வழிபாடும் பரிகாரமும் – எதிரிகள் தொல்லையா? கோர்ட் கேஸ் பிரச்சனையா?
தீராத பிரட்சினைகளை தீர்க்கும் கீழப்பாவூர் நரசிம்மர் பெருமாள் கோவில்.
வணக்கம் நேயர்களே வாழ்வில் வரும் பிரச்சனைகள் அதை தீர்க்கும் வழிகள் இவற்றை ஆராய்ந்து பலரின் அனுபவத்தையும் கேட்டு அறிந்து அதை உங்களோடு பகிர்வதே இந்த நிகழ்ச்சியின் வெற்றியாகும். கடந்து சில வாரங்களாக பலரும் எதிரி தொல்லைகள் நீங்க கடன் பிரச்சினைகள் தீர மற்றும் தீர்வு கிடைக்காத கோர்ட் கேஸ் வில்லங்கம் விலக ஒரு பரிகார ஸ்தலத்தை ஒளிபரப்ப வேண்டி எங்களை தொடர்பு கொண்டு கேட்ட காரணத்தினால் இந்த வாரம் நேயர்கள் விருப்பமாக ருணரோக சத்ரு பயம் போக்கும் வழிபாடு மற்றும் அது சார்ந்த ஒரு அற்புதமான பரிகார கோவிலை காண இருக்கின்றோம்
தமிழகத்தில் எத்தனையோ நரசிம்மர் கோவில் இருந்தாலும் 16 திருக்கரங்களுடன் மிகப்பிரமாண்டமாக காட்சி தருகின்ற சக்தி வாய்ந்த நரசிம்மர் கோவில் ஒன்று இருப்பதை நேயர் ஒருவர் மூலம் கேள்விப்பட்டு அங்கு பயணித்தோம்
இந்தியாவில் உள்ள நரசிம்மர் கோவில்களில் அபூர்வமானதும் வேறு எங்கும் காணும் கிடைக்க அரிதான பல்வேறு சிறப்புகள் நிறைந்த தளமாக விளங்கும் ஆலயம் கீழப்பாவூர் நரசிம்மர் கோவில்.
ஒரு சில இடங்களுக்கு சென்றால் மட்டுமே விதியானது மாறும் இது விதியை மாற்றும் ஸ்தலம்.
வாழ்வில் எந்த பிரச்சனையானாலும் கண்டிப்பாக அது தீர ஒரு பரிகாரம் உண்டு. நம்பிக்கையுடன் இறைவனை தொடர்ந்து வழிபட்டால் எத்தனை பெரிய கஷ்டமானாலும் அது தீரும். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் இறைவனை வணங்கும்போது கடவுள் அருளால் பிரச்சனைகள் படிப்படியாக குறைவதை உணரலாம்.
இதையும் படிக்கலாமே : வழிபாடும் பரிகாரமும் – எதிரிகள் தொல்லையா? கோர்ட் கேஸ் பிரச்சனையா?
இன்றைய நிலையில் பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை கடன் பிரச்சனை. அதற்கு அடுத்தது தீராத நோய் இறுதியாக எதிரிகள் பயம் மற்றும் கோர்ட் கேஸ் பிரச்சனைகள். இன்றைய நிகழ்ச்சியில் இதற்குரிய வழிபாடுகள் மற்றும் எந்த கோவிலுக்கு சென்றால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என பார்க்க இருக்கின்றோம்.
எதனால் ஒருவருக்கு இப்படிப்பட்ட கஷ்டங்கள் வருகிறது என முதலில் பார்ப்போம். ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் இழந்து லக்னத்தில் பாவ கிரகங்கள் அமர்ந்து ஆறாம் இடமும் ஆறாம் அதிபதியும் தீயகிரகங்களால் சூழப்பட்டு எட்டாம் அதிபதியின் தொடர்பும் இருந்து ஆறாம் அதிபதி தசையோ அல்லது ஆறாம் இடத்தில் இருக்கும் பாவ கிரகங்களின் தசையோ நடக்க குருவுக்கு சந்திரன் சஷ்டாஷ்டகம் எனப்படும் ஆறுக்கு எட்டாக அமர்ந்தால் நிச்சயம் தீராத கடன் இருக்கும் மற்றும் தொடர்ந்து எதிரிகள் தொல்லைகள் அல்லது நீண்ட நாள் நோயால் பாதிப்புகள் வரும் என்கிறார்கள்.
மேலும் இந்த பிரச்சனைகள் அனைத்தும் அந்த தசை முழுக்க அனுபவிக்க வேண்டி வருமாம். இறைவழிபாட்டால் நிச்சயம் இவற்றையெல்லாம் வெல்லலாம் என்பதே மிகப்பெரிய உண்மையாகும். கிரக நிலைகள் பிரச்சினைகள் எப்படி இருந்தாலும் சரி அதற்குரிய கடவுளை வழிபடும்போது காலப்போக்கில் கட்டாயம் எல்லாம் சரியாகும். சரி இனி இதற்கு என்ன வழிபாடு என முதலில் பார்ப்போம்.
தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் சூரியன் உதிக்கும் நேரத்தில் கிழக்கு நோக்கி நின்று ஓம் சூர்யாாய நமஹ என்ற மந்திரத்தை 108 முறை தினமும் பொறுமையாக நம்பிக்கையுடன் சொல்லலாம். அதை போல் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் மேற்கு நோக்கி அமர்ந்து கந்த சஷ்டி கவசம் அல்லது சண்முக கவசத்தை மாலை வேலைகளில் முருகப்பெருமானை நினைத்து பாராயணம் செய்யலாம்.
இது தவிர முன் ஜென்ம கர்ம வினையால் சிலருக்கு என்ன நோய் என்றே கண்டுபிடிக்க முடியாமல் ஏதோ ஒரு நோய் இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் ஓம் ஓம்கார ரூபாய மோஜூதராய குக் குடத் பஜார் சிகிவாகனாய சண்முகாய ஓம் சரவணபவாய என்ற மந்திரத்தை சொல்லி வரலாம். இது மிகவும் சக்தி வாய்ந்த சுப்பிரமணியர் மூல மந்திரமாகும். இந்த மந்திரத்தை பழனி முருகன் படம் ஒன்று வைத்து அதன் முன் அமர்ந்து அரளி மலர்களைக் கொண்டு 108 தடவை கூறி அர்ச்சனை செய்து வழிபட நாள்பட்ட நோய்கள் கூட நிச்சயம் குணமாகும் என்பது பலன் பெற்றவர்களின் அனுபவமாகும்.
அடுத்து தீராத கடன் தீர என்ன வழிபாடு என இனி காணலாம்.
தீராத கடன் தீர தினமும் காலையில் எழுந்ததும் பின் தூங்கப்போகும் உண்ணும் தொடர்ந்து ருணவி மோட்சன மந்திரத்தை சொல்லலாம்கடன் தீர்க்கும் பதிகங்களையும் பாராயணம் செய்யலாம் மேலும் பரணி நட்சத்திரம் வரும் நாளில் பழனி மலையில் இருக்கும் போகர் சித்தர் ஜீவசமாதிக்கு சென்று ஒரு பத்து ரூபாய் புது நோட்டு கட்டை அங்கு இருக்கும் புவனேஸ்வரி அம்பாள் பாதத்தில் வைத்து எடுத்தபின் அதை உங்கள் வீட்டுக்கு கொண்டு சென்று பீரோவில் வைத்து விட ஒரு வருடத்திற்குள் கட்டாயம் பணம் சேரும் என்பது நம்பிக்கை.
ஆனால் இதை பலன் பெற்ற பின் யாருக்கும் சொல்லக்கூடாது மேலும் குபேர கிரிவலம் எனப்படும் கார்த்திகை மாத சிவராத்திரியின் போது திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருக்கும் குபேர லிங்கத்தை குரு ஓரையில் தரிசித்து கிரிவலம் வர பணம் சேருமாம்.
இது தவிர மாதம் தோறும் வரும் மைத்ரேய முகூர்த்த நேரத்தில் கடனில் ஒரு தொகையை கொடுத்து வர கடன் விரைவில் தீரும் என்கிறார்கள்.
இதையும் படிக்கலாமே : வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 அதிர்ஷ்டம் தரும் மரங்கள்
எதிரி பயம் விலக என்ன வழிபாடு
அதிகமாக எதிரிகளால் பாதிக்கப்படுபவர்கள் உங்கள் பக்கம் தர்மம் இருந்தால் நிச்சயம் இங்கு சொல்லப்படும் வழிபாட்டை செய்ய நல்ல பலனை பெறலாம். செவ்வாய் கிழமைகளில் சனி ஓரையில் உங்கள் உள்ளங்கை அளவு வேல் வைத்து வீட்டில் பூஜை செய்யலாம். இல்லத்தில் வேல் விருப்ப பாடல்களை தொடர்ந்து ஒலிக்க விடலாம். முக்கியமாக சத்ரு சம்ஹார கோல் முருகப்பெருமானை 6 விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து 6 எலுமிச்சை பழங்கள் கொண்டு பூஜை செய்து வர எப்பேர்ப்பட்ட எதிரி பயமும் விரைவில் தீரும்.
அதேபோல் கோர்ட் கேஸ் பிரச்சினை தீர ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் இராகு காலத்தில் தொடர்ந்து சரபேஸ்வரரை வழிபடலாம். மேலும் சனிக்கிழமைகளில் செவ்வாய் ஓரை நேரத்தில் கேஸ் சம்பந்தமாக முயற்சி செய்து வர விரைவில் கோர்ட் கேஸ் பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கை.
இன்றைய பரிகார கோவிலைபற்றி தெரிந்து கொள்வோம்
தென்காசி கீழப்பாவூர் அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோவில்
நாளை என்பது நரசிம்மரிடம் இல்லை என்பார்கள். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என் நாராயணன் என பிரகலாதன் கூறியதும் எங்கே இந்த தூணில் இருந்தால் வரட்டும் உன் நாராயணன் என ரன்னிய கசிவு துணை அடிக்க தூணை பிளந்து கொண்டு வந்த நரசிம்மர் ரன்னிய கசுபை சம்பாரம் செய்கிறார்
மகாவிஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் நரசிம்மர் அவதாரம் தான் நொடி பொழுதில் நிகழ்ந்த அற்புதம். நரசிம்மரை ஒருவர் தொடர்ந்து வணங்கி வர எப்படிப்பட்ட நோய் கடன் எதிரி பயம் இருந்தாலும் இவை அனைத்தும் நிச்சயம் நீங்கும் என்பது நம்பிக்கை.
கேட்டதெல்லாம் கொடுப்பவர் கீழப்பாவூர் நரசிம்மர்
தமிழகத்தில் எத்தனையோ நரசிம்மர் கோவில் இருந்தாலும் 16 திருக்கரங்களுடன் மிகப்பிரமாண்டமாக காட்சி தருகின்ற சக்தி வாய்ந்த நரசிம்மர் கோவில் ஒன்று இருப்பதை நேயர் ஒருவர் மூலம் கேள்விப்பட்டு அங்கு பயணித்தோம். இந்தியாவில் உள்ள நரசிம்மர் கோவில்களில் அபூர்வமானதும் வேறு எங்கும் காணும் கிடைக்க அரிதான பல்வேறு சிறப்புகள் நிறைந்த தளமாக விளங்கும் ஆலயம் கீழப்பாவூர் நரசிம்மர் கோவில்.
தலம் மூர்த்தி தீர்த்தம் மட்டுமின்றி பல்வேறு சிறப்புகள் நிறைந்தது கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம். இந்தியாவில் மூன்று இடங்களில் தான் 16 திருகரங்களுடன் நரசிம்மர் காட்சி தருகிறார் மாநிலத்திலும் மற்றொன்று பாண்டிச்சேரி அருகே சிங்ககிரி என்னும் சிறு குன்றிலும் மூன்றாவதாக தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் மட்டுமே 16 திருகரங்களுடன் நரசிம்மர் அருள்பாளித்து வருகிறார். வானத்தில் இருந்து கழுகு பார்வையில் பார்க்கும்போது இப்படி ஒரு பசுமை நிறைந்த இடத்திற்கு போக வேண்டும் இங்கு குடி கொண்டிருக்கும் நரசிம்மரை தரிசிக்க வேண்டும் என எல்லோருக்கும் எண்ணம் வருவது இயல்புதான் பாருங்கள் எத்தனை அழகு.
காணும் இடம் எங்கும் பசுமை மட்டுமே தோப்பும் துறவும் எங்கிலும் அற்புதமாக காட்சி தருகிறது. மிகப் பெரிய பிரம்மாண்டமான நரசிம்மர் தீர்த்த குலம் மற்றும் கோவில் அருகே இருக்கும் பெரிய குளம் ஒன்றும் காண்பூரை பிரமிக்க வைக்கிறது. இவை அனைத்தும் அமைதியையும் ஆனந்தத்தையும் தரும் விதமாக உள்ளது. சுமார் 1100 ஆண்டுகள் புராதன சிறப்புமிக்க தளம் இது ஆலயத்தை சுற்றி ஏராளமான கல்வெட்டுகளை காண முடிகிறது.
இதையும் படிக்கலாமே : நினைத்ததை 10 நாட்களில் நிறைவேற்றும் கல் உப்பு பரிகாரம்
கோவில் உள்ளே ஸ்ரீ லட்சுமி ஸ்தோத்திர பாடல் மற்றும் அதன் விளக்கத்தையும் காணமுடிகிறது. முதன் முதலில் நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது அகோபிலத்தில் என்றால் மீண்டும் அவதாரம் எடுத்தது இங்கு மட்டுமே என்பதை கேள்விப்பட்டபோது உடல் அப்படியே மெய் சிலித்தது மனம் நம்மையும் அறியாமல் தவநிலைக்கு செல்கிறது. அத்தனை சக்தி வாய்ந்த ஸ்தலம் இது ஒரு சில இடங்களுக்கு சென்றால் மட்டுமே விதியானது மாறும் இது விதியை மாற்றும் ஸ்தலம்.
ஸ்தல வரலாறு கிருத யுகத்தில் பிரகலாதனுக்காக திருமால் நரசிம்மாவதாரம் எடுத்து ரன்யனை அழித்தார். சில நாளிகைகளே நீடித்திருந்த நரசிம்ம அவதாரத்தை மீண்டும் காண காசியப முனிவர் நாரதர் வருணன் சுகேசன் முனிவர் போன்றோர் விருப்பம் கொண்டு மகாவிஷ்ணுவை நோக்கி கடுந்தவம் இருந்ததால் இத்தலத்தில் மீண்டும் காட்சி தந்து இங்கேயே தங்கிவிட்டாராம்.
தல சிறப்பு
அமைதியான சூழலில் வயல்வெளிகள் நிறைந்த பசுமையான பகுதியில் இந்த நரசிம்மர் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. கோவில் நுழைவு வாயிலில் சங்கு சக்கரத்துடன் திருநாமம் தாங்கியபடி ஸ்ரீதேவி பூதேவியருடன் பெருமாள் காட்சி தருகிறார். ஆலய விமானத்தில் அற்புதமாக சுவை சிற்பங்களை காண முடிகிறது.
ஆலயத்திற்குள் நுழைந்ததும் திறந்த நிலையில் ஒரு மண்டபம் இதை அடுத்து இன்னொரு மண்டபம் அடுத்து கருவறையில் குடிகொண்டு உள்ளார் ஸ்ரீ அலர்மேல் மங்கா பத்மாவதி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் நின்ற கோலத்தில் கிழக்கு பார்த்தபடி உள்ளார். பெருமாளுக்கு இடப்பக்கத்தில் பத்மாவதி தாயார் உள்ளார் ஆனால் வலப்பக்கத்தில் பீடம் மட்டுமே உள்ளது.
விதியை மாற்றும் பிரம்மாண்ட பூஜைகள். இத்தளத்தில் என்ன விசேஷம் என்றால் இங்கு நடைபெறும் பூஜைகள் தான். இத்தளத்தில் திருவோண நட்சத்திர நாளில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அந்த பூஜையில் ஏராளமானோர் வந்து கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டு செல்கின்றனர். ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு பின்புறம் அதாவது மேற்கு திசை நோக்கி நரசிம்மர் காணப்படுகிறார் இது மிகப் பழமையான திருவடிவம் அதுவும் புடைப்பு சிற்பமாக 16 திருக்கரங்களுடன் பாருங்கள் எத்தனை தத்ரூபமாக நம் கண் முன் நரசிம்மர் காட்சி தருகிறார்.
ரன்யனை தன் மீது கிடத்தி இரண்டு கரங்களால் அவனைப் பிடித்து நான்கு கரங்களால் அவன் வயிற்றை கிழித்து இரண்டு கரங்களால் குடலை உருவி மாலையாக எடுத்து மீதமுள்ள எட்டு கரங்களில் ஆயுதங்களுடன் உக்கிரமாக காட்சி தருகிறார்.
சிலையில் இருந்து வந்த சிங்க கர்ஜனை அமானுஷ்ய ஒளி
சுமார் 300 வருடங்களுக்கு முன் மாலை வேலைகளில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் அடிக்கடி கேட்டதாம். இதனால் பக்தர்கள் அங்கு சென்று வழிபட பயந்தனர் அதனால் நரசிம்மருக்கு இளநீர் பால் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் செய்து சாந்தப்படுத்தி உள்ளனர். அன்று முதல் இந்த ஆலயத்தில் நரசிம்மருக்கு விசேஷ பூஜைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
தோஷங்கள் நீக்கும் சுவாதி நட்சத்திர யாக பூஜை
இந்த ஆலயம் மிகப்பெரிய ஆலயமாக இல்லாத போதும் இங்குள்ள நரசிம்மருக்கு பூஜைகள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன. அதிலும் சுவாதி நட்சத்திரத்தின் போது சக்தி வாய்ந்த யாக பூஜைகள் நடைபெறுகின்றன. அக்னியை வைத்து குறிப்பிட்ட மூலிகை சமித்துகளை ஆகுதி கொடுத்து குறிப்பிட்ட மந்திரங்களை பிரயோகம் செய்யும் போது அங்கு இறைவனின் அருள் வரமாகும் என்பது ஐதுகம்.
இங்கு நடைபெறும் இந்த யாக பூஜையில் கலந்து கொண்டால் கட்டாயம் எல்லாவிதமான பிரச்சனைகளும் தீரும் என்கிறார்கள். இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காகவே சுவாதி நட்சத்திர நாளில் மாலை வேளையில் பல ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து நரசிம்மரை வழிபடுகிறார்கள்.
சுவாதி நட்சத்திரம் ராகுக்குறியது என்பதால் நரசிம்மர் அவதரித்த ஸ்வாதி நட்சத்திர நாளில் ஜாதகத்தில் நாக தோஷம் இருப்பவர்கள் ராகு தசை நடப்பவர்கள் வாழ்வில் பல வருடங்கள் அதீத கஷ்டங்கள் அனுபவித்து வருபவர்கள் மன பாதிப்பு உள்ளவர்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் வறுமையில் வாடுபவர்கள் மற்றும் பில்லி சூனியம் அபிசார பிரயோகத்தால் மனக்குழப்பத்தில் இருப்பவர்கள்.
இது தவிர எதிரிகளின் அச்சுறுத்தல் செய்வினைக் கோளாறு தீர்க்க முடியாத நிலுவையில் உள்ள வழக்குகள் கடன் தொல்லை நீண்ட நாள் நோய் திருமண தடை வயிறு தொடர்பான பிரச்சனை உள்ளோர் என பலவிதமான தீர்க்க முடியாத பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இந்த கோவிலின் சக்தியை கேள்விப்பட்டு இங்கு நடைபெறும் ஸ்வாதி நட்சத்திர யாக பூஜையில் கலந்துகொண்டு நரசிம்மரை வணங்கிச் செல்கின்றனர்.
இது தவிர புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் மற்றும் நரசிம்மர் ஜெயந்தி பிரதோஷ காலங்களில் நரசிம்மருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. முக்கியமாக வைகுண்ட ஏகாதசி நாளில் ஊர் முழுக்க 1008 விளக்கேற்றி வித்தியாசமாக வழிபடுகிறார்கள் தோஷங்கள் சாபங்களால் தான் நோய் கடன் எதிரிகள் தொல்லைகள் வருகிறது.
இவற்றிலிருந்து விடுபட கட்டாயம் ஆலய வழிபாடு அவசியமாகும் அதிலும் ஒரு சில ஆலயங்களில் தான் இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த யாக பூஜைகள் மற்றும் பல்வேறு பூஜைகள் ரகசியமாக செய்கிறார்கள். எனவே உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர கட்டாயம் இங்கு சொல்லப்பட்ட வழிபாடு மற்றும் ஆலயத்தை சுவாதி நட்சத்திர நாளில் சென்று தரிசியுங்கள். நிச்சயம் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீரும் நலம் ஒன்றை நரசிம்மர் அருள்வார். நம்பிக்கையுடன் சென்று வழிபடுங்கள் நிச்சயம் வாழ்க்கை மாறும் கஷ்டங்கள் தீரும்.
கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலுக்கு எப்படி செல்வது
தென்காசி திருநெல்வேலி சாலையில் திருநெல்வேலியில் இருந்து மேற்கில் 43 கிலோமீட்டர் தொலைவிலும் தென்காசியில் இருந்து கிழக்கில் 10 கிலோமீட்டர் தொலைவில் பாவூர்சத்திரம் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து வடக்காக சுரண்டைச் செல்லும் வழியில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கீழப்பாவூர் உள்ளது. பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் ஆலயத்தை அடையலாம்.
தரிசன நேரம் :காலை 8 மணி முதல் பகல் 11.30 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 7:30 மணி வரை
கோவில் முகவரி :அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோவில் கீழப்பாவூர் தென்காசி மாவட்டம் 627 806.