ஒரே வாரத்தில் உங்கள் முகத்தில் மற்றும் வேண்டாத இடங்களில் இருக்கும் முடிகளை அகற்ற…
நண்பர்களே முகம் மற்றும் தேவையில்லாத இடங்களில் அதிகப்படியான முடி வளர்ச்சிக்கு இரண்டே காரணங்கள் தான். ஒன்று பிசிஓடி பிசிஓஎஸ் அதாவது கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள் கர்ப்பப்பையில் நீர்கட்டிகள் அல்லது ஹார்மோன் எம்பேலன்ஸ் மாதிரி பிரச்சினைகள் இருந்ததென்றால் நிச்சயமாக முகத்தில் மற்றும் தேவையில்லாத இடங்களில் முடி வளரும்.
இன்னொரு விஷயம் கல்லீரல் சுத்தமில்லாமல் இருந்தாலும் நிச்சயமாக முகத்தில் முடி வளரும். அது மட்டும் இல்லாமல் முகத்தில் கருந்திட்டுகளும் அங்கங்கே இருக்கும். இன்றைக்கு நாம் இரண்டு முறையில் தேவையில்லாத முடிகளை எப்படி அகற்றுவது என்று தெரிந்து கொள்வோம்.
ஒன்று : இயற்கையான முறையில் அங்கே இருக்கக்கூடிய முடிகளை எப்படி உதிர செய்யலாம் என்பதை தெரிந்து கொண்டு அடுத்து உதிர்ந்த இடத்தில் முடிகள் மேற்கொண்டு வளராமல் அதாவது புது முடிகள் வளராமல் எப்படி தடுக்கலாம் .
முதலில் ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் அரை டீஸ்பூன் அளவுக்கு முல்தானி மெட்டி பவுடர் சேர்த்துக்கொள்ளவும். முல்தானி மெட்டி பவுடர் இல்லையென்றால் நீங்கள் கடலை மாவை சேர்த்துக்கலாம் ஆனால் முல்தானி மெட்டி பவுடர் சேர்த்தால் உங்களுக்கு உடனடியாக விடை கிடைக்கும்.
அடுத்து ஒரு கால் டீஸ்பூன் அளவுக்கு கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்துக்கொள்ள வேண்டும் கஸ்தூரி மஞ்சள் பொடி இல்லை என்றால் நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய மஞ்சள் பொடியை தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம் அடுத்து தேவையான அளவிற்கு எலுமிச்சம்பழம் ஜூஸ் கலந்து ரொம்ப தண்ணியாக இல்லாமல் கொஞ்சம் திக் பேஸ்ட்டாக எடுத்துக்கொள்ளவும்.
இந்த பேஸ்ட்டை இரவிலோ அல்லது இரண்டு வேளையோ தாராளமாக பயன்படுத்தலாம். இந்த பேஸ்ட்டை எங்கெல்லாம் வேண்டாத முடி இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் இந்த பேஸ்ட்டை தடவ வேண்டும். நல்ல குணமாக நேர் கோட்டில் அதாவது முடி எந்த பக்கம் சாய்ந்து இருக்கிறதோ அந்தப் பக்கம் நோக்கி தடவ வேண்டும். மசாஜ் செய்ய வேண்டாம். 20 அல்லது 25 நிமிடங்கள் கழித்து நன்றாக காய்ந்த பிறகு முடியின் எதிர்த்திசை நோக்கி நன்றாக அழுத்தி தேய்த்து விட வேண்டும். அப்பொழுது முடிகள் ஒவ்வென்றாக உதிர்ந்து வரும்.
ஒரே முறையில் எல்லா முடிகளும் வந்து விடாது. இந்த பேஸ்ட்டை பலமுறை போடும் பொழுது சிறிது சிறிதாக முடிகள் உதிர்ந்து கடைசியில் எல்லாம் முடியும் உதிர்ந்து முடி இருந்த இடங்கள் அழகாக காட்சி தரும். முடிகள் சிறிது சிறிதாக தான் உதிரும் ஒரு நாளைக்கு இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் மூன்று அல்லது நான்கு நாட்களில் அனைத்து முடிகளும் உதிர்ந்து விடும். இந்த பேஸ்ட்டை தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் தடவி காயவைத்து பிறகு மேல் நோக்கி அழுத்தி தேய்த்து முடிகளை உதிர வைக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே ; ஆண்களின் முகம் அழகாய் மாற சூப்பரான டிப்ஸ்
இரண்டு :படிகார கல்
தமிழில் படிகார கல் என்ற பெயருடன் இந்த படிகார கல் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதுவும் குறிப்பாக கோவில் பக்கத்தில் இருக்கக்கூடிய கடைகளில் கிடைக்கும்.படிகார கல்லை வாங்கி வந்து உரல் அல்லது கல்லை கொண்டு தட்டி பவுடர் போல செய்ய வேண்டும். தட்டி எடுத்த படிகார பவுடரை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு நன்றாக மூடி வைத்துக்கொள்ளவும். எப்பொழுதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்பொழுது எடுத்து பயன்படுத்திக்கலாம்.
இந்த பவுடரை நாம் தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய அந்த முடி வளர்ச்சியை தடை செய்துவிடும்.. இந்த படிகார கல் பவுடர் முடி உதிர்வதற்கு பயன்படுத்துவது கிடையாது.நாம் முதலில் தயார் செய்து வைத்திருக்கும் முல்தானி மெட்டி பவுடர், மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பேஸ்ட் தான் முடி உதிர்வதற்கு பயன்படுத்துவது.முடி உதிர்ந்த பின்னர் மீண்டும் அந்த இடத்தில் மடியை வளரவிடாமல் தடுப்பதற்கு தான் இந்த படிகார தூள் தண்ணீர்.
இதையும் படிக்கலாமே ;ஐந்து நிமிடங்களில் உங்களுடைய முகத்தை வெண்மைப்படுத்த அழகு குறிப்பு.
இதை தயார் செய்வதற்கு ஒரு கிளீன் பவுல் ஒன்று எடுத்துக்கொண்டு அதில் கொஞ்சமாக படிகார பவுடர் எடுத்துக் கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீர் சேர்த்ததும் சிறு கட்டிகள் இருந்தாலும் கரைந்து போய்விடும். படிகார தூள் கலந்த தண்ணீரை இரவு படுக்கைக்கு செல்லும் முன் எங்கெல்லாம் தேவையில்லாத முடி இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த படிகாரம் கலந்த தண்ணீரை தடவி விட்டு தூங்கலாம்.
கல்லீரலில் பிரச்சனை இருந்தாலும் அதாவது கல்லீரல் சுத்தமில்லாமல் இருந்தாலும் முகத்தில் கருந்திட்டுகள் மற்றும் முடி வளர்ச்சி இருக்கும்.கல்லீரல் சுத்தமாவதற்கு நெல்லிக்காய் பவுடரை காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பாக இருக்கக்கூடிய தண்ணீரில் ஒரு கால் ஸ்பூன் அளவுக்கு கலந்து குடித்து வந்தால் போதும். பத்து நாட்களுக்கு தொடர்ந்து குடித்தால் போதும் கல்லீரல் சுத்தமாகி ஆரோக்கியமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். முகமும் பளிச்சென்று பொலிவோடு இருக்கும். முகத்தில் முடியும் வளராது.