Effects of moles on Female| Macha Palangal for Women -1
அனைவருக்கும் வணக்கம் பொதுவாக நாம் பிறக்கும்போதே நம் உடலின் சில இடங்களில் தோலின் மீது கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் நிரந்தரமான மச்சங்கள் தோன்றுகின்றன. இவற்றில் சில நமக்கு அடையாளங்களாக மாறுகின்றன. ஜோதிட அடிப்படையில் மச்சங்கள் தோன்றுவதற்கு காரணம் ராகு மற்றும் கேது கிரகங்கள் என்று கூறப்படுகிறது. ஒருவரின் உடலில் மச்சங்கள் உள்ள இடங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மச்சத்திற்கும் ஒவ்வொரு அதிர்ஷ்ட பலன் இருப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கான அதிர்ஷ்ட மச்ச பலன்கள்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மச்ச பலன்கள் வேறுபடும்.
முதலில் பெண்களுக்கு உடலில் எங்கு மச்சம் இருந்தால் என்ன அதிர்ஷ்ட பலன் என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக பெண்களுக்கு தலையில் மச்சம் இருந்தால் அவர்கள் சுயநலம் மற்றும் பேராசை கொண்டவர்களாக இருப்பார்கள்.
தலையின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அறிவும் ஆற்றலும் நிறைந்தவர்கள் எதை செய்தாலும் நிதானமாக சிந்தித்து ஒரு முடிவு எடுத்த பின்பே காரியத்தை செய்வார்கள்.
வலது புறத்தில் இருந்தால் தற்பெருமை உடையவர்கள் அவர்களால் எந்த ஒரு வேலையையும் ஒழுங்காக செய்ய முடியாது.
100 கனவுகளின் பலன்கள். நன்மைகள் மற்றும் தீமைகள்.
நெற்றியில் மச்சம் இருக்கும் பெண்களை புத்திசாலிகள் என்று கூறலாம் நல்ல கணவர் அமைந்து குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும் இவர்கள் நினைத்ததை நடத்தி முடிக்க கூடிய ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள். ஆடம்பரமான வாழ்க்கை மற்றும் உயர்பதவி அமையும்.
நெற்றியின் இடது புறம் மச்சம் இருந்தால் மன உறுதி உடையவர்கள் எந்தவிதமான சவால்களையும் சமாளிக்கும் திறன் உடையவர்கள் இவர்களுக்கு திருமணம் நடந்த பின்பு கணவரால் வசதி வாய்ப்புகள் ஏற்படும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
நெற்றியின் வலதுபுறத்தில் இருந்தால் தைரியசாலிகள் அடக்கத்துடன் இருப்பார்கள் பேச்சிலும் செயலிலும் கண்ணியம் இருக்கும்.
இடது புருவத்தில் மச்சம் இருந்தால் செல்வம் மற்றும் சகல வசதிகளுடன் கூடிய வாழ்க்கை அமையும் சிக்கனத்துடன் இருந்து பணம் சேமிப்பதில் வல்லவர்கள் நன்கு சிந்தித்து முடிவெடுப்பார்கள் அமைதியானவர்கள் எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்.
வலது புருவத்தில் மச்சம் உள்ள பெண்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு அவர்களுக்கு முப்பது வயதுக்கு மேல் அதிர்ஷ்டம் மற்றும் யோகங்கள் வாழ்க்கையில் உண்டாகும் இரக்க சுபாவம் உண்டு அடுத்தவர்களுக்கு தங்களால் முடிந்த அளவு உதவி செய்வார்கள்.
இடது கண்ணில் மச்சமுள்ள பெண்கள் கடும் உழைப்பாளிகள் ஆனால் பிடிவாத குணம் மற்றும் முரட்டுத்தனம் உடையவர்களாக இருப்பார்கள்.
வலது கண்ணில் மச்சம் உள்ள பெண்கள் நல்ல அதிர்ஷ்டசாலிகள் எந்த ஒரு வேலையை அவர்கள் செய்தாலும் சிறிய அளவில் முயற்சி எடுத்தால் போதும் அந்த வேலையில் நல்ல லாபத்துடன் வெற்றி கிடைக்கும் செல்வாக்கு உடையவர்கள் நல்ல குணங்களைக் கொண்டவர்கள்.
பொதுவாக உதட்டில் மச்சம் உள்ள பெண்கள் சாந்த குணத்துடன் சரஸ்வதி கடாட்சம் பெற்றவர்களாக இருப்பார்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள் ஏதேனும் ஒரு கலையில் பெரும் புகழை அடைபவர்களாக இருப்பார்கள் அவர்களிடம் நிறைய செல்வம் சேரும் விரைவில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள்.
மேல் உதட்டில் மச்சம் இருந்தால் பொறுமை மற்றும் தெய்வ பக்தி உடையவர்கள் எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் சிக்கனத்துடன் வாழ்வார்கள்.
கீழ் உதட்டில் மச்சம் உள்ள பெண்கள் உயர்ந்த குணங்களைக் கொண்டவர்கள் சகல வசதிகளுடன் நல்ல வாழ்க்கை அமையும்.
மேல் வாய் பகுதியில் மச்சம் இருக்கும் பெண்கள் அமைதியானவர்கள் இவர்கள் செல்வாக்குடன் வாழ்வார்கள்.
இடது தாடையில் மச்சம் உள்ள பெண்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள் அழகிய தோற்றத்துடன் நல்ல குணங்களைக் கொண்டிருப்பார்கள்.
வலது தாடையில் மச்சம் உள்ள பெண்கள் எவருடனும் எளிதில் பழக மாட்டார்கள் பிறரால் வெறுக்கப்படுவார்கள்
பெண்களுக்கு நாக்கில் மச்சம் இருந்தால் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் அவர்கள் சொல்லும் வாக்கு பலிக்கும் அவர்கள் மகான்கள் மேதைகள் அல்லது அறிஞர்களாக இருக்க வாய்ப்புண்டு உயர்ந்த லட்சியம் கொண்டவர்கள் மனதில் கள்ளம் கபடம் இல்லாமல் எல்லோரிடமும் அன்பாக பழகுவார்கள் மற்றவர்களுக்கு உதவி செய்பவர்கள் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இவர்களுக்கு அதிக அளவில் யோக பலன்கள் ஏற்பட்டு வாழ்வில் வெகுவிரைவில் முன்னேற்றம் அடைவார்கள்.
நாக்கின் அடிப்பகுதியில் மச்சம் இருந்தால் தெய்வ பக்தி இருக்கும் சிறந்த பேச்சாளர்களாக இருப்பார்கள்.
பெண்களின் இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் சகல வசதிகளுடன் கூடிய மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் சுதந்திரமாக வாழ விரும்புவார்கள்.
அதுவே வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் காரிய வெற்றி உடையவர்கள் அடுத்தவரை கவருகின்ற வகையில் அழகு கொண்டவர்கள் தனிமையை விரும்புவார்கள். பிறருக்கு உதவுவார்கள் ஆனால் இவர்களின் வாழ்க்கையில் பொருளாதார நிலை சீராக இருக்காது. சில சமயங்களில் வறுமை ஏற்படலாம்.
மூக்கு நுனியில் மச்சம் உள்ள பெண்கள் திருமணத்தில் விருப்பமில்லாமல் இருப்பார்கள். நல்ல சிந்தனையோடு சமூக சேவைகளில் ஈடுபடும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் நன்னடத்தை காரணமாக மற்றவர்களிடம் நல்ல மதிப்பு மரியாதை பெறுவர். எளிதில் கோபம் அடைவார்கள்.
மூக்கின் அடியில் மச்சம் உள்ளவர்கள் மகிழ்ச்சி மற்றும் அமைதியான நல்ல குடும்ப வாழ்க்கையை பெறுவார்கள்.
மூக்கின் வலது புறத்தில் மச்சமுள்ளவர்களுக்கு சிறிய முயற்சியுடன் செய்யும் பணிகளில் அதிக லாபம் ஏற்படும். ஆனால் மூக்கின் இடது புறத்தில் இருந்தால் குறைவான நற்பலன்கள் மட்டுமே உண்டு.
பெண்களுக்கு காதுகளில் மச்சம் இருந்தால் நல்ல வருமானம் உண்டு. ஆனால் வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் ஏற்படும். சமூகத்தில் நல்ல மதிப்பும் மற்றும் மரியாதையும் கிடைக்கும். திடீர் யோக பலன்கள் கிடைக்கும்.
குறிப்பாக இரண்டு காதுகளிலும் மச்சம் உள்ள பெண்களுக்கு அதிர்ஷ்டமான யோக பலன்கள் அதிக அளவில் ஏற்படும்.
இடது காதில் மச்சம் இருந்தால் சிறந்த பலனைத் தரும் பணி எதுவாயினும் முயற்சியால் வெற்றி அடைவார்கள் வாழ்க்கையின் பிற்பகுதி இவர்கள் விரும்பியவாறு அமையும் செலவாளிகளாக இருப்பார்கள்.
வலது காதில்மச்சம் இருந்தால் சுமாரான பலனையே தரும் பொதுவாக பயத்துடன் காணப்படுவார்கள் எதிலும் தயக்கத்துடன் ஈடுபடுவார்கள்.
நம் அடுத்த பதிவில் பெண்களுக்கு கழுத்து தோல் முதுகு மார்பு வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் மச்சம் இருந்தால் ஏற்படும் அதிர்ஷ்ட பலன்கள் பற்றி பார்ப்போம் நன்றி