புற்றுநோயை உண்டாக்கும் 10 உணவுகள்.
புற்றுநோய் என்றதுமே இது ஒரு உயிர் கொல்லி நோய் என்பது நம் அனைவருக்கும் தெரியும். உலக அளவில் மரணத்தை எளிதில் உண்டாக்கக்கூடிய நோய்களில் இரண்டாம் இடத்தில் இருக்கக்கூடிய நோய் புற்றுநோய். முன்பெல்லாம் ஊரில் ஒன்று இரண்டு பேருக்கு மட்டுமே இருந்து வந்த புற்றுநோய் தற்போது குடும்பத்தில் ஒரு நபருக்காவது இருக்கக்கூடிய நோயாக மாறிவிட்டது.
புற்றுநோய் மது புகை போன்ற பழக்கங்கள் அதிகம் இருக்கிறவர்களுக்கும் ஜெனிடிக் டிஸ்ஆர்டர்ன்னு சொல்லக்கூடிய மரபணு குறைபாடு அல்லது மரபணுக்களில் உண்டாக்கக்கூடிய மாற்றம் மற்றும் ரேடியேஷன் அதிகம் நிறைந்த இடங்களில் வேலை செய்வது சுற்றுச்சூழல் மாசு என பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணம் என்ன என்றால் தினசரி நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் மூலமாக வரக்கூடிய நச்சுகள் தான் காரணம்.
கேன்சர் நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் அதிகம் நிறைந்த பத்து உணவுகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஒன்று : பதப்படுத்தப்பட்ட உணவுகள்.
முதலில் பிராசஸ் பூட் என்றால் என்ன? உணவுப்பொருட்கள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கவும் அதன் நிறம் சுவை மனம் மாறாமல் இருக்கவும் அதன் வடிவத்தில் பல பரிமாணங்களை உட்படுத்தி தயாரிக்கப்படக்கூடிய உணவுகள் தான் பிராசஸ் ஃபுட். உதாரணத்திற்கு பிஸ்கட். சிப்ஸ், கேக், ஜாம், சாக்லேட், பிரட், ஐஸ்கிரீம் போன்ற உணவுகள் எல்லாமே பல மணி நேரம் பிராசஸ் பண்ணப்படுவது மட்டும் இல்லாமல் அதிகப்படியான பிரிசர்வேட்டிவ்ஸ் கலரிங் ஏஜென்ட் மற்றும் டிரான்ஸ்பர்ட் என்னும் கெட்ட கொழுப்பு அதிகம் நிறைந்திருக்கும். அதனால் அதிகம் பிராசஸ் பண்ணப்பட்ட உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அது உடலில் புற்றுநோய் செல்களை உண்டாக்கக்கூடிய காரணிகளான கேன்சர் செல்களை அதிகரிக்கும்.
இதனால் உடலில் பல்வேறு விதமான புற்று நோய்கள் உண்டாவதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. தினசரி உணவில் அதிகம் பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த மாதிரியான பிராசஸ் பண்ணப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
இரண்டு : வெள்ளை சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு என்று சொல்லக்கூடிய மைதா
இந்த இரண்டுமே அதிக அளவில் பிராசஸ் செய்வது மட்டும் இல்லாமல் ஏராளமான ப்ளீச்சிங் ஏஜென்ட் ரிசர்வேட்டிவ்ஸ் மட்டும் கெமிக்கல்ஸ் நிறைந்திருக்கிறது. ஹைலி ப்ராசஸ் புட் வரிசையில் முதல் இரண்டு இடத்தில இருப்பது இந்த வெள்ளை சர்க்கரையும் மைதாவும். இந்த இரண்டு மூலப் பொருட்கள் நிறைந்த உணவுகளை தினசரி அதிகம் சாப்பிடும்போது உடலில் அதிக அளவிலான பேட் செல்களை உற்பத்தி செய்யும். பேட்செல் இன்ப்ளமேட்டரி புரோட்டீன் என்னும் அடிப்போ கைண்ட்ஸ் ரிலீஸ் பண்ணும். இந்த அடிபோகயின்ஸ் உடலில் டிஎன்ஏ டேமேஜ் செய்து கேன்சர் செல்கள் உற்பத்திக்கு வழி வகுக்கும். அதனால் தினசரி உணவில் ஒயிட் சுகர் எனும் வெள்ளை சர்க்கரையும் மைதா சார்ந்த உணவுகளையும் சாப்பிட்டால் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மூன்று : சுட்ட உணவுகள்
தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு பெற்று இருக்க கூடிய உணவு பார்பிக்யூ என்னும் சுட்ட உணவுகள் தான். அதிலும் குறிப்பாக அசை உணவுகளான சிக்கன் இறைச்சி மீன் போன்ற உணவுகளை தீயில் நேரடியாக அதிக வெப்ப நிலையில் அதிகமாக சமைக்கும் பொழுது கேன்சரை உண்டாக்கக்கூடிய ஹச் சி ஏ எஸ் என்னும் ஒருவரை கெமிக்கல் உற்பத்தியாகிறது. இந்த கெமிக்கல் உடலஞ கேன்சர் காசினோஜனா செயல்பட்டு இறைப்பை மற்றும் குடல் புற்று நோய்க்கு எளிதாக வழி வகுக்கும்.தீயில் அதிக நேரம் நேரடியாக சமைக்கக்கூடிய உணவுகள் மூலமாகவும் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
நான்கு: சோடா மற்றும் இனிப்பு குளிர்பானங்கள்
சோடா மற்றும் இனிப்பு குளிர்பானங்களை பலரும் ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் உணவு சாப்பிட்ட பின்பு சோடா மற்றும் குளிர்பானங்கள் அருந்தும் பழக்கத்தை பலரும் வழக்கமாக வைத்திருக்கிறோம். பல வண்ணங்களில் கிடைக்கக்கூடிய குளிர்பானங்கள் எல்லாமே அதிகப்படியான சுகர் ப்ரசர்வேட்டிவ்ஸ் ஆர்டிபிசியல் கலர்ஸ் கலந்து இருக்கும்.
இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான இனிப்பு இன்சூன்ஸ் பைக் என்னும் திடீர் சர்க்கரை அளவை உயர்த்துவது மட்டும் இல்லாமல் உடலில் கிரோனிக் இன்ஃப்ளமேசனை உண்டாக்கும்.தொடர்ச்சியாக சோடா மற்றும் இனிப்பு குளிர்பானங்கள் அருந்துபவர்களுக்கு சுமார் 13 வகையான கேன்சர் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆயுசுக்கும் கால்சியம் குறைபாடு
வராமல் தடுக்கும் 10 உணவு வகைகள்
ஐந்து : செயற்கை நிறங்கள் மற்றும் சுவைகள் (artificial colours and flavours)
குழந்தைகள் சாப்பிடக்கூடிய மிட்டாய்கள் தொடங்கி கேசரி ஸ்வீட்ஸ் பேக்கரி ஐட்டங்கள் தந்தூரி சிக்கன் என பஞ்சுமிட்டாய் வரைக்கும் அனைத்து உணவுகளிலும் கலர்ஸ் என்னும் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கிறார்கள். பார்ப்பதற்கு அழகாகவும் சாப்பிட தூண்டும் வகையில் இருப்பதற்காக மட்டுமே இந்த ஆர்டிபிசியல் கலர்ஸ் சேர்க்கிறார்கள். வெறும் கலர் மட்டுமல்ல ஐஸ்கிரீம் ஸ்கூல் ரிங்க்ஸ் பிரியாணி போன்ற வீட்டில் தயாரிக்கும் உணவுகளிலும் ஆர்டிபிசியல் பிளேவர்ஸும் சேர்ப்பது உண்டு.
இப்படி அதிக மனமும் நிறமும் மூட்டப்பட்ட உணவுகளில் சாப்பிடும் பொழுது அது நம் உடலில் இன்ஃப்லமெட்டரி மெக்கானிசத்தை ஸ்டிமுலேட் பன்னுவதோடு டிஎன்ஏயும் டேமேஜ் செய்து புற்றுநோய் செல்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.இதன் பாதிப்பை உணர்ந்து பல நாடுகளில் ஆர்ட்டிஃபிஷியல் கலர்ஸான ரெட் பார்ட்டி எல்லோ பைவ் எல்லோ 6 போன்ற கலர்ஸ் தடை செய்திருக்கிறார்கள்
ஆறு : செரியூட்டப்பட்ட எண்ணெய்
ஹைட்ரஜனை ஆயில் என்றால் தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து கிடைக்கக்கூடிய எண்ணெயை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க அதிலே ஹைட்ரஜன் வாயுவை செலுத்தி கெட்டியாக மாற்றுவது தான் ஹைட்ரஜனேட்டட் ஆயில் என்று சொல்லுவார்கள். எண்ணையை ஹைட்ரஜனேடட் செய்வதன் விளைவாக 100க்கு 75% கெட்ட கொழுப்பாக மாறிவிடும்.
இந்த ஹைட்ரஜனேடட் ஆயில் சேர்த்து தயாரிக்க கூடிய உணவுகளான பிஸ்கட், பிரட், கிரீம், கேக்ஸ், சிப்ஸ், பீட்சா, பப்ஸ் என சாதாரணமாக வாங்கி சாப்பிடக்கூடிய அனைத்து துரித உணவுகளுமே ஹைட்ரஜனேடட் ஆயில் நிறைந்திருக்கிறது. இந்த ஆயில் சேர்க்கப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடும்பொழுது நம் உடலில் ட்ரான்ஸ்பர்ட் என்னும் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும். இந்த கெட்ட கொழுப்பு கேன்சர் செல்கள் உருவாவதற்கான காரணிகளை உடலில் அதிகரித்து பல்வேறு விதமான கேன்சர் வருவதற்கு வழி வகுக்கிறது.
ஏழு : மரபணு மாற்றப்பட்ட உணவுகள்.
நாம் தினசரி சாப்பிடக்கூடிய காய்கறிகள் பழங்கள் என பெரும்பாலான உணவுகள் மரபணு மாற்றம் பெற்ற வகையில் தான் கடைகளில் கிடைக்கிறது. ஹைபிரிட் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் என்று சொல்லுவார்கள். மகசூல் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கவும் காய்கறிகள் மற்றும் பழங்களின் டிஎன்ஏ என்னும் மரபணுக்களை மாற்றம் செய்து உருவாக்கினார்கள்.
இப்படி மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளை நாம் சாப்பிடும்பொழுது அது சாதாரணமாக செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் முதல் புளூட்டன் அலர்ஜி சிரியாசிஸ் டிஸ்ஸீஸ் போன்ற பிரச்சினைகள் வருவது மட்டும் இல்லாமல் நாளடைவில் குரோனிக் கேன்சர் ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு.
எட்டு : பூச்சிக்கொல்லி மருந்துகள்
காய்கறிகள் மற்றும் பழங்கள் விளைவிக்கப்படும்பொழுது பயிர்களை பாதிக்கக்கூடிய விதவிதமான பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். பூச்சிக்கொல்லி மருந்துகள் பல வகைகள் இருந்தாலும் பெரும்பாலான மருந்துகள் முற்றிலும் கெமிக்கல் நிறைந்தவைகளாகத்தான் இருக்கும்.
இதையும் படிக்கலாமே ;நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த 10 காய்கறிகள்
இந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்பட்ட காய்கறிகள் பழங்களை நாம் சாப்பிடும் பொழுது அது நேரடியாகவே கேன்சர் கேசினோசனாக உடலில் மாறும் இதன் விளைவாக நுரையீரல் புற்றுநோய், கிட்னி ப்ராஸ்டேட் கேன்சர் மற்றும் புற்றுநோய் கட்டிகள் உருவாகுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. காய்கறிகள் மற்றும் பழங்களை ஒரு மணி நேரமாவது நீரில் ஊற வைத்து பின் நன்கு சுத்தம் செய்து சாப்பிடுவதன் மூலமாக இந்த பெஸ்டிசைட்ஸ் என்னும் பூச்சிக்கொல்லியினால் வரக்கூடிய பாதிப்பை தடுக்கலாம்.
ஒன்பது : டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகள்
பெரும்பாலும் பிராசஸ் ஃபுட் என்னும் பதப்படுத்தப்பட்ட உணவுகளும் ரெடி டு ஈட் எனும் உடனடியாக சாப்பிடக்கூடிய வகையில் இருக்கக்கூடிய உணவுகளையும் டின் அல்லது டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்கிறார்கள். இப்படி டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யகூடிய அனைத்து உணவுகளுமே அதிக அளவிலான சோடியம் டிரான்ஸ்பர்ட் பிரிசர்வேட்டிஸ் நிறைந்திருக்கும்.
இது மட்டும் இல்லாமல் உணவு அடைக்கப்பட்டு இருக்கக்கூடிய டப்பா பிளாஸ்டிக்காக இருக்கும் பட்சத்தில் பிபிஐ என்னும் பிளாஸ்டிக் கெமிக்கல்ஸும் உணவுடன் சேர்ந்திருக்கும். பிபிஐ கலந்த உணவுகளை நாம் சாப்பிடுவதனால் ஸ்கின் கேன்சரில் இருந்து மல்டிபிள் மைலோமா என்னும் எலும்பு மச்சை புற்றுநோய் வரைக்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பத்து : நுண்ணலை சோளபொறி (microwave popcorn)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மால்கள் மற்றும் திரையரங்கங்களுக்கு செல்லும்போது அதிகம் விரும்பி சாப்பிடக்கூடியது மைக்ரோவேவ் பாப்கான். பாப்கான் நம் வீடுகளில் செய்யக்கூடிய பாப்கான்களை விடவும் அதிக சுவையுடையதாகவும் அதிக மனமுடையதாகவும் அனைவரையும் ஈர்க்கும் விதமாகவும் இருக்கும். அதற்கு காரணம் அதில் சேர்க்கப்பட்டிருக்ககூடிய ஆர்ட்டிஃபிஷியல் பிளேவர் மற்றும் டேஸ்ட்மேக்கர் என்னும் சுவையூட்டிகள். மைக்ரோ ஓவனில் அதிக வேகத்தில் ஹீட் பண்ணி குக் பண்றதன் விளைவாக ப்ளோரோ அல்கலை என்னும் கேன்சர் காசிங் கெமிக்கல் உருவாகும். இந்த கெமிக்கலோடு சேர்த்து பாப்கனை சாப்பிட அதன் விளைவாகவும் பல்வேறு விதமான கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
உயிர்க்கொல்லி நோய்களில் கேன்சரை உண்டாக்கக்கூடிய 10 உணவுகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொண்டோம்.
நன்றி.