ராஜயோகம் வரப்போவதை உணர்த்தும் 13 அறிகுறிகள்.
அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு கதவை தட்டப் போகின்றது என்பதை உணர்த்தக்கூடிய சில அறிகுறிகளை நாம் இப்பொழுது தெரிந்து கொள்வோம்.
இந்த மாதிரியான அறிகுறிகள் உங்கள் வீட்டில் இருந்தால் திடீர் அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று சொல்லுகிறார்கள். ஜோதிடத்தில் திடீர் அதிர்ஷ்டம் திடீர் யோகம் எல்லாமே ஒரு சிலருக்கு தான் அமையும். அந்த வாய்ப்பை நாம் கை நழுவி போகாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். அதிர்ஷ்டத்தை நம்பி இருக்க முடியாது என்று சொல்லுவார்கள். ஆனால் அதிர்ஷ்டம் வந்தால் அதை ஏற்றுக்கொள்ளவும் மறுக்கவும் முடியாது இல்லையா?
ஒரு சில அறிகுறிகளை வைத்து நாம் அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று கண்டுபிடித்து விடலாம். அந்த வகையில் நான் சொல்லக்கூடிய இந்த அறிகுறிகள் உங்கள் வீட்டில் தெரிந்ததென்றால் அதிர்ஷ்டம் கண்டிப்பாக உங்களை தேடி வர போகிறது என்று அர்த்தம். அப்படி எதை வைத்து நாம் அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று தெரிந்து கொள்வோம்.
கருப்பு நிற வண்டுகள்
கருப்பு நிற வண்டுகள் வீட்டுக்குள் வந்தால் மிகவும் நல்லது என்று சகுன சாஸ்திரம் சொல்லுகிறது. பொதுவாக வண்டுகள் வெளிப்புறத்தில் அதிகமாக இருக்கும் ஆனால் வீட்டுக்குள்ளே எப்போதாவது ஒரு முறை தான் வரும் என்று சொல்லுவார்கள். அந்த நேரம் கண்டிப்பாக உங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகின்றது என்பதை உணர்த்தக்கூடியதாகவே இருக்கின்றது.
என்னை பார் யோகம்
இதையும் படிக்கலாமே :
என்னை பார் யோகம் வரும் என்று கழுதைப் படத்தை வைத்து வழிபடுபவர்கள் இது சகுன சாஸ்திரம் சொல்லுகின்றது என்று சொல்லுவார்கள். காலையில் எழுந்ததுமே கழுதையின் முகத்தில் முழிப்பது அந்த நாளை இனிமையாக்கி தரும் என்பது நம்பிக்கை. கழுதையின் குரலை நீங்கள் கேட்பது போல உங்களுக்கு எப்பொழுதாவது நடக்கும் பொழுது கொஞ்சம் நாட்களில் உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் வந்து சேரும் அது பொன்னாக இருக்கலாம் திடீர் அதிர்ஷ்டமாக இருக்கலாம் திடீர் பணம் சேர்வதாக கூட இருக்கலாம்.
சிகப்பு நிற குளவி
சிகப்பு நிற குளவி வீட்டில் கூடு கட்டினால் அதிர்ஷ்டம் வருமாம். குளவி பொதுவாக நம்மை கொட்டும் பொழுது விஷம் என்று சொல்லுவோம். ஆனால் அது அதிக வலியை ஏற்படுத்தும். இதன் கொடுக்கு எப்படி அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது. சிகப்பு நிறகுழவி உங்கள் வீட்டை சுற்றி கூடு கட்டி வைத்திருந்தால் அதன் மூலம் அடுத்த சில மாதங்களில் நீங்கள் நினைக்கக்கூடிய மிகப்பெரிய விஷயங்கள் நடைபெறும். உதாரணத்திற்கு ஒரு பெரிய வீடு வாங்க போகின்றீர்கள் என்றால் அந்த கனவு உங்களுக்கு இருந்ததென்றால் கண்டிப்பாக அது நிறைவேறும் என்று சொல்கிறார்கள்.
குறிப்பாக சிகப்பு நிற குளவிகள் கூடு கட்டும் பொழுது அதனுடைய மண்ணை எடுத்து பத்திரப்படுத்தி வைத்து வெளியே செல்லும்பொழுது அதிலிருந்து சிறு மண்ணை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு சென்றால் காரிய சித்தி ஏற்படும் என்பது நம்பிக்கை. வீட்டின் பூஜை அறையில் படத்தின் பின்புறத்தில் இது போன்ற குளவிகள் கண்டிப்பாக கூடு கட்டி இருக்கும். அது கண்டிப்பாக அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியது தான். எனவே இது போன்ற பிரச்சனைகளை தகர்த்து விட வேண்டாம் பழைய பொருட்களின் மீது குளவிகள் கூடு கட்டுவது சகஜம். எல்லோருக்கும் இது நிகழ்வது இல்லை எப்போதாவது இது நடக்கும்.
கிளிகள் புறாக்கள் அணில்
கிளிகள் புறாக்கள் அணில் போன்ற உயிரினங்கள் உங்கள் வீட்டிற்குள் தெரியாமல் வந்ததென்றால் கண்டிப்பாக உங்கள் வீட்டில் அதிர்ஷ்டம் வரப்போகிறது என்பதுதான் உறுதி.
இறுதி ஊர்வலம்
இறுதி ஊர்வலம் இது இறந்தவர்களுக்கு சோகமானதாக இருக்கும் ஆனால் மத நம்பிக்கையின் படி பிணத்தை பார்ப்பதோ அல்லது இறுதி ஊர்வலத்தை பார்ப்பதோ அதிர்ஷ்டத்துடைய அறிகுறி என்று சொல்லப்படுகின்றது. இறுதி ஊர்வலத்தை பார்க்கும் பொழுது நாம் கடவுளை கண்டிப்பாக வணங்க வேண்டும்.
கன்றுக்குட்டி பால் குடிப்பதை பார்த்தால்
கன்றுக்குட்டி பால் குடிப்பதை பார்த்தால் மிகவும் நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்லுகின்றனர் புதிதாக பிறந்த கன்று குட்டி தன் தாயிடம் பால் குடிப்பதை பார்க்கும் பொழுது அருமையான சகுனம் உண்டாகும் அவ்வாறு பார்ப்பதினால் உடனடியாக கடவுளை வேண்டிக் கொண்டு உங்களுடைய ஆசையை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள் எந்த சூழ்நிலையிலும் அந்த மாட்டை நீங்கள் அடிக்காதீர்கள் துரத்தவும் முயற்சி செய்யாதீர்கள்.
ஆமை
ஆமை சீன கலாச்சாரத்தில் ஆமை மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கின்றது ஆமை என்று சொன்னால் நீண்ட ஆயுளை குறிக்கின்றது இது அதிர்ஷ்டத்தையும் குறிக்கும் எதார்த்தமாக ஆமையை பார்ப்பது உங்களுக்கு எதிர்காலத்தில் அதிர்ஷ்டம் வரப்போவதை குறிக்கின்றது அதனால் நீங்கள் ஆமையை பார்த்தீங்க என்றால் கண்டிப்பாக உங்களுக்கு அதிர்ஷ்டம் வரும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.
குதிரை லாடம்
குதிரை லாடம் சாஸ்திரத்தின் படி குதிரை லாடம் நம்மிடம் இருக்கின்ற எதிர்மறை ஆற்றலை விலக்கி நேர்மறை ஆற்றலை அதிகரிக்க கூடிய சின்னம் என்று சொல்லுவார்கள். வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை வெளியே தள்ளி நேர்மறை சக்திகளை அதிகரிக்க கூடிய இந்த குதிரை லாடத்தை உங்கள் வீட்டில் வாங்கி வீட்டில் வெளிப்புறத்தில் கட்டி தொங்க விட்டீர்கள் என்றால் எதிர்மறை ஆற்றல் விலகிவிடும். உங்கள் வீட்டில் அதிர்ஷ்டமானது பெருகிக்கொண்டே போகும் என்று சொல்லலாம்.
குருவிக்கூடு
உங்கள் வீட்டில் குருவி கூடு கட்டினால் கண்டிப்பாக உங்கள் இல்லத்திற்கு விரைவில் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். குருவி செஞ்ச பிறகு கூட அந்த குருவிக்கூட்டை அழித்துவிடாதீர்கள் உங்கள் அதிர்ஷ்டம் சீன் சீக்கிரமாக வெளியே போய்விடும்
அதனால் கண்டிப்பாக குருவி கூடு கட்டும் பொழுது நீங்கள் அந்த குருவியை துரத்தி விடாதீர்கள். உங்களுடைய வீட்டை அழுக்குப்படுத்துவதாக சொல்லிட்டு நீங்கள் அதை கலைத்து விடாதீர்கள்.
நான்கு இதழ் கொண்ட புல்
பொதுவாக இந்த புல்லுக்கு என்று ஒரு புனிதத்துவம் இருக்கிறது என்று சொல்லலாம். உங்கள் வீட்டில் வைப்பது உங்கள் வீட்டிற்கு பாதுகாப்பை அளிப்பதுடன் கண் திருஷ்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து இந்த புல்லானது உங்களை பாதுகாக்கும்.
பிறை நிலா
பிறை நிலா அதிர்ஷ்டமான ஒன்றாகும் வாழ்க்கையில் ஏற்படும் தடங்கல்களில் இருந்தும் துரதிஷ்டத்தில் இருந்தும் பாதுகாக்கும். பிறை நிலா எவ்வாறு தோன்றும் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். பொதுவாக அமாவாசைக்கு அடுத்த மூன்றாவது நாளில் பிறை நிலாவை பார்த்தீர்கள் என்றால் குழந்தைகள் பார்த்தார்கள் என்றால் அவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க கூடும் என்று சொல்லப்படுகின்றது. அதனால் பிறை நிலா என்பது அதிர்ஷ்டமான ஒன்றாகும். ஆகையினால் குழந்தைகள் கண்டிப்பாக இந்த பிறைநிலாவை பார்பதற்கு நீங்கள் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுங்கள்.
ஏழு
ஏழு பல கலாச்சாரங்களில் 7 என்பது புனிதமான எண்ணாக இருக்கின்றது குறிப்பாக ஜப்பானில் இந்த எண் புனிதமாகவே கருதப்படுகின்றது உங்களை நோக்கி 7 என்னும் எண் தொடர்ந்து எதேச்சையாக வந்ததென்றால் அதிர்ஷ்டம் உங்களை தேடி வருகின்றது என்று அர்த்தம்.
யானை
யானை நீங்கள் எங்கேயாவது பயணிக்கும் பொழுது யானையை பார்த்தீர்கள் என்றால் கண்டிப்பாக நீங்கள் பயணம் செய்கின்ற விஷயங்கள் வெற்றிகரமாகவே இருக்கும் என்பது நம்பிக்கையான ஒன்றாகும். முழு முதல் கடவுளான விநாயகரின் அடையாளத்தை இந்த யானை பெற்றிருப்பதனால் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியதாகவே இருக்கும்.
வானவில்
வானவில் முடியும் இடத்தில் குழி தோண்டினால் உங்களுக்கு கை நிறைய தங்கம் கிடைக்கும் என்று சொல்லுவார்கள். இது மூடநம்பிக்கையாக இருந்தாலும் நீங்கள் வானவில்லை பார்ப்பது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் ஏற்படுத்தக்கூடியது என்று அர்த்தம். ஆகையினால் வானவில்லை பார்த்தீர்கள் என்றால் இந்த மாதிரி நீங்கள் குழிதோண்டி பார்க்கலாம். உங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போவதையும் நீங்கள் எதிர்பார்க்கலாம் கண்டிப்பாக இந்த மாதிரியான அறிகுறிகள் உங்களுக்கு நேர்ந்ததென்றால் உங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகின்றது என்பதை உணர்த்தக் கூடியதாக இருக்கும். நிச்சயம் கடவுளை வணங்குங்கள் உங்கள் வாழ்வில் எல்லாமே செல்வ செழிப்பாக அமைய கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.