ராமேஸ்வரத்திற்கு ஏன் போக வேண்டும்? யார் போக வேண்டும்?

 ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்

ராமேஸ்வரத்திற்கு ஏன் போக வேண்டும்? யார் போக வேண்டும்? மர்மத்தின் பின்னணி – Ramanathaswamy Temple.



வணக்கம் காசியைவிட மிகப் புனிதமானது ராவண வதத்தின் தொடக்கமும் முடிவும் எங்கிருந்து பிறக்கிறது கடவுளாக இருந்தாலும் அவர்கள் செய்த பாவத்திலிருந்து ஒருபோதும் தப்ப முடியாது. தன்னுடைய பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிக் கொள்ள ராமன் நாடி வந்த ஒரு புனித ஸ்தலம்தான் ராமேஸ்வரம். ராமாயணத்தில் அயோத்தி இலங்கைக்கு அடுத்து அதிகமாக பேசப்படும் ஒரு ஊர். கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்கள் ஒரு பக்கம் இருக்கும்போது கடவுள் நம்பிக்கை இல்லாமல் அதை கேலி செய்யும்  கூட்டம் மற்றொரு பக்கம். இப்படி கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு பாடம் புகட்டும் விதமாக ராமேஸ்வரத்தில் ஒரு பக்தர் நிகழ்த்திய அதிசயம் இன்றும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்துகிறது.


எதனால் ராமேஸ்வரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அங்கு என்னதான் நடந்தது. ராமேஸ்வரம் போக வேண்டும் யாரெல்லாம் போகலாம் புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரம் உருவான வரலாற்றையும் கோவிலை சுற்றியுள்ள மர்மங்களையும் ரகசியங்களையும்  முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.


இதையும் படிக்கலாமே : குலதெய்வத்தை இப்படி கும்பிட்டால் இவ்வளவு நன்மையா?| நமது வேண்டுதல் எளிதில் நிறைவேற எளிய பரிகாரம்!!


நீங்கள் இதற்கு முன்னால் ராமேஸ்வரம் போயிருக்கின்றீர்கள் என்றால் அங்கே பார்த்த ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னால் பல யுகங்களாக புதைந்திருக்கும் வரலாற்று சம்பவங்களையும் 22 தீர்த்தங்களின் சிறப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.


12 ஜோதிர் லிங்கங்கள்



இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஸ்தலம் ராமேஸ்வரம். தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்று இந்தியாவில் உள்ள புனித ஸ்தலங்களில் ரொம்ப முக்கியமாக கருதப்படுவது நான்கு ஸ்தலங்கள் வடக்கே பத்ரிநாத் கிழக்கே ஜகன்நாத் மேற்கே துவாரகநாத் தெற்கே ராமநாதம் இவற்றுள் மூன்று ஸ்தலங்கள் வைணவ ஸ்தலங்களாக இருக்கும் போது நான்காவதாக இந்த ஒரு ஸ்தலம் ராமேஸ்வரம் மட்டும்தான் சிவஸ்தலமாக அமைந்திருக்கிறது.

பதஞ்சலி முனிவர் இந்த இடத்தில்தான் முக்தி பெற்றிருக்கிறார். பொதுவாக காசி ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில்  ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி மணல் மற்றும் தீர்த்தம் எடுத்து கொண்டு காசிக்கு போக வேண்டும். அங்கு உள்ள கங்கை திட்டத்தில் மணலில் போட்டுவிட்டு அக்னி தீர்த்தத்தால் காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து அங்கு உள்ள கங்கை தீர்த்தத்தை எடுத்து வந்து ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். புனித யாத்திரையை ராமேஸ்வரத்தில் தான் முடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். 


இதையும் படிக்கலாமே : வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 அதிர்ஷ்டம் தரும் மரங்கள்


சீதாதேவி வடிவமைத்து வழிபாடு செய்த மணல் லிங்கம்



ராமாயணத்தில் சீதையை கவர்ந்து சென்ற ராவணனுடன் ராமர் போரிட்டு ராவணனை போரில் கொன்றதன் விளைவாக ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. அதை நீக்குவதற்காக அகத்திய முனிவரிடம் ஆலோசனை கேட்டபொழுது அகத்தியர் ராமேஸ்வரம் கடற்கரையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் பிரம்மகத்தி தோஷம் நீங்கும் என்று சொல்லி இருக்கிறார். அதன்படி தனது சிறந்த பக்தனான ஹனுமானிடம் கைலாச பருவதமலைக்கு சென்று சிவலிங்கத்தை எடுத்து வர சொல்லி இருக்கார் ராமபிரான். ஹனுமான் வர காலதாமதம் ஆனதால் சீதாதேவி கடற்கரையில் உள்ள மணலில் ஒரு சிவலிங்கத்தை வடிவமைத்து ராமரிடம்  கொடுத்ததினால் ராமரும் குறித்த நேரத்தில் அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார். இதனால் ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கி இருக்கிறது.

ராமபிரான் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் தான் இன்று ராமநாத சுவாமி ஆக ராமேஸ்வரத்தில் அருள் பாலித்து  இருக்கார். ராமருடைய கட்டளையை ஏற்று கைலாய மலைக்கு சென்ற ஹனுமான் அங்கு இருந்து ஒரு சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு ராமேஸ்வர கடற்கரைக்கு வருவார். ஆனால் இங்கு ஏற்கனவே மண்ணால் சீதாதேவி செய்த சிவலிங்கத்தை பார்த்து கோபம் கொண்ட ஹனுமான் அவருடைய வாலால் அந்த சிவலிங்கத்தை பேர்த்தெடுக்க முயற்சி செய்ய அந்த சிவலிங்கத்தை கொஞ்சம் கூட அசைக்க முடியலை. ஹனுமான் வாலின் தடம் மண்ணால் செய்யப்பட்ட சீதா தேவியின் சிவலிங்கத்தின் மீது பதிந்து இருப்பதை நாம் இப்பொழுதும் பார்க்கலாம் என்று சொல்லி இருக்காங்க.


அனுமான் கொண்டு வந்தசிவலிங்கம்



பக்தனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அனுமான் கொண்டு வந்த சிவலிங்கத்தையும் பிரதிஷ்ட செய்து வழிபட்டு இருக்கார். அந்த சிவலிங்கம் தான் இன்று விஸ்வநாதராக ராமனாத சுவாமி கோவிலில் காட்சி கொடுத்து கொண்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஹனுமான் கொண்டு வந்த சிவலிங்கத்திற்கு தான் முதலில் பூஜை நடைபெற வேண்டும் என ராமபிரான் கட்டளை இட்டுருக்கார் அதன்படி இன்றும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்டு அதற்குப் பிறகுதான் ராமநாத சுவாமிக்கு பூஜைகள் நடக்கிறது. சீதையை மீட்க ராமர் இலங்கைக்கு பாலம் கட்டினதும் இந்த ராமேஸ்வரத்தில் இருந்துதான்.

இதையும் படிக்கலாமே : அதிக சக்திவாய்ந்த பிரம்மமுகூர்த்த நேரத்தில் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்.. இப்படி வழிபாடு செய்யுங்கள்.


ராமேஸ்வர கடல் தீர்த்தமே அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. தான் ஒரு கற்புக்கரசி என்பதை நிரூபிப்பதற்காக சீதாதேவி அக்னி பிரவேசம் செய்வாங்க சீதையை தொட்ட பாவத்திற்காக அக்னி பகவான் இந்த ஸ்தலத்திற்கு வந்து கடலில் நீராடி தன்னுடைய தோஷம் நீங்கி ராமநாதரை வழிபட்டு இருக்கார். அதனால் இந்த கடல் அக்னி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

 ராமேஸ்வரம் சென்றவர்கள் இதை கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள். காலில் சங்கிலியுடன் காட்சியளிக்கும் சேது மாதவன். பெருமாளின் தீவிர பக்தரான சுந்தர பாண்டியன் என்கிற ஒரு மன்னன் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்திருக்கார் அந்த மன்னனோட குறையை போக்க மகாலட்சுமியே அவர்களுக்கு மகளாக வந்து பிறந்து இருக்காங்க. அந்த பெண் மனப்பருவத்தை அடையும்போது ஒரு இளைஞன் அந்தப் பெண்ணிடம் வம்பு இழுத்து இருக்கார்.


சுந்தரபாண்டிய மன்னன் அந்த இளைஞனை சிறைபிடித்து அவனுடைய காலை சங்கிலியால் கட்டிப்போட்டு இருக்கார். பெருமாளும் தன்னோட பக்தனுக்கு இதை செய்ய அனுமதி கொடுத்திருக்கிறார் கட்டப்பட்ட பெருமாளே இங்கு சேது மாதவராக காட்சியளித்து அருள் புரிந்து வருகின்றார்.. இப்பவும் சேது மாதவரின் கால் சங்கிலியால் கட்டப்பட்டு இருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.

கடலுக்குள் இருக்கும் நவகிரகங்கள்



ராமேஸ்வரத்தில் உள்ள கடல் அலைகள் இல்லாதது ஆரவாரம் இல்லாதது ராமபிரான் தன்னோட கையினால் 9 பிடி மணலை கொண்டு பிரதிஷ்டை செய்த நவகிரக ஸ்தலம் இந்த ராமேஸ்வரத்தில் இருக்கிறது. பக்தர்கள் அங்கே உள்ள நவகிரகங்களை தொட்டு அவர்களுடைய கையாலே அபிஷேகம் அர்ச்சனை எல்லாம் செய்யலாம். புராண காலம் முதல் கடல் நடுவே 9 கல் சிலைகளாக நவகிரகங்கள் அமைந்துள்ள அற்புதமான காட்சியை நாம் இந்த ராமேஸ்வரத்தில் மட்டும் தான் பார்க்க முடியும்.

ஆன்மீகத்தை நம்புகின்றவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். ஆன்மீகத்தை நம்பாமல் அதைக் கேலி செய்வதும் அவநம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக செயல்படும் மற்றொரு கூட்டமும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு சமயம் இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் மணலால் உருவானது கிடையாது அப்படி இருந்திருந்தால் அபிஷேகம் செய்யும் பொழுது அது கரைத்திருக்கும் என்று ஒரு பிரிவினர் வாதம் செய்து கொண்டிருக்கின்றனர்.


உப்புலிங்கம்



இதை கேட்டுக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி தாயாரின் தீவிர பக்தரான பாஸ்கர் ராயர் என்பவர் தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய உப்பினால் ஒரு சிவலிங்கத்தை வடிவமைத்து அதற்கு அபிஷேகம் செய்திருக்கிறார். அந்த சிவலிங்கமும் தண்ணீரில் கரையவில்லை. இதை பார்த்த அனைவரும் அமைதியாகிவிட்டனர். ஒரு சாதாரண பக்தனான தன்னால் செய்யப்பட்ட உப்புலிங்கமே கரையாத போது அன்னை சீதா தேவியால் மணலில் வடிவமைக்கப்பட்ட சிவலிங்கம் கரையாதது ஒன்றும் அதிசயம் கிடையாது என்று பாஸ்கர் ராயர் நிரூபித்திருக்கிறார். இன்றளவும் அந்த உப்பலிங்கத்தை ராமநாதன் சன்னதிக்கு பின்புறம் பக்தர்களால் பார்க்க முடியும். உப்பின் சொரசொரப்பு தன்மையை அந்த லிங்கத்தை காணும்போதே நாம் உணர முடியும்.

 ராமேஸ்வரம் கோவிலில் நடராஜர் சன்னதிக்கு பின்புறம் ஒரு கை மட்டும் இருக்கும். இந்த கைக்கு தினமும் பூஜைகள் நடைபெறும். யோக கலையில் தேர்ச்சி பெறவும் நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதிக்கு வந்து நமது கண்களுக்கு தெரியாமல் நாக வடிவில் அமர்ந்திருக்கும் பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். பதஞ்சலி முனிவர் முக்தி அடைந்த ஸ்தலம் இராமேஸ்வரம் இதனால் அவர் நமது கண்களுக்கு தெரியமாட்டார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.


இதையும் படிக்கலாமே : நினைத்ததை 10 நாட்களில் நிறைவேற்றும் கல் உப்பு பரிகாரம்


ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கமும் ராமநாத சுவாமி மூலஸ்தானத்தில் தான் அமைந்திருக்கிறது. தினமும் இந்த ஸ்படிக லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்து வருகின்றனர். பர்வத வர்த்தினி அன்னையின் பீடத்திற்கு கீழே ஆதிசங்கர ஸ்தாபித்த ஸ்ரீ சக்கரமும் அமைந்திருக்கிறது 51 சக்தி பீடங்களில் இத்தலம் சேது பீடம் என்று அழைக்கப்படுகிறது சகல பாவங்களையும் போக்குகின்ற ஸ்தலம் இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில்.

 இங்கு உள்ள இரட்டை விநாயகரை வணங்கி குழந்தை பாக்கியமும் செல்வ செழிப்பையும் பெற்று வருகிறார்கள் பக்தர்கள். நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அக்னி தீர்த்தக் கரையில் நாகரை பிரதிஷ்டை செய்து வேண்டுகிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் பக்தர்கள் இந்த ஸ்தல இறைவனுக்கும் இறைவிக்கும் வஸ்திரம் அணிவித்து அவர்களுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்

ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற 22 தீர்த்தங்களும் அதனுடைய பலன்களும்



பக்தர்கள் முதலில் கடலில் நீராடிய பிறகுதான் கோவிலில் உள்ளே அமைந்திருக்கும் 22 தீர்த்தங்களிலும் நீராடவேண்டும். முதலில் மகாலட்சுமி தீர்த்தம் இந்த தீர்த்தத்தில் நீராடினால் செல்வ வளம் பெறலாம். அடுத்து சாவித்திரி தீர்த்தம் பேச்சாற்றலை பெறலாம். காயத்ரி தீர்த்தத்தில் நீராடினால் உலக நன்மைகள் கிடைக்கும். சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் கல்வியில் சிறந்து விளங்கலாம். சங்கு தீர்த்தத்தில் நீராடினால் வசதிகள் நிறைந்த வாழ்க்கை அமையும். சக்கரத் தீர்த்தத்தில் நீராடினால் மனோதிடம் பெறலாம். சேது மாதவ தீர்த்தத்தில் நீராடினால் காரிய தடைகளைக் கடந்து வெற்றி பெறலாம்.


நள தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து தடைகளும் அகழும். நிலத் தீர்த்தத்தில் நீராடினால் எதிரிகள் தொல்லை அகலும். கபய தீர்த்தத்தில் நீராடினால் பகை மறையும். கபாட்ஸ தீர்த்தத்தில் நீராடினால் கவலைகள் நீங்கும். கந்த மாதண தீர்த்தத்தில் நீராடினால் எந்த துறையிலும் வல்லுனராகலாம். பிரம்மகத்தி விமோசன தீர்த்தத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். கங்கை தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் அனைத்தும் நீங்கும். யமுனை தீர்த்தத்தில் நீராடினால் உயர் பதவிகள் வந்து சேரும்.


இதையும் படிக்கலாமே : வழிபாடும் பரிகாரமும் – எதிரிகள் தொல்லையா? கோர்ட் கேஸ் பிரச்சனையா?


கயா தீர்த்தத்தில் நீராடினால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். சரும தீர்த்தத்தில் நீராடினால் எந்த பிறவியிலும் செய்திருந்த பாவங்களும் நீங்கும். சிவ தீர்த்தத்தில் நீராடினால் எல்லாவிதமான பிணிகளும் நீங்கும். சத்யாமிருத தீர்த்தத்தில் நீராடினால் ஆயுள் பிரீத்தி பெறலாம். சந்திர தீர்த்தத்தில் நீராடினால் கலைகளில் ஆர்வம் உண்டாகும். சூரிய தீர்த்தத்தில் நீராடினால் எதிலும் முதன்மை ஸ்தானத்தை அடையலாம் கோடி தீர்த்தத்தில் நீராடினால் முக்தி கிடைக்கும். இந்த தீர்த்தங்கள் புராண காலத்தில் சொல்லப்பட்ட கதைகள் கிடையாது. இந்த கோவிலில் உள்ள ஒவ்வொரு தீர்த்தத்திலும் ஜீவ சக்திகளும் மின்காந்த அலைகளும் நிறைந்து இருக்கிறது. இந்த 

தீர்த்தம் உங்கள் தலையில் நன்கு பட்டால் தான் அந்த சக்திகளை நீங்கள் முழுமையாக பெற முடியும் ராமபிரான் இலங்கைக்கு போக அனைகட்டிய இடம் சேது என்று அழைக்கப்படுகிறது ராமர் தன்னோட வில்லினால் அந்த இடத்தில் தோன்றிய தீர்த்தம் தான் தனுஷ்கோடி. சேது ஸ்நானம் செய்பவர்கள் எங்கு தான் ஸ்நானம் செய்ய வேண்டும். ராமபிரான் தன்னுடைய பட்டாபிஷேகத்திற்குப் பிறகும் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டதாக சொல்லப்படுகிறது. பஞ்ச பாண்டவர்களும் பலராமரும் புராண வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இந்துஸ்தளத்திற்கு வந்து வழிபட்டு இருக்கிறார்கள்.


ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி திருக்கோவில்



ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி திருக்கோவில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது இந்த கோவிலில் 1212 தூன்களும் 690 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட பிரகாரத்தை கொண்டிருக்கிறது. இங்கு உள்ள இறைவனுக்கு ஆறு கால பூஜைகளும் நடக்கிறது. கோவிலில் எழுந்தருளியுள்ள இராமநாத பெருமாளுக்கு தினமும் கங்கையிலிருந்து கொண்டுவரப்படும் தீர்த்தத்தால் தான் அபிஷேகம் செய்யப்படுகிறது. ராமபிரான் ராமேஸ்வரத்தில் மட்டும் கிடையாது  

வேதாரண்யம் பட்டீஸ்வரத்திலும் லிங்கங்களை பிரதிஷ்டை செய்திருக்கிறார். ராமேஸ்வரம் கோவிலில் ஒரே சங்கினுள் அடுத்தடுத்து இரு சங்குகளை கொண்ட தெய்வீக திரிசங்கு இருக்கிறது. ராமநாதருக்கு அபிஷேகம் செய்வதற்காகவே இந்த ஸ்தலத்தில் பிரத்தியேகமாக 1008 அபிஷேக சங்குகள் இருக்கின்றன. ராமேஸ்வரம் கோவிலில் முழுக்க முழுக்க மூலிகைகளால் உருவாக்கப்பட்ட புதுமையான ஒரு லிங்கமும் இருக்கிறது. இந்த லிங்கத்துக்கு வைணவலிங்கம் என்று பெயர். ராமேஸ்வர ஸ்தலத்தில் மனமுருகி வழிபட்டால் எப்பேர்ப்பட்ட தோஷத்தில் இருந்தும் விடுபடலாம்.


பிரம்மஹத்தி தோஷம் நாக தோஷம் நீங்க பெறலாம் புத்திரப் பெயர் கிடைக்கும் ராமேஸ்வரம் தலம் தோன்றி 10 சதுரயுகம் ஆகிறது என்கிற ஒரு குறிப்பு இருக்கிறது. வைணவரான ராமர் சைவ கடவுளான சிவபெருமானை சிவலிங்க வடிவத்தில் வழிபட்டதால் சைவர்களும் வைணவர்களும் நாடு முழுவதிலும் இருந்து வந்து வழிபடும் முக்கிய ஸ்தலமாக அமைந்திருக்கிறது ராமேஸ்வரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *