அனைத்து தோல் நோய்களும் குணமாக அருமையான மருந்து
Home remedies for itching skin in Tamil – Health Tips.
தோல் சம்பந்தமான பிரச்சினைகளினால் பலரும் அவதிப்படுவார்கள். முக்கியமாக அரிப்பு, சொரியாசிஸ், கரப்பான், வெண்படை, தேமல் போன்ற தோல் நோய்களினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தோலில் ஏற்படக்கூடிய அனைத்து நோய்களுக்கும் முக்கியமான காரணம் உடலில் கழிவுகள் அதிகம் தேங்கி இருப்பதுதான்.
அதாவது ரத்தத்தில் டாக்ஸின் அதிகமாக இருப்பதை டாக்ஸின் பாடினு சொல்லுவார்கள். இந்த டாக்ஸின் எப்படி உடலில் அதிகமாகிறது. அதிகமான ஜங் ஃபுட்ஸ் சாப்பிடுவது இயற்கை உபாதைகளை சரியான நேரத்தில் சரியாக கழிக்காமல் இருப்பது உடலில் வியர்வை வெளியாகாமல் இருப்பது போன்ற காரணங்களினால் உடலில் டாக்ஸின் அதிகமாகிறது. இந்த டாக்ஸின் தோல் வழியாக வெளியேற்றப்படும் போதுதான் இந்த தோல் சம்மந்தமான நோய்கள் உருவாகிறது.
இதையும் படிக்கலாமே ; ஒரு பைசா செலவில்லாமல் ஒரே நாளில் பைல்ஸ் முற்றிலுமாக மறைந்து விடும்
இது மட்டும் இல்லாமல் சர்க்கரை நோயாளிகள் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்கள் கல்லீரல் நோய் மற்றும் விஷக்கடி பூச்சிக்கடி போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்களுக்கும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும் தோலில் ஏற்படக்கூடிய அரிப்பு மற்றும் காந்தல் விளைவாக அதிகமாக சொரிந்து புண்கள் உண்டாகி மக்கள் பெரிதும் அவதிப்படுவார்கள். இது போன்ற தோல் சம்பந்தமாக உண்டாக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளுக்கும் வீட்டு வைத்தியம் மூலமாக நிரந்தரமாக தீர்வு காண முடியும்.
தோல் சம்பந்தமான நோய்களை எப்படி நிரந்தரமாக குணப்படுத்துவது.
அரிப்பு ஏற்படும் இடங்களில் மருந்து போடுவதற்கு ஒரு எண்ணை தயார் செய்யலாம். இந்த எண்ணை செய்வதற்க்கு தேவையான பொருட்கள் இரண்டு ஸ்பூன் வேப்பிலை பொடி இரண்டு ஸ்பூன் குப்பைமேனி இலை பொடி 100 மில்லி தேங்காய் எண்ணெய் இந்த மூன்றும் தான் இதற்கு தேவையான பொருட்கள். இதுல குப்பைமேனி இலை பொடியும் வேப்பிலை பொடியும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
100 மில்லி தேங்காய் எண்ணெயுடன் இரண்டு ஸ்பூன் குப்பைமேனி இலை பொடி 2 ஸ்பூன் வேப்பிலை பொடி சேர்த்து இந்த மூன்றையும் கலந்து கொள்ள வேண்டும். கலந்து வைத்திருக்கும் எண்ணெய் மற்றும் பொடிகள் கலந்த கலவையை நன்றாக சூடு செய்து ஆறவைத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் அடைத்து வைத்து பயன் படுத்தலாம். தயார் செய்து வைத்திருக்கும் எண்ணெயை அரிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் நீங்கள் தொடர்ந்து தடவி வரும்போது அரிப்பு குணமாவதை காணலாம்.இந்த எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தும்போது முற்றிலும் அரிப்பு குணமாகும்.
