Effects of moles on Female -2| Macha Palangal for Women – 2
பெண்களுக்கு கழுத்து, தோல், முதுகு, மார்பு, வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள மச்சங்களுக்கு என்ன அதிர்ஷ்ட பலன்கள். பெண்களுக்கான அதிர்ஷ்ட மச்ச பலன்கள்
பெண்களுக்கு கழுத்தில் மச்சம் இருந்தால் திடகாத்திர உருவ அமைப்பு கொண்டு இருப்பார்கள். துணிச்சலானவர்கள் நல்ல குணத்துடன் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
இடது கழுத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டசாலிகள். வலது கழுத்தில் மச்சம் இருந்தால் இவர்களுக்கு பிள்ளைகளால் யோகங்கள் உண்டு.
முன் கழுத்தில் இருந்தால் கலைகளில் ஆர்வம் இருக்கும். ஏதேனும் ஒரு கலையில் சாதித்து காட்டுவார்கள்.
பின் கழுத்தில் மச்சம் இருந்தால் தங்கள் எண்ணங்கள் ஈடு ஏறுவதற்கு மிகுந்த முயற்சி எடுப்பார்கள் பிடிவாதக்காரர்கள்.
பெண்களுக்கு இடது தோளில் மச்சம் இருந்தால் சிறப்பான வாழ்க்கை அமையும். இவர்கள் குடும்ப பொறுப்புக்களை ஏற்று குடும்பத்தை நல்ல விதமாக வழி நடத்துவார்கள்.
வலது தோளில் மச்சம் இருந்தால் தைரியசாலிகளாக இருப்பார்கள் நன்மையான பலன்கள் நடைபெறுவது குறைவாக இருக்கும்.
இடது தோள்பட்டையில் மச்சம் இருந்தால் பதற்றத்துடன் காணப்படுவார்கள். பின் வம்பு சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவார்கள்.
வலது தோள்பட்டையில் மச்சம் இருக்கும் பெண்கள் துணிச்சலானவர்கள் மற்றும் புத்திசாலிகள். எடுத்த காரியங்களில் வெற்றியை காண்பார்கள்.
முதுகில் மச்சம் இருந்தால் லட்சியவாதிகள் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு சவால்களை சமாளித்து அதில் வெற்றியும் அடைவார்கள். வேலைக்குச் சென்று அதிக பணத்தை சம்பாதிக்கும் பெண்களாக இருப்பார்கள். நல்ல வாழ்க்கையுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
அதுவே முதுகின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் சற்று மந்தமாக எந்த ஒரு வேலையிலும் பிடிப்பு இல்லாமல் இருப்பார்கள்
பொதுவாக மார்பில் மச்சம் இருக்கும் பெண்கள் சிறுவயதில் வறுமை அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கி தான் இருப்பார்கள். பிற்காலத்தில் வசதி வாய்ப்பு மற்றும் நினைத்த காரியம் அல்லது செயலை செய்து முடிப்பார்கள்.
இடது பகுதியில் மச்சம் இருந்தால் நல்ல கணவர் அமைந்து செல்வாக்குடன் இருப்பார்கள்.
வலது மார்பில் மச்சம் இருந்தால் பொதுநலம் சார்ந்த செயல்களில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள். நல்ல குணங்களைக் கொண்டவர்கள்.
மார்பின் மேல் புறம் மச்சம் இருந்தால் மகிழ்ச்சியான நல்ல வாழ்க்கை அமையும். இலட்சியவாதிகள்.
மார்புக்கு கீழ் மச்சம் இருந்தால் அவர்கள் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியுண்டு.
வயிற்றின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் உண்மையை பேசுவார்கள். எளிதில் பணம் ஈட்ட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.
வயிற்றில் வலது புறத்தில் மச்சம் தென்பட்டால் நல்ல சம்பாதிக்கும் ஆற்றல் இருக்கும். ஆனால் அலட்சியமாக இருப்பார்கள்.
வயிற்றின் மேல் பகுதியில் மச்சம் உள்ள பெண்கள் நல்ல பண்புகளை கொண்டவர்கள் எனவே சமுதாயத்தில் அவர்களுக்கு நல்ல மதிப்பு மரியாதை இருக்கும்.
அடிவயிற்றில் மச்சம் உள்ள பெண்கள் ராஜயோகம் பெற்ற அதிர்ஷ்டசாலிகள். அவர்களுக்கு உயர் பதவிகள் தேடி வரும். தொப்புளின் நடுப்பகுதியில் மச்சம் இருந்தால் சகல வசதிகளுடன் மகிழ்ச்சியான வாழ்வு அமையும்.
தொப்புளின் மேல் மச்சம் உள்ள பெண்கள் நல்ல குணங்களுடன் அமைதியாக இருப்பார்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மற்றவர்கள் போற்றும் விதத்தில் சிறப்பான வாழ்க்கை அமையும்.
தொப்புளின் கீழ்மச்சம் இருந்தால் நல்லதல்ல இவர்களுக்கு மன அமைதி இருக்காது. அடிக்கடி பண பற்றாக்குறை ஏற்படும்.
இடுப்பில் மச்சம் உள்ள பெண்களுக்கு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும். இடுப்பின் இடது பகுதியில் மச்சம் உள்ள பெண்கள் கடும் உழைப்பாளிகள். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு கணவன் வீட்டில் வசதிகளுடன் கூடிய வாழ்க்கை அமையும். செல்வத்தை சேர்க்கும் எண்ணத்துடன் இருப்பார்கள்.
இடுப்பின் வலது பகுதியில் மச்சம் இருந்தால் நேர்மையானவர்கள். மற்றவர்களிடம் அன்புடன் பழகக்கூடியவர்கள். இவர்களுக்கு தெய்வ பக்தி உண்டு.
புட்டங்களில் மச்சம் உள்ள பெண்கள் அதிர்ஷ்டசாலிகள் இவர்களுக்கு சகல சுக போகங்களுடன் கூடிய மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். எதையும் சாதிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.