அடுத்தவர் வீட்டில் சாப்பிடுவதற்கு முன்பு இதைக் கண்டிப்பாகத் தெரிந்து கொள்!
அந்தக் குருகுலத்தில் துறவி ஒருவர் தனது சீடர்களுக்கு வாழ்வியல் பாடங்களைச் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் நீங்கள் இங்குக் குருகுலத்திலோ அல்லது வேறு எங்குச் சென்று சாப்பிடுவதாக இருந்தாலும் நீங்கள் சாப்பிடும் அந்த உணவு எப்படி எங்கே யார் மூலமாகச் செய்யப்படுகிறது எவ்வாறு பரிமாறப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும்.
இது ஒரு சில இடங்களில் சாத்தியமில்லை என்றாலும் நீங்கள் அதைத் தெரிந்து கொண்டால் உணவுகளால் ஏற்படும் தோஷங்களிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்றார். அதற்கு ஒரு சீடன் குருவே நாம் சாப்பிடும் உணவில் கூடத் தோஷங்கள் உள்ளனவா என்று கேட்டான். அதற்குத் துறவி ஆம் நாம் சாப்பிடும் இந்த உணவுதான் நமது உயிரைத் தாங்குகிறது.
அப்படிப்பட்ட உணவு எப்படி எங்கே எந்த முறையில் யாரால் சமைத்து பரிமாறப்பட்டு நாம் சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமாகும். இதனால் தான் உண்ணும் உணவில் ஆச்சாரத்தை கடைப்பிடி என்று நமது முன்னோர்கள் கூறுகிறார்கள். அதாவது நாம் சாப்பிடும் உணவின் மூலமாக ஐந்து வகையான தோஷங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
அது என்னவென்றால் ஒன்று அர்த்த தோஷம், இரண்டு நிமித்த தோஷம், 3 ஸ்தான தோஷம், 4 குணா தோஷம், ஐந்து சமஸ்கார தோஷம்ஆகும்.
அர்த்த தோஷத்தை பற்றி கூறுகின்றேன்.
அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தமாகும். அதாவது நாம் சமைக்கும் நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் நியாயமான சம்பாதித்தால் வாங்கியதாக இருக்க வேண்டும். இதை ஒரு சிறிய கதையின் மூலமாக விளக்குகிறேன் கேளுங்கள். பண்டிதர் ஒருவர் ஒருநாள் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவு விருந்து ஒன்றிற்கு வருகை தந்தார்.
இதையும் படிக்கலாமே: எந்தக் கடவுள் நல்ல கனவு எந்தக் கனவு கேட்ட கனவு.
பண்டிதர் அறுசுவை உணவுகளைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அந்த வீட்டின் உரிமையாளரான அந்தச் சீடரைப் பார்க்க ஒருவன் வந்து பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை அவரிடம் தந்து விட்டு சென்றான். அந்தப் பணமூட்டையை அந்தச் சீடர் தனது வீட்டின் ஒரு இடத்தில் வைத்தார் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பண்டிதருக்குப் பணத்தாசை தோன்றியது.
சீடர் அந்த அறையில் இல்லாதபோது அந்தப் பணமூட்டைக்குள் கையை விட்டு சிறிது பணத்தை அள்ளி எடுத்துக் கொண்டார். பின்னர் சீடரிடம் விடை பெற்றுக்கொண்டு தனது வீடு திரும்பினார். பிறகு மறுநாள் காலையில் பூஜை செய்யும்போது தான் முதல் நாள் செய்ததை நினைத்துப் பார்த்தார். ஆகா நான் பெரிய தவறு செய்து விட்டேனே இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து மிகவும் வருந்தினார் அந்தப் பண்டிதர்.
பிறகு தான் எடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு நேரடியாகத் தனது சீடனின் வீட்டிற்கு சென்றார் நேற்று நடந்ததை கூறி வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டு தான் எடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்தார். அப்போது அவர் மனதில் ஒன்று தோன்றியது நேற்று சீருடன் வீட்டில் உணவு அருந்தியபின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியது இரவில் அந்த உணவு ஜீரணமாகி கழிவுகள் காலையில் வெளியேறியபிறகு மனம் பரிசுத்தமானதை அவர் நினைத்துப் பார்த்தார்.
பிறகு அவர் தனது சீடனிடம் நீ சம்பாதித்த பணம் எந்த முறையில் உனக்கு வந்தது என்று கேட்டார். அவர் கேட்பதை கேட்டு வெட்கமடைந்து மனம் குறுகிய சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டான். பிறகு துறவி தனது சீடர்களிடம், சீடர்களே இந்தக் கதையில் வருவது போலப் பணத்தாசை பிடித்து தவறுகள் செய்து நேர்மையற்ற முறையில் பணம் சம்பாதிக்கும் ஒருவரிடம் உணவு அருந்தினால் வருவது அர்த்த தோஷம் ஆகும் என்றார்.
இரண்டாவது நிமிட்ட தோஷம்
உணவைச் சமைப்பவரோ உணவைக் கொடுப்பவரோ நல்ல மனதோடு நேர்மையானவராகவும் அன்பானவராகவும் நல்ல சுபாவம் உடையவராகவும் இருக்க வேண்டும். நல்ல எண்ணங்கள் உடையவராகவும் இருக்க வேண்டும். மாறாகத் தீய எண்ணங்கள் உடையவராக இருக்கக் கூடாது. மகாபாரத போர்க்களத்தில் பீஷ்மர் 27 நாட்கள் அம்பு படுக்கையில் கிடந்தார்.
இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி நீங்க…. எலுமிச்சை பழத்தில் இதை வைத்தால் போதும்
அவரிடம் உபதேசங்களை பெறுவதற்காகப் பஞ்சபாண்டவர்களும் கிருஷ்ணரும் அவரைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த பாஞ்சாலி வாய்விட்டு சிரித்து விட்டாள். அதைப் பார்த்த பாண்டவர்கள் கோபப்பட்டு பாஞ்சாலியிடம் நீ ஏன் இப்போது சிரித்தாய் என்று கோபமாகக் கேட்க அதற்குப் பாஞ்சாலி துரியோதனன் சபையில் துச்சாதனன் எனது ஆடையை இழுத்து என்னை மானபங்கம் செய்யும்போது இந்தப் பீஷ்மர் ஏதும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார்.
இவரிடம் போய் நீங்கள் தர்மன்யதிகளையும் உபதேசங்களையும் கேட்கிறீர்களே என்று நினைத்தேன் சிரிப்பு வந்துவிட்டது என்றாள். அதற்குப் பீஷ்மர் திரௌபதி நான் துரியோதனின் வசம் இருந்ததால் அவனால் படைக்கப்பட்ட உணவை நான் சாப்பிட்டு வந்ததால் எனது புத்தி அந்தச் சமயத்தில் வேலை செய்யவில்லை. எனது அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது.
இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் நான் இருந்தபோது எனது பழைய ரத்தம் அம்பின் வழியாக வெளியேறியதால் இப்போது நான்
பரிசுத்தம் ஆகிவிட்டேன் எனது அறிவு பிரகாசம் அடைந்து விட்டது. இப்போது நான் நல்ல உபதேசங்களை கூறலாம் என்றார். சீடர்களே தீய கெட்ட எண்ணங்களோடு இருப்பவன் அளிக்கும் உணவைச் சாப்பிட்டால் தீய எண்ணங்களே அந்த உணவை உண்பவர்க்கும் ஏற்படும். இதுதான் நிமித்த தோசமாகும் சீடர்களே.
மூன்றாவது ஸ்தானதோஷம்
எந்த இடத்தில் உணவுகள் சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருக்க வேண்டும். சமைக்கும்போது தேவையற்ற பிரச்சனைகள் அற்ப காரியங்களுக்கான விவாதங்கள் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அந்த உணவுகள் அசுத்தப்பட்டு விடும். ஒரு முறை துரியோதனன் 56 விதமான உணவுகளைத் தயார் செய்து கிருஷ்ணனை சாப்பிட அழைத்தான்.
இதையும் படிக்கலாமே: 27 நட்சத்திரங்களின் குணங்கள் மற்றும் ரகசியங்கள்
ஆனால் அந்த உணவு சமைக்கும்போது கிருஷ்ணனை எப்படி கைது செய்ய வேண்டும் என்ற கெட்ட விவாதங்களுடன் அந்த உணவு தயார் செய்யப்பட்டது. இதை அறிந்த கிருஷ்ணர் அந்த உணவுகளைச் சாப்பிட மறுத்து நேராக விதுரன் வீட்டிற்கு சென்றார். கிருஷ்ணர் வீட்டிற்கு வந்த மகிழ்ச்சியில் மிதுனனின் மனைவி தன் நிலை மறந்து வேகமாக வாழைப்பழம் ஒன்று எடுத்து பலத்தை கீழே போட்டுவிட்டு தோலை கிருஷ்ணரிடம் சாப்பிட தந்தாள்.
கிருஷ்ணரும் அதை வாங்கி மகிழ்ச்சியாகச் சாப்பிட்டார். இதை பார்த்து பதறிப் போன விதுரர் மனைவியைக் கோபமாகத் திட்டினார். உடனே கிருஷ்ணர் நான் அன்பிற்கு மட்டுமே கட்டுப்பட்டவன். உள்ளன்புடன் ஒரு சிறிதளவு நீரோ ஒரு பழமொன்று எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும் என்றார். சீடர்களைச் சமைக்கும் இடத்தில் அனாவசிய சண்டே சச்சரவுகள் அற்ப விவாதங்கள் கெட்ட அதிர்வுகள் இருக்கவே கூடாது. அப்படி இருந்தால் அந்த உணவில் ஸ்தானதோசம் ஏற்படும் என்றார்.
நான்காவது குண தோஷம்
மனிதனுக்கு சாத்வீக குணம், ரஜோ குணம், தாமச குணம் என்று மூன்று குணங்கள் உள்ளது. இதில் நாம் சாப்பிடும் உணவு சாத்வீக உணவாக இருக்க வேண்டும். சாத்வீக உணவு இல்லை என்றால் அது குண தோஷம் ஆகும். அதாவது பால் நெய் அரிசி மாவு, பருப்பு போன்றவை சாத்வீகமானவை. இதனைச் சாப்பிட்டால் இறை உணர்வும் மன அடக்கமும் போல அடக்கமும் சகிப்புத்தன்மையும் விவேகம் தவம் வாய்மை கருணை மகிழ்ச்சி நம்பிக்கை பாவம் செய்வதற்கு அஞ்சுதல் தானம் பணிவு எளிமை ஆகியவை கிடைக்கும்.
புளிப்பு உரைப்பு போன்றவை ரஜோ குணங்கள் ஆகும். இந்த உணவைச் சாப்பிட்டால் ஊக்கமும் ஞானமும் வீரமும் தர்மம் தானம் ஆசை முயற்சி இறுமாப்பு வேட்கை திமிர் தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது புலனின்ப பற்று தன் தோளில் ஆசை இந்த ராஜகுணங்கள் வரும் இது உலகப்பற்று உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழிவகுக்கும்.
தாமச குணம் பூண்டு வெங்காயம் முட்டை போன்றவை தாமச உணவாகும். இதனைச் சாப்பிட்டால் ராட்சதன்மையும் மோகமும் அதிகரிக்கும். தாமஸ் உணவு தீய குணத்தை வளர்க்கும் சீடர்களே.
ஐந்தாவது சமஸ்கார தோஷம்
உணவுகள் தூய்மையாகச் சமைக்கப்பட்டாலும் அதிகமாக வேக வைத்தல் அதிகமாக வருத்தல் பழைய உணவு போன்றவை தோஷமாகும். இவை உடம்புக்கும் உள்ளத்திற்கும் தீங்கை விளைவிக்கும். எனவே இந்த ஐந்து வித தோஷங்களை விலக்கி நீங்கள் உணவுகளை உண்ண வேண்டும். அப்போதுதான் மனமானது அன்புடன் தெளிந்த நல்ல அறிவுடன் இறை சிந்தனையுடனும் இருக்கும் என்றார் துறவி.
இதையும் படிக்கலாமே: பரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணங்கள்
சீடர்களும் மனதார ஏற்று கொண்டார்கள். இதனால் தான் நமது முன்னோர்களும் பெரியோர்களும் முடிந்த அளவு வெளியே சாப்பிடுவதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள் என்றும் மற்றவர்கள் வீட்டில் அவ்வளவு சீக்கிரம் சாப்பிடாதீர்கள் என்றும் கூறுகிறார்கள். தானே சமைத்த உணவு தாய் அல்லது மனைவி வீட்டில் சமைத்து பரிமாறும் உணவை உண்பதே ஏற்புடையது என்றும் நமது முன்னோர்கள் கூறுகிறார்கள். இங்குக் கூறப்பட்ட இந்தச் சிறிய கதை உங்களுக்குப் பிடித்ததாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.