வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்

Top 10 Health Benefits of Banana flower Tamil

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள். குலைதள்ளிய வாழையில் காய்கள் போக எஞ்சிய பகுதி தான் இந்த வாழைப்பூ. இந்த வாழைப்பூ காய்கறி கடைகளில் மலிவான விலையில் எளிதாக கிடைக்கக்கூடியது என்றாலும் கூட வாழைப்பூவை பிரித்து சுத்தம் செய்து சமைப்பது என்பது சற்று சிரமமான காரியம் என்பதினால் பலரும் இதனை அதிகம் வாங்கி பயன்படுத்துவது கிடையாது.

ஆனால் வாழைப்பூவில் மற்ற பூ காய்கறிகளை விடவும் அதிக அளவிலான இரும்புச்சத்து நார்ச்சத்து வைட்டமின் ஏ சி இ கே போன்ற வைட்டமின் சத்துக்களும் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் போன்ற தாது சத்துகளும் மற்றும் ஏராளமான ஆன்டிஆக்சிடென்ட்களும் நிறைந்தது இந்த வாழைப்பூ.

இவ்வளவு சத்துக்கள் நிறைந்த இந்த வாழைப்பூவை வாரம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் எடுத்துக் கொண்டாலே நம் உடலில் ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகளையும் மிக எளிதில் தீர்க்ககூடியது இந்த வாழைப்பூ.

சுவைகளிலேயே அரிய சுவை என்று சொல்லக்கூடிய துவர்ப்பு சுவை அதிகம் நிறைந்த இந்த வாழைப்பூவை சாப்பிடுவதால் கிடைக்கும் 10 சிறந்த நன்மைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஒன்று: அனிமியாவை குணமாக்கும்

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்

அனிமியா என்னும் ரத்தசோகை பிரச்சனை உண்டாவதற்கு முக்கியமான காரணம் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு மிகவும் அவசியமான அயன் என்னும் இரும்புச்சத்து குறைவாக இருப்பதுதான். இந்த இரும்புச்சத்து வாழைப்பூவில் நல்லளவில் இருக்கிறது. 

100 கிராம் வாழைப்பூவில்  2.2 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது. ஒரு நாளைக்கு தேவையான இரும்புச்சத்தில் 17% இரும்புச்சத்து. இது மட்டும் இல்லாமல் இந்த இரும்புச்சத்தை உடல் எளிதாக கிரகிக்க தேவையான விட்டமின் சி சத்தும் இதில் தேவையான அளவு இருக்கிறது. இது உடலில் எளிதாக புதிய சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து அனிமியாவை குணமாக்கும். சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு தேவையான அளவு இரும்புச்சத்தை கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த உணவு இந்த வாழைப்பூ.

இரண்டு: ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் 

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்

ரத்த சர்க்கரை அளவுகள் கட்டுப்பாட்டில் இருக்க குறைந்த கிளைசெமிக் கொண்ட உணவுகளையும் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு. அந்த வகையில் 100 கிராம் வாழைப்பூவில் 5.7 மில்லிகிராம் டயட்ரி பைபர் எனும் நார்ச்சத்து இருக்கிறது. இது நாம் சாப்பிட்ட உணவின் மூலமாக வரக்கூடிய ரத்த சர்க்கரையின் அளவுகள் வேகமாக ஏறுவதை தடுக்கும்.

இதன் மூலமாக திடீரென சர்க்கரை அளவுகள் உயர்வது தடுக்கப்படுவதோடு சர்க்கரை அளவுகள் சீராகவும் இருக்கும்.  வாழைப்பூவில் கிளைசிமிக் இன்டெக்ஸ் மிக மிகக் குறைவு. சோ சர்க்கரை நோயாளிகள் எந்த பயமும் இல்லாமல் வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மூன்று: மாதவிடாய் வலியை குணமாக்கும் 

Medicinal properties of banana flower

பெண்கள் பலரும் மென்சுரல் கிராம்ஸ் என்னும் மாதவிடாய் வலியினால்  அவதிப்படுவது உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது வாழைப்பூ. வாழைப்பூவில் இருக்கக்கூடிய பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள்  யூட்ரான் மசில் என்னும் யூட்ரஸ் தசைகள் இருக்கம் அடைந்து தடுப்பதோடு மாதவிடாய் வலியும் குறைக்கும்.

மேலும் இதில் இருக்கக்கூடிய வைட்டமின் பி6 என்னும் பெரி டாக்சின் சேரிட்டோனின் ஹார்மோனை ஒழுங்கு படுத்துவதோடு மாதவிடாய் வலியையும் குறைக்கும். வலியினால் உண்டாகக்கூடிய மன அழுத்தத்தையும்  தடுக்கும். சோ மாதவிடாய் வலியினால் அவதிப்படுகிறவர்கள் வேக வைத்த வாழைப்பூவுடன் நீர்மோர் கலந்து குடித்து வர மாதவிடாய் வலி நன்கு  குறையும். 

Click on the link below to purchase hosting at a low monthly fee
https://goviralhost.com/clientarea/aff.php?aff=2653

நான்கு: மலச்சிக்கலை குணமாக்கும்

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்

மலச்சிக்கல் உண்டாவதற்கு சாப்பிடும் உணவில் போதிய நார்ச்சத்துக்கள் இல்லாமல் இருப்பது ஒரு முக்கியமான காரணம். நேச்சுரல் ஆக்சைட்டி ப்ராபர்டீஸ் அதிகம் நிறைந்த உணவுகளில் மிக முக்கியமானது இந்த வாழைப்பூ. வாழைப்பூவில்  மலச்சிக்கலை தடுக்க உதவக்கூடிய நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்திருக்கிறது.

தினை அரிசியின் மருத்துவ பயன்கள்

100 கிராம் வாழைப்பூவில் 5.7 கிராம் நார்ச்சத்தும் 90%  அதிகமான அளவு நீர்ச்சத்தும் இருக்கிறது. சோ மலச்சிக்கல் பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் வாரம் இரண்டு மூன்று நாட்கள் இந்த வாழைப்பூவை பொரியலாக செய்து சாப்பிட்டு வர மலக்கழிவுகள் எளிதாக வெளியேறுவதோடு மீண்டும் மீண்டும் மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும்.

ஐந்து: எலும்புகளை வலுவாக்கும்

Medicinal properties of banana flower

வாழைப்பூவில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான கால்சியம் மெக்னீசியம் மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் நல்ல அளவில் இருக்கிறது. இது போன் மினரலைசேஷன் எனும் புதிய எலும்பு திசுக்களை உற்பத்தி செய்ய உதவி செய்வதோடு ஆஸ்டியோபோரசிஸ்அ போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். மேலும் வாழைப்பூவில் கேர் செட்டின் மற்றும் கேட்டசீன் போன்ற ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நல்ல அளவில் இருக்கிறது. 

இது மூட்டு எலும்புகளில் உண்டாகக்கூடிய இன்ஃப்ளமேஷனை குறைப்பதோடு மூட்டு எலும்புகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். சோ மூட்டு வலி முதுகு வலி மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகளினால் அவதிப்படுபவர்கள் இந்த வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

ஆறு: தாய்ப்பாலை அதிகரிக்கும் 

Medicinal properties of banana flower

குழந்தை பெற்ற தாய்மார்கள் பலரும்  தாய்ப்பால் சுரப்பு குறைவு காரணமாக  அவதிப்படுவது உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது இந்த வாழைப்பூ. வாழைப்பூவில் மில்க் பூஸ்டர் என்னும் எலக்ட்ரோ கென் நல்ல அளவில் இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க தேவையான அயன் கால்சியம் மெக்னீசியம் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ சி போன்ற சத்துக்களும் நல்ல அளவில் இருக்கிறது. சோ தாய்ப்பால் குறைவாக இருக்கிறவர்கள் வாரம் இரண்டு மூன்று நாட்கள் இந்த வாழைப்பூவை பொறியலாக செய்து சாப்பிட்டு வந்தால் இயற்கையாகவே தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே
ஆயுளை அதிகரிக்கும் 10 உணவுகள்

ஏழு: உடல் எடையை குறைக்கும்

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்

பொதுவாக உடல் எடையை குறைக்க டயட் ஃபாலோ பண்றவங்க கலோரி குறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுதுண்டு. அந்த வகையில் மிகவும் ஏற்ற ஒரு உணவு இந்த வாழைப்பூ. 100 கிராம் வாழைப்பூவினுடைய கலோரிகள்  40-க்கும் குறைவுதான். அதுமட்டுமில்லாமல் டயட்ரி பைபர் எனும் நார்ச்சத்தும் அதிகளவில்  இருக்கிறது. இதன் காரணமாக வயிறு நிரம்பிய ஒரு உணர்வை கொடுப்பதோடு நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். இதன் காரணமாக உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொழுப்புகள் எரிக்கப்படுவதோடு உடல் எடையும் வேகமாக குறைக்க உதவி செய்யக்கூடியது இந்த வாழைப்பூ.

எட்டு: குடலை சுத்தமாக்கும் 

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்

குடல் சுத்தமே உடல் சுத்தம் என மருத்துவ பழமொழி உண்டு. அதற்கு ஏற்ற ஒரு சிறந்த உணவு இந்த வாழைப்பூ. வாழைப்பூவில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார் சத்துக்கள் குடலின் உட்பகுதியில் தேங்கி இருக்கக்கூடிய கழிவுகளை முழுமையாக வெளியேற்றும். சாப்பிடும் போது நாம் அறியாமல் விழுங்கக்கூடிய கற்கள் தலைமுடி போன்றவற்றை கூட எளிதில் வெளித்தள்ளும் ஆற்றல் இந்த வாழைப்பூவிற்கு உண்டு.

 மேலும் கட் மைக்ரோபைட்டா என்னும் ப்ரோபயாட்டிக் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இது மட்டும் இல்லாமல் வாழைப்பூ ஒரு அல்கலின் சார்ந்த ஒரு உணவு என்கிறதால் வயிற்றில் இருக்கக்கூடிய அமிலத்தை சமநிலைப்படுத்துவதோடு அஜீரணம் நெஞ்செரிச்சல் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் உண்டாவதை தடுக்கும்.

ஒன்பது: ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் 

Medicinal properties of banana flower

ரத்த ஓட்டம் சீராக இருக்கவும் தசைகள் சீராக சுருங்கி விரியவும் நைட்ரிக் ஆக்சைடு மிகவும் தேவை. வாழைப்பூவில் நைட்ரிக் ஆக்ஸைடை உற்பத்தி செய்ய தேவையான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. 100 கிராம் வாழைப்பூவில்  571 மில்லிகிராம் பொட்டாசியம் 34.13 மில்லி கிராம் மெக்னீசியமும் இருக்கிறது. இது உடலில் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியை அதிகரிக்க வேலை செய்யும். இதன் மூலமாக ரத்த அழுத்தத்தையும் நன்கு கட்டுப்படுத்தக்கூடியது இந்த வாழைப்பூ.

Click on the link below to purchase hosting at a low monthly fee
https://goviralhost.com/clientarea/aff.php?aff=2653

பத்து: மூலநோயை குணமாக்கும்

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்

பொதுவாக பைல்ஸ் என்னும் மூலநோய் உண்டாவதற்கு ஆசனவாயில் இருக்கக்கூடிய அதிகப்படியான உஷ்ணமும் மலச்சிக்களும்தான் முக்கியமான காரணம். இந்த இரண்டையும் சரி செய்யும் ஆற்றல் இந்த வாழைப்பூவிற்கு உண்டு. வாழைப்பூவில் இருக்கக்கூடிய அதிகப்படியான டயட்ரிப்பைபர் என்னும் நார்ச்சத்து மலத்தை மிருதுவாக்குவதோடு எளிதாக வெளியேறவும் உதவி செய்யும். மேலும் மூல நோயினால் உண்டாகக்கூடிய ஆசனவாய் எரிச்சல் புண்களையும் விரைவில் ஆற்றும் தன்மை இந்த வாழைப்பூவிற்கு உண்டு. மூல வியாதியினால் அவதிப்படுறவர்கள் இந்த வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள மூலநோய் விரைவில் குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *