(Top 10 Best healthy fruits Tamil)
வணக்கம் ஒரு கிலோ ஆப்பிள் சுமார் 200 முதல் 300 வரை விற்பனையாகிறது. ஒரு கிலோ ஆப்பிளில் ஐந்து அல்லது ஆறு பழங்கள் மட்டும் தான் இருக்கும். சராசரியாக ஒரு பழம் 40 முதல் 50 ரூபாய் வரை வரும். இதனாலயே நிறைய பேர் இதை வாங்க விரும்ப மாட்டார்கள். நடுத்தர மக்கள் மற்றும் மாதந்தோறும் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துகிறவர்கள் பலரும் இதனை விரும்புவதில்லை. ஆனால் ஆப்பிளை விடவும் அதிக சத்துக்கள் கொண்ட ஆனால் விலை மலிவான பல பழங்கள் நம்மிடங்களில் கிடைக்கின்றன. அது பலருக்கும் தெரிவதில்லை. விலை மலிவான அதிக சத்துள்ள 10 பழங்கள்.
இன்றைக்கு ஆப்பிளை விடவும் அதிக சத்துக்கள் கொண்ட விலை மலிவான பத்து பழங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்வோம்.
ஒன்று: கொய்யாப்பழம்
- எல்லா காலங்களிலும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய சிறந்த பழம் கொய்யாப்பழம்.
- ஆப்பிளை விடவும் இதில் விட்டமின் சி, விட்டமின் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அடங்கி இருக்கிறது.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் சாப்பிடக்கூடிய ஒரே பழம் கொய்யாப்பழம்.
- குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவக்கூடியது கொய்யாப்பழம்.
- ஆப்பிளை விடவும் இரண்டு மடங்கு நார்ச்சத்துக் கொண்டது கொய்யாப்பழம்.
- இதனை சாப்பிட்டு வர மலச்சிக்கல் குணமாகும் மற்றும் தோல் வளர்ச்சி, தோல் சுருக்கம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கக்கூடியது கொய்யாப்பழம்.
இரண்டு: வாழைப்பழம்
- மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு சிறந்த பழம் வாழைப்பழம். ஆப்பிளை விடவும் அதிக அளவு மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் கொண்டது வாழைப்பழம்.
- இது நமது நரம்பு மண்டலத்தை சீராக செயல்படவும் இருதயம் ஆரோக்கியமாக இயங்குவதற்கு உதவுகிறது.
- மெலிந்த தேகம் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த பழம் வாழைப்பழம் தினமும் இரண்டு நேந்திரம் பழத்தை சாப்பிட்டு வர விரைவில் உடல் எடை அதிகரிக்கும்.
- புதிய ரத்த உற்பத்திக்கு உதவக்கூடியது.
- மலச்சிக்கலை தடுக்கும் மற்றும் சிறந்த ஆண்மை பெரிக்கையாகவும் செயல்படக்கூடியது வாழைப்பழம்.
மூன்று: இலந்தை பழம்
- பலரும் இழந்தை பழத்தை தற்போது மறந்தே போய்விட்டார்கள்.
- ஆப்பிளை விடவும் விட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்தது இலந்தை பழம்.
- உடல் சூட்டை தணித்து உடலை குளிர் செய்யக்கூடியது.
- இலந்தை பலத்தை சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். கண்பார்வை தெளிவடையும்.
- இரத்த அழுத்தம் சீராகும்.
- எலும்புகள் வலுபெறும்.
- பித்தப்பை கற்களை கரைக்கும்.
- வாந்தி மற்றும் குமட்டலை தடுக்கும் உடல் வலியை போக்கும்.
- செரிமான சக்தியும் அதிகரிக்க கூடியது இந்த இலந்தை பழம்.
- ஆப்பிளை விடவும் ஏராளமான சத்துக்களையும் நன்மைகளையும் தரக்கூடியது இலந்தை பழம்.
- இதனை நிறைய பேரு சின்ன வயதில் சாப்பிட்டு இருப்பார்கள்.
நான்கு: அத்திப்பழம்
- ஆப்பிளை விடவும் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஏராளமான தாது உப்புக்கள் விட்டமின்கள் மற்றும் மினரலில் அடங்கியது அத்திப்பழம்.
- இதில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து உடலில் இருக்கும் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்தசோகையை போக்கும்.
- ஆப்பிளை விடவும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் கொண்டது அத்திப்பழம்.
- எலும்புகளை வலுவாக்கவும் அதன் வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.
- பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் கோளாறுகளுக்கு நல்ல தீர்வு கொடுக்கக் கூடியது அத்திப்பழம்.
- இரவில் இரண்டு அத்திப்பழங்களை நீரில் ஊறவைத்து காலையில் அதன் நீரையும் பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதல் நோய் குணமாக்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் அத்திப்பழம்
விலை மலிவான அதிக சத்துள்ள 10 பழங்கள்.
ஐந்து: நாவல் பழம்
- ஆப்பிளை விடவும் கால்சியம், வைட்டமின் பி1, பி2, பி5 போன்ற சத்துக்கள் அதிகம் கொண்டது நாவல் பழம்.
- வாய் மற்றும் குடல் புண்களை ஆற்றும் பசியை தூண்டக்கூடியது.
- கல்லீரல் மண்ணீரல் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கும். ஆப்பிளை விடவும் அதிக ஆன்டிஆக்சிடென்ட் கொண்ட பழம் இந்த நாவல் பழம்.
- புதிய ரத்த அணுக்களை உற்பத்தி செய்யக்கூடியது.
- தோலில் ஏற்படக்கூடிய வெண்புள்ளிகள் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.
- பழம் மட்டும் இல்லாமல் அதன் விதையும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
- விதைகளை காய வைத்து பொடி செய்து டீயாக அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
ஆறு: பேரிச்சம்பழம்
இதையும் படிக்கலாமே:
சிவப்பு அவலின் மருத்துவ பயன்கள்
- ஆப்பிளை விடவும் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது இந்த பேரிச்சம்பழம்.
- உடலுக்கு நல்ல ஆற்றலையும் வலிமையும் தரக்கூடியது இந்த பேரிச்சம்பழம்.
- ஆப்பிளை விடவும் நான்கு மடங்கு நார்ச்சத்து கொண்டது பேரிச்சம்பழம்.
- இது செரிமான மண்டலத்தை சீராக இயக்கி மலச்சிக்கலை போக்கும்.
- பேரிச்சம் பழத்தை பாதாமுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலுபெறும்.
- நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
- தேனில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய பாலியல் சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும்.
ஏழு: பப்பாளிப்பழம்
- அனைத்து சத்துக்களும் அடங்கிய விலை மலிவான ஒரு பழம் பப்பாளிப்பழம்.
- இது ஆப்பிளை விடவும் வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, பி3, பி5 மற்றும் கே போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கிறது.
- ஆப்பிளில் இல்லாத சத்துக்கள் கூட இந்த பப்பாளி பழத்தில் இருக்கிறது. உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தரக்கூடிய ஒரே பழம் இந்த பப்பாளிப்பழம்.
- பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும். குடல் புழுக்கள் வெளியேறும்.
- குடல் புழுக்கள் வெளியேறும். செரிமானம் சீராக நடைபெறும். கண்பார்வை தெளிவடையும்.
- உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு தரக்கூடியது இந்த பப்பாளிப்பழம்.
- இவ்வளவு நன்மைகளை தரக்கூடியது என்றாலும் கூட இதனுடைய அருமை பலருக்கும் தெரிகிறதே இல்லை.
எட்டு: எலுமிச்சம் பழம்
- ஆப்பிளை விடவும் விட்டமின் சி அதிகம் நிறைந்தது எலுமிச்சம்பழம்.
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும்.
- உடல் சூட்டை போக்கும்.
- செரிமான சக்தியை அதிகரிக்கும்.
- சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகளை தடுக்கும்.
- தினமும் எலுமிச்சம் பழச்சாற்றை நீருடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறையும்.
- அதோடு உடலில் உள்ள கழிவுகளும் வெளியேறும்.
ஒன்பது நெல்லிக்கனி
இதையும் படிக்கலாமே:
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் அரிசி வகைகள்
- ஆப்பிளை விடவும் அதிக சத்துக்கள் கொண்டது இந்த சின்ன அளவினால் நெல்லிக்கனி.
- தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால் நோயின்றி வாழலாம்.
- 100 கிராம் நெல்லிக்கனியில் ஆப்பிளை விடவும் 27.7 மில்லிகிராம் விட்டமின் சி அடங்கியிருக்கிறது.
- வேறு எந்த பழங்களிலும் இல்லாத அளவிற்கு விட்டமின் சி கொண்ட ஒரே பழம் நெல்லிக்கனி.
- உடல் எடையை குறைக்க காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தாலே போதுமானது.
- மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு சிறந்த கனி நெல்லிக்கனி.
- தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வரும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது.
பத்து: பேரிக்காய்
- நம் நாட்டின் ஆப்பிள் என்று கூட இதை சொல்லுவார்கள்.
- அந்த அளவிற்கு ஆப்பிளை விடவும் அதிக சத்து கொண்டது பேரிக்காய். குறைந்த கலோரிகள் கொண்டது. ஆப்பிளை விடவும் அதிக நார்ச்சத்து கொண்டது பேரிக்காய்.
- ஆப்பிளில் இல்லாத வைட்டமின் பி3 வைட்டமின் கே போன்ற சத்துக்கள் இதில் இருக்கிறது.
- எல்லா சீசன்களிலும் கிடைக்காது. ஆனால் கிடைக்கக்கூடிய சீசனில் விலை மலிவாக கிடைக்கக்கூடிய ஒரு சிறந்த காய்.
- இதனை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
- கேன்சர் செல்களை எதிர்த்து போராடக் கூடியது இந்த பேரிக்காய்.
- ஆப்பிளை விடவும் அதிக சத்துக்கள்.
- நம் உடல் நலத்திற்கு தேவையான நன்மைகளை தரக்கூடியது இந்த பேரிக்காய்.
ஆப்பிளை விடவும் அதிக சத்துக்கள் கொண்ட ஆனால் விலை வழிவான பத்து பழங்கள் என்னென்ன என்று தெரிந்து கொண்டோம்.