வாஸ்துபடி சில பொருட்களைச் சில இடங்களில் வைக்கக் கூடாது அப்படின்னு சொல்லி இருக்காங்க. கண்ட கண்ட இடங்களில் சில பொருட்களை வைத்தோம் என்றால் நம்முடைய வீட்டில் மகாலட்சுமியோட கோபத்திற்கு ஆளாக நேரிடும். வீட்டில் செருப்பை வைக்கக்கூடாத இடங்கள்
வீட்டில் எதிர்மறை ஆற்றல் வரும் அப்படின்னு சொல்லி இருக்காங்க. சில வீடுகளில் வெளியிலிருந்து நாம் வந்ததும் உள்ளே நுழையும்போது ஏதோ ஒரு மனம் இருக்கும்.
சொல்ல முடியாத ஒரு கஷ்டம் இது மாதிரி வரும். அது எதனால் என்றால் வீட்டில் அந்த எதிர்மறை ஆற்றல் இருக்கிறதுனால தான். ஒரு தனி நபரோட ஆற்றலும் வீட்டில் இருக்கக்கூடிய ஆற்றலும் ஒன்றை ஒன்றை ஈர்க்குமாம்.
அதனால் வீட்டில் எதிர்மறையாற்றல் இருந்தது அப்படின்னா அதனால் வீட்டில் இருக்கிறவங்களுக்கு பாதிப்பு வரும் அப்படின்னு சொல்லப்பட்டுள்ளது. அந்தக் காலத்திலேயே முன்னோர்கள் பாதக்குரல் பாதரக்ஷைங்களா சொல்லுவாங்க. அதெல்லாம் எந்த இடத்தில வைக்கணும் எந்த இடத்தில வைக்கக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.
செருப்பை வந்து அது மாதிரி எந்த இடத்தில் விசிறிட்டு போவாங்க குழந்தைங்க எல்லாம் குழந்தைகளுக்குத் தெரியாது நாம தான் சொல்லிக் கொடுக்கணும் அந்தக் குழந்தைகளுக்கு இப்படி செய்யக்கூடாதுப்பா இப்படி நேரா வைக்கணும்.
அப்படின்னு சொல்லிக் கொடுத்தோம்னா அந்தக் குழந்தைங்க சின்னத்திலிருந்து சொல்லிக் கொடுத்தா புரியும். பெரியவங்களே நாம அதைப் பாலோ பண்ணாமல் இப்படி வேகமா வந்து நிலவாசலுக்கு பக்கத்துல கழட்டி போட்டு போனோம்னா குழந்தைகளும் அதை பார்த்து தான் கத்துக்கும்.
களச்சி கிடக்கிறது சிதறி கிடக்கிறது இது மாதிரி எல்லாம் செருப்பு இருக்க கூடாது. செருப்பை கண்ட இடங்களில் போட்டு வச்சோம் அப்படின்னா எதிர்மறை ஆற்றல் வீட்டுக்குள்ள ரொம்ப ரொம்ப அதிகரிக்கும். இதன் மூலம் சண்டை சச்சரவு வரும்.
அதே போலப் பழைய செருப்புகளை பொக்கிஷமா வச்சுக்கிட்டே இருக்க கூடாது. சில பேர் எல்லாம் எவ்வளவு பழசா போச்சுனாலும் அதைத் தச்சு கூடப் போட்டுக்குவோம். முடியாதவங்க வசதி இல்லாதவங்க அது மாதிரி செருப்பை தச்சி கூடப் போடலாம். இன்னுமும் அது மாதிரி இருக்காங்க.
செருப்பு தைக்கிறவங்க இப்ப எவ்வளவோ பேரு இல்லாம போய்ட்டாங்க. நிறைய அந்தத் தொழில் இல்லாமல் இருக்கு. ஆனா ரொம்ப வசதி இல்லாதவர்கள் இந்தப் பழைய செருப்பை தச்சு போட்டுக்கலாம். ஆனால் நாம எவ்வளவு செருப்பு வாங்குனாலும் பயன்படுத்தாத பழைய செருப்புகளை அப்படியே வச்சிருப்போம். வீசமாட்டோம் அது கிழிந்து அறுந்து போன செருப்பால் இருந்தா கூட அதை வீட்டில் வைத்திருப்போம்.
அது மாதிரி வச்சி இருக்கவே கூடாது. இது மாதிரி வச்சிருந்தோம் அப்படின்னா குடும்பத்துல அது நிம்மதியின்மையை ஏற்படுத்தும். செருப்ப அதே மாதிரி பழைய செருப்பை யாருக்கும் தானம் கொடுக்காதீங்க. பழைய செருப்பை கொடுக்கவே கூடாது. புது செருப்பை வாங்கி கொடுங்க. பழைய செருப்பை எக்காரணம் கொண்டும் கொடுக்காதீங்க.
அதேபோல வீடு கட்டும் போதே செருப்பு வைக்கிறதுக்கு சரியான இடத்தை இப்ப எல்லாம் கட்டியிருந்தாங்க. செருப்பு வைக்கிறதுக்கு சிமெண்ட்லயே அப்படியே கட்டி வச்சிருக்காங்க. அது மாதிரி இருக்கிறப்ப சரியான இடத்தைத் தேர்வு செய்து கட்டுவது நல்லது.
செருப்பு ஸ்டாண்ட்
நாம செருப்பு ஸ்டாண்ட் வச்சாலும் அது சரியான இடத்தில் தான் வைக்கணும். சிலருக்கு வீட்டுக்குள்ளேயே செருப்பு போடுற பழக்கம் உண்டு. இந்தியர்கள் பாரம்பரிய முறைப்படி பாத்தீங்கன்னா வீட்டுக்குள்ள செருப்பு அணிய மாட்டாங்க. ஆனால் இப்போது இந்த நாகரீக காலத்துல சிலருக்கு இந்த டைல்ஸ் எல்லாம் ஒத்துக்காது.
அலர்ஜி அதன் காரணமாகச் செருப்பு வீட்டுக்குள்ளேயும் போட்டுக்குவாங்க. அப்படி நாம செருப்புகளை போடும்போது சில இடங்களில் நாம் கழட்டி விடக் கூடாது அப்படின்னு இருக்கு. வீட்டுக்குள்ள வரதுக்கு முன்னாடி செருப்ப கழட்டிட்டு காலைச் சுத்தம் செய்தபிறகு வீட்டுக்குள்ள வரணும் அப்படின்னு சாஸ்திரம் சொல்லப்படுகிறது.
அதனால் தான் அந்தக் காலத்தில் பார்த்தீங்கன்னா வெளியே வந்து ஒரு பக்கெட்லயோ ஒரு அண்டாவில் தண்ணி வச்சிருப்பாங்க. அதை எடுத்து காலைக் கழுவிகிட்டு வருவாங்க. அந்தக் காலத்துல நலனைச் சனிபகவான் கால் வழியா தான் குதிக்கால் வழியா தான் பிடிச்சாரு அப்படின்னு நமக்குத் தெரியும்.
புராணங்களில் சொல்லி கேள்விப்பட்டிருப்பீங்க. அது மாதிரி செருப்புக்கும் சனிபகவானுக்கும் அதேபோலத் தொடர்புடையது அப்படிங்கிறதுனால அந்தச் செருப்பை எங்க வைக்கணுமோ அங்கதான் வைக்கணும்.
வீட்டுக்குள்ள நீங்கப் போடுற செருப்பாய் இருந்தாலும் அதைச் சமையலறையில் நீங்க இரவு படுக்கப் போகும்போது கழட்டி வைக்கக் கூடாது.
பூஜை அறை
அதேபோலப் பூஜை அறைக்கு அருகிலையும் வீட்டுக்குள்ள போடுற செருப்ப நாம அணிந்து அங்க உள்ளே போகக் கூடாது. அதுக்கு அருகிலேயும் நாம கழட்டி விடக் கூடாது. இப்ப நாகரீக காலத்தில் எல்லாருக்குமே வீட்டுக்குள்ள செருப்பு போடுற பழக்கம் இருக்கு.
இந்த இரண்டு இடங்கள்ல நீங்கள் கழட்டி விடாதீங்க வாஸ்துப்படி நம்ம பயன்படுத்தக்கூடிய செருப்பு எந்த இடத்தில இருக்கணும் எந்தத் திசையில் இருக்கணும் அப்படிங்கறது ரொம்ப முக்கியம். அப்பதான் வீட்ல செல்வ வளம் அதிகரிக்கும். குடும்ப நிம்மதி ஏற்படும்.
வீட்ல இந்த எதிர்மறையாற்றல் போகணும். வீட்டுக்குள்ள நல்ல பாசிட்டிவ் எனர்ஜி இருக்கனும் அப்படின்னா. வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது போல நாம் சில பொருட்கள்லாம் வைக்கிறப்ப நம்முடைய பிரச்சனைகளுக்கு அது தீர்வாக அமையும்.
செருப்பு தானே அப்படின்னு நினைக்காதீங்க ஒவ்வொரு பொருளுக்கும் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒருவரது வாழ்வுள்ள தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அதுலயும் செருப்பு சனிபகவானோட தொடர்புள்ளது அப்படிங்கறதால அது ரொம்ப சரியான இடத்தில் தான் நாம் வைக்க வேண்டும்.
மேற்கு பகுதி
மேற்கு பகுதியில செருப்பு ரேக்கு வைக்கிறீங்க அப்படின்னா அது சரியான இடம். அதேபோல வடமேற்கு தென்மேற்கு திசைகள்ள செருப்பு வைக்கணும் அப்படின்னு வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. வடகிழக்கு தென்கிழக்கு வடக்கு கிழக்கு ஆகிய இடங்களில் செருப்பு ரேக்கு வைக்கக் கூடாது அப்படின்னு சொல்லப்பட்டுள்ளது. வடகிழக்கு அப்படிங்கறது ஈசான்ய மூலை அந்த இடத்துல செருப்பு ஸ்டான்ட வைக்கவே கூடாது.