மாதுளம் பழம் வியக்கவைக்கும் நன்மைகள்

(pomegranate Benefits in Tamil)

மாதுளம் பழம் வியக்கவைக்கும் நன்மைகள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மாதுளம் பழம். மாதுளைக்கு அயல்நாடுகளில் சைனீஸ் ஆப்பிள் அப்படிங்கிற இன்னொரு பெயரும் இருக்கு. உலகம் முழுவதும் சுமார் 720 வகையான மாதுளை வகைகள் இருக்கிறது. பிளேக் நோய் மற்றும் புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்களைக் கூட வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த மாதுளை பழத்திற்கு உண்டு. மாதுளையை சாப்பிட்டு வர மிகவும் நல்லது என நம் அனைவருக்குமே தெரியும். இந்த மாதுளையில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்றால்  வைட்டமின் சி, கே, பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து அடங்கியிருக்கிறது, இவ்வளவு சத்துக்கள் கொண்டிருந்த மாதுளை அனைவரும் ஏன் கட்டாயம் சாப்பிடணும் மற்றும் இதனைத் தினமும் சாப்பிட்டு வர நமக்குக் கிடைக்கக்கூடிய ஏராளமான நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஒன்று:  இருதயத்திற்கு மிகவும் நல்லது.

அதிக ரத்த அழுத்தம் மற்றும் இருதயம் சம்பந்தமான பிரச்சனைகளினால் அவதிப்படுகிறவர்கள் தினமும் ஒரு மாதுளையை சாப்பிட்டு வர மாதுளை நம் உடலில் இருக்கக்கூடிய நைட்ரிக் ஆக்சைடு எனும் தனிமத்தை அதிகரித்து ரத்த அழுத்தத்தைச் சீராக்கும். இதன் மூலமாக இருதயம் ஆரோக்கியமாக இருக்கும். இருதயம் சம்பந்தமான பிரச்சினைகள் வராமல் தடுக்கக்கூடியது இந்த மாதுளை.

இரண்டு: சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்

டைம் 2 சர்க்கரை நோயை எதிர்க்கும் பண்புகள் இந்த மாதுளைக்கு உண்டு. மாதுளையில் நாட்டு மாதுளையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வர ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவை குறைக்கும். அதுமட்டுமில்லாமல் பரம்பரை ரீதியாக வரக்கூடிய சர்க்கரை வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த மாதுளைக்கு உண்டு.

மூன்று: ரத்தசோகை குணமாகும்

மாதுளையில் ரத்த உற்பத்திக்குத் தேவையான ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து பலமான அளவில் நிறைந்து இருக்கிறது. பொதுவாக உடலில் இரும்புச் சத்து குறையும்போது தான் ரத்தச் சோகை உருவாகும். ரத்தச் சோகை பிரச்சினைகளால் அவதிப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் மாதுளையை சாப்பிட்டு வர உடலில் இருக்கக்கூடிய ரத்தம் அதிகரிக்கும்.

நான்கு: சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மாதுளையில் விட்டமின் சி அதிகளவில் இருக்கிறது. இது சருமத்தை ஆரோக்கியமாகவும் இளமையுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. மாதுளையை தினமும் சாப்பிட்டு வந்தால் இதில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஏஜென்ட் பண்புகள் முதுமையை தாமதப்படுத்தும் மற்றும் உடலில் புதிய செல்களை உற்பத்தி செய்து சர்ம சுருக்கம் மற்றும் சருமத் தொற்று நோய்கள் வராமலும் தடுக்க கூடியது இந்த மாதுளை.

ஐந்து: உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்

மாதுளையில் இருக்கக்கூடிய அலர்ச்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் விட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் இதன் மூலமாக உடலைப் பிற நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கிறது மாதுளை.

ஆறு: பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே:வியாதிகளை குணப்படுத்தும் காய்கறிகள்

மாதுளையில் உள்ள சில தனித்துவமான பண்புகள் பற்களில் பிளேக் உருவாவதை தடுக்கிறது. இதன் மூலமாகப் பற்கள் ஆரோக்கியமாகவும் வலிமையுடனும் இருக்கும். பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளத் தினமும் ஒரு மாதுளையை எடுத்துட்டு வருவது மிகவும் நல்லது.

ஏழு: செரிமானத்திற்கு மிகவும் நல்லது

மாதுளையில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்து இருக்கிறது. இதனைச் சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலம் சீராக இயங்குவதோடு செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகள் வருவதும் தடுக்கப்படும்.

எட்டு: புற்றுநோய் வராமல் தடுக்கும்

மாதுளையில் பல்வேறு வகை புற்று நோய்களான புற்றுநோய் கட்டிகள் ப்ராஸ்டேட் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்ற அனைத்து வகையான புற்று நோய்களையும் வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த மாதுளைக்கு உண்டு. முக்கியமாக மாதுளையை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்களின் உற்பத்தியை மட்டுப்படுத்துகிறது எனப் பல்வேறு ஆய்வுகளைத் தெரிவித்திருக்கிறார்கள். தினமும் மாதுளை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வருவது தடுக்கப்படும்.

ஒன்பது: ஞாபக சக்தி அதிகரிக்கும்

தினமும் மாதுளையை சாப்பிட்டு வந்தால் மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே அதன் சக்தி அதிகரித்து மூளை சுறுசுறுப்பாகும். இதன் மூலமாக ஞாபக சக்தி அதிகரிக்கும். மற்றும் அல்சைமர் போன்ற நோய்கள் வராமலும் தடுக்க கூடியது இந்த மாதுளை.

பத்து: பெண்களுக்கு மிகவும் நல்லது.

திருமணமான பெண்கள் கருவுறுதலில் பிரச்சனை இருந்தால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளை சாப்பிட்டு வந்தால் ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைந்து மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள்னால பலரும் அவதிப்படுவார்கள் இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த மாதுளைக்கு உண்டு. பெண்கள் மாதுளை சாப்பிட்டு வர ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி அதிகரித்து எலும்புகள் வலுப்பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *