குதிரைவாலி அரிசியின் மருத்துவ பயன்கள்.
குதிரைவாலி சிறுதானிய அரிசி வகைகளில் மிகவும் முக்கியமான ஒரு சிறுதானியம் குதிரைவாலி. குதிரைவாலிக்கு புல்லுச்சாமை என்கிற மற்றொரு தமிழ் பெயருக்கு குதிரைவாலியை ஷாமா மொராயோ சேன்வா ஊடலூ என ஒவ்வொரு மொழிகளிலும் வெவ்வேறு விதமான பெயர்களில் அழைக்கிறார்கள். குதிரைவாலி பார்ப்பதற்கு வெள்ளையாக சிறிய அளவில் இருந்தாலும் இதில் இருக்கக்கூடிய சத்துக்களும் மருத்துவ குணங்களும் மிகவும் அதிகம்.
குதிரைவாலியில் அதிகப்படியான புரோட்டின் கார்போஹைட்ரேட் பைபர் கால்சியம் பாஸ்பரஸ் மெக்னீசியம் வைட்டமின் பி1 பி2 பி3 மற்றும் அதிகப்படியான இரும்புச்சத்து நிறைந்த ஒரு சிறுதானியம் குதிரைவாலி.இவ்வளவு சத்துக்கள் நிறைந்த குதிரைவாலியை நாம் சாப்பிடும்போது நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன மற்றும் குணமாகக்கூடிய நோய்கள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஒன்று : இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்
சர்க்கரை நோய் என்றாலே மக்கள் கோதுமையினால் ஆன உணவுகளை அதிகம் சாப்பிடுவதுண்டு அதற்கு காரணம் அரிசி சாதத்தை விட சற்று கூடுதலான அளவு நார்ச்சத்து இருப்பது தான். ஆனால் கோதுமையை விடவும் ஆறு மடங்கு நார்ச்சத்து இந்த குதிரைவாலியில் இருக்கிறது. 100 கிராம் குதிரைவாலியில் 13.6 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. இது மற்ற சிறுதானியங்களை விடவும் மிக அதிக அளவில் நார்ச்சத்து இந்த குதிரைவாலியில் இருக்கிறது. பொதுவாக சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் குறைந்த அளவு மாவு சத்தும் அதிக அளவிலான புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட சொல்வதுண்டு. அந்த வகையில் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற ஒரு சிறுதானியம் குதிரைவாலி.
இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் வேகமாக ஏறுவதை தடுக்கிறது. இதன் மூலமாக இரத்த சர்க்கரை அளவுகளும் சீராக இருக்கும்.சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வேலை உணவாக இந்த குதிரைவாலியை பொங்கலாகவோ, கிச்சடியாகவோ அல்லது குதிரைவாலி சாதமாகவோ செய்து சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
இதையும் படிக்கலாமே ; கருஞ்சீரகம் யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது
இரண்டு : மாரடைப்பு வராமல் தடுக்கும்.
மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் ரத்த நாளங்களில் கொழுப்புகள் படிந்து அடைப்பை ஏற்படுத்துவதுதான். குதிரைவாலியில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து என்று இரண்டு வகையான நார்ச்சத்துக்கள் இருக்கிறது. சாலிபில் பைபர் ரத்தத்தில் இருக்கக்கூடிய எல் டி எல் என்னும் கெட்ட கொழுப்பை குறைக்கும். இதன் மூலம் ரத்தநாளங்களில் கொழுப்புகள் படிவதை தடுக்கிறது மற்றும் மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்க கூடியது இந்த குதிரைவாலி.
மூன்று : நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாக இருக்க துத்தநாகம் மற்றும் இரும்பு சத்து மிகவும் அவசியம். இந்த இரண்டு சத்துக்களும் அதிகளவில் நிறைந்த ஒரு சிறு தானியம் குதிரைவாலி. அடிக்கடி ஜலதோஷம் காய்ச்சல் என அவதிப்படுபவர்கள் குதிரைவாலியை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், பல்வேறு விதமான நோய் கிருமிகளிடமிருந்தும் நம்மை பாதுகாக்க கூடியது இந்த குதிரைவாலி.
நான்கு : உணவு ஒவ்வாமையை தடுக்கும்
ஒரு சிலருக்கு குளூட்டன் அடங்கிய உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். குளூட்டன் என்பது பசை தன்மை கொண்ட புரதம். குளூட்டன் அடங்கிய உணவுகளான கோதுமை, பார்லி, ஒட்ஸ், பிரட், பிஸ்கட் போன்ற உணவுகள் ஆகும். இந்த உணவுகளை சாப்பிடும்பொழுது ஒரு சிலருக்கு வயிற்று வலி வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் என நாள்பட்ட செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும். அதுபோன்ற பிரச்சினைகளில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது குதிரைவாலி. பொதுவாகவே சிறுதானியங்கள் அனைத்துமே புளூட்டன் பிரீ வகையைச் சார்ந்தது. குளூட்டன் இன்டோலெரன்ஸ் பிரச்சினை இருக்கிறவர்கள் எந்த பயமும் இல்லாமல் இந்த குதிரைவாலி சாப்பிட்டு வரலாம். நாளடைவில் உணவு ஒவ்வாமை பிரச்சினை மாறுவதற்கு கூட வாய்ப்புகள் உண்டு.
ஐந்து: ரத்தசோகை வராமல் தடுக்கும்.
பொதுவாக ரத்தசோகை என்னும் அனிமியா ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் ரத்தத்தில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதுதான். இரும்புச்சத்து குறைபாட்டை போக்கும் ஆற்றல் குதிரைவாலிக்கு உண்டு. 100 கிராம் குதிரைவாலியில் 18.6 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது. ரத்தத்தில் புதிய சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து ரத்தச் சோகை வராமல் தடுக்க கூடியது குதிரைவாலி.
உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு அரிசிக்கு மாற்றான ஒரு சிறந்த சிறுதானியம் குதிரைவாலி. இதில் அதிக நார்ச்சத்து நிறைந்திருக்கிறது என்பதால் கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நன்கு நிரம்பிய ஒரு உணர்வை கொடுக்கும். அரிசியை விடவும் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் கொண்டது. மேலும் இது உடலில் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கும். இதன் காரணமாக உடலில் ஆங்காங்கே இருக்கக்கூடிய தேவையில்லாத கொழுப்புகளும் கரையும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு சிறுதானியம் இந்த குதிரைவாலி.
ஏழு : நாள்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும்
இயற்கையாகவே குதிரைவாலியில் பாலிபெனால் என்னும் ஆன்டிஆக்சியன்ட் அதிக அளவில் இருக்கிறது. இது உடலில் இருக்கக்கூடிய செல் கழிவுகளான ஃப்ரீ ரேடிகல்ஸ் உடலில் இருந்து வெளியேற்றி செல்கள் சேதம் அடையாமல் பாதுகாப்பதோடு இன்பிளமேஷனில் குறைக்கும்.
இதன் மூலம் சர்க்கரை நோய் இரத்த கொதிப்பு இருதயம் சார்ந்த பிரச்சினைகள் என பல்வேறு விதமான நாள்பட்ட நோய்கள் வராமல் பாதுகாக்க கூடியது இந்த குதிரைவாலி.
எட்டு : மலச்சிக்கல் குணமாகும்
குதிரைவாலியின் மிக முக்கியமான சிறப்பு அம்சமே இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து தான். இதில் இருக்கக்கூடிய கரையா நார்சத்து இன்சாலிப்பில் பைபர் குடலில் ஒரு ஜெல் போல படிந்து வயிற்றில் இருக்கக்கூடிய கழிவுகள் எளிதாக வெளியேற்ற உதவி செய்யும். இதன் மூலமாக மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. குடலிலன் இயக்கத்தை அதிகரிக்கும். செரிமான உறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மிக உதவியாக இருக்கக்கூடியது குதிரைவாலி. மலச்சிக்கல் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் உகந்தது குதிரைவாலி.
Like this:
Like Loading...
Related