வீட்டில் வைத்திருக்கக்கூடாத இறந்தவர்களின் பொருட்கள்

Items of the dead that should not be kept in the house

இறந்தவர்களின் ஒரு சில பொருட்களை நாம் பத்திரமாக வைத்துக் கொள்ளும் பழக்கம் நம்மில் நிறைய நபர்களுக்கு இருக்கிறது. அவர்கள் தான் நம் கூட இல்லையே அவர்கள் வைத்திருந்த பொருளாவது நம் கூட இருக்கட்டும் அப்படின்னு ரொம்ப விருப்பபட்டு பத்திரமாக வைத்திருப்போம். இறந்தவர்களுடைய ஒரு சில பொருட்களை மட்டும் பாதுகாப்பாக நம் கூட வைத்திருப்போம். அப்படி அதை பத்திரமாக வைத்து  இருக்க கூடாது. வீட்டில் வைத்திருக்கக்கூடாத இறந்தவர்களின் பொருட்கள்.

அதனால் சில பிரச்சனைகள் வரும் அப்படின்னு சொல்லி இருக்கிறார்கள். ஜோதிடத்தின்படி இறந்த ஒருத்தருடைய சில பொருட்களை மட்டும் பயன்படுத்துவதால் முன்னோர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். பித்ரு தோஷம் வரும் அப்படின்னு சொல்லி இருக்கிறார்கள். இப்போது இறந்தவர்களுடைய எந்தெந்த பொருட்கள் எல்லாம் பயன்படுத்தக்கூடாது அப்படின்னு தெரிந்து கொள்வோம்.

தானம் அப்படிங்கறது ஒரு புண்ணியத்தை சேர்க்கக்கூடிய ஒரு மாபெரும் விஷயம். இந்த தானத்தை செய்யறதுக்கும் ஒரு முறை இருக்கு. ஒருத்தர்கிட்ட இருந்த ஒரு பொருள்  இன்னொருத்தர்கிட்ட போகுது அப்படின்னா கொடுத்தவங்களுக்கும் சரி தானமாக கொடுத்தவங்களுக்கும் சரி, தானமாக வாங்கினவங்களுக்கும் சரி அதனால் விளைவுகள் ஏற்படும். அதனால் நன்மை தீமைகள் ரெண்டு பேருக்கும் ஏற்படும்.

ஒருத்தர் தானம் கொடுக்கிறார் என்றால் இலவசமாக கிடைக்கிறது அப்படின்றதும் அதை வாங்கி வச்சுக்க கூடாது. அதை தானம் கொடுக்குறாங்கன்னா அவங்க என்ன நோக்கத்தோட கொடுக்குறாங்க அப்படின்னு நாம் அதை பார்கவேண்டும். அதுக்கு பிறகுதான் அதை நாம் வாங்கிக்கலாமா வேண்டாமா அப்படிங்கறதை முடிவு செய்ய வேண்டும். யார் எதைக் கொடுத்தாலும் வாங்கி வச்சுக்க கூடாது. அதனால் அவஸ்தைப்பட வேண்டி இருக்கும்.

அது மாதிரி தான் இந்த இறந்தவர் பொருளை நாம் பயன்படுத்தும் போதும் அதனால் சில நன்மை தீமைகள் வரும். அது எப்படி உயிரற்ற பொருட்களுக்கு கூட நேர்மறை எதிர்மறை சக்தி இருக்குமா என்றால் ஆமாம் அந்த உயிரற்ற பொருட்களையும் அந்த இறந்து போனவர்கள் அவர்களுடைய ஆற்றல்கள், அவங்களோட நேர்மறை எதிர்மறை ஆற்றல்கள் அந்த பயன்படுத்திய பொருட்களில் இருக்கும். அதனால் சில பொருட்களை  நாம் பயன்படுத்துவதற்கு முன்னால் ரொம்ப யோசிச்சு தான் அதை நாம் பயன்படுத்தவேண்டும். அதுவும் ஆயுள் குறைந்து இறந்தவர்களுடைய பொருட்களை நாம் அப்படியே பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.

இறந்தவர் பொருட்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் நாம் ஒன்றை தெரிந்து கொள்ளலாம்

பெரும்பாலும் இறந்தவரோட ஜாதகத்தை வீட்டில் வைத்து இருக்க மாட்டார்கள். இயற்கை முறையில் மரணம் அடைந்த 45 வயதுக்கு மேற்பட்டவர் ஜாதகத்தை மட்டுமே வீட்டில் வைத்திருக்க வேண்டும். அகால மரணம் அடைந்தவர்கள் அதாவது விபத்து அல்லது அதிக ஆசைகளுடன் துடிதுடித்து இறந்தவர்கள் இவர்களுடைய ஜாதகத்தை வீட்டில் வைத்து இருக்க மாட்டார்கள். அதை ஆறு அல்லது ஓடும் நீரில் போட்டுவிடுவார்கள்.

இது நிறைய பேருக்கு தெரிந்த விஷயம். சிலர் இறந்தவர்களோட பொருட்கள்  அவங்க கூட இருந்தால் அவர்களோட அதிர்வலைகள் நம்முடன் கூட இருக்கும் என்பதினால் அதை வைத்திருப்பார்கள். நம்முடன் இருந்த முன்னோர்கள் மூதாதையர் தெய்வம் இல்லையா. தெய்வமாய் இருக்கக்கூடியவர்கள் நமக்கு என்ன கெடுதல் செய்யப் போகிறார்கள். அவர்களுடைய பொருட்களை நாம் வைத்திருக்கலாம் என்று நீங்கள் நினைப்பீர்கள்.

உண்மைதான் அவர்கள் தெய்வம் தான். ஆனால் அவர்களுடைய ஒரு சில பொருட்களை  நாம் வைத்திருக்க கூடாது. முதலில் இறந்தவர்களுடைய ஆடைகள் ஜோதிடத்தின் படி இறந்தவர்களுடைய ஆடைகளை அந்த வீட்டில் இருக்கிறவர்கள் பயன்படுத்தக்கூடாது. அணியக்கூடாது அப்படி பயன்படுத்தினால் அதன் விளைவாக பித்ரு தோஷத்திற்கு ஆளாக நேரிடும்.

வேண்டும் என்றால் அந்த ஆடைகளை  தானமாக மற்றவர்களுக்கு கொடுக்கலாம். ஆனால் நாம் அந்த ஆடைகளை போட்டுக்க கூடாது. அப்படின்னு சொல்லி போட்டு இருக்கு இயற்கை முறையில மரணம் அடைந்தவர்கள் அதுவும் நன்றாக வாழ்ந்து அனுபவித்தவர்களுடைய உடைகளை நாம் போடவேண்டும் என்றால் முதலில் அதில் இருக்கக்கூடிய தோஷத்தை போக்க வேண்டும்.

வீட்டில் வைத்திருக்கக்கூடாத இறந்தவர்களின் பொருட்கள்

மஞ்சள் கல் உப்பு இந்த இரண்டு பொருட்களும் எந்த விதமான தோஷத்தையும் அணுக விடாது. மஞ்சள் கல் உப்பு இரண்டையும் தண்ணீரில் கலந்து கலந்த தண்ணீரில் அவர்களுடைய உடைகளை துணிமணிகளை அதில் நன்றாக நனைத்து ஊறவைத்து பிறகு பிழிந்து காய வைத்து அதன் பிறகு அந்த துணிமணிகளையும் உடைகளையும் நாம் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்து பயன்படுத்தினால் நமக்கு எந்த விதமான தோஷமும் வராது.

ஒருவர் இறந்து போன பிறகும் அவருடைய ஆத்மா இந்த பூமியில் அலைந்து கொண்டிருப்பதாக சாஸ்திரம் சொல்லுகிறது. அந்த ஆத்மா சில குறிப்பிட்ட காலம் வரையால் நம்மோடு பயணம்செய்த பிறகுதான் பிதிர் லோகம் போகிறதாக புராணங்கள் சொல்லுகிறது. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இறந்து போனவர்களுடைய சடலங்கலை கூட பதப்படுத்தி வைத்திருக்கும் எகிப்து மக்களை இன்றைக்கு உலக மக்கள் வியப்பாக பார்க்கிறார்கள். அவர்கள் பதப்படுத்தி வைத்திருக்கும் இறந்து போனவர்களுடைய உடலையே பயன்படுத்தி வைத்திருக்கும் பொழுது அவர்களுடைய பொருட்களை நாம் பயன்படுத்துவது சரியா தவறா என்கிற வாதம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. 

ஒருவர் பயன்படுத்திய பொருட்களில் அவருடைய தன்மையும் நினைவுகளும் எண்ணங்களும் ஒளிந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

பயன்படுத்திய கை கடிகாரம்

குறிப்பாக அவருடைய முடி நகம் பற்கள் வியர்வை துளிகள் போன்றவற்றில் அவருடைய பிரதிபலிப்பு அப்படியே இருக்குமாம். இப்படி இருக்கும் பொழுது ஒரு குளிர்ச்சியான சீதோஷ்ன நிலை இருக்கக்கூடிய இடத்தில் தினமும் துவைத்து போட மாட்டார்கள். அங்கே காய போடவும் மாட்டார்கள். இந்தியாவில் நாம் அப்படி இருக்க மாட்டோம்.

ஒரு நாள் உடுத்திய உடைய அடுத்த நாள் பயன்படுத்த மாட்டோம். ஆனால் துவைச்சு போட்டாலும் அதிலே  அவர்களுடைய வியர்வை துளிகள்  என்னதான் துவைச்சாலும் அதிலே இருக்கும். அவர்களுடைய எண்ணங்கள் இருக்கும். இப்படி இருக்கும் பொழுது அவர்கள் 

இறந்த பின்பும் அந்த இடத்தை சுற்றி அவருடைய ஆத்மா அலைந்து கொண்டிருக்குமாம்? அதனால்தான் மேற்கத்திய நாடுகளில் ஒருத்தர் இறந்து போய்விட்டார் என்றால் அவர்களுடைய விலை உயர்ந்த உடைகளை கூட அப்படியே மற்றவர்களுக்கு தானமாக கொடுத்து விடுவார்களாம். 

வீட்டில் வைத்திருக்கக்கூடாத இறந்தவர்களின் பொருட்கள்

தானமாக கொடுத்தால் அவர்களுக்கு போகாதா என்று கேட்காதீர்கள் ஏனென்றால் ஒருவர் இறந்த பிறகு அவருடைய ஆத்மா அந்த இடத்திலேயே வலுவாக சுற்றிக் கொண்டிருக்கும்நாம் தானமாக கொடுத்த பொருட்கள் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதனால் இந்த ஆத்மா வெளியிடங்களில் வலுவிழந்து இருக்கின்ற காரணத்தினால் அவர்களை தாக்காது.

சில ஆடைகளை நாம் நன்றாக துவைத்து சுத்தம் செய்து பீரோவில் பத்திரமாக வைத்திருப்போம் அவர்களது நினைவு நாளில் அதை எடுத்து வைத்து நாம் வணங்குவதை வழக்கமாக வைத்திருப்போம். அதனால் தவறு கிடையாது.

இறந்தவர்களுடைய நகைகள்

இறந்தவர்களுடைய நகைகளை பொதுவாக பரம்பரை பரம்பரையாக வைத்திருப்பது நம்முடைய வழக்கம். நிறைய வீடுகளில் வைத்திருப்போம். ஜோதிடத்தின்படி இறந்த முன்னோர்கள் அவர்கள் கடைசியாக போட்டிருந்த நகைகளை நாம் பயன்படுத்தக்கூடாதாம். அப்படி பயன்படுத்தினால் அதனால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். 

அவர்கள் இறக்கப் போவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னால் பெண்களாக இருந்தால் அவர்களுடைய நகைகளை ஒரு சிலதை விட்டுவிட்டு மற்ற நகைகளை எல்லாம் கழட்டி வைத்துக் கொள்வது நல்லது. அப்படி அவர்கள் கடைசியாக போட்டுக்கொண்டு இறந்த பிறகு அந்த நகைகளை நாம் நேரடியாக பயன்படுத்தக் கூடாது அதை உருக்கி புதிதாக வேறு ஒரு நகையாக செய்து நாம் பயன்படுத்தலாம்

ஆனால் இறந்தவர்களுடைய நகைகளை முன்னர் அவர்கள் ரொம்ப காலமாக பயன்படுத்தி இருப்பார்கள். இப்பொழுது போடாமல் அதற்கு முன்னர் பயன்படுத்திய நகைகளை நாம் அப்படியே பயன்படுத்தலாம். இது பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வருவதுதான். அதை நாம் உபயோகிப்பதனால் எந்த தவறும் இல்லை. எத்தனையோ பேர் எங்களுடைய அம்மாவோட வளையல் எங்களுடைய அம்மாவோட தோடு அப்படின்னு நிறைய பேர் வைத்திருப்பார்கள்.

இறக்கும் நேரத்தில் போட்டது அல்லாமல் அதற்கு முன்னர் பயன்படுத்திய நகைகளை நாம் நேரடியாக பயன்படுத்துவதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

இறந்தவர்களுடைய கடிகாரத்தை சிலர் முன்னோர்களின் நினவாக  கடிகாரத்தை பத்திரமாக வைத்திருப்பார்கள். ஆனால் அப்படி இறந்தவர்களுடைய கடிகாரத்தை பயன்படுத்தக் கூடாது. அது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. அதை பயன்படுத்தினால் பித்ரு தோஷம் ஏற்பட்டு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் அந்த கடிகாரத்தை தானமாக கொடுக்கணும்.  அந்த கடிகாரத்தை பயன்படுத்தக் கூடாது அப்படின்னு சொல்லி இருக்காங்க.

இறந்தவர்களுடைய செருப்பு.

இதையும் நாம் பயன்படுத்தக் கூடாது. இந்த செருப்பை தானமாக மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது. ஏன் என்றால் உயிரோடு இருக்கிறவர்களுடைய செருப்பையே  நாம் தானமாக கொடுக்கக் கூடாது என்பார்கள். உபயோகித்த செருப்பை தானமாக கொடுக்க கூடாது. செருப்பை புதியதாக வாங்கி கொடுக்கலாம். உபயோகித்த பொருளை செருப்பை தானமாக கொடுக்கக்கூடாது என்பதால் அதை ஓடும் நீரில் விட்டுவிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *