விளக்கு ஏற்றும்போது இந்த ஒரு பொருளை விளக்கின் அடியில் வைத்து தீபம் ஏற்றுங்கள்.
பணம் மலை போல் சேரும்,சொந்த வீடு யோகம் வரும்.
தினமும் நீங்கள் விளக்கு ஏற்றும் பொழுது இந்த பொருளை விளக்கிற்கு அடியில் வைத்து ஏற்றினால் பணவரவு உங்களுக்கு ஏற்படும். அதே மாதிரி கடன் தொல்லையில் இருந்து நீங்கள் விடுபடலாம். சொந்த வீடு வாங்கும் யோகமும் உங்களுக்கு ஏற்படும். சுக்கிர பகவானின் அருளும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். இந்த விஷயங்கள் எல்லாமே உங்களுடைய வாழ்க்கையில் ஒவ்வொன்றாக நடக்க வேண்டும் என்றால் நீங்கள் தினமும் ஏற்றக்கூடிய விளக்கில் ஒரே ஒரு முறை மட்டும் இந்த விஷயத்தை செய்து பாருங்கள்.
பொதுவாக நாம் ஏற்றுகின்ற விளக்கின் மூலமாக நம்முடைய வாழ்க்கை பிரகாசமாக மாறும். நீங்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது பூஜை சாமான்களை தேய்ப்பீர்கள். அந்த மாதிரி பூஜை சாமான்களை தேய்த்து விளக்கு ஏற்றும்பொழுது காமாட்சி அம்மன் விளக்கு அல்லது கஜலட்சுமி விளக்கு. உங்களுடைய வீட்டில் இருக்கும் அந்த விளக்கை ஏற்றும் பொழுது நீங்கள் ஒரு பொருளை அடியில் வைக்க வேண்டும்.
மூன்று பொருட்கள் இருக்கிறது. இதில் ஏதாவது ஒரு பொருளை விளக்கின் அடியில் வைத்தால் போதும். விளக்கு ஏற்றுவதற்கு முன் பூஜை அறையை நன்றாக துடைத்து சுத்தம் செய்து பிறகு அந்த இடத்தில் மாவை பயன்படுத்தி கோலம் போட வேண்டும். கோலம் போடுவதற்கு பச்சை அரிசி மாவு பயன்படுத்துவது மிகவும் நல்லது.
இதையும் படிக்கலாமே : பணத்தை ஈர்க்கும் 7 அதிர்ஷ்டசெடிகள்
அடுத்து நன்றாக தேய்த்து கழுவி காய வைத்திருக்கும் பூஜை சாமான்களை அழகாக அதன் அதன் இடங்களில் வைத்தபின் காமாட்சி அம்மன் விளக்கையோ அல்லது கஜலட்சுமி விளக்கையோ எந்த விளக்கு உங்களிடம் இருக்கிறதோ அதை எடுத்து ஒரு மனை வைத்து நீங்கள் தீபம் ஏற்றலாம். மனை வைத்து தீபம் ஏற்றும் பழக்கம் இல்லையென்றால் தட்டு வைத்து தீபம் ஏற்றலாம். அதாவது காமாட்சி அம்மன் விளக்கு அப்படியே நேரடியாக தரையில் வைக்காதீர்கள். அடியில் பித்தளையா இருக்கலாம் வெள்ளையா இருக்கலாம் காப்பர் இருக்கலாம் எவர்சில்வர் பயன்படுத்தாதீர்கள் ரொம்ப ரொம்ப முக்கியமானது அதற்கு மஞ்சள் குங்குமம் எல்லாமே வைக்க வேண்டும்.
காமாட்சி அம்மன் விளக்கை நன்றாக தேய்த்து எடுத்த பிறகு அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து நன்றாக அலங்காரம் செய்து கொள்ளுங்கள். எல்லா இடத்திலும் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். அந்த தட்டு மனை மேலும் வைக்க வேண்டும்.
மூன்று பொருள்களில் ஏதாவது ஒரு பொருளை விளக்கின் அடியில் வைக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை போட வேண்டும். திரும்பவும் பூஜை சாமான் தேய்கும் பொழுது அதை நீங்கள் எடுத்து செடியில் போட்டுவிடலாம். கால் படாத இடத்தில் போட்டுவிட வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை செய்தால் போதுமானது.
ஒன்று : அட்சதை .
அதாவது பச்சரிசி மஞ்சள் ஒரே ஒரு டிராப் நெய் பசு நெய். இதை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். நன்றாக கலந்த பிறகு அந்த தட்டு மேலே இதை போட வேண்டும். இந்த அச்சத்தையும் நீங்க போட்டுடலாம் விளக்கை எடுத்து அட்சதை மேல் வைக்க வேண்டும்.
இரண்டாவது : சர்க்கரை
அட்சதைக்கு பதிலாக சர்க்கரையையும் போடலாம். அட்சதை போடவில்லை என்றால் சர்க்கரை போட்டு தீபத்தை ஏற்றுங்கள்.
மூன்றாவது : ஐந்து ரூபாய் நாணயம்.
மிக மிக முக்கியமானது சொந்த வீடு வாங்க வேண்டும் என்றால் ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து விளக்கிற்கு அடியில் வைத்து ஏற்றுங்கள். இப்பொழுது தான் முதல் முறையாக புது வீடு வாங்க போறீங்கள் அல்லது கட்டப் போறீங்க என்றால் விளக்கிற்கு அடியில் இந்த ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து தீபம் ஏற்றலாம்.
விளக்கு வைத்து அதில் நல்லெண்ணெயோ அல்லது பசு நெய்யோ ஊற்றி பஞ்சு திரியை இரண்டாக திரித்து போட வேண்டும். இரண்டு திரிகள் இருந்தால் அதை எடுத்து நன்றாக திரித்துவிட்டு போட்டு தீபம் ஏற்றலாம். எப்பொழுதுமே எண்ணை ஊற்றி அப்புறமாக பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். சிலர் முதலிலேயே திரியை போட்டு பிறகு எண்ணையை ஊற்றி தீபம் ஏற்றுவார்கள். அது தவறான ஒரு செயல்.
ஏற்கனவே வீடு இருக்கிறது.இன்னொரு வீடு வாங்க வேண்டும். விளக்கில் ஊற்றிய எண்ணைக்குள் ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இதுபோல் மூன்று பொருட்களில் ஏதாவது ஒன்றை செய்து வாருங்கள். வாரம் ஒருமுறை. ஒவ்வொரு வாரமும் நீங்கள் பூஜை சாமான்களை தேய்க்கும் பொழுது இந்த பழைய ஐந்து ரூபாய் நாணயத்தை சேகரித்து வைத்து கொள்ளுங்கள். ஒவ்வொரு வாரமும் புது நாணயத்தை தான் போட வேண்டும்.
நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் நாணயங்களை நீங்கள் வீடு வாங்கும் பொழுதோ அல்லது புதிதாக வீடு கட்டும் பொழுதோ கோவில் உண்டியலில் போடலாம் அல்லது கோவிலுக்கு ஏதேனும் பொருட்கள் வாங்கி கொடுக்கலாம். இதை கவனமாக கேட்டு செய்ய வேண்டும்.
மூன்று பொருட்களை ஏன் போட வேண்டும். ஒவ்வொன்றுக்கும் விளக்கம் தெரிந்து கொள்வோம்.
ஒன்று.
மஞ்சள் பசு நெய் பச்சரிசி இது எல்லாமே மங்களகரமான விஷயங்கள். நாம் நிறைய நல்ல விஷயங்களுக்கு திருமணத்தில் கூட அட்சதை வந்துபோடுவோம். நிறைய வீட்டில் நடக்கும் நல்ல விஷேசங்களுக்கு நடக்கிற போதெல்லாம் அட்சதை தயார் செய்து பயன் படுத்துவோம்.
பச்சரிசி சிறிதளவு, மஞ்சள், பசு நெய் சிலர் தண்ணீர் ஊற்றி கலந்து வைப்பார்கள். தண்ணீர் ஊற்றி கலந்து உபயோகப்படுத்துவது நல்லது இல்லை. பசு நெய் விட்டு தான் அட்சதை தயார் செய்ய வேண்டும். நெய் ஒரு துளி விட்டால் போதும்.அதிகமாக விட்டால் அட்சதை சரியாக இருக்காது. இது போன்று செய்யும்போது உங்கள் வீட்டில் மகாலட்சுமி குடி கொள்வாள் மங்கலங்கள் பெருகும்.
இரண்டு.
சர்க்கரை வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒரு பொருள். சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்ததுசுக்கிர பகவானின் அதிபதியாக விளங்குபவள் மகாலட்சுமி. மகாலட்சுமியை நம் வீட்டில் தங்க வைக்க வேண்டும் என்றால், நம் வீட்டுக்கு அழைக்க வேண்டும். அப்படி அழைக்க வேண்டும் என்றால் இனிப்பான ஒரு பொருளான சர்க்கரையை நாம் பூஜையறையில் வைத்து தீபத்தை ஏற்றுகின்றோம்.
விளக்கு ஏற்றும் பொழுது கண்டிப்பாக கஜலக்ஷ்மி விளக்காக இருந்தாலும் காமாட்சி அம்மன் விளக்காக இருந்தாலும் மல்லிகைப்பூ வாசனையான மலர்களை வைப்பது நல்லது. மல்லிகை பூ வைத்து விளக்கேற்றினால் மகாலட்சுமி கடாட்சம் உங்களுடைய வீட்டில் ஏற்படும். முயற்சி செய்து பாருங்கள்.