பெண்கள் கள்ள உறவில் ஈடுபடுவதற்கான 10 காரணங்கள்
(10 Reasons Why Women Get Involved an illegal relationship)
தற்போது உள்ள பெரும்பாலான ஆண்கள் திருமணத்திற்கு முன்பு சொல்லும் ஒரு வார்த்தை என்னவென்றால் தன்னுடைய மனைவி திருமணத்திற்கு முன் எப்படி இருந்திருந்தாலும் பரவாயில்லை ஆனால் திருமணத்திற்கு பிறகு தன்னுடன் மட்டுமே உறவில் இருக்க வேண்டும் என்பதுதான். திருமணம் முடிந்து சில காலம்வரை கனவுடன் இருக்கும் பெண்களில் சிலர் ஏன் கள்ள உறவை நோக்கி செல்கிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாகப் பார்க்க வேண்டும். ஆண் பெண் உறவு என்பது மிகவும் சிக்கல் நிறைந்தது. கணவன் மனைவி உறவைச் சரியாகக் கையாள தெரியாத நிலையில் கள்ள உறவுகள் ஏற்படுகின்றன. கள்ள உறவு ஏற்பட காரணம் என்னவென்றுதெரிந்து கொள்வோம்.
தான் திருமணம் செய்து கொள்ளும் ஆண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பார்கள். தங்களுடைய திருமண வாழ்க்கையை எப்படி நடத்தலாம் தனது கணவர் தன்னிடம் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் எனப் பல்வேறு கற்பனை கோட்டைகளை மனதில் கட்டி வைத்திருப்பார்கள். அந்தக் கோட்டை இடிந்து தரைமட்டம் ஆகும்போது அந்தப் பெண் எதிர்பார்த்த விஷயங்கள் கிடைக்காத பட்சத்தில் அது போன்று இருக்கும் வேறொரு ஆணுடன் பழகச் சந்தர்ப்பம் வந்தாலோ அல்லது வேறொரு ஆண் இவர்கள் நிலையைப் புரிந்து கொண்டு காய் நகர்த்தினாலோ வேறொரு ஆணுடன் பழக ஆரம்பிக்கின்றனர்.
மனைவியை அடிப்பது கொடுமைப்படுத்துவது சந்தேகப்படுவது அன்பு காட்ட தவறுவது இது போன்ற செயல்களும் பெண்களை வேதனைக்கு உள்ளாக்கி அந்த வேதனையை வேறொரு ஆண் கூடத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்கின்றனர்.
தன் கணவரிடமிருந்து கிடைக்காத அன்பும் அக்கறையும் வேறு ஆணிடமிருந்து கிடைக்கும் பட்சத்தில் அந்த ஆண்மீது பெண்களுக்கு ஈர்ப்பு அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
பெண்கள் தன் துணையிடம் பெரிதும் எதிர்பார்ப்பது பாதுகாப்பு தான். அந்தப் பாதுகாப்பு தன் கணவரிடம் அல்லாமல் வேறு நபரிடம் இருந்துதான் கிடைக்கிறது என்ற பட்சத்தில் அவருக்கு வேறு நபரிடம் ஈர்ப்பு ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை.
காதலித்துக் கொண்டிருக்கும் பெண்கள் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக வேறொரு ஆணை மணந்து கொள்கின்றனர். இவர்களில் சில பெண்கள் திருமணத்திற்கு பிறகும் பழைய காதலனை மறக்க முடியாமல் அவரிடம் தொடர்பு கொள்கின்றனர். கள்ளக்காதலில் ஈடுபடுகின்றனர்.
இதையும் படிக்கலாமே: பெண்களை திரும்பி பார்க்க வைக்கும் ஆண்களின் 4 குணங்கள்
உங்களுடைய வாழ்க்கை துணைக்காக உங்கள் நேரத்தை நீங்கள் செலவிட வேண்டும் அலுவலகம் செல்லும் பெண்களாகட்டும் வீட்டில் இருக்கும் பெண்களாகட்டும் தன்னுடைய கணவர் தன்னுடன் தனிமையில் நேரத்தைச் செலவிட வேண்டும் என்று விரும்புவார்கள்
நீங்கள் அதற்கான நேரத்தை அவர்களுக்கு வழங்காதபோது அந்த நேரங்களில் வேறொரு ஆண் நபரின் நட்பு உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும். காலப்போக்கில் அந்த நட்பு கள்ள உறவாகவும் மாற வாய்ப்புள்ளது
கணவனும் மனைவியும் நீண்ட நாட்களாகப் பிரிந்து இருந்தாலும் கள்ள உறவு உருவாகின்றன. நீண்ட நாட்களாகப் பிரிந்திருக்கும் பெரும்பாலான குடும்பங்களில் இது நிகழ்கின்றன தங்களுடைய உடல் தேவையைப் பூர்த்தி செய்ய அவர்களுக்கு ஒரு துணை அந்த இடத்தில் தேவைப்படும்போது கள்ள உறவில் அவர்கள் இறங்குகிறார்கள்.எல்லா குடும்பங்களிலும் இவை நடப்பதில்லை என்றாலும் மற்ற குடும்பங்களைவிட இந்தக் குடும்பங்களில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஒரு சில ஆய்வு முடிவுகள்.
பெண்கள் தங்கள் கணவரிடம் மிகவும் எதிர்பார்ப்பது அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதபோது கணவன்மீது ஒரு வித வெறுப்பு அவர்களுக்கு ஏற்படுகிறது. அந்தச் சமயங்களில் அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வேறொரு ஆண் நபரின் நட்புகூட கள்ளக்காதலாக மாற வாய்ப்புள்ளது.
பெரும்பாலான பெண்கள் தன்னுடைய தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தி இல்லாமல் இருக்கின்றனர். இதன் காரணமாகத் தான் பெண்கள் அதிகமாகக் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள் என்கிறது சில ஆய்வுகள்.
ஆண்களின் உணர்ச்சிகள் என்பது வேறு பெண்களின் உணர்ச்சிகள் என்பது வேறு. வேறொரு பெண்ணுடன் ஆண் மிகச் சுலபமாக உடலுறவு வைத்துக் கொள்வார்கள் ஆனால் பெண்கள் உணர்வு ரீதியான உடலுறவு எதிர்பார்ப்பார்கள். உடலுறவுக்காகப் பெண்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். ஆனால் அது அவர்களுக்குப் பிடித்தது போன்றோ அவர்கள் விரும்புவது போன்றோ நடக்கிறதா என்றால் அது மிகக் குறைந்த அளவு தான்.
இதையும் படிக்கலாமே: மன அழுத்தம் குறைய எளிய வழிகள்.
பெரும்பாலான ஆண்கள் உடலுறவு அவர்களுடைய தேவை முடிந்ததும் பின்வாங்கி விடுகிறார்கள். பெண்களின் தேவையைப் பூர்த்தி செய்யப் பெரும்பாலான ஆண்கள் விரும்புவதில்லை. அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேறொரு உறவைத் தேடி அவர்கள் செல்கிறார்கள். குறிப்பாகத் தாம்பத்திய வாழ்க்கை சரியாக இல்லை என்று தான் நிறைய விவாகரத்து வழக்குகள் இங்கு நடைபெறுகின்றன. பொதுவாக ஒரு உறவில் உள்ளே செல்வதும் விரைவாக வெளியேறுவதும் ஆண்களுக்குச் சாதாரண காரியம்.
ஆனால் பெண்களுக்கு அது சாதாரண காரியம் அல்ல. ஆண்கள் மிகவும் எளிதாக ஒரு உறவிலிருந்து விலகிச் செல்ல முடியும் ஏனெனில் அவர்களின் உணர்ச்சிகள் வேறுபட்டவை. ஆனால் ஒரு பெண் உடலுறவு கொள்ள விரும்புவதும் அதை மறந்து விடுவதும் என்பது வழக்கத்திற்கு மாறானது. பெண்களுக்கான மதிப்பையும் அவர்களுடைய உணர்வுகளையும் புரிந்து கொண்டு ஆண்கள் நடந்து கொண்டால் கள்ள உறவுக்கு அவர்கள் செல்வதற்கான வாய்ப்பு குறையும்