மன அழுத்தம் குறைய எளிய வழிகள்

 மன அழுத்தம் குறைய எளிய வழிகள்.

(Simple Tips to Reduce Stress in Tamil,

Mana Alutham Kuraiya Tips)





அதிகன் தமிழ் உங்களை அன்புடன் வரவேற்கிறது


இன்றைக்கு இருக்கக்கூடிய காலகட்டத்தில் பெரும்பாலோர் சந்திக்கும் முக்கிய பிரச்சினை மன அழுத்தம். மன அழுத்தம் என்பது நம்மை எந்த நேரத்திலும் தாக்கலாம்.நம்மை சுற்றி நிலவும் சூழல்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் அடிக்கடி நமக்கு தரும் பரிசு தான் மன அழுத்தம் தூக்கமின்மையில் தொடங்கி உயர் ரத்த அழுத்தம் உடல் பருமன் என்று ஒவ்வொன்றாக பல பிரச்சினைகளை அள்ளி அள்ளி கொடுத்து இதய நோய் வரை கொண்டு வந்து நிறுத்திவிடும். இந்த மன அழுத்தம் இது உடல் ரீதியான பிரச்சனை என்று பார்த்தோம் என்றால் சில நேரங்களில் மனம் நொறுங்கிப் போய் மனநல பாதிப்புகள் ஏற்பட்டு உயிர்த்துறக்க கூட காரணமாகி இருக்கிறது இந்த மன அழுத்தம்..


தீவிர மன அழுத்த பிரச்சனைக்கு சிகிச்சை தவிர வேறு வழி இல்லை. ஆக இந்த பிரச்சனையை அடையாளம் கண்டு அதிலிருந்து மீண்டு வர முயற்சிக்கவேண்டும். அப்படித்தான் இதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் அதற்கு நம்முடைய சிந்தனையை வேறு பக்கம் திசை திருப்பவேண்டும் அப்படி சிந்தனையை திசைதிருப்பும் நேரத்தில் நாம் செய்கின்ற பயிற்சிகள் நமக்கு பிடித்ததாக? நம்முடைய கவலைகளை மறக்க செய்கின்ற மாதிரி இருக்கவேண்டும். 



மன அழுத்தத்தை விரட்ட ஏழு எளிய வழிமுறைகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.



முதன்மையானது மூச்சு பயிற்சி 




பதட்டத்தோடு பரபரப்பாக இருக்கும் நேரத்தில் நாம் எப்படி மூச்சு விடுவோம் கவனித்து இருக்கீங்களா? ஒன்று மேலோட்டமாக விடுவோம் அல்லது மூச்சை இழுத்து நிறுத்துவோம். ஆனால் விஷயம் என்னவென்றால் மூச்சை ஆழமாக விடாமல் இருக்கிறது தான் உடலுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். சரி இதற்கான மூச்சுப் பயிற்சி எப்படி செய்வது என்று என்றால் அதிகாலையில் எழுந்து நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டு கைகளை அடிவயிற்றில் படும்படி வைத்து ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளியே விடவேண்டும். இப்படி செய்யும் போது அடிவயிற்றில் அசைவுகளை உணர முடியும். இதனால் கவனம் முழுவதும் அதில் போய் உடலும் மனமும் தளர்வடைந்து இயல்பு நிலையை அடையும். மேலும் இப்படி மூச்சுப் பயிற்சி செய்யும்போது இதயத்துடிப்பு சீராக இருக்கிறதினால் இரத்த அழுத்தம் குறையும் மன அழுத்தமும் நீங்கும். இந்த பயிற்சியை தினமும் ஐந்திலிருந்து பத்து நிமிடங்களுக்கு செய்து வருவது நல்லது.



இந்த பூமியோடு தொடர்பில் இருங்கள்.





வீட்டில் இருந்து விலகி கொஞ்ச தூரம் எந்த சிந்தனையும் இல்லாமல் நடந்து போவதும் மன அழுத்தத்தை குறைக்கிற ஒரு பயிற்சி தான். செருப்பு வேண்டாம் வெறும் கால்களில் நடந்து தெருவுக்கு வந்து கொஞ்ச தூரம் மெல்ல நடந்து வாங்க காலை மாலை வேலையில் வீசும் இதமான காற்று உங்கள் முகத்தில் மென்மையாக படும்படி பார்த்துக்கோங்க அதேசமயம் உங்களுடைய பாதங்கள் தரையில் படும் போது இந்த பூமியில் இருக்கிறோம் பூமியோட தொடர்பில் இருக்கிறோம் நெருக்கமாய் இருக்கிறோம்  பூமி என்கிற கிரகத்தின் உச்சியில் நிற்பது மாதிரியும் நடக்கிற மாதிரியும் கற்பனை செய்து கொண்டு நடங்கள். அஞ்சு நிமிஷம் நடந்தால் போதும். இதை உணர்ந்து செய்யுங்கள் உங்களிடம் இருக்கின்ற டென்ஷன் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.



சாக்லேட் நல்லது 




அளவாக இனிப்பு சாப்பிடுவது மனதிற்கு இதம் தரும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை டார்க் சாக்லேட் சாப்பிடுவது மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோன்களை குறைக்க உதவும் என்று ஒரு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சாக்லேட் சாப்பிடும்போது வேறு எதை பற்றியும் சிந்திக்காமல் அதன் ருசியை இனிமையாக அனுபவித்து ருசியுங்கள். இது கூட ஒரு மனப்பயிற்சி தான் மன ஆரோக்கியம் காக்க சாக்லேட்டும் உதவும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.



மந்திர வாசகம் முக்கியம். 




நம்மை நாமே உற்சாகப்படுத்த உதவும் சில பாசிட்டிவ் வாசகங்களை உங்களுக்கு நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள் அல்லது உங்களுக்கு பிடித்த சிறந்த மேற்கோள்களை எழுதி வைத்து கொள்ளுங்கள். அதை உங்களுக்குள்ளே அடிக்கடி சொல்லிப் பாருங்கள். உதாரணமாக என்னால் முடியும் நடப்பதெல்லாம் நன்மைக்கே இது மாதிரி எப்படிப்பட்ட பாசிட்டிவான வாசகமாக கூட இருக்கலாம் இந்த வாசகங்களை திரும்பத் திரும்ப சொல்லும் போது மனதிற்கு சக்தி தரும் மந்திரங்கள அது மாறும் விரைவில் நல்ல மாற்றமும் தெரியும்.



புன்னகை மருந்து 




பொதுவாக மன அழுத்தத்துக்கு காரணமாக இருக்கிறது கார்டிசால் என்கிற ஹார்மோன். ஒருத்தர் மன அழுத்தத்தில் இருந்தார்கள் என்றால் அந்த காட்டிசால் ஹார்மோன் அவர்களுடைய உடம்பில் அதிகமாக சுரக்கும். அதுவே ஒருத்தர் வயிறு குலுங்க சிரித்தார்கள் என்றால்  கார்டிசால் சுரப்புக்கு குறைந்து மூளையை தூண்டுவதற்கு உதவும். என்டார்பின் ஹார்மோன் சுரப்பு அதிகமாகும் புன்னகை மிகச்சிறந்த மருந்து என்பதை நாம் புரிந்து கொள்வது ரொம்ப முக்கியம். இதுக்காக காமெடி சினிமாக்கள் வீடியோக்களை பார்க்கலாம். உங்களுக்கு வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிப்பு மூட்டுபவர்களிடம்  பேசலாம். மொத்தத்தில் நீங்கள் சிரிக்க வேண்டும் அவ்வளவுதான். சிரித்து சிரித்து மன உளைச்சலை கண்டிப்பாக குறைக்கலாம். 



சமூக வலைத்தளங்கள் சகஜ நிலைக்கு கொண்டு வரும் 




சமூக வலைத்தளங்கள் மீது ஒரு பக்கம் மோசமான பிம்பம் கட்டமைக்கபட்டு வந்தாலும் சமூக வலைத்தளங்களும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகின்ற ஒரு மிகச்சிறந்த வழி என்று சொல்லப்படுகிறது. facebook whatsapp போன்ற சமூக வலைத்தளங்களில் உங்களுக்கு பிடித்ததை பிடிச்சவர்கள் கூட பேசுங்கள். இசை காமெடி வீடியோஸ் மீம்ஸ் எல்லாம் உங்களிடம் நெருக்கமாக உள்ளவர்களிடம் பகிருங்கள். இன்டர்நெட் வசதி இல்லாதவர்கள் உங்கள் மனதிற்கு பிடிச்சவர்களிடம் போன்லையாவது பேசலாம். அப்படி பேசும் போது மன இருக்கம் மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும். 



இசை இனிமையான வரம் 




இசையால் வசமாக இதயம் இது பெரும் பாடல் வரி மட்டும் இல்லை. மனசுக்கு உதவக்கூடிய மருத்துவ உண்மை நாம் ரசித்து கேட்கும் மெல்லிய இசை ரத்த அழுத்தத்தை குறைக்கும் இதயத்துடிப்பை சீராக்கும் பதற்றம் கவலைகளை குறைக்கும் என்பதை பவ ஆய்வு முடிவுகளில் சொல்லி இருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட பதட்டத்தையும் தனித்து மனதை அமைதிப்படுத்துகின்ற சக்தி இசைக்கு இருக்கிறது. நீங்கள் சாதாரணமாக பாத்ரூம் சிங்கரா கூட இருக்கலாம் வீட்டுக்குள்ளேயே ஒரு ரூமில் உங்களுக்கு பிடித்த பாடல்களை பாடி பார்க்கலாம். அப்படி பாடும்போது உங்களுடைய மனது லேசாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *