வைட்டமின் சி அதிகம் உள்ள 10 உணவுகள்

வைட்டமின் சி அதிகம் உள்ள 10 உணவுகள்

(Top 10 Vitamin C Rich Foods Tamil)

நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்துக்களில் மிகவும் முக்கியமான ஒரு சத்து விட்டமின் சி. இதற்கு அஸ்கார்பிக் அமிலம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த விட்டமின் சி நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை இயற்கையாக அதிகரிக்கிறதுக்கும் உடலில் புதிதாகத் தோன்றக்கூடிய வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எளிதில் அழிப்பதற்கும் மிகவும் உதவியாக இருக்கிறது இந்த விட்டமின் சி. இது மட்டுமில்லாமல் இது ஒரு பவர்ஃபுல் ஆன்டிஆக்சிடென்டாகச் செயல்படும் தன்மை கொண்டது.

நம் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகக்கூடிய ஃப்ரீ ராடிகல்ஸ் என்னும் செல் கழிவுகளை உடலிலிருந்து வெளியேற்றுகிறது. இதன் மூலமாக ஆரோக்கியமான செல்கள் சேதம் அடைவது தடுக்கப்படுவதோடு கேன்சர் மற்றும் கார்டியோ வேஸ்குலேட்சிஸ் போன்ற பிரச்சினைகள் வராமலும் பாதுகாக்கும் ஆற்றல் இந்த விட்டமின் சிசத்துக்கு உண்டு.

 உடலில் ஏற்படக்கூடிய வெட்டுக் காயங்கள் விரைவாக ஆறுவதற்கும் சரும ஆரோக்கியத்திற்கு தேவையான கொலாஜின் செல்களை உற்பத்தி செய்வதற்கும் எலும்புகள் மற்றும் பல் ஈறுகள் பலமாக இருக்கிறதுக்கும் நாம் சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய இரும்புச்சத்துகளை உடல் கிரகித்து எடுத்துக் கொள்ள விட்டமின் சி  தேவையாக இருக்கிறது. இது போன்று விட்டமின் சி ஏராளமான நன்மைகள் தரக்கூடியது என்றாலும் கூட இதனை இயற்கையாக நம் உடலால் உருவாக்கிக் கொள்ள இயலாது.

நாம் சாப்பிடக்கூடிய உணவில் மட்டும் தான் நம் உடலுக்குத் தேவையான விட்டமின் சி சத்து  கிடைக்கும் மற்றும் இது ஒரு வாட்டர் சாலிபுல் விட்டமின் என்கிறதால் நம் உடல் இந்த விட்டமின் சி சத்தினை சேகரித்து வைக்க இயலாது. சோ தினசரி சாப்பிடக்கூடிய உணவுகளில் விட்டமின் சி சத்து இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று.

விட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த பத்து சிறந்த உணவுகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஒன்று: நெல்லிக்காய்

நெல்லிக்காயில் விட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். 100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லி கிராம்  விட்டமின் சி சத்து இருக்கிறது. நம்முடைய இடங்களில் கிடைக்கக்கூடிய உணவுகளிலேயே விட்டமின் சி அதிகம் நிறைந்தது இந்த நெல்லிக்காய் தான். சோ தினசரி ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தாலே ஒரு நாளைக்கு மனித உடலுக்குத் தேவையான விட்டமின் சி அளவில் 50% வைட்டமின் சி சத்தினை எளிதாகப் பெற முடியும். நெல்லிக்காயை பச்சையாகச் சாப்பிட பல் கூச்சம் போன்ற பிரச்சனை இருக்கிறவர்கள் நெல்லிக்காயை குக் பண்ணி  சாப்பிட்டு வரலாம்.

இரண்டு: சிவப்பு கொய்யா


இதையும் படிக்கலாமே: கேன்சர் வராமல் தடுக்கும் 10 வகையான உணவுகள்

பொதுவாகப் பழங்களில் கொய்யாப்பழத்தில் அதிக அளவிலான விட்டமின் சி உண்டு. அதிலும் சிவப்பு கொய்யாவில் மிக அதிக அளவில் விட்டமின் சி இருக்கிறது. 100 கிராம் சிவப்பு கொய்யாவில் 228 மில்லிகிராம் விட்டமின் சி சத்து இருக்கிறது. இது ஆரஞ்சு பழத்தைவிட நான்கு மடங்கு விட்டமின் சி. சோ கொய்யாப்பழம் வாங்கும்போது நாட்டு சிவப்பு கொய்யாவா என்று பார்த்து வாங்கி சாப்பிடணும்.

மூன்று: கீரைகள்

கீரைகளில் டிரம்ஸ் ஸ்டிக் லீவ்ஸ் என்று சொல்லக்கூடிய முருங்கைக்கீரையில் அதிக அளவிலான விட்டமின் சி சத்து இருக்கிறது. 100 கிராம் முருங்கை கீரையில் 220 மில்லி கிராம் விட்டமின் சி சத்து இருக்கிறது. இது தவிர  அகத்திக்கீரை தண்டுக்கீரை போன்ற கீரைகளில் கூட 100 லிருந்து 140 மில்லி கிராம் வரைக்கும் விட்டமின் சி சத்து இருக்கிறது. சோ இந்த வகையான கீரைகளையும் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாகவும் விட்டமின் சி சத்து எளிதாகப் பூர்த்தி செய்யலாம்.

நான்கு: க்ரூசிபெரோஸ் வெஜிடபுல்ஸ்

 பிரக்கோலி காலிபிளவர் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளில் அதிகளவிலான விட்டமின் சி இருக்கிறது. அதிலும் 100 கிராம் பிரக்கோளியில் 89 மில்லிகிராம் விட்டமின் சி சத்தும் 100 கிராம் காலிஃப்ளவரில் 48.2 மில்லி கிராம் விட்டமின் சீ சத்தும் 100 கிராம் கேபேஜ் 36.6 மில்லிகிராம் விட்டமின் சி சத்தும் இருக்கிறது. தினசரி சாப்பிடும் உணவுகளில் இந்த வகையான காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வதின் மூலமாக விட்டமின் சி சத்தை உடலில்  அதிகரிக்கலாம்.

ஐந்து: குடமிளகாய்


இதையும் படிக்கலாமே: காலையில் எழுந்ததும் செய்யும் 8 தவறுகள்

இதைக் கேப்ஸிகம் என்று சொல்லுவார்கள். இந்தக் கேப்சிகம்  கிரீன் ரெட் எல்லோ என நிறைய கலர்களில் கிடைக்கும். எல்லா வகையான கேப்சிகளிளுமே விட்டமின் சி சத்து நிறைந்து இருக்கிறது. அதில் கிரீன் கலரை விடப் பிற கலரில் இருக்கக்கூடிய கேப்ஸிகம்மில் சற்று அதிகமாகவே இருக்கிறது  என்று சொல்லலாம். தோராயமாக 100 கிராம் கேப்சிமில் 80 லிருந்து 100 கிராம் வரைக்கும் விட்டமின் சி சத்து இருக்கிறது. தினசரி 100 கிராம் கேப்ஸிகம் சாப்பிட்டு வந்தாலே இந்த விட்டமின் சி சத்தை எளிதாகப் பெறலாம்.

ஆறு: பப்பாளிப்பழம்

அணைத்து விட்டமின் சத்துகளும் நிறைந்த ஒரு எளிமையான பழம் பப்பாளி பழம். எல்லோராலும் எளிதில் வாங்கி சாப்பிடக்கூடிய ஒரு பழமும் கூட. 100 கிராம் பப்பாளி பழத்தில் 60.9 மில்லி கிராம் விட்டமின் சி சத்து இருக்கிறது. பரவலாகக் கிடைக்கக்கூடிய பப்பாளி பழங்கள் எல்லாம் விதை இல்லாத ஹைபிரிட் பப்பாளி பழங்கள் தான் கிடைக்கிறது. இப்படி விதை இல்லாத பப்பாளி பழங்களைச் சாப்பிடக் கூடாது. இதற்குப் பதிலாக அடர்த்தியாக நன்கு விதையுள்ள பப்பாளி பழங்களைத் தான்  பார்த்து வாங்கி சாப்பிடணும். அதுதான் உடலுக்கு மிகவும் நல்லது.

ஏழு: சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு எலுமிச்சை சாத்துக்குடி போன்ற பழங்களில் விட்டமின் சி சத்து அதிக அளவில் இருக்கிறது. 100 கிராம் சிட்ரஸ் பழங்களில் 53 மில்லிகிராம்  விட்டமின் சி சத்து இருக்கிறது. தினசரி இந்தச் சிட்ரஸ் பழங்களில் ஏதேனும் ஒரு பழத்தைப் பழமாகவோ அல்லது ஜூசாகவோ செய்து சாப்பிட்டு வரலாம். இதன் மூலமாகவும் உடலில்  விட்டமின் சி தேவையைப் பூர்த்தி செய்யலாம்.

எட்டு: அன்னாச்சி பழம்

இதையும் படிக்கலாமே: சாமை அரிசியின் நன்மைகள்

100 கிராம் அன்னாசி பழத்தில் 47.8 மில்லிகிராம் விட்டமின் சி இருக்கிறது. இது மட்டுமில்லாமல் அன்னாசி பழத்தில் பிரம்மலின் என்னும் ஒரு அறிய வகை டைஜஸ்ட் என்சைம் இருக்கிறது. சோ செரிமானம் சார்ந்த தொந்தரவு இருக்கிறவர்கள்  அன்னாசி பழத்தைச் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது

ஒன்பது: முலாம்பழம்

முலாம்பழம் இதனை மஸ்குமிலன் என்று சொல்லுவார்கள். 100 கிராம் முலாம்பழத்தில் 36.7 மில்லிகிராம்  விட்டமின் சி சத்து இருக்கிறது. கோடைகாலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய ஒரு பழம் இந்த முலாம்பழம். நீர்ச்சத்து அதிகம் நிறைந்தது என்பதினால் உடலில் டிஹைட்ரேஷன் ஆகாமல் தடுக்கும். அதேசமயம் கோடைகாலங்களில் ஏற்படக்கூடிய பல்வேறு விதமான சருமம் சார்ந்த தொந்தரவுகள் இருந்தாலும் நம்மைப் பாதுகாக்க கூடியது நம்முடைய விலாம்பழம்.

பத்து:  பச்சை மாங்காய்


இதையும் படிக்கலாமே: இரும்புசத்து அதிகமுள்ள 10 சிறந்த உணவுகள்

நாம் சிறு வயதில் இந்தப் பச்சை மாங்காயை அதிகம் சாப்பிட்டு இருப்போம். இந்தப் பச்சை மாங்காயில் நல்லளவிலான விட்டமின் சி சத்து இருக்கிறது. 100 கிராம் பச்சை மாங்காயில் 36.4 மில்லிகிராம்  விட்டமின் சி சத்து இருக்கிறது. பச்சை மாங்காயை அப்படியே சாப்பிட்டு வந்தால் விட்டமின் சி சத்தினை  உடலில் பூர்த்தி செய்யலாம்.

 இன்றைக்கு  உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க ஆதாரமாக இருக்கக்கூடிய விட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த பத்து சிறந்த உணவுகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொண்டோம்.


அடர்ந்த கருமையான தலைமுடியை பெற

இங்கே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *