கால்சியம் குறைபாடு நீங்க |Top 10 Calcium Rich Foods Tamil | Calcium Deficiency Solution |Health Tips
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் பற்களின் உறுதிக்கும் மிகவும் அவசியமான சத்து கால்சியம் என நம் அனைவருக்குமே தெரியும். இது தவிர இருதயம் சீராக இயங்குவதற்கும் தசை மற்றும் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படுவதற்கு கூட கால்சியம் மிக அவசியமான சத்து.
மாறி வரக்கூடிய உணவுப் பழக்கம் வாழ்க்கை முறை காரணமாக கால்சியம் குறைபாடு பிரச்சனை அதிகமாகி அவதிப்படுறாங்க பொதுவாக இந்த கால்சியம் குறைபாடு அதிகமாக டீ காபி குடிக்கிறவங்களுக்கும் தைராய்டு பிரச்சினை இருக்குறவங்களுக்கும் ஜீரண கோளாறினால் அவதிப்படுறவர்களுக்கும் குறைபாடு ஏற்படுவதுண்டு மற்றும் வயது மூப்பு காரணமாக கூட இந்த கால்சியம் குறைபாடு வந்து ஏற்படும்.
பொதுவாக ஆண்களை விடவும் பெண்கள் தான் இந்த கால்சியம் குறைபாடு பிரச்சனையினால் அதிகமாக அவதிப்படுறாங்க. உடல்ல கால்சியம் குறைபாடு இருக்குனா என்னென்ன அறிகுறிகள் இருக்கும்.
கை, கால் மற்றும் முதுகுல அதிக வலி உண்டாகிறது முடி கொட்டி போறது ஸ்கின் டிரையா இருக்கிறது அதிக உடல் சோர்வு மற்றும் மசில் ஸ்கிரீன் சொல்லக்கூடிய தசை பிடிப்பு அடிக்கடி ஏற்படுவது மூட்டுகள் மற்றும் கைகால் உள்ள ஜாயின்ஸ்ல கிராக்கிங்ஸ் அல்லது பாப் சவுண்ட் கேட்கிறது இப்படி அடிக்கடி மூட்டுகள்ல இதுபோன்ற சத்தம் உண்டாகிறதும் கூட கால்சியம் குறைபாடு இருப்பதற்கான ஒரு அறிகுறிதான்.
இதையும் படிக்கலாமே ; கேன்சர் வருவதற்கான அறிகுறிகள்
இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த கால்சியம் குறைபாட்டை போக்குவதற்கு நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகள்ல கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தாலே போதும் மிக எளிதான முறையில் இந்த கால்சியம் குறைபாடை போக்க முடியும்.
கால்சியம் குறைபாட்டை போக்குவதற்கு சாப்பிட வேண்டிய 10 சிறந்த உணவுகள்
ஒன்று : பால்
பாலில் கால்சியம் அதிகமா இருக்குன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும் 100 எம்எல் பால்ல 125 மில்லி கிராம் கால்சியம் இருக்கு. கால்சியம் குறைபாடினால் அவதிப்படுறவங்க காலை மாலை என இருவேளிலும் ஒரு கிளாஸ் பால் குடிச்சிட்டு வந்தால் ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் அளவுல 12% கால்சியம் தேவை பூர்த்தி ஆகும். பால் சாப்பிட பிடிக்காதவங்க பால் சார்ந்த உணவுகளான தயிர் மோர் வெண்ணெய் சீஸ் பன்னீர் போன்ற உணவுகளை எடுத்துக்கலாம் இதுலயும் கூட கால்சியம் அதிக அளவுல இருக்கும்.
இரண்டு : எள்ளு
எள்ளுல மிக அதிக அளவிலான கால்சியம் சத்து இருக்கு 100 கிராம் எள்ளுல 975 மில்லிகிராம் கால்சியம் இருக்கு இந்த கால்சியம் குறைபாடுனால மூட்டு வலி முதுகு வலி போன்ற பிரச்சனைகள் அவதிப்படுறவங்க எள்ளுல இருந்து எடுக்கக்கூடிய எள்ளு எண்ணெயில் (நல்லெண்ணெய்) சமைக்கும் உணவுகளில் அதிகம் பயன்படுத்திட்டு வரலாம். அல்லது எள்ளுல செய்த எள்ளு பர்பி எள்ளு உருண்டை போன்ற ஸ்நாக்ஸ் அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.
மூன்று : முட்டை
கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவுகளில் மிக முக்கியமான ஒரு உணவு முட்டை ஒரு அவித்த முட்டையில் 25 மில்லிகிராம் கால்சியம் இருக்கும் மற்றும் உடலுக்கு தேவையான ஏராளமான வைட்டமின் மற்றும் மினரல்கள் அடங்கியது முட்டை. கால்சியம் சத்து குறைபாடுனால் அவதிப்படுறவங்க தினமும் ஒன்றிலிருந்து இரண்டு முட்டை சாப்பிடுறத வழக்கமா வச்சுக்கலாம்.
இதையும் படிக்கலாமே ; ஐந்து நிமிடங்களில் உங்களுடைய முகத்தை வெண்மைப்படுத்த அழகு குறிப்பு.
நான்கு : மீன்
கடல் உணவுகளில் மீன்ல அதிக அளவில் கால்சியம் இருக்கு வத்தி மற்றும் சால்மன் வகை மீன்களை அதிக அளவிலான கால்சியம் இருக்கிறது. 100 கிராம் மீன் துண்டுகளில் 15 மில்லி கிராம் கால்சியம் இருக்கு. மீனை உணவில் அதிகமா சேர்த்து சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
ஐந்து : கேழ்வரகு
சிறு தானிய உணவுகளில் கேழ்வரகுல தான் அதிக அளவுல கால்சியம் இருக்கு 100 கிராம் கேழ்வரகுல 344 மில்லி கிராம் கால்சியம் இருக்கு. இது ஒரு நாளைக்கு தேவையான 35% கால்சியம் தேவையை பூர்த்தி செய்யும். கால்சியம் குறைபாட்டினால் அவதிப்படுறவங்க ராகில செய்த இட்லி தோசை இடியாப்பம் என ராகில செய்த உணவுகளை ஒருவேளை உணவாக கூட நீங்க சாப்பிட்டு வரலாம் அல்லது கேழ்வரகுல செய்த ஸ்நாக்ஸை கூட நீங்க அடிக்கடி சாப்பிட்டு வரலாம். இப்படி சாப்பிட்டு அதன் மூலமா கால்சியம் குறைபாட்டை மிக எளிதாக போக்க முடியும்.
ஆறு : பாதாம்,
நட்ஸ் வகைகளில் பாதாம்ல அதிக அளவுல கால்சியம் இருக்கு 100 கிராம் பாதாம்ல 260 மில்லி கிராம் கால்சியம் இருக்கு ஒரு கையளவு பாதாமை முதல் நாள் இரவு நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த ஊறிய பாதாமை தோல் உரித்து சாப்பிட்டு வந்தால் கால்சியம் சத்தை அதிகரிக்க முடியும்.
இதையும் படிக்கலாமே ; ஐந்து நிமிடங்களில் உங்களுடைய முகத்தை வெண்மைப்படுத்த அழகு குறிப்பு.
ஏழு : சோயா பீன்ஸ்
100 கிராம் சோயாபீன்ஸ்ல 277 மில்லி கிராம் கால்சியம் சத்து இருக்கு கால்சியம் குறைபாட்டினால் அவதிப்படுறவங்க சோயாபீன்ஸை சுண்டலாகவோ அல்லது சமைத்த உணவுகளாகவோ நீங்க சேர்த்து சாப்பிட்டு வரலாம் அல்லது சோயா சார்ந்த உணவுகளை கூட நீங்க அடிக்கடி உணவுல சேர்த்துட்டு வரலாம்.இதுவும் கால்சியம் உடல்ல அதிகரிக்கிறதுக்கு உதவியாக இருக்கும்.
எட்டு: அத்திப்பழம்
டிரை ஃப்ரூட்ஸ் அத்திப்பழத்தில் நல்ல அளவிலான கால்சியம் இருக்கு 100 கிராம் காய்ந்த அத்திப்பழத்தில் 162 மில்லி கிராம் கால்சியம் சத்து இருக்கு கால்சியம் குறைபாட்டால் அவதிப்படுறவங்க தினமும் 5 லிருந்து 6 அத்திப்பழத்தை சாப்பிடுறதை வழக்கமா வச்சுக்கலாம்.
இதையும் படிக்கலாமே ; கேன்சர் வருவதற்கான அறிகுறிகள்
ஒன்பது ; ஆரஞ்சு பழம்
பழங்களில் ஆரஞ்சு பழத்தில் நல்ல அலவிலான கால்சியம் இருக்கு 100 கிராம் ஆரஞ்சுல 40 மில்லி கிராம் கால்சியம் சத்து இருக்கு மற்றும் இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான விட்டமின் சி கால்சியம் சத்தை உடல் உறிஞ்சிடுவதற்கும் உதவி செய்யும்.
பத்து : பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள்
பொதுவாக அனைத்து வகை கீரைகளுமே கால்சியம் சத்து உண்டு அதிலும் குறிப்பாக பசலைக்கீரையில் அதிக அளவில் கால்சியம் சத்து இருக்கு மற்றும் காய்கறிகளில் பீன்ஸ் பிரக்கோலி வெண்டைக்காய் முள்ளங்கி போன்ற காய்கறிகளும் அதிக அளவுல கால்சியம் இருக்கு.
இதையும் படிக்கலாமே ; ஐந்து நிமிடங்களில் உங்களுடைய முகத்தை வெண்மைப்படுத்த அழகு குறிப்பு.
சமைக்கும் உணவுகளை இது போன்ற காய்கறிகளை அதிகம் உணவுல சேர்த்து சமைத்து சாப்பிடுறது கால்சியம் சத்து உடலை குறைவாக இருக்கிறவங்களுக்கு இதுவரைக்கும் பார்த்த இந்த உணவுகளை சாப்பிடுவது மட்டும் இல்லாமல் தினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு மணி நேரம் சூரிய ஒளியில் நிக்கணும்.
சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய கால்சியம் சத்து உடல்ல முழுமையாக போய் சேருவதற்கு வைட்டமின் டி சத்து மிக அவசியமான ஒன்று இந்த கால்சியம் சத்தை உடல் எளிதாக கிரகித்துக் கொள்வதற்கு தினமும் சூரிய ஒளியில் நிற்பது நல்ல பலனை தரும்

