மன கவலையால் உண்டாகும் நோய்கள்

 

மன கவலையால் உண்டாகும் நோய்கள்.

(Stress related Diseases, Causes Of Depression/Anxiety/ Mind Health Tips.)




கவலைபடாத மனிதர்கள் இந்த உலகில் யாருமே இருக்க முடியாது மனிதர்களாய் பிறந்த அனைவருக்குமே வாழ்க்கையில் ஏதாவது ஒரு கவலை இருந்து கொண்டு தான் இருக்கும் பொதுவாக வாழ்க்கையில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கவலை, அளவுக்கு மீறிய வேலைப்பளு காரணமாக உண்டாகக்கூடிய கவலை, உடல் நலக்குறைவு காரணமாக உண்டாக்கக்கூடிய கவலை, சில மனிதர்களை குறித்த அதிருப்தினால் உண்டாகக்கூடிய கவலை, எதிர்காலத்தை குறித்த கவலை என ஏதாவது ஒரு கவலையினால் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் சிலருடைய வாழ்க்கையில் மட்டும் கவலையே தொடர்வாழ்க்கையாக மாறிவிடுகிறது இப்படி தினமும் அதிக அளவில் கவலைப்படும்போது அது மனம் சார்ந்த நோய்கள் மட்டுமில்லாமல் உடல் சார்ந்த நோய்களையும் ஏற்படுத்தக்கூடும். 


தினமும் அதிகமாக கவலைப்படுபவர்களுக்கு உண்டாகக்கூடிய ஏழு ஆபத்தான நோய்கள் என்ன என்பதை பற்றி தான்  பார்க்க போகிறோம். கவலைப்படுவதனால் உண்டாகக்கூடிய நோய்கள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஒன்று : இருதய நோய்களை உண்டாக்கும்


உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கக்கூடிய உறுப்பு இருதயம் தொடர்ச்சியாக அதிக அளவில் கவலைப்படும்போது உடலில் கார்ட்டிசோல் என்று சொல்லக்கூடிய ஸ்ட்ரெஸ் ஹார்மோனை உற்பத்தி செய்து  சீரற்ற இதய துடிப்பை உண்டாக்கும் இதன் விளைவாக இருதயம் பலவீனமடைந்து அதிக ரத்த அழுத்தம் இதய வால்வு சுருக்கம் இதய அடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்பாக அமைந்து விடுகிறது. அதுமட்டும் இல்லாமல் அதிர்ச்சியான சம்பவங்களை கேள்விப்படும் போது அதை சடன் ஹார்ட் அட்டாக்கும் வழி வகுக்கும் என்று சொல்லுவார்கள்.


இதையும் படிக்கலாமே ; 15 நாளில் சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும் அற்புத ஜூஸ்,இன்சுலின் தேவைபடாது.


இதய நோயாளிகள் மனக்கவலை குறித்து அதிக கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியமான ஒன்று.

இரண்டு : தோல் சார்ந்த பிரச்சினைகளை உருவாக்கும்.


அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல நாம் அதிகமாக கவலைப்படும்போது அது சருமம் சார்ந்த பிரச்சினைகளை எளிதில் உண்டாக்கும். கவலைப்படும்போது உடலில் உண்டாகக்கூடிய ஹார்மோன்கள் மாற்றம் காரணமாக தோல்களில் ரத்த ஓட்டம் குறைந்து முகச்சுருக்கம் கண்களில் கருவளையம் போன்ற பிரச்சனைகளை உருவாக்கும். அதுமட்டும் இல்லாமல் சருமங்களில் எண்ணெய் சுரப்பை அதிகரித்து முகப்பருக்களையும் உண்டாக்கும். முகப்பருக்கள் ஏற்படுவதற்கு மனக்கவலை ஒரு காரணமாக இருக்கிறது.

மூன்று : செரிமான கோளாறுகளை உருவாக்கும்


பொதுவாக மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தான் செரிமானம் சார்ந்த பிரச்சினைகளான நெஞ்செரிச்சல் வயிறு உப்புசம் தொடர் ஏப்பம் போன்ற பிரச்சினைகளினால் அவதிப்படுகிறார்கள். மேலும் ஐபிஎஸ்னு சொல்லக்கூடிய இருட்டபுள் பவெல் சின்ரம் போன்ற வயிறு இரைச்சல் பிரச்சனைகள் மாறுவதற்கு மன அழுத்தம் ஒரு காரணமாக இருக்கிறது.

நான்கு : தூக்கமின்மை


 


அதிக மன கவலை தூக்கமின்மை பிரச்சனையை எளிதில் உண்டாக்கும் பகலில் மனதில் ஏற்படக்கூடிய பலவிதமான சிந்தனைகள் இரவில் நினைவு அலைகளாக தூண்டப்படுகிறது இதன் காரணமாக பலரும் தூக்கமின்மை பிரச்சனைகளினால் அவதிப்படுவார்கள்.


இதையும் படிக்கலாமே ; சௌசௌ சாப்பிடறதினால் கிடைக்கக்கூடிய 10 சிறந்த நன்மைகள்

ஐந்து : தலைவலியை உண்டாக்கும்


குறிப்பாக அதிக வேலைப்பளு காரணமாக கவலைப்படுகிறவர்ளுக்கு தலைவலி சார்ந்த பிரச்சினைகளும் உண்டாகும். நாளடைவில் கவலை மூளையில் உள்ள நரம்புகளை பாதித்து அல்சைமர் போன்ற ஞாபக மறதி நோய்களையும் உண்டாக்கும். அது மட்டும் இல்லாமல் அதிக கவலை தலையில் நீர் சேர்த்து ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கிறது மனக்கவலை. 

ஆறு : உடல் எடையை அதிகரிக்கும்


சிலர் அடிவயிறு மற்றும் தொடை பகுதியில் மட்டும் தடிமனாக இருப்பதை பார்க்க முடியும் இதற்கு மனக்கவலையும்  முக்கியமான காரணமாக  சொல்லப்படுகிறது.  தொடர்ச்சியாக மனக்கவலை ஏற்படும் வர்களுக்கு உண்டாககூடிய ஹார்மோனல் மாற்றம் காரணமாக உடலில் கொலஸ்ட்ரால் உற்பத்தி அதிகரித்து இதுபோன்ற குறுகிய காலத்தில் அதிக உடல் எடையினை உண்டாக்கி ஒபிசிட்டி போன்ற பிரச்சினாலும் அவதிப்படுகிறார்கள்.

 ஏழு : மன நோய்களை உண்டாக்கும் 


தொடர்ச்சியாக அதிக அளவில் கவலைப்படுகிறவர்கள் குரோனிக் testic னால அவதிப்படுவார்கள். கவலை உடலில் உணர்வு சார்ந்த மாற்றங்களை உண்டாக்கும் உதாரணமாக சிறிய பிரச்சனைகளுக்கும் கூட அதிக பயம் பதட்டம் எரிச்சல் அதிக கோபம் எப்போதும் அதிக சோர்வு தனிமை தாழ்வு மனப்பான்மை என உணர்வு சார்ந்த பிரச்சினைகளினால்  அவதிப்படுவார்கள். 

நாளடைவில் ஸ்ட்ரெஸ்னுடைய அடுத்த நிலையில் சொல்லக்கூடிய டிப்ரஷன் anxity போன்ற மன நோய்கள் உண்டாவதற்கும் ஆரம்பமாக இருக்கிறது இந்த மனக்கவலை. கூடுமானவரைக்கும் கவலையை தவிர்த்து மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வது, மனதை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மூலமாக மட்டும்தான் இது போன்ற நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

அதிக அளவில் கவலைப்படும்போது உண்டாக்கக்கூடிய 7 நோய்கள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொண்டோம்.

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *