வீட்டில் பணம் சேருவதை தடுக்கும் ஐந்து பொருட்கள். சில வீடுகளில் ஆண்களும் சரி பெண்களும் சரி நிறைய கஷ்டப்பட்டு சம்பாரிப்பார்கள். ஆனால் எவ்வளவு சம்பாதித்தாலும் உழைத்தாலும் அந்த வீட்டில் பணம் தங்கவே தங்காது. ஏன் இப்படி இருக்கிறது என்று ரொம்ப கவலைப்படுவார்கள். இந்த மாதம் இன்கிரிமெண்ட் 20,000 சேர்த்து வந்தது. அதுக்குள்ள இந்த மாசம் 30,000 சேர்த்து செலவாகுது அப்டின்னு நினைப்பாங்க.
வைத்திய செலவு ஆகட்டும் அல்லது ஏதோ ஒரு வழியில் வீட்டில் ஏதாவது ஒரு பொருள். மனிதர்களுக்கு ஏதாவது உபத்திரம் வரலைனா வீட்டில் இருக்கும் பொருளுக்காவது ஏதாவது ஒன்று சேதம் ஆயிட்டு இருக்கும். திடீர்னு ஏசி ரிப்பேர் ஆகும். வண்டி ரிப்பேர் ஆகும். ஏதோ ஒன்று ஏதோ ஒரு வழியில் பணம் செலவாகிக்கொண்டே இருக்கும். கடன் பிரச்சனை மட்டும் அதிகரித்துக்கொண்டே போகும். வாங்கிய கடனைக் கூடக் கட்ட முடியாமல் இருக்கும். இதற்கு நிறைய காரணம் இருக்கிறது. ஆன்மீக ரீதியாக நிறைய காரணமிருக்கிறது.
அதிகம் தரித்திரம் நிறைந்த பொருட்கள் வீட்டில் இருந்தது என்றால் அந்த பொருளை நாம் வைத்திருந்தோம் என்றால் மேலும் மேலும் கடன் சுமை அதிகரிக்கும். வீட்டில் செல்வத்தை சேர விடாது. பணம் விரைய செலவாகிகொண்டே இருக்கும். இந்த தரித்திரம் நிறைந்த பொருளை வைத்திருப்பதினால் எதிர்மறை ஆற்றல் நம்முடைய வீட்டுக்குள்ளே அப்படியே சுத்திகொண்டே இருக்கும் பொழுது எப்படி நேர்மறை சக்தி இருக்கும். அதனால் வீட்டுக்குள்ளே இருக்கின்ற நேர்மறை ஆற்றல் எல்லாம் வெளியே போற மாதிரி இந்த பணமும் விரைய செலவாகிட்டே இருக்கும்.
இந்த பண பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்றால் பணத்தை சேரவிடாமல் தடுக்கக்கூடிய இந்த தரித்திரம் நிறைந்த ஐந்து பொருட்களை முதலில் தூக்கி எறிய வேண்டும்.
நிறைய பொருட்களை வைத்திருப்போம். தேவையில்லாத தரித்திரம் நிறைந்த பொருள்களையும் வைத்திருப்போம். அதிலே மிக முக்கியமானது இந்த ஐந்து பொருட்கள். இந்த ஐந்து பொருட்கள் வீட்டில் இருந்தது என்றால் வீட்டில் பணம் சேரவே சேராது. விரைய செலவு கண்டிப்பாக இருக்கும்.
விளக்கமாறு
விளக்கமாறு தானே என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. விளக்கமாறு மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய 108 பொருட்கள் இருக்கிறது. அதிலே விளக்கமாறும் ஒன்று. அதனால்தான் கால் பட்டது என்றால் கூட விளக்கமாறில் கால் பட கூடாதுன்னு சொல்லுவாங்க விளக்கமாத்த தாண்டக்கூடாது அப்படின்னு முன்னோர்கள் சொல்லுவாங்க
வீட்டை சுத்தம் செய்வதற்க்காக நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய துடைப்பத்தினால் நம்முடைய வீட்டில் பணம் சேராமல் அதையும் தொடச்சிட்டு போகிறது அப்படின்னா அதை எப்படி வைக்கணுமோ அப்படித்தானே நாம் வைக்கணும். அதனால் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய பணம் நிறைய விரயமாக கூடாது.
அதனால் துடைப்பம் பழசு ஆயிடுச்சுனாலும் சரி சில பேர் எல்லாம் ஒட்டடை அடிக்க இருக்கட்டும் அப்படின்னு சொல்லி நிறைய துடைப்போம் பழைய துடைப்பத்தை வச்சுக்கிட்டே இருப்போம். தூக்கி போடவே மாட்டோம். இப்படி பழைய துடைப்பத்தை ரொம்ப சேர விட்டு வீட்ல வச்சிக்கிட்டு இருந்தோம் அப்படின்னா வீட்ல தரித்திரத்தை தான் ஏற்படுத்தும்.
அதனால புதிய துடைப்பம் எடுத்துக்கிட்டு இந்த பழைய துடைப்பத்தை நிறைய வீட்ல வச்சிருக்கீங்க அப்படின்னா ஒன்னே ஒன்னு ஓட்டடா அடிக்கிறதுக்காக சின்னதா இருந்தது அப்படின்னா அதையும் நல்லா முறையா பராமரிச்சு நம்ம ஒரு பெரிய ஸ்டிக்ல எல்லாம் கட்டி மேல ஒட்டடை எல்லாம் தட்டறதுக்காக வச்சுக்குவோம்.
பழைய துடைப்பது ஆனால் பழைய துடைப்பது அப்படியே சேர்த்து சேர்த்து அப்படியே மூளையில் வைத்துக்கொண்டு எதுக்காவது ஆகட்டும் அப்படின்னு வச்சுக்கிட்டு இருந்தீங்க அப்படின்னா அதனால தரித்திரம் தான் வரும். பழைய துடைப்பத்தை முதல்ல தூக்கி போடுங்க.
பழைய செருப்பு
பொதுவா வீட்டில் ஆளுக்கு ஒரு ஏழு எட்டு சப்பல் வச்சிருப்பாங்க. ஒரு சில வீட்ல எல்லாம் விதவிதமா டிரஸ் எல்லாம் வச்சிருக்கவங்க எல்லாம் இருக்காங்க. ஒரு நான்கு ஐந்து வெரைட்டில வச்சிருப்பாங்க. இப்படி செருப்ப பயன்படுத்தாத செருப்பையும் பத்திரப்படுத்தி வச்சிருப்பாங்க. அது பழைய செருப்பாயிடுச்சுன்னா கூட தூக்கி போட மாட்டாங்க.
அதை ஒரு அட்டைப்பெட்டியில் போட்டு டப்பால போட்டு அதை தனியா வச்சுக்கிட்டு இருப்பாங்க. இந்த மாதிரி பழைய செருப்பு ஷூ இதெல்லாம் பழசா போச்சு அப்படின்னு அதை வெச்சி இருக்காதீங்க தூக்கி எறிஞ்சிடுங்க. அதை யாருக்காவது ஓஸி கொடுக்கலாமா அப்படின்னு கேட்டீங்கன்னா அப்படியும் கொடுக்கக் கூடாது.
நீங்க பயன்படுத்தின போட்ட செருப்ப தூக்கி கொடுக்காதிங்க புது செருப்பு வாங்கி கொடுங்க அது ரொம்ப ரொம்ப நல்லது. கருட புராணத்திலேயே சொல்லி இருக்காங்க செருப்புதானம் அப்படிங்கறது ரொம்ப நல்லதுன்னு. அதனால புது செருப்பு தானம் பண்ணலாம். ஆனா நீங்க போட்டு இருந்த பழைய செருப்பை எக்காரணம் கொண்டும் தானம் கொடுக்கக் கூடாது.
அது வீட்டில் இருந்தாலும் உங்களுடைய வீட்டில் விரய செலவு ஆகும். அதனால் பழைய செருப்பை தூக்கி போட்டுருங்க. உங்களுடைய வீட்டில் செல்வ வளம் குறையறதுக்கு நீங்கள் இது மாதிரி பொருள் எல்லாம் வச்சிக்கிட்டு இருக்காதீங்க.
ஓடாத கடிகாரம்
சில வீடுகளில் எல்லாம் ஒரு ரூமுக்கு ஒரு கடிகாரம். அந்தந்த ரூம்ல டைம் பாக்கணும்னு ஒவ்வொரு கிளாக் மாட்டி வச்சிருப்பாங்க. அது ஓடாமல் கூட இருக்கும். சில சமயம் அதுக்கு பேட்டரி மாற்றாமல் இருப்போம். இது மாதிரி ஓடாத கடிகாரம் வீட்டில் இருக்கக் கூடாது. அந்த ரூம் ரூமுக்கு மாட்டி இருக்கிறது தப்பு இல்லை.
அதை எந்த திசையில் வைக்கணுமோ அந்த திசையில் வைக்கணும். அதே மாதிரி அது ஓடாமல் இருந்தது அப்படின்னா அதிலே பேட்டரிய மாத்துங்க. ஓடாத கடிகாரமும் நீங்க கைல கட்ற வாட்ச் இருக்கில்லையா அந்த வாட்ச் கூட ஓடாம இருந்தது அப்படின்னா அதை ஒரு ஹேண்ட் பேக்ல போட்டு வைக்கிறது. பாஸ்ட்ல போட்டு வைக்கிறது முன்னாடி போட்டு வைக்கிறது இப்படி எல்லாம் ஷோகேஸ் கிட்ட வைக்கிறதுன்னு வைக்காதீங்க.
அந்த கையில் கட்டும் கடிகாரமாக இருந்தாலும் சரி சுவரில் மாட்டக்கூடிய கடிகாரமா இருந்தாலும் சரி ஓடாமல் இருந்தது அப்படின்னா அது வீட்டில் நெகடிவ் எனர்ஜியை கொண்டு வந்து சேர்க்கும். வீட்டில் நேர்மறை ஆற்றல் இருந்தாதான் பணம் வந்து தங்கும். உங்களுடைய வீட்டில் நீங்க பணம் சேர விடாமல் நீங்களே இது மாதிரி பொருட்கள் எல்லாம் வச்சிக்கிட்டு பணத்தை
விரய செலவு செய்து விரட்டி விடாதீர்கள். மகாலட்சுமி உங்களுடைய வீட்டில் தங்க மாட்டாள்.
அதனால் ஓடாத கடிகாரம் ஓடாத கையில் கட்டும் கடிகாரம் எரியாத பல்பு இதெல்லாம் இருந்தது அப்படின்னா அதெல்லாம் தூக்கி போட்டுடுங்க. டியூப் லைட் எல்லாம் பியூஸ் போயிடுச்சு குண்டு பல்பு பியூஸ் போயிடுச்சு அப்படின்னா அதை உடனே மாத்துங்க. இதெல்லாம் வீட்ல நெகடிவ் எனர்ஜியை கொண்டு வந்து வீட்டில் பணம் சேருவதை தடுக்கும்.
பொதுவாக எல்லோர் வீட்லயும் மிதியடி இருக்கும். அந்த மிதியடியை பார்த்தீங்கன்னா மாத்தவே மாட்டாங்க. பல வருஷத்துக்கு ஒரே மிதியடி பயன்படுத்துவாங்க. அது கூட பரவாயில்லை அதை வாஷ் பண்ணி சில வீடுகள்ல எல்லாம் போடவே மாட்டாங்க. அப்படியே அந்த மிதியடியை நம்ம யூஸ் பண்ணுவோம். இது மாதிரி இருக்கவே கூடாது.
ஆறு மாசத்துக்கு ஒருத்தருக்கு மிதியடியை மாத்திடுங்க. அதேபோல கிழிஞ்சு போய் நஞ்சு போன மிதியடி எல்லாம் தயவுசெஞ்சு பயன்படுத்தாதீங்க. இதெல்லாம் வீட்டுக்கு தரித்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும். அதனால் உடனே கிழிஞ்ச மிதியடி இருந்தது அப்படின்னா அதை தூக்கிப் போட்டுட்டு வேற மிதியடி வாங்குங்க.
சில பேர் எல்லாம் நகத்தை வீட்டுக்குள்ளேயே வெட்டுறாங்க அவங்களை பார்த்து குழந்தைகளும் நகத்தை வீட்டுக்குள்ளேயே வெட்டுவாங்க. வெள்ளி செவ்வாயில் நகத்தை வெட்டவே கூடாது. அதே மாதிரி 6 மணிக்கு மேல் விளக்கு வைத்த பிறகு நகத்தை வெட்டக்கூடாது.
குழந்தைகளும் நம்மை பார்த்து கத்துக்குவாங்க. இந்த நகம் அப்படிங்கறது இறந்த உடலுக்கு சமம். அதாவது இறந்தவர் உடலுக்கு சமம். அதனால் நகத்தை வீட்டுக்குள்ளே வெட்டி போட்டோம் அப்படின்னா அது தரித்தரத்தை ஏற்படுத்தும். உடனே அந்த நகத்தை அப்புறப்படுத்தி விடுங்கள்.
தலையில் இருக்கின்ற வரை அது ஒன்னும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாது தலையில் இருந்து கீழே விழுந்தது அப்படின்னா அது அப்படியே உதிர்ந்து கிடக்குது அப்படின்னா அது நெகட்டிவ் எனர்ஜியை உறிஞ்சக்கூடிய தன்மை உடையது. அதனால் இது தரித்திரம் நிறைந்த விஷயம் உடனே முடியும் இந்த நகத்தையும் நாம் அப்புறப் படுத்திரனும்.
இதனால் பணக்கஷ்டம் வரும். பணம் விரைய செலவாகும். இந்த சின்ன சின்ன விஷயங்களை நாம் கவனித்து செஞ்சோம்னாவே போதும். வீட்டில் பணம் எல்லாம் விரய செலவாகாது. பணவரவை தடுக்கக்கூடிய இந்த பொருட்களை தயவு செய்து தூக்கி எறிங்க.