க்கரை நோய்க்கான ஒரு அறிகுறி தான்.
ஆறு: ஆறாத புண்கள்
உடலில் ஏதேனும் லேசான காயங்கள் ஏற்பட்டால் ஆறுவதற்கு நீண்ட நாட்கள் ஆவது இது சர்க்கரை நோய் இருப்பதற்கான ஒரு முக்கியமான அறிகுறி. ஏன் என்றால் ரத்தத்தில் அதிக சர்க்கரை இருக்கும் போது நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைகிறது மற்றும் உடல் செல் திசுக்களில் சீரற்ற நீர் சமநிலை காணப்படுவதனால் காயங்கள் ஆறுவது தாமதப்படுகிறது. நீண்ட நாட்கள் ஆறாத புண்கள் கால்களில் இருக்கிறது என்றால் இதுவும் சர்க்கரை நோய்க்கான அறிகுறிதான்.
ஏழு: பாதங்களில் எரிச்சல்
கால் பாதங்களில் எரிச்சல், வலி, கூச்சம் மற்றும் உணர்வில்லாத தன்மை இதுவும் சர்க்கரை நோய் வந்துவிட்டது என்பதற்கான முக்கியமான அறிகுறி. ஏன் என்றால் உடலில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை உடலின் அடிப்பகுதியாகிய கால்களில் தான் அதிகமாக தேங்கும். இதன் விளைவாக கால்களில் உள்ள மெல்லிய நரம்புகள் எளிதில் பாதிப்படையும் சூழ்நிலை உருவாகிறது. கால்கள் மரத்துப்போவது கால்களில் எரிச்சல் புண்கள் போன்ற பிரச்சனைகள் உருவாகிறது. கால்களில் இதுபோன்ற பிரச்சனையும் ஒரு சர்க்கரை நோய்க்கான முக்கியமான அறிகுறி.
எட்டு: எப்போதும் அதிகப்பசி
நன்றாக சாப்பிட்ட பின்பும் கூட சாப்பிட்ட திருப்தியின்மை மற்றும் எப்போதும் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி இருப்பது இதுவும் ஒரு முக்கியமான சர்க்கரை நோய்க்கான அறிகுறி. ஏன் என்றால் சாப்பிடும் உணவில் இருக்கக்கூடிய குலுகோஸ் உடலில் போதுமான இன்சுலின் இல்லாததன் விளைவாக உடலில் போய் சேராத நிலை உருவாகிறது. இதனால் அதிக பசி உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது. இதுவும் வந்து ஒரு சரக்கரை நோய்க்கான அறிகுறிதான்.
ஒன்பது: பல் ஈறுகள் பலவீனம் அடைவது
ரத்தத்தில் அதிக சர்க்கரையின் விளைவாக பல் ஈறுகள் எளிதில் பலவீனமடையும். இதனால் பற்களில் கூச்சம், பற்கள் ஆடுவது, பல்சொத்தை, பல் ஈறுகள் தேய்மானம் போன்ற பற்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் எளிதில் உருவாகும். இந்தப் பிரச்சனைகளும் ஒரு நாள்பட்ட சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தான்.
பத்து: பிறப்புறுப்பில் புண்கள்
காரணம் இன்றி அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு பிறப்புறுப்பில் புண்கள், எரிச்சல், தோள்கள் உரிவது மற்றும் விறைப்பு தன்மை குறைவது போன்ற அறிகுறிகளும் ஆண்களுக்கு ரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பதற்கான அறிகுறிகள்.