புதிய தொழில் துவங்க விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம்

மதிப்பு கூட்டும் இயந்திரம் வாங்க 40 முதல் 60சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

மதிப்பு கூட்டும் விவசாயிகளுக்கு வழங்க  இருக்கிறார்கள். இதைப் பெறுவதற்கு என்னென்ன வழிமுறைகள் யார் யாரெல்லாம் தகுதியான பயனாளிகள். விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம்

விவசாயிகள் உற்பத்தி செய்த விலைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டுமென்றால் விளைபொருளை நன்கு சுத்தம் செய்து மதிப்பு கூட்டி கொள்வது மிக மிக அவசியம்.

சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய முன்வருவதில்லை. எனவே பல்வேறு மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு

நடவடிக்கையைத் தற்போது மேற்கொண்டு வருகிறது.

வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டி விவசாயிகள் அதிக லாபம் ஈட்டி மதிப்பு கூட்டும் இயந்திரம் அரசு மானியம் வழங்குகிறது என்று  வேளாண் உணவுத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் தற்போது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: இளவச மாட்டுக்கொட்டகை திட்டம் விண்ணப்பிப்பது எப்படி?

 2022 – 2023 ஆம் ஆண்டுவேளாண் நிதிநிலை அறிக்கையில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் வேளாண் விளைபொருள்களை தரம் பிரித்து மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தி அதிக லாபம் பெறுவதற்கு 292 மதிப்பு கூட்டும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு 40% மானியத்தில் வழங்கப்படும் எனத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம்

என்னென்ன இயந்திரங்களுக்கு மானியம் கிடைக்கும்.

  • பருப்பு உடைத்தல்,
  •  தானியம் அரைத்தல்,
  •  மாவு அரைத்தல்,
  •  கால்நடை தீவனம் அரைத்தல்,
  •  சிறிய வகை நெல் அரவை இயந்திரம்,
  • நெல் உமிழ் நீக்குதல்,
  • கேழ்வரகு சுத்தப்படுத்தி கல் நீக்குதல், தேங்காய் மட்டை உரித்தல்,
  •  செடியிலிருந்து நிலக்கடலையை பிரித்தெடுத்தல்,
  •  நிலக்கடலை தோல் உடைத்து தரம் பிரித்தால்,
  • மிளகாய் பொடியாக்குதல்,
  • எண்ணெய் பிரிந்து எடுக்கும் செக்குஇயந்திரம்,
  • பாக்கு உடைத்தல்,
  •  பருத்தி பறித்தல்,
  •  தேயிலை பறித்தல்,
  •  வெங்காயத்தாளை நீக்குதல் போன்ற மதிப்புக்கூட்டும் பணிகளை மேற்கொள்வதற்காக இயந்திரமானது மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

எவ்வளவு மானியம் வழங்கப்படும் என்றால் மதிப்பு கூட்டும் இயந்திரங்களுக்கு 40% மானியம்அல்லது ஒவ்வொரு இயந்திரத்திற்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்பு தொகை இவற்றில் எது குறைவோ அந்தத் தொகையைப் பின்னேர்ப்பு மானியமாக வழங்கப்படும்.

இதையும் படிக்கலாமே: ட்ரான் வாங்க விவசாயிகளுக்கு 4 லட்சம் மானியம்.

ஆதிதிராவிட பழங்குடி இன பிரிவைச் சார்ந்த சிறு குறு விவசாயிகளாக இருந்தால் கூடுதலாக 20 சதவீதம் மானியம். அதாவது 60%மானியமாக வழங்கப்படும்.

வங்கியில் கடன் பெற்றால் மூன்று சதவீத வட்டியானது தள்ளுபடி செய்யப்படும்.

இந்தத் திட்டத்தில் மானியம் போக மீதமுள்ள தொகைக்கு வங்கிமூலம் கடன் பெற விரும்பினால் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேளாண் உட்கட்டமைப்பு நிதி அக்ரிகல்சுரர் இன்ஃப்ராஸ்ட்ச்சர் பண்ட் திட்டத்தின் மூலமாக 3% வட்டிதள்ளுபடியுடன் கடன் வசதி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானியம் பெற என்னென்ன தகுதி வேண்டும்.

  • தனிப்பட்ட விவசாயிகளைத் தவிர பாசன நீர் பயன்பாட்டு குழுக்கள், உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள்,
  • சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர்களும் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம்.
  • மதிப்பு கூட்டும் இயந்திரத்தை இயக்குவதற்கு மும்மனை மின்சார இணைப்புடன் இயந்திரத்தை நிறுவுவதற்கு சொந்தமாகக் கட்டிடம் வைத்திருக்க வேண்டும்.
  • தனிப்பட்ட விவசாயியாக இருந்தால் சொந்த நிலம் இருக்க வேண்டும். இந்தத் திட்டம் சென்னை நீங்களாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி செயல்படுத்தப்படும் கிராம விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள்

  • ஆதார் அட்டையோட நகல்,
  • புகைப்படம்,
  • வங்கிக் கணக்கு புத்தகத்துடன் நகல், நிலம் சம்பந்தப்பட்ட பட்டா சிட்டா அடங்கள் மற்றும் அதோட நகல், 
  • குழுவாக இருக்கும் பட்சத்தில் அதன் பதிவுச் சான்றிதழ் நகல்.
  • சிறு குறு விவசாயிகளுக்கான  சான்றிதழ் நகல்.
  • ஆதிதிராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவராக இருந்தால் அதற்கான சான்றிதழ் மற்றும்  நகல்.

எப்படி விண்ணப்பிக்கலாம்

மதிப்பு கூட்டும் இயந்திரத்தை மானியத்தில் நீங்கள் பெற உழவன் செயலிமூலமாகவோ அல்லது https://aed.tn.gov.in  என்ற இணையதளத்தின் வழியாகவோ சென்று நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரத்திற்கு அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறையைச் சார்ந்த வட்டார உதவி பொறியாளர் அல்லது

உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அல்லது

மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை  அணுகலாம்.

வேளாண் விளைபொருள்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *