நம்முடைய முடியைக் கருப்பாகக் கருகருவென்று மாற்றக்கூடிய ஒரு சூப்பரான எண்ணையை நமது வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து வெள்ளை முடியைக் கருப்பாக மாத்துறதுக்குரிய செய்முறை பற்றி தெரிந்து கொள்வோம். வெள்ளைமுடி கருப்பாக மாற …!
தேவையான பொருட்கள்:
காபி பவுடர். 1 டேபிள் ஸ்பூன்
டீ பவுடர். 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 100 மில்லி
எலுமிச்சம் பழம். பாதி அளவு
செய்முறை:
ஒரு பவுலை எடுத்து அதில் 100 ml தேங்காய் எண்ணெயை ஊற்றி அதனுடன் எடுத்து வைத்திருக்கும் ஒரு டேபிள்ஸ்பூன் காபி பவுடர் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் டீ பவுடர் இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். நன்றாகக் கலக்கியபின் அதனுடன் எலுமிச்சை சாறு ஏழு சொட்டு விட்டு கலக்கவும்.
எண்ணெய் கலவையை இரண்டு மணி நேரத்திற்கு மூடி வைத்து விடவும்.
கொஞ்சம் பெரியதான சட்டியில் தண்ணீர் ஊற்றி நடுவில் ஒரு வளையத்தை வைத்து அதன் மேல் நாம் கலந்து வைத்திருக்கும் எண்ணையை சட்டியின் உள்ளே தண்ணீருக்குள் உள்ளே இருக்கும் வளையத்தின் மேல் வைத்து அடுப்பில் வைத்து எரியவிடவும்.
எண்ணையில் நிறம் மாறி காபி பவுடர் மற்றும் டீ பவுடரும் நிறம் மாறி கருமை நிறத்திற்கு வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வையுங்கள்.எண்ணை நன்றாக ஆறியதும் ஒரு பாட்டிலில் வடிகட்டி மூடி வைக்கவும்.
இதையும் படிக்கலாமே:ஐந்து நிமிடங்களில் உங்களுடைய முகத்தை வெண்மைப்படுத்த அழகு குறிப்பு.
பயன் படுத்தும் முறை:
வெள்ளைமுடி கருப்பாக மாற …! இந்த எண்ணையை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன் லேசாகச் சூடு செய்து பயன்படுத்தலாம். அப்போது தான் முடியின் வேர்கால்களில் நன்றாக இறங்கும்.
சூடு செய்தபின் எண்ணையை கொஞ்சமாக எடுத்து மயிர் கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்யவும். கருப்பு வெள்ளை என்று பார்க்காமல் அனைத்து இடங்களிலும் முடி விழுந்த இடங்களிலும் நன்றாக மசாஜ் செய்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து பின் சீயக்காய் அல்லது ஷாம்பு பயன் படுத்தி கழுவி விடவும்.
வாரத்திற்கு மூன்று முறை இதேபோல் தொடர்ந்து நீங்கள் குளித்து வந்தால் மிகப்பெரிய மாற்றத்தைக் காணலாம். ஒவ்வொரு முறை நீங்கள் குளிக்கும் போதும் எண்ணையை மிதமாகச் சூடு செய்து நீங்கள் பயன்படுத்தலாம்.
நன்றி.