உடல் எடை குறைய தினமும் குடிக்க வேண்டிய சூப்பர் ட்ரின்க்

 உடல் எடை குறைய தினமும் குடிக்க வேண்டிய சூப்பர் ட்ரின்க் | Weight Loss

இன்றைய அவசர உலகில் நெறிப்படுத்தப்படாத வாழ்க்கை முறை காரணமாக பெரும்பாலானோர் உடல் பருமன் மற்றும் அதன் மூலம் வரக்கூடிய பல உடல் உபாதைகளை எதிர்கொண்டு வருகின்றனர். உடற்பயிற்சி செய்யவும் பலருக்கும் நேரமில்லாத சூழலில் என்னதான் செய்வது என்ற கேள்விக்கு விடையாக அமைவது தான் நம் சமையலறை ஒழித்து வைத்துள்ள இயற்கை மருத்துவம்.



. சீரகம் சோம்பு மற்றும் ஓமம் தலா ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் கலந்து இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட வேண்டும். காலை எழுந்தவுடன் இந்த நீரை வடிகட்டி தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் சீரகத்தில் ஆன்டிஆக்சிடென்ட் செரிமானத்தை சீர் செய்வது மற்றும் புற்று நோய்க்கு எதிராக செயல்படும் தன்மையும் உள்ளது.


 உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் தன்மை கொண்ட ஓமம், நுரையீரல் பராமரிப்பிலும் உதவுவதால் உடல் எடை இயல்பாகவே குறைகிறது மேலும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்களை செரிமானம் செய்ய வைப்பதினால் உடல் எடை குறைப்பில் சோம்பு முக்கிய பங்கு வகிக்கிறது சாதாரணமாக நாம் கடந்து போகும் சில பொருட்கள் இந்த அளவுக்கு பலன் கொடுக்குமா என வியக்க வைக்கும் அளவிற்கு இந்த நீர் உடல் எடை குறைப்பிற்கு சாதகமாக செயல்படுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *