ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிடவேண்டிய 10 உணவுகள்

(how to increase blood level naturally)

ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிடவேண்டிய 10 உணவுகள். இன்றைக்கு இருக்கக்கூடிய ஜெனரேஷனில் நிறைய பேர் சந்திக்கக்கூடிய ஒரு பெரிய பிரச்சனை ரத்த சோகை. ரத்த சோகை ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம்  ஊட்டச்சத்துக் குறைபாடு.  அதாவது புதிய சிவப்பணுக்கள் உடலில் உருவாகுவதற்கு தேவையான சத்துக்கள் உடலில் பற்றாக்குறையாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.

நமது உடலில் புதிய ரத்தம் உருவாகுவதற்கு தேவையான சத்துக்கள் இரும்புச்சத்து, விட்டமின் சி, போலிக் ஆசிட், விட்டமின் பி12, புரதம் இந்த ஐந்து சத்துக்களும் ஒன்றாகச் சேர்ந்து தான் உடலில் புதிய ரத்தம் உருவாகும். இந்தச் சத்துக்கள் தான் உடலில் புதிய ரத்தம் உருவாகுவதற்கு தேவையான அடிப்படை சத்துக்கள். இந்தச் சத்துக்கள் அடங்கிய உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து சாப்பிடும்போது உடலில் புதிய ரத்தம் உருவாகும். இதன் மூலமாக உடலில் ரத்த அளவுகளும் சீராக இருக்கும். ரத்த சோகையும் குணமாகும்.

உடலில் புதிய ரத்தம் உருவாகுவதற்கு சாப்பிட வேண்டிய 10 சிறந்த உணவுகள் என்ன?

ஒன்று: கருப்பு திராட்சை

கருப்பு திராட்சையில் இரும்பு சத்தும் பொட்டாசியமும் அடங்கியிருக்கிறது. உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க ஒரு கையளவு கருப்பு திராட்சையை முதல் நாள் இரவே நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் திராட்சையையும் திராட்சை ஊரின நீரையும் மிக்ஸியில் போட்டு அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரணும். கருப்பு திராட்சையை தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ரத்தம் வேகமாக அதிகரிக்கும்.

இரண்டு: மாதுளை ஜூஸ்

பழங்களில் மாதுளையில் அதிக அளவு  இரும்பு சத்து இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் விட்டமின் மற்றும் மினரல்களும் அடங்கி இருக்கு. மாதுளை என்றதுமே சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய சீட் லெஸ் மாதுளையை  வாங்கி சாப்பிடக் கூடாது. நாட்டு மாதுளை அதாவது விதையுள்ள மாதுளைகளை தான் வாங்கி சாப்பிடணும். மாதுளையை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் சாப்பிட்டு வரலாம். தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

மூன்று: பீட்ரூட்ஸ் ஜுஸ்

காய்கறி வகைகளில் பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கு. பீட்ரூட்டை மதிய உணவுகளில் பொறியலாகவோ அல்லது ஜூஸாகவோ எடுத்துட்டு வரலாம்.

நான்கு: மட்டன் மற்றும் பீப் லிவர்


இதையும் படிக்கலாமே: இன்சுலின் சுரப்பை தூண்டும் 10 உணவுகள்

இந்த இரண்டிலும் இரும்புச்சத்து, புரதம் மற்றும் விட்டமின் பி12 அடங்கியிருக்கு. இந்த மூன்று சத்துக்களும் அடங்கிய ஒரே உணவு ஈரல் மட்டும்தான். அதனால் நான்வெஜ் சாப்பிடறவங்க தினமும் தவறாமல் ஒரு 50 கிராம் ஈரல் மதிய உணவுகளில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

ஐந்து: கீரை வகைகள்

எல்லா வகை கீரைகளும் சாப்பிடலாம்.  அதிலும் குறிப்பாக முருங்கைக்கீரையில் அதிக அளவு  இரும்பு சத்து இருக்கு. அதனால் ரத்தம் வேகமாக ஊற முருங்கைக்கீரை சாப்பிட்டு வருவது நல்லது. முருங்கைக்கீரை சாப்பிட பிடிக்காதவங்க முருங்கைக்காயை பொரியல் செய்து சாப்பிட்டு வரலாம். இதுவும் ரத்தம் ஊறுவதற்கு ரொம்பவே  உதவியாக இருக்கும்.

ஆறு: சிட்ரஸ் பழ வகைகள்

எலுமிச்சை சாத்துக்குடி கமலா ஆரஞ்சு போன்ற பழங்களைச் சாப்பிடுவது மிகவும் நல்லது. சிட்ரஸ் பழங்களில்  விட்டமின் சி அதிகமாக இருக்கிறது. விட்டமின் சி நாம் சாப்பிடும் உணவில் இருக்கக்கூடிய இரும்பு சத்துக்கள் அனைத்தும் உடல் உறிஞ்சுவதற்கு உதவக்கூடியது விட்டமின் சி. இரும்புச்சத்து உள்ள உணவுகள் சாப்பிட்டால் கண்டிப்பாக விட்டமின் சி  உள்ள உணவுகளையும் சாப்பிட வேண்டும். அப்பொழுது தான் உடலில் முழுமையாகப் போய் சேரும். தினமும் இந்தப் பழங்களைச் சாப்பிடலாம் அல்லது ஜூஸாவும் குடிச்சிட்டு வரலாம்.

ஏழு: நெல்லிக்காய்


இதையும் படிக்கலாமே: ஆயுளை அதிகரிக்கும் 7 அற்புத விதைகள்

விட்டமின் சி நெல்லிக்காய் அதை  நல்ல அளவில் இருக்கு. நெல்லிக்காயை நீங்கள்  ஜூஸ் போட்டு ரெகுலரா குடிச்சிட்டு வரலாம்.

எட்டு: டிரை ஃப்ரூட்ஸ் ஆன பேரீச்சை

பேரிச்சையில் பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து அடங்கி இருக்கு. இது தவிர ஏராளமான விட்டமின் மற்றும் மினரல்ஸும் அடங்கி இருக்கு. உடலுக்கு உடனடியாக எனர்ஜி கொடுக்கக்கூடிய ஒரு பழம் பேரிச்சம்பழம். ரத்த சோகையினால் ரொம்ப சோர்வாகவும் டயர்ட் ஆகவும் இருக்கும்பொழுது பேரிச்சம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

டிரை ஃப்ரூட்ஸில் அத்திப்பழத்தில் அதிகப்படியான இரும்புச்சத்து அடங்கி இருக்கிறது. அத்திப்பழங்களை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்லது. தேனில் கலந்து அத்திப்பழத்தை சாப்பிடும்போது நாம் சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய அத்தனை சத்துக்களும் உடலில் போய் சேர்ந்து விடும்.

ஒன்பது: முட்டை

நாட்டுக்கோழி முட்டை மிகவும் நல்லது.  நாட்டுக்கோழி முட்டையில் 100% சுத்தமான புரதம் மற்றும் கொழுப்பு அடங்கி இருக்கு. அது மட்டுமில்லாமல் முட்டையுடைய மஞ்சக்கருவில் அதிகப்படியான போலீக் ஆசிட் இருக்கு. உடலில் ரத்தம் அதிகரிக்க தினமும் ஒன்றிலிருந்து இரண்டு முட்டையைத் தவறாமல் சாப்பிட்டு வந்தால் ரத்தம் உடலில்  வேகமாக ஓடும்.

பத்து: காய்கறி சூப்


இதையும் படிக்கலாமே: ஆரோக்கியமற்ற உணவுச் சேர்க்கை மற்றும் மோசமான உணவுச் சேர்க்கை

காய்கறி சூப் எல்லா வகை காய்கறிகளையும் கலந்து சூப் போட்டு குடிச்சிட்டு வரும்போது நம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும்  கிடைத்துவிடும். அது மட்டுமில்லாமல் சாப்பிட்ட உணவுகள்  எளிதில் ஜீரணம் ஆகுறதுக்கு  ரொம்பவே உதவியாக இருக்கும்.

நான் வெஜ் விரும்பி சாப்பிடுறவங்க ஆட்டுக்கால் சூப் நீங்கள் குடிச்சிட்டு வரலாம். இதுவும்  மூட்டு எலும்புகளுக்கு நல்ல  வலுக்கொடுக்கும் வலிமையாக்கும். எலும்புகள் வலிமையாக இருந்தால் மட்டும்தான் புதிய ரத்தமும் உருவாகும்.

எலும்புகள் ஆரோக்கியம் ரொம்ப அவசியம். அதனால் நான்வெஜ் சாப்பிடறவங்க தவறாமல் ஆட்டுக்கால் சூப் குடிச்சிட்டு வரதும் ரொம்பவே  நல்லது.

ஹீமோகுளோபின் அதிகரிக்க  தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன?

காபி டீ குடிக்க கூடாது. காபி மற்றும் டீயில் இருக்க கூடிய ரசாயனங்கள்  நம் சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய இரும்பு சத்து உடலில் போய் சேர்வதற்கு தடையாக இருக்கும். அதனால் காபி டீ குடிக்க கூடாது.மதுபானங்கள் போதை பொருட்கள்  எடுக்கக் கூடாது. சாப்ட் டிரிங்க்ஸ் அதாவது கூல்டிரிங்ஸ் குடிக்க கூடாது.

எவ்வளவுதான் சாப்பிட்டாலும் ஒரு சிலருக்கு ரத்தம் வேகமாக  அதிகரிக்க செய்யாது.  சத்துக்கள் உடலில் போய் சேராமல்  இருக்கிறது என்று அர்த்தம். அதற்குக் காரணம் வயிற்றில் கழிவுகள் வந்து அதிகமாக இருக்கிறது.

திரிபலா சூரணம்

அந்தக் கழிவுகளை வெளியேற்றத்துக்கு  திரிபலா சூரணத்தை தினமும்  சாப்பிட்டு வரணும். திரிபலா சூரணம் என்பதூ  நெல்லிக்காய் தான்றி காய் கடுக்காய் இந்த மூன்று சேர்ந்தது தான்  திரிபலா சூரணம். இந்தப் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி அரை ஸ்பூன் பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து இரவு உணவுக்கு அப்புறம் அரை மணி நேரம் கழித்து சாப்பிட்டு வரணும். ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிடவேண்டிய 10 உணவுகள்

ரெகுலரா நைட்டு சாப்பிட்டு வரும்போது காலையில் மலம்  எளிதில்  வெளியேறும். அது மட்டுமில்லாமல் வயிறு  சுத்தமாயிடும் சாப்பிடும் உணவில் இருக்கக்கூடிய சத்துக்கள் அனைத்தும் உடலை வந்து சேர்வதற்கு  ரொம்ப உதவியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *