பெண்ணுக்குள் ஒளிந்திருக்கும் காதலை கண்டுபிடிப்பது எப்படி?
(How to find the hidden love within a woman)
பெண் நம்முடன் பழகும்போது அவர் நம்மைக் காதலிக்கிறாரா அல்லது அது வெறும் நட்பு மட்டும்தான் தானா என்பதை தெரிந்து கொள்வது கொஞ்சம் கடினமான காரியம். அப்படி குழப்பமான சூழலில் அவர்களின் மனதை புரிந்து கொள்ள சில வழிகள் இருக்கின்றன. இன்றைய காலத்தில் ஆண் பெண் நண்பர்களாக நீண்ட நாட்கள் இருக்க முடிவதில்லை. அவ்வாறு நண்பர்களாகப் பழகும்போது அவர்களுக்குள்ளேயே வித்தியாசமான உணர்வுகள் வந்து விடுகின்றன.
ஆனால் அவற்றை ஆண்கள் வெளிப்படையாகத் தெரிவித்து விடுகின்றனர். ஆனால் பெண்கள் சொல்லமாட்டார்கள் ஒரு சில சமயம் பெண்கள் தங்கள் மனதில் உள்ளவற்றை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைமுகமாக வெளிப்படுத்துவார்கள். அதைத் தவறாகப் புரிந்து கொண்டு முழிப்பவர்கள் பலர். பெண்கள் நம்முடன் நட்புடன் தான் பழகுகிறாரா அல்லது காதலிக்கிறாரா என்பதை கண்டுபிடிக்க ஒரு சில வழிகள் உள்ளது. சில அறிகுறிகளை வைத்து பெண்களுக்கு உங்களைப் பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்பதை கண்டறியலாம்.
இதையும் படிக்கலாமே: பெண்கள் கள்ள உறவில் ஈடுபடுவதற்கான காரணங்கள்
பெண்கள் உங்கள் கண்களை அதிகம் பார்த்து பேசினால் அவர்கள் உங்கள்மீது அதிக ஆர்வத்துடன் உள்ளனர் என்பதை அறியலாம். அதிலும் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால் கண்டிப்பாக உங்களைப் பிடித்திருக்கிறது என்று அர்த்தம். வாய் வழியே வெளிப்படையாகச் சில விஷயங்களைக் கூற முடியாவிட்டாலும் தன்னுடைய உடல் மொழியின் மூலம் நம்மிடம் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து அவர் நம்மைக் காதலிக்கிறாரா இல்லையா என்பதை கண்டுபிடிக்க ஒரு சில வழிகள் உண்டு.
இதையும் படிக்கலாமே: பெண்களை திரும்பி பார்க்க வைக்கும் ஆண்களின் 4 குணங்கள்
உங்களுடன் நட்புடன் மட்டுமே பழகி இருந்தால் அவர் இயல்பாகவும் மிகவும் எதார்த்தமாகவும் ஒரு தோழியுடன் பழகுவதை போல் மட்டுமே பழகுவார். ஆனால் உங்களைக் காதலிப்பதாக இருந்தால் அவருடைய சேவைகள் மற்றும் நடவடிக்கைகளில் சிறு சிறு மாற்றங்கள் தெரியும். பெண்களுக்கு உங்களைப் பிடித்தால் அவர்களை உங்களை அடிக்கடி தொடுவார்கள்.
உதாரணமாக அடிப்பது, அடிக்கடி தொட்டு பேசுவது, கை குலுக்குவது, கைகளைப் பிடித்து நடப்பது போன்றவற்றை செய்வார்கள்.ஏனெனில் அவர்கள் உங்கள்மீது விருப்பம் இருப்பதால் தான் அவர்கள் உங்களைத் தொட ஆரம்பிக்கிறார்கள். பின்னர் நீங்கள் தொட்டாலும் எதுவும் சொல்லாமல் முகத்தைச் சுளிக்காமல் தள்ளி விடாமல் இருந்தால் உங்களைப் பிடித்திருக்கிறது என்று அர்த்தம்.
உங்களுடன் பழகும் உங்களது தோழி ஒருவேளை உங்களைக் காதலிப்பவராக இருந்தால் குறிப்பிட்ட சில விஷயத்தில் நாம் லேசாக அதைக் கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது. அவர் உங்களைக் கவர அதாவது உங்களது கவனத்தைப் பெற சில வழிகளில் முயற்சி செய்வார். எப்படியாவது உங்களுடைய கவனத்தை அவர் பக்கம் திருப்ப வேண்டுமென்று முயற்சி செய்து கொண்டே இருப்பார். அவர் அதில் வெற்றி அடையும் வரை அதாவது உங்களுக்குப் பிடித்த விஷயங்களைத் திரும்பத் திரும்பச் செய்வார்.
உங்கள்மீது விருப்பம் இருந்தால் பெண்கள் அதிக நேரம் உங்களுடன் பேசுவார்கள் மேலும் எவ்வளவுதான் நண்பர்களுடன் கூடி பேசிக் கொண்டிருந்தாலும் அவர்கள் உங்களுடன் அதிக அளவு பேசுவார்கள் அல்லது சாட் செய்வார்கள். முக்கியமாக எந்த நேரத்திலும் உங்களுக்குப் போன் செய்து பேசுவார்கள். உங்களைப் பிடித்தால் என்னதான் நீங்கள் பேசினாலும் பெண்கள் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். அது எவ்வளவு தான் படு மொக்கையாக இருந்தாலும் அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தால் நிச்சயம் அது காதல் தான்.
மேலும் உங்கள் பேச்சை அவர்கள் ரசிக்கிறார்கள் என்று அர்த்தம். உங்களுக்கு என்ன பிடிக்கும், எது பிடிக்கும், எது பிடிக்காதது ஆகிய விஷயங்களைத் தேடி தேடி தெரிந்து கொள்ளுவார். தேடிப் பிடித்து அறிய விரும்புவார் உங்களுக்குப் பிடித்தவற்றை உங்களுக்காகச் செய்வார் நீங்கள் சந்தோஷப்படுவது பார்த்து அவரும் சந்தோஷப்படுவார் உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களை அறவே தவிர்க்க முயற்சி செய்வார்.
எங்கேயும் அவர்களுடன் வெளியே தனியாகப் போகத் திட்டம் போட்டு அவர்களிடம் கேட்டு அவர்களுக்கு வேலை இருப்பது உங்களுக்குத் தெரிந்தும் உங்களுடன் வருவதற்கு ஒப்புக் கொண்டால் உங்களைப் பிடித்திருக்கிறது என்று அர்த்தம். உங்களிடம் பேசும்போது பெண்கள் தங்கள் முடிகளைக் கைகளால் சுருட்டிக் கொண்டிருப்பதை நீங்கள் கண்டால் நிச்சயம் அவர்களுக்கு உங்கள்மீது ஒரு கண் உள்ளது என்பதை அறியலாம்.
உங்களைக் காதலிக்கும் பெண்ணாக இருந்தால் நீங்கள் எப்போதோ கூறிய சின்ன சின்ன விஷயங்களை மறக்காமல் உங்களுக்காக ஞாபகத்தில் வைத்துக் கொண்டு மீண்டும் அதை உங்களுக்கு நினைவுபடுத்துவார். அதாவது நீங்கள் அவரைப் பற்றி புகழ்ந்து ஏதேனும் சொல்லி இருந்தால் அதை ஞாபகம் வைத்துக் கொண்டு பல நாட்கள் ஆனாலும் மறக்காமல் அதை பற்றி பேச விரும்புவார். நட்புடன் மட்டுமே பழகும் பெண்கள் நீங்கள் கூறும் பல விஷயங்களை ஏற்றுக்கொள்வதில்லை. அதை அப்போதைய நிகழ்வாக எண்ணி கடந்து போய் விடுவார்கள்.
இதையும் படிக்கலாமே: மனா அழுத்தம் குறைய எளிய வழிகள்
ஒரு சில முக்கியமான விஷயங்களை மட்டுமே ஞாபகம் வைத்துக்கொள்வார்கள். நீங்கள் வேறொரு பெண்ணிடம் பேசுவதைப் பார்த்து கோபப்பட்டால் அது கூட உங்கள்மீது இருக்கும் ஒரு வகையான காதல் தான். ஏனெனில் உண்மையில் அவர்கள் உங்களை வேறு யாருக்கும் விட்டுக் கொடுப்பதை விரும்பவில்லை. ஆனால் இதை அவர்களிடம் கேட்டால் அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை என்னிடம் காதலை சொன்ன சில பேரை நான் ஒதுக்கி உள்ளேன். எனக்கு அவர்கள்மேல் அவ்வளவாக ஈடுபாடு இல்லை என்று அடிக்கடி உங்களிடம் கூறுவார்.
தன்னை பற்றி அடிக்கடி உங்களிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். தனக்குப் பிடித்தது என்ன, என்ன செய்தால் தனக்கு பிடிக்கும், எது தனக்கு பிடிக்காது என்பது பற்றி எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார். ஏனென்றால் அதுபற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது அவர் உங்களைக் காதலிக்கிறார் என்பதை நேரடியாகக் கூறாமல் சுற்றி வளைத்து கூறுவார். இதுபோல அடிக்கடி இதைச் சொன்னால் ஆண்கள் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.