மாசாணி அம்மன் வரலாறு

 

மாசாணி அம்மன் வரலாறு.

(Masani amman history tamil, kuzhanthaivaram.)




என் இனிய உறவுகள் அனைவருக்கும் வணக்கம் ஒரு மாம்பழத்தை சாப்பிட்டதற்காக அந்த காலத்தில் மரண தண்டனை கொடுக்கிற அளவிற்கு இரக்கமில்லாத கொடூர மன்னர்கள் நாட்டைஆட்சி செய்து வந்திருக்கிறார்கள். அப்படி என்னதான் அந்த மாம்பழத்தில் இருந்தது. மாசாணி அம்மன் யாரு அவர்களுக்கு என்ன நடந்தது. எப்படி இறந்தாங்க. எதனால் தெய்வமாக மாறினாங்க. மாசாணி அம்மன் மயான பூஜை, மிளகாய் அரைத்து ஏன் அம்மனுக்கு பூசுகிறார்கள். மாசானி அம்மனோட சக்திகள் பற்றியும் அம்மன் பற்றி சொல்லப்பட்ட பல சுவராசியமான வரலாற்று பின்னணி கதைகளையும் தெரிந்து கொள்வோம்.


பொள்ளாச்சிக்கு பக்கத்தில் இருக்கும் ஆனைமலையை நன்னன் என்ற ஒரு அரசன் ஆட்சி செய்து வந்திருக்கான் ஒருநாள் ஒரு முனிவர் ஒரு மாம்பழத்தை அந்த மன்னருக்கு சாப்பிட கொடுத்திருக்கிறார். இந்த பழத்தை சாப்பிட்டுவிட்டு மாங்கொட்டையை ஆற்றிலே தூக்கி போட்டு விடவேண்டும் என்று சொல்லி கொடுத்திருக்கிறார். மன்னரும் அந்த மாம்பழத்தை ருசித்து சாப்பிட்டுவிட்டு மாங்கொட்டையை தூக்கி போடாமல் இன்னும் நிறைய சுவையான மாங்கனிகள் கிடைக்கும் என்று நினைத்து மாங்கொட்டையை அரண்மனையிலேயே விதைத்து மரமாக வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்.


பல வருடங்களுக்கு பிறகு மரமும் வளர்ந்து பூத்துக் குலுங்குகிறது. ஒரு பூ கூட பின்ச் ஆகாமல் உதிர்ந்து கொட்டி வீணாகிறது. இதைப் பார்த்து கோபப்பட்ட மன்னன் அந்த முனிவரை தேடி கண்டுபிடித்து கூட்டி வந்து ஏன் இன்னும் இந்த மரம் பிஞ்சு வைக்கவில்லை எதனால் என்று கேட்கிறான்.


அந்த முனிவர் நான்தான் அப்பவே சொன்னேனே மாங்கொட்டையை தூக்கிப் போட்டுவிடு என்று. நீங்கள் ஏன் மரமாக வளர்த்தீர்கள். இந்த பழம் என்னுடைய குருநாதர் பல வருடங்கள் தவமிருந்து எனக்கு கொடுத்தது. அதை நான் சாப்பிடாமல் நாட்டை ஆளும் மன்னர் நீங்கள் சாப்பிடவேண்டும் என்று தான் உங்களிடம் கொடுத்தேன். நீங்கங சாப்பிட்டுவிட்டு தூக்கி போடாமல் இப்போது வீண்வம்பை விலை கொடுத்து வாங்கி இருக்கின்றீர்கள் என்று முனிவர் கூறினார். 





இதை கேட்டதும் மன்னருக்கு கோபம் அதிகமாகிறது அப்போ இந்த மரம் காய்க்குமா காய்க்காதா என்று முனிவரிடம் கேட்கிறார். இந்த மாமரம் காய்க்கும் ஆனால் ஒரே ஒரு கனி மட்டும்தான் உங்களுக்கு கிடைக்கும் அதையும் நீங்கள் சாப்பிடக்கூடாது. வேறு நாட்டில் இருந்து வருபவர்கள் தான் சாப்பிடவேண்டும். அதுதான் இந்த மாம்பழத்தோட மகிமை என்று சொல்கிறார்.


நான் சாப்பிடாத இந்த கனியை வேற யாரு சாப்பிட போறாங்க என்று கேட்டதும் அதற்கு அந்த முனிவர் சொல்கிறார் மற்றொரு நாட்டில் இருந்து வரும் ஒரு கன்னிப்பெண் தான் இந்த மாங்கனியை சாப்பிட போகிறாள். அந்த பெண் சாதாரண பெண் இல்லை அஷ்டமா சித்திகள் கொண்ட தெய்வப்பிறவி. உனக்கு இந்த மரத்தோட கனி கிடைக்கவில்லையே என்று நீ மரத்தை வெட்டிவிடாதே சகல சக்திகளும் கொண்ட ஒரு அம்மன் கன்னிப்பெண்ணாக வந்து இந்த மரத்தில் காய்க்கப்போற பழத்தை சாப்பிடுவாள். அதுவரைக்கும் நீ பொறுமையாக இரு என்று முனிவர் சொல்கிறார். 



இதையும் படிக்கலாமே :குலதெய்வ சாபம் யாருக்கு வரும் தெரியுமா? குலதெய்வ சாபம் நீங்க எளிய பரிகாரம்


முனிவர் அரண்மனையை விட்டு போனதும் இந்த முறையும் அரசன் முனிவர் சொன்ன பேச்சை மதிக்காமல் எனக்கு தான் மறுபடியும் அந்த மாங்கனி வேணும் என்று ரொம்ப ஆசையோட காத்திருந்திருக்கான். வேறு யாரும் சாப்பிடக்கூடாது என்று 24 மணி நேரமும் மாமரத்திற்கு காவல் வைத்து எப்போ சாப்பிடலாம் என்று வெயிட் பண்ணிட்டு இருந்திருக்கார்


அப்போது ஆனைமலைக்கு தாரகன் என்கிற யானை வியாபாரி வியாபாரத்துக்காக தன்னுடைய பெண் தாரணியோடு வந்து தங்கி இருக்கார். தாரணியும் அக்கம் பக்கத்தில் இருக்கின்ற சில பெண்களும் சேர்ந்து ஆற்றுக்கு குளிக்க போயிருக்கிறார்கள். மன்னருடைய அரண்மனையை ஒட்டி இருந்திருக்கிறது அந்த ஆறு. ஆற்றிலே தாரணி தோழிகளோடு குளித்து கொண்டிருக்கும்போது  மன்னர் பாதுகாத்து வந்த மாமரத்தில் இருந்து விழுந்த மாங்கனி ஆற்றிலே இருந்து நேராக தாரணியை நோக்கி வந்திருக்கிறது.





பொன் நிறமான அந்த மாங்கனியை பாத்த தாரணி அந்த மாம்பழத்தை எடுத்து சுவைத்து சாப்பிடுறாங்க. மாம்பழத்தை ஒரு கன்னிப்பெண் சாப்பிடுவதை பார்த்த காவலர்கள் அந்த பெண்ணையும் அவளுடைய தந்தையையும் அரசர் முன்னால் அழைத்து போயிருக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேரும் மன்னரிடம் மன்னா நாங்கள் இப்பொழுது தான் இந்த ஊருக்கு வந்திருக்கிறோம் எங்களுக்கு நீங்கள் முரசு அறிவித்ததும் தண்டோரா போட்டது எதுவுமே தெரியாது.


எங்களை விட்டு விடுங்கள் உயிர்பிச்சை கொடுங்கள் என்று கதறி அழுகிறார்கள். மன்னர் கேட்பது போல் இல்லை. அந்த பெண்ணுக்கு மரண தண்டனை அறிவிக்கிறார். மன்னா எங்கள் பெண்ணோட எடைக்கு எடை தங்கமும் எங்களிடம் இருக்கும் யானைகளையும் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். இவ்வளவு பெரிய தண்டனை வேண்டாம் என்று அந்த வியாபாரிகளும் அந்த பெண்ணோட தந்தையும் ரொம்பவே கெஞ்சி கேட்டு இருக்கிறார்கள்.


தாரணியை கொலைகளத்துக்கு மன்னர் அழைத்துச் சென்று விடுகிறார்  ஒரு மாங்கனிக்காக ஒரு அப்பாவிப் பெண்ணை கொலை செய்கின்றாயா. நான் இறந்தாலும் மறுபடியும் வருவேன் ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வமாக நான் விளங்குவேன். இந்த இடத்திலே ஆனால் என்னை கொலை செய்த நீயும் உன்னுடைய நாடும் நாட்டு மக்களும் அழிந்து போவீர்கள் என்று சாபம் விட்டுவிட்டு இறந்திருக்காங்க. அந்த கன்னிப் பெண் உயிரைவிட்ட இடத்தில் அந்த பெண்ணோட தந்தையும் அவர் கூட இருந்த மற்ற சில வியாபாரிகளும் சேர்ந்து மண்ணால் ஒரு உருவத்தை செய்திருக்கிறார்கள்.



இதையும் படிக்கலாமே : 21 தலைமுறை பாவங்கள் போக்கும் கோவில், திருச்சி கோவில்கள்.



மாம்பழத்துக்காக உயிர்விட்ட காரணத்தினால் மாங்கனி அம்மன் என்று கூறி வழிபட்டு இருந்தார்கள். பிறகு மாசானி அம்மனாக மாறி காலபோக்கில் மிக சக்தி வாய்ந்த அம்மனாக மாறி இருக்கிறது மாசாணி. அதே சமயத்தில் அந்த ஆனைமலையை ஆண்டு வந்த நன்னன் என்ற அரசன் எதிரி நாட்டு படைகளால் தாக்கப்பட்டு அவனுடைய வம்சமே அழிந்து போய் விட்டது என்று மாசானி அம்மனுடைய ஒரு வரலாற்று கதை சொல்கிறது.



மாசாணி அம்மன் யார் என்று இன்னும் இரண்டு வரலாற்று கதைகள் இருக்கிறது.




ஆனைமலைக்கு பக்கத்தில் ரொம்ப அன்பாக வாழ்ந்து வந்த இரண்டு கணவன் மனைவிகள் இருந்திருக்கிறார்கள்.மனைவி கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாய் இருக்கிறாள். பிரசவ வலி வந்ததும் மனைவியை கூட்டிக்கொண்டு ஒரு மருத்துவச்சி வீட்டிற்கு இரவு நேரத்தில் அடர்ந்த காட்டுக்குள்ளே போக பார்த்து இருக்கார் கணவர். போற வழியில் மனைவியால் நடக்க முடியவில்லை என்று சொல்லி ஒரு இடத்தில் தங்க வைத்து விட்டு பக்கத்தில் இருந்த மருத்துவச்சியை கூப்பிட கணவன் மட்டும் தனியாக போகின்றார்.


வேகமாக மருத்துவச்சி வீட்டிற்கு போய் நடந்த விஷயத்தை சொல்லி மருத்துவச்சியை கூட்டிக்கொண்டு மனைவி இருந்த இடத்திற்கு இரண்டு பேரும் வேகமாக போகிறார்கள். அந்த இடத்தில் போய் பார்த்தால் அவருடைய மனைவி அங்கே இல்லை. அடர்ந்த காட்டில் இரவு நேரத்தில் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் திகைத்து போய் நிற்கிறார்கள் இரண்டு பேரும். உடனே அந்த மருத்துவச்சி ஐயோ நான் கண்ட கனவு பலிச்சிடுச்சே என்று சொல்லி யோசனை செய்து கொண்டு இருக்கிறாள்.



இதையும் படிக்கலாமே : சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்



உடனே அந்த கணவர் அம்மா என்ன கனவு கண்டீர்கள் என் மனைவிக்கு என்ன ஆனது என்று பயந்து போய் கேட்கிறார். விளக்கு வெளிச்சத்தில் இன்னும் கொஞ்ச தூரம் நடந்து போய் பார்த்தால் மனைவியும் அவளுக்கு பிறந்த குழந்தையும் இறந்து கிடக்கிறார்கள். அம்மா என்ன நடந்தது என்று சொல்லுங்கள். என்ன கனவு கண்டீர்கள் என்று கேட்டதும் மருத்துவச்சி தான் கண்ட கனவை சொல்ல ஆரம்பித்தார். நீ உன் மனைவியை இந்த இடத்தில் விட்டுவிட்டு என்ன தேடி வந்த போது ஒரு கரிய உருவம் உன் மனைவியை நோக்கி விரட்ட ஆரம்பித்துவிட்டது.


உன் மனைவி தப்பித்து போக பார்த்து ஓட ஆரம்பிக்கும் போது ஓட முடியாமல் ஒரு இடத்தில் நின்று அந்த உருவத்திடம் என்ன விட்டுவிடு என்று கெஞ்சினாள். ஆனால் அப்பவும் அந்த உருவம் விடாமல் துரத்தி இருக்கிறது. உன் மனைவியோட போதாத காலம் அங்கு இருந்த மாட்டு சாணத்தில் கால் வழுக்கி உன் மனைவி கீழே விழுந்து இறந்துவிட்டாள். உன் மனைவியோட உடம்பில் இருந்து ஒரு ஒளி பிரிந்து வானத்தில் பிரகாசமாக தோன்றி ரொம்ப ஆக்ரோஷமாக அந்த அரக்கனை அழித்து அவனோட மார்பை பிளந்து அந்த பொண்ணோட காலடியில் போட்டுவிட்டது.




இதுதான் நான் கண்ட கனவு. உன் மனைவி சாதாரண பெண் இல்லை. தெய்வ அம்சம் கொண்ட பெண். இந்த ஊருக்கு வந்த மிகப்பெரிய ஆபத்தை அழித்து மக்களுக்காக தன்னுடைய உயிரை கொடுத்திருக்காள். நடுவில் காமதேனோட சாணத்தில் கால் வழுக்கி இறக்காமல் இருந்திருந்தால் உன் மனைவி இன்னும் வேற ஒரு உருவத்தில் காட்சி கொடுத்திருப்பாள். மாட்டு சாணத்தில் கால் வழுக்கி விழுந்ததால் மாசாணி என்ற பெயர் பெற்று மக்களை காத்து வந்திருக்கிறாள் என்று ஒரு கதையில் சொல்கிறார்கள்.


இந்த மாசாணி அம்மனை வழிபடுகிறவர்களுக்கு பில்லி சூனியம் பேய் பிசாசு என்று அவர்களை பிடித்திருக்கும் எல்லா துன்பங்களும் நீங்கி நன்மை கிடைக்கும் என்று உலக மக்கள் அனைவரும் பொள்ளாச்சியில் இருக்கும் ஆனைமலைக்கு தேடி வந்து மாசாணி அம்மன் வழிபட்டு இருக்கிறார்கள்.



இந்த இரண்டு கதைகள் மட்டும் இல்லாமல் ராமாயணம் நடந்த காலத்திலேயே ராமர் மாசாணி அம்மனை வழிபட்டதாக ஒரு வரலாறு இருக்கிறது.



கவுசிக மன்னராக இருந்து ரிஷியாக மாறின விசுவாமித்திரர் ஒரு முறை தவம் பண்ணிக்கொண்டிருந்த பொழுது தாடகை என்ற ராட்சசி அவருடைய தவத்திற்கு இடையூறு செய்து கொண்டே இருந்திருக்கிறாள்.  இந்த ராட்சசி ராவணனிடம் இருந்தும் பல சக்திகளை பெற்றிருக்கிறாள். விசுவாமித்திரர் தாடகையை அழிக்க தசரதனுடைய மகன்களான ராமரையும் லக்ஷ்மணரையும் கூப்பிட்டு அந்த அழகியை அழிக்க சொல்லி இருக்கிறார்.


தாடகையை அழிப்பதற்கு முன்னால் ராமர் பார்வதி தேவியை பூஜித்து எப்படி தாடகையை அழிப்பது என்று கேட்கிறார். அதற்கு பார்வதி என் உருவத்தை மண்ணால் உருவாக்கி அந்த விக்கிரகத்தை நீ முதலில் அழித்துவிட்டு அதன் பின்னர் தாடகையை வதம் செய்யப் போ என்று சொல்லி இருக்கிறார். ராமரும் மண்ணால் ஈஸ்வரியை நினைத்து அவுங்களுடைய உருவத்தை செய்து வழிபட்டு விட்டு அந்த ராட்சசியை அழிக்கப் போயிடுவார்.


தாடகை



இதையும் படிக்கலாமே : 21 தலைமுறை பாவங்களை தீர்க்கும் கோவில் ! வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய இடம் !



ராட்சசியை வதம் செய்த பிறகுதான் ஈஸ்வரியுடைய உருவத்தை அழிக்க மறந்ததை நினைத்து திரும்ப போய் அந்த மண்ணால் செய்யப்பட்ட உருவத்தை அழிக்க பார்க்கிறார். அப்போது பார்வதி தேவியே தோன்றி அந்த உருவத்தை நீ அளிக்க வேண்டாம் அங்கேயே இருக்கட்டும் என்று சொல்லி இருக்காங்க. அதுதான் மாசாணி அம்மன் என்று ஒரு  வரலாற்றுக் கதையும் கூறுகிறது.


இந்த மாசாணி அம்மன் கோவில் பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை கிராமத்தில் இருக்கிறது. 17 அடி நீளத்தில் சயன கோலத்தில் தெற்கு பக்கம் தலை வைத்து படுத்து கையில் சூலம் மற்றும் உடுக்கையோடு காட்சி கொடுக்குறாங்க. மாசாணியம்மன் பொய் சொன்னாலும் அல்லது மற்றவர்களுடைய பொருளை அபகரித்து விட்டு அவர்களுடைய வாழ்க்கையை வீணாக்கினாலும் மாசாணியம்மன் கோவிலில் இருக்கும் ஒரு நடுக்கள்ளுக்கு மிளகாய் அரைத்து பூசினால் தவறு செய்தவர்கள் தன்னுடைய தவறை ஒத்துக்கொண்டு அந்த பொருளை திரும்ப கொடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது.


அது மட்டும் இல்லாமல் மாசாணி அம்மன் கோவிலில் மயான பூஜையும் நடத்துகிறார்கள். இந்த பூஜையில் கலந்து கொண்டால் பில்லி, சூனியம், பேய், பிசாசு தொல்லையில் இருந்து விடுபடலாம் என்று உலக அளவில் நம்புகிறார்கள். மாசாணி அம்மனை தரிசிக்க பல நாடுகளில் இருந்தும் பொள்ளாச்சி ஆனைமலைக்கு மக்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *