உடல் எடை குறைய சுலபமான வழி
Easy way to lose weight
உடல் எடையை குறைக்கிறது இன்னைக்கு சர்வ சாதாரணமா உடல் எடையை குறைக்க என்னென்னமோ மருந்து வந்துருச்சு அதை எதை சாப்பிட்டாலும் உடல் குறையல அப்படின்றாங்க சிலர் காலையில சாப்பிடுறதே கிடையாது.
மத்தியானம் ரெண்டு சப்பாத்தி சாப்பிடுறாங்க இரவு நேரத்தில் போகும்போது சாப்பிடுறாங்க அப்போ எல்லாமே சரியா போயிடுது அப்ப வந்து உடம்பு தன்னால வீங்க ஆரம்பிச்சுடும்.
நம் உடலுக்கு தேவை 64 கவளம் 64 கவளத்தில் 32 கவளம் சாப்பிட்டால் போதுமானது. அரை வயிறு சாப்பாடு 32 கவளம். ஒரு கவளம் என்பது உங்கள் கைப்பிடி இல்ல ஒரு கை அள்ளி சாப்பிடுறது.
அப்ப 32 கைப்பிடி சாப்பிட்டாலே போதுமானது. அந்த அளவுக்கு இருந்தா உடம்பு கண்டிப்பாக ஏறாது அதையும் தாண்டி இன்னைக்கு இருக்கிற உணவுகள் சரியில்ல.
இதையும் படிக்கலாமே ; உடல் எடை குறைய தினமும் குடிக்க வேண்டிய சூப்பர் ட்ரின்க்
எப்படின்னா தோசை ஒன்று சுட்டுட்டு வருவாங்க. கொண்டு வந்த ஒரு தோசையை சாப்பிட்டு அடுத்த தோசை வர வரைக்கும் இவங்க காத்திருக்கணும்.
அப்ப காத்திருக்கும் போது ஏற்கனவே சாப்பிட்ட தோசை செரிமானம் ஆகிட்டு இருக்கும். செரிமானம் ஆகும் போது அடுத்த தோசை வரும். அந்த தோசையை சாப்பிட முடியாது.
அப்போ உடம்புல சுரப்பிகள் சுரந்து இருக்கும் அந்த சுரப்பி சேர்ந்து செரிக்கும் போது உடம்பு ஊத ஆரம்பிச்சிடும். அதனால் கிராமப்புறங்களில் எல்லாம் மொத்தமா தோசையை சுட்டு வச்சிடுவாங்க. 10-15 தோசையை மொத்தமா சுட்டு வச்சுட்டு சாப்பிட்டால் உடல் குண்டாகாது.
அதை சரி செய்வதற்கான மருந்து எலுமிச்சம் பழம், சாம்பார் வெங்காயம் என்ற சின்ன வெங்காயம், தேன், முருங்கைக்கீரை. அடிக்கடி முருங்கைக்கீரை சாப்பிடுறவங்க உடம்பு தன்னால சுருங்க ஆரம்பிச்சுரும் முருங்கக்காய் எப்படி ஒல்லியா இருக்குமோ அதே மாதிரி முருங்கைக்கீரை சாப்பிடுறவங்க உடம்பு கரைக்க ஆரம்பிச்சிடும்
அதனாலதான் முருங்கைக்கீரை சேர்க்குறேன் முருங்கைக்கீரை நிறைய பேர் சாப்பிடுவதே கிடையாது. அது அவ்வளவு நல்லது செய்யக்கூடியது அதெல்லாம் சேர்த்து சாப்பிட்டால் தான் கண்டிப்பா உடம்பு குறையும்.
இது உடம்பு குறையுறதுக்கான மருந்து தயாரிக்கும் முறை:
உடல் எடையை குறைப்பதற்கு நிறைய மருந்து சொல்லி இருக்கிறாங்க. ஆனா எதுவும் ஈசியா கிடைக்கக்கூடியது இல்லை. ஆனா இப்போ நம்ம வீட்டு பின்னாடி முருங்க மரம் வச்சிருப்போம்.
முருங்கை இலை வெங்காயம் இவை இரண்டும் சுலபமாக கிடைக்ககூடியது தான். இவை இரண்டையும் பயன்படுத்தி மருந்து தயாரித்து நமது உடம்பு எடையை குறைச்சுக்கலாம்.
அதே நேரத்துல உணவு கட்டுப்பாடு இருக்கணும். உணவு கட்டுப்பாடு இருந்தாதான் நம்ம மருந்து வேலை செய்யும்.
மருந்து சாப்பிட்டுட்டு இருக்கப்போ மேலும் மேலும் இடையில் ஸ்நாக்ஸ் சாப்பிடுறது டீ பிரட் ஜாம் மாதிரி சாப்பிடற பழக்கங்கள்.
இடையில் எல்லாம் 11 மணிக்கு ஒரு முறை சாப்பிடுறது நாலு மணிக்கு மூணு மணிக்கு சாப்பிடுற பழக்கம் எல்லாம் நம்ம தமிழர் பழக்கத்தில் இருக்குது. அந்த பழக்கம் எல்லாம் தவிர்த்துவிட்டு உணவு மட்டும் சாப்பிட்டுவிட்டு மருந்து எடுத்துட்டு வர்றவங்களுக்கு அவங்க வயசுக்கு ஏத்த மாதிரி உடம்புக்கு வளர்ச்சிக்கு ஏத்த மாதிரி நம்ம எடையை குறைச்சிட்டு மீடியமா வச்சுக்கலாம்.
இதையும் படிக்கலாமே ; காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்
உடம்பும் அழகா இருக்கும் அதுக்கு நாம தான் வாய் கட்டுப்பாடோடு இருக்கணும்.
முதல்ல ஒரு சின்ன வெங்காயம் மட்டும் ஒன்னு சுத்தம் பண்ணிட்டு நல்லா அரைச்சு எடுத்துக்கணும் சின்ன வெங்காயத்தை நல்லா நசுக்கி இது கூட ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து சாரு பிழிந்து நன்றாக கலக்க வேண்டும். அதனுடன் அறைத்து வைத்துள்ள முருங்கை இலையை கலந்து பிறகு எந்த அளவுக்கு சார் இருக்கோ அந்த அளவுக்கு தேன் கலந்து வைக்கவும்.
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால் குடித்து விட்டு கலந்து வைத்திருக்கும் முருங்கை இலை, தேன், சின்னவெங்காயம் மற்றும் எலுமிச்சை கலந்த கலவையை குடிக்க வேண்டும்.
இந்த மருந்து குடிச்ச பிறகு தண்ணி குடிக்க கூடாது நீங்க அப்படி குடிச்சீங்கன்னாக்க எடை குறையாது. குடிச்சிட்டு நல்லா ஒரு கிலோமீட்டர் இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டும். அப்பொழுது தேவையில்லாத உடம்பில் இருக்கும் நீர் எல்லாம் வெளியேறும்.
இதையும் படிக்கலாமே ; அறிந்து கொள்ள வேண்டிய ஏழு ஆரோக்கிய குறிப்புகள்
ஒரு மணி நேரம் கழிச்சு சாப்பிட்டால் நீங்க நினைச்சபடிக்கு உங்க எடையை கரெக்டா குறைச்சிறலாம் தேவையில்லாத கொழுப்பு சத்து நீர்ச்சத்து எல்லாமே குறைஞ்சிடும் அழகான வசீகரமான முகத்தை உடம்ப நீங்க கொண்டு வரலாம்.
உணவு கட்டுப்பாடும் இருக்கணும் உடல் எடையை குறைப்பதற்கு இது ஒரு சிறந்த மருந்து எலுமிச்சம்பழம் முருங்கை இலை வெங்காயம் அதோட தேன் சேர்த்து அதை சம அளவு எடுத்து சாப்பிட வேண்டும்.
இது காலையில சாப்பிட்டு நடக்கிறது. குண்டானவங்க எடுத்ததுமே நாலு கிலோமீட்டர் அஞ்சு கிலோமீட்டர் நடந்தா ரெண்டு நாளுக்கு அப்புறம் நடக்க முடியாது அரை கிலோமீட்டர் நடங்க ஒரு பத்து நாளுக்கு அப்புறம் ஒரு முக்கால் கிலோமீட்டர் நடங்க அதுக்கு அடுத்து ஒரு கிலோமீட்டர் நடந்த அப்படியே கொஞ்சம் கொஞ்சமா நீங்களா தான் இது பண்ணனும்.
எடுத்ததுமே அஞ்சு கிலோமீட்டர் நடந்தா ஒரே நாள்ல குறைய முடியாது நிறைய பேர் என்ன பண்றாங்க மொத்தமா நடந்தால் ஒரே நாள்ல குறைஞ்சிடும்னு நினைக்கிறாங்க. அப்படி குறையவே குறையாது முதல்ல நம்மளால எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் நடந்துட்டு திரும்பி வந்துடனும்.
ஆனால் இதை சாப்பிட்டு மத்தியானத்தில் சாப்பாடு மட்டும்தான் இரவு சாப்பாடு தான் நடுவுல எந்த ஒரு உணவும் எடுத்துக் கொள்ளக்கூடாது. டீ காபி பன் வேற ஏதாவது பஜ்ஜி இதெல்லாம் சாப்பிட்டால் கண்டிப்பா உடம்பு குறையாது. இந்த மருந்தை பயன்படுத்தினால் கண்டிப்பாக உடல் எடையை குறைக்கக்கூடிய மருந்து இந்த மருந்த பயன்படுத்தி பயன் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதையும் படிக்கலாமே ; கேன்சர் வருவதற்கான அறிகுறிகள்
