வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 அதிர்ஷ்டம் தரும் மரங்கள்.
ஒன்று : சரக்கொன்றை மரம்
வீட்டு ஓரங்களில் வளர்கிறது ரொம்ப குறைவு. இதனுடைய பூக்கள் அதிர்ஷ்டத்தை தரக்கூடியது என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ் புத்தாண்டு அன்று சித்திரை மாதத்தில் ஒவ்வொருத்தரும் தங்களுடைய வீட்டிற்கு முன்னால் சரக்கொன்றை மரத்தின் பூக்களை கொண்டு வந்து அப்படியே தொங்க விடுவார்கள். இதற்கு காரணம் இந்த மாதிரி தொங்க விடுவதால் அந்த வருடம் முழுவதும் அதிர்ஷ்டமும் மகிழ்ச்சியும் நம் வாழ்வில் ஒரு வளமும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த சரக்கொன்றை மரத்தை நாம் தாராளமாக நம் வீட்டில் வளர்க்கலாம்.
இந்த சரக்கொன்றை மரப்பட்டையில் இருந்து ஒரு விதமான வாசனை வெளியே வரும். அந்த வாசனை ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி. அதனால் தொற்று நோய்கள் நம் வீட்டுக்குள் வராது. அது மட்டும் இல்லாமல் தீமை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் நம் வீட்டுக்குள் வராமல் இருக்க இந்த சரக்கொன்றை மர பட்டையிலிருந்து வரக்கூடிய வாசனை ரொம்ப உதவியாக இருக்கும். இந்த பூவில் ஏகப்பட்ட மருத்துவ தன்மை இருக்கிறது. அதில் முக்கியமானது என்னவென்றால் பூவை நீங்கள் அப்படியே அரைத்து நம் தோல்களில் பூசினால், தோல் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் குணமாகும்.
இந்த பூவை நாம் பவுடர் போல செய்து பாலில் கலந்து குடித்தால் நம் குடல் சம்பந்தப்பட்ட வியாதிகளை குணமாக்கக்கூடிய தன்மை இதில் இருக்கிறது. எந்த விதமான மருத்துவ ஆலோசனையும் இல்லாமல் இந்த மரத்தின் பூ, இலை மற்றும் மரப்பட்டையை நாம் தாராளமாக பயன்படுத்தலாம் என்று ஒரு ஆயுர்வேத நூலில் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.
அதனால கண்டிப்பாக இந்த மரத்தை உங்களுடைய வீட்டில் வளருங்கள். அதிர்ஷ்டத்தை தரக்கூடியதாகவும் இருக்கும் மருத்துவ ரீதியாக நமக்கு பயனுள்ளதாகவும் இருக்கும்.
இதையும் படிக்கலாமே : நினைத்ததை 10 நாட்களில் நிறைவேற்றும் கல் உப்பு பரிகாரம்
இரண்டு : பவளமல்லி மரம்
பவளமல்லி மரத்தை வாஸ்து மரம் என்றும் சொல்லலாம். இந்த மரத்தை நம் வீட்டில் ஏதாவது வாஸ்து பிரச்சனை இருந்தது என்றால் வளக்கணும் என்று விரும்பினால் வாஸ்து ரீதியாக வரக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் போக்கக்கூடிய தன்மை பவளமல்லி மரத்துக்கு இருக்கிறது. அதனால் அதிகமானோர் தங்களுடைய வீட்டில் பவளமல்லியை வளர்த்து வருகிறார்கள். பவளமல்லி மரத்திலிருந்து இரவு நேரத்தில் வரும் நறுமணமிக்க வாசனை நம் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிறதினால் காற்றில் இருக்கக்கூடிய மாசுகளை அழித்து நல்ல ஒரு சுத்தமான காற்றை நம் வீட்டுக்குள்ளே அனுப்புகிறது.
இந்த மரத்தில் இருக்கக்கூடிய பவளமல்லியினுடைய ஐந்து இலைகளை பறித்து அதை நாம் கசாயம் மாதிரி போட்டு கொஞ்சம் மிளகு கொஞ்சம் எலுமிச்சை சாறு அதிலே கலந்து நீங்கள் குடித்து வந்தால் எவ்வளவு கொடிய காய்ச்சலாக இருந்தாலும் அதைப் போக்கக்கூடிய தன்மை இந்த பவளமல்லியினுடைய இலைக்கு இருக்கிறது. இவ்வளவு நன்மைகள் இருக்கக்கூடிய பவளமல்லி மரத்தை நம் வீட்டிற்கு பக்கத்தில் தாராளமாக வளர்க்கலாம்.
மூன்று : சீதாப்பழ மரம்
முக்கியமாக இதயம் தொடர்பான வியாதிகளுக்கும் மலச்சிக்கல் சிறுநீர் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கும் சீதா பழம் மிகவும் உறுதுணையாக இருக்கும். கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய நாவறட்சி தாகத்தை இது போக்கி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. அதனால் கண்டிப்பாக உங்கள் வீட்டில் சீதாப்பழ மரம் ஒன்று அல்லது இரண்டு மரங்களாவது வளர்த்து வாருங்கள் மிகவும் நல்லது.
இதையும் படிக்கலாமே : பணத்தை ஈர்க்கும் 7 அதிர்ஷ்ட செடிகள்
நான்கு : மாதுளை மரம்
மேலும் பில்லி சூனியம் ஏவல் போன்ற பிரச்சனைகள் இருந்ததென்றால் அதை தடுக்கக்கூடிய தன்மை மாதுளை மரத்திற்கு இருக்கிறது. சூரிய ஒளியிலிருந்து வரக்கூடிய அந்த புற ஊதா கதிர்வீச்சின் தாக்கத்தை நம் வீட்டுக்குள் போகாமல் தடுத்து நிறுத்தக்கூடிய தன்மை மாதுளை மரத்திற்கு இருக்கிறது.
ஆனால் அதற்கு மரம் மாதிரி கொஞ்சம் வளர்ந்து இருக்க வேண்டும். அதனுடைய நிழல் நம்முடைய வீட்டின் மேல் படுகின்றது போல இருந்ததென்றால் நல்ல பலனை தரும். நம் வீட்டிற்கு குளிர்ச்சியான காற்றையும் தரும்.
அடுத்தபடியாக இந்த மாதுளை மரம் நம் வீட்டில் தென்கிழக்கு திசையில் வைத்து வளர்க்க வேண்டும். தென்கிழக்கு திசையில் வைத்து வளர்த்தால் நம் வீட்டில் செல்வம் பெருகும் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்த அளவிற்கு நன்மைகள் இருக்கிறது மட்டும் அல்லாமல் இந்த மாதிரி மரம் நம் வீட்டில் வைத்து வளர்த்தோம் என்றால் இயற்கை முறையில் மாதுளம் பழத்தை பறித்து சாப்பிடும்பொழுது நம்முடைய இரத்தம் சுத்தமாகி அதிகரிக்கிறதோடு நம் உடல் நன்றாக ஆரோக்கியமாக இருப்பதற்க்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் கண்டிப்பாக உங்கள் வீட்டில் ஒரு மாதுளம் பழம் மரம் வைத்து வளருங்கள்.
ஐந்து : மகிழமரம்
அடுத்து மகிழம்பூ பூக்கின்ற சமயத்தில் அதிலிருந்து வரக்கூடிய காற்று நம் வீட்டுக்குள்ளே போறதினால் நமக்கு பலவிதமான நோய்கள் குணமாகும். நம் வீட்டில் இருந்து வெளியில் கிளம்பும் போது ஒரு மகிழம் பூவை பறித்து நமது சட்டை பாக்கெட்டில் வைத்து சென்றால் எந்த ஒரு காரியமும் வெற்றியடையும். போகின்ற காரியம் வெற்றி அடையும் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. மகிழ மரத்தினுடைய வேர்கள் ஆழமாக போகாது அதனால் தாராளமாக நம் வீட்டில் வளர்க்கலாம். நம்முடைய வீட்டூ கட்டிடம் பாதிக்கும் என்கிற கவலை நமக்கு வேண்டாம். அந்த அளவுக்கு நன்மைகள் இருக்கக்கூடிய இந்த மகிழ மரத்தை நம் வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே : செல்வதை அழிக்கும் வீட்டில் வளர்க்க கூடாத மரம் செடி கொடிகள்.
இந்த ஐந்து மரங்களையும் கண்டிப்பாக உங்கள் வீட்டில் வளர்த்து வந்தீர்கள் என்றால் நல்ல பலன் கிடைக்கும்.