.பகவான் கிருஷ்ணரின் ஆசிர்வாதம் உங்கள் வீடுகளில் நிறைந்திருக்கும். இந்த உலகில் பணக்காரராக இருக்க யார்தான் விரும்பமாட்டார்கள். அன்னை லட்சுமி தேவி செல்வத்தின் தேகம் என்று அழைக்கப்படுகிறார். எந்த வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாரோ அங்கு ஒருபோதும் பண பற்றாக்குறை ஏற்படாது. அவர்களது வாழ்வில் எப்போதுமே அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கும். அதிர்ஷ்டம் வரப்போவதை உணர்த்தும் 10 அறிகுறிகள்
நீங்கள் உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒவ்வொரு நாளும் விஷ்ணு பகவானுக்கு பூஜை செய்து வணங்குவதைப் போல அவசியம் லட்சுமி தேவியையும் வணங்கி வாருங்கள். இது உங்கள் வீட்டில் பணப் புழக்கத்தை அதிகரிக்கும். ஒருவருக்கு லட்சுமி தேவி மற்றும் விஷ்ணுவின் கிருபை இருந்தால் செல்வம் மகிழ்ச்சி மற்றும் செல்வாக்கு அதிகரிப்பதோடு அந்த நபரின் மரியாதையும் பல மடங்கு அதிகமாகும்.
லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்களை பெற தொடங்கினால் நீங்கள் சில நல்ல அறிகுறிகளைப் பார்ப்பீர்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இது போன்ற சில அறிகுறிகளை நீங்கள் கண்டால் உங்களுக்கு ஏதாவது நல்ல காரியம் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நல்ல நேரம் வருவதற்கான முக்கியமான அறிகுறி பற்றி தெரிந்து கொள்வோம்.
முதலாவது அறிகுறி.
உங்கள் வீட்டில் திடீரென்று கருப்பு எறும்புகள் வட்டமிடும் போதும் எதையாவது சாப்பிடும் போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வரப் போகிறார் என்பதையும் நீங்கள் மகத்தான செல்வத்தைப் பெறப்போகிறீர்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
கருப்பு எறும்புகள் உங்கள் வீட்டிற்கு வரத் தொடங்கும்போது உங்கள் குடும்பத்தினருக்கும் மங்களகரமான காரியங்கள் நடக்க தொடங்குகிறது. இது போன்ற சூழலில் நீங்கள் கருப்பு எறும்புகளுக்குச் சர்க்கரை கலந்த மாவை வைக்கலாம்.
இப்படி செய்வதன் மூலமாக உங்கள் இஷ்ட தெய்வத்தின் சமிஞ்ஞை உங்களை அறிந்து விட்டது என்று அர்த்தம். அதன் பிறகு அந்த எறும்புகள் தானாகவே அங்கிருந்து சென்றுவிடும். நீங்கள் ஏதாவது வேலைக்காக அதிகாலை வீட்டை விட்டு வெளியே செல்லும்போது பழகி புதிதாகத் திருமணமான மணமக்களை ஒன்றாகப் பார்க்க நினைத்தால் உங்களுக்கு நல்ல காலம் வரப்போகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இரண்டாவது அறிகுறி
பொதுவாகப் பறவைகள் மரங்களில் தான் கூடுகளைக் கட்டும் ஆனால் உங்கள் வீட்டில் ஒரு பறவையோ அல்லது குழுவியோ கூடு கட்டினால் அது மிகவும் மங்களகரமான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.இதன் மூலம் உங்கள் வீட்டிற்கு மகாலட்சுமி வரப் போகிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
மூன்றாவது அறிகுறி
இதையும் படிக்கலாமே: கண்திருஷ்டி நீங்க ஒரு எலுமிச்சை பழத்தில் இதை வைத்தால் போதும்
பெரும்பாலான மக்கள் பல்லியைப் பார்த்தவுடன் அதை உடனடியாக விரட்டத் தொடங்குவார்கள். ஆனால் நண்பர்களே பல்லி உண்மையில் லட்சுமி தேவியின் வடிவமாகக் கருதப்படுகிறது என்றால் அது உங்களுக்கு நல்ல விஷயத்தை ஏற்படுத்தும். திடீரென்று மூன்று பல்லிகள் வீட்டின் ஒரு இடத்தில் தோன்றினால் அது மிகவும் நல்ல அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
இது மகாலட்சுமியின் வருகையை உணர்த்துகிறது. பல்லிகள் ஒன்றை ஒன்று துரத்துவதை நீங்கள் பார்த்தால் அது உங்கள் வீட்டின் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. தீபாவளி தினத்தில் துளசி மாடத்தில் பல்லியைப் பார்ப்பது மிகவும் நல்லது. இது நீங்கள் மகத்தான செல்வத்தைப் பெற போகிறீர்கள் என்பதற்கான முக்கிய அறிகுறி.
நான்காவது அறிகுறி
உங்கள் வலது கையில் தொடர்ந்து அரிப்பு இருந்தால் அதுவும் பணம் பெறுவதற்கான நல்ல அறிகுறி தான். துடைப்பம், ஆந்தை, முக்கடம், புல்லாங்குழல், யானை, மாங்காய், சங்கு, பல்லி, நட்சத்திரம், பாம்பு, ரோஜா போன்றவற்றை நீங்கள் கனவில் பார்க்க இருந்தால் அதுவும் செல்வம் வருவதற்கான முக்கியமான அறிகுறி தான்.
ஐந்தாவது அறிகுறி
தினமும் காலையில் எழுந்தவுடன் சங்கு சதத்தைக் கேட்டாலும் அதுபோல மாலையிலும் சங்கு சதத்தைக் கேட்டாலும் அது மகாலட்சுமி வருகைக்கான முக்கியமான அறிகுறி என்று கூறப்படுகிறது.
ஆறாவது அறிகுறி
இதையும் படிக்கலாமே: வீட்டில் செல்வம் நிலைத்திருக்க மறக்கக் கூடாதவை
நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கரும்பு கட்டுகளைப் பார்க்க நேர்ந்தால் அதுவும் பணம் கிடைப்பதற்கான முக்கியமான அறிகுறிதான். நீங்கள் பயணம் செய்யும்போது அந்த நேரத்தில் பாம்புகள் அல்லது குரங்குகளைப் பார்க்க நேர்ந்தால் அது உங்கள் நல்ல நேரத்தின் முக்கியமான அறிகுறித்தான். இது போன்று விலங்குகளைப் பார்ப்பது உங்கள் வாழ்க்கையின் நிதி நெருக்கடியை நீக்கும். உங்களுக்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும்
ஏழாவது அறிகுறி
உங்கள் வீட்டின் அருகிலோ அல்லது சாலையிலோ நீங்கள் மயிலைப் பார்த்தாலோ அல்லது மயில் நடனம் ஆடுவதை பார்த்தால் அன்றிலிருந்து உங்களுக்கு நல்ல காலம் தொடங்கிவிடும். மயில் முருகப்பெருமானின் வாகனம் எனவே மயிலின் பார்வை மிகவும் நல்லதாகப் பார்க்கப்படுகிறது.
எட்டாவது அறிகுறி
ஆந்தை மகாலட்சுமியின் வாகணமாகக் கருதப்படுகிறது. ஆந்தைகள்பற்றி நம் சமூகத்தில் பல வகையான நம்பிக்கைகள் இருக்கிறது. ஆந்தைகள் பெரும்பாலும் இரவுகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. நல்ல மற்றும் கெட்ட சகுனங்களை உணர்த்தும் சக்தியானது ஆந்தைக்கு இருக்கிறது. சகுன சாஸ்திரத்தின் படி ஆந்தையின் தோற்றம் பல இடங்களில் நல்லதாகக் கருதப்படுகிறது.
நீங்கள் ஏதாவது வேலை விஜயாமாக வெளியே செல்லும்போது வழியில் ஆந்தையைப் பார்ப்பது செல்வத்தின் அடையாளம் தான். நீங்கள் நினைத்த காரியம் வெற்றி அடைய லட்சுமி தேவி வாகனமானஆந்தை நீண்ட நாட்களாக உங்கள் வீட்டிற்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தால் உங்கள் வீட்டிற்கு மகாலட்சுமி வரப் போகிறாள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதிர்ஷ்டத்தின் மூடிய கதவுகள் விரைவில் திறந்து விடும்.
ஒன்பதாவது அறிகுறி
நீங்கள் செல்லும்போது ஒரு நாய் வாயில் சைவ உணவையோ ரொட்டி துண்டையே கவ்விக் கொண்டு சென்றால் இதுவும் நல்ல அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. உங்கள் வீட்டின் பிரதான வாசலில் யானை தும்பிக்கையை உயர்த்தி நின்றால் லட்சுமிதேவி உங்களிடத்திற்கு வரப் போகிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் யானை விநாயகப்பெருமானின் அடையாளமாகக் கருதப்படுகிறது
பத்தாவது அறிகுறி
. தினமும் அதிகாலையில் நீங்கள் வீட்டிற்கு வெளியே யாராவது துடப்பத்தால் பெருக்குவதை பார்த்தால் இது பல நாட்கள் தொடர்ந்து நடந்தால் நீங்கள் கூடிய விரைவில் பணக்காரர் ஆகப் போகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதுபோலக் கனவில் துடப்பத்தை பார்ப்பதும் செல்வத்தின் அறிகுறி தான்.