கற்றாழை (Aloe Vera Gel) தோலில் உண்டாகக்கூடிய அதிக அரிப்பிற்கும் காந்தலுக்கும் நல்ல தீர்வு கொடுக்கக்கூடியது கற்றாழை சோறு. ஆலுவேராவில் இருக்கக்கூடிய ஜெல்லை மட்டும் எடுத்து அரிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் தடவி 10 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் போதும். இதை தினமும் தடவி வரும்போது நல்ல தீர்வு கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே ; ஹீமோகுளோபின் அதிகரிக்க 10 உணவுகள்
ஆலிவ் ஆயில் பாதாம் ஆயில் கோக்கனட் ஆயில் மூன்று எண்ணெய்களுக்குமே தோலில் ஏற்படக்கூடிய எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் குணமாக்குற ஆற்றல் உண்டு. இந்த எண்ணையையும் இரவு நீங்க தூங்க போகும் முன் அதிகமாக அரிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் தடவி வரலாம். நல்ல தீர்வு கொடுக்கும்.
என்ன மாதிரியான மருந்து சாப்பிடலாம்.
காம்பு நீக்கப்பட்ட வெற்றிலை ஒன்று உப்பு ஒரு கல் மூணு மிளகு இந்த மூன்றையும் மென்று சாப்பிட்டு வரலாம். தோல் நோய்களுக்கு ஒரு அருமையான மருந்து. காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வர மிக விரைவில் தோல் நோய்கள் குணமாகும்.
உடலுக்குள் அதிகப்படியான நச்சு கழிவுகள் சேர்ந்திருப்பதால் தான் தோல் நோய்கள் உருவாகிறது. அதனால் உடலில் சேர்ந்திருக்கக்கூடிய நச்சுக் கழிவுகளை வெளியேற்றினால் தான் நிரந்தரமாக தோல் நோய்களை குணமாக்க முடியும். நச்சு கழிவுகளை வெளியேற்ற காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி விளக்கெண்ணெய் சாப்பிட்டு வரணும். இப்படி சாப்பிட்டு வரும்போது மலம் நன்றாக வெளியேறும். இதன் மூலம் உடலில் இருக்கக்கூடிய கழிவுகளும் வெளியேற்றப்படும்.
இதையும் படிக்கலாமே ;இரண்டு பொருள் 7 நாள் போதும் கடுமையான நரம்பு தளர்ச்சி,ஆண்மை குறைவு குணமாகும்.
திரிபலா சூரணம் பொடி
வாரம் ஒரு முறை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தாலே போதும். எண்ணெய் எல்லாம் எங்களுக்கு குடிச்சு பழக்கம் இல்லை என்று சொல்பவர்கள் நாட்டு மருந்து கடைகளில் திரிபலா சூரணம் பொடி கிடைக்கும். இந்த பொடியில் ஒரு ஸ்பூன் பொடியை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். இப்படி சாப்பிட்டு வரும்போது மலக்குடலில் இருக்கக்கூடிய அனைத்து மலமும் முழுமையாக வெளியேற்றப்பட்டுவிடும் இதன் மூலமாக உடலில் இருக்கக்கூடிய டாக்ஸினையும் வெளியேறிவிடும்.
காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் அருந்துவது, சாப்பிட்ட உணவுகளில் அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது, உதாரணமாக கொய்யாப்பழம் பப்பாளிப்பழம் வாழைப்பழம் எல்லாம் சாப்பிட்டு வரும்போது உடலில் கழிவுகள் நீங்கி உடல் சுத்தமாகும்.
தோலில் அரிப்பு மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். கருவாடு, கம்பு, சோளம், வாழைக்காய் அதிக புளிப்புள்ள உணவுகள் பாகற்காய் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். உடலில் அதிக அரிப்பு மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளினால் அவதிப்படுபவர்கள் மேலே இருக்கும் முறைகளை பின்பற்றி உடலில் கழிவுகள் தேங்காமல் வெளியேற்றி அரிப்பு போன்ற அவஸ்தைகளிருந்து விடுதலை பெற்று நல்வாழ்வு வாழலாம்.
