பாதாம் பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

 

பாதாம் பருப்பு பற்றிய நம்பமுடியாத உண்மைகள்.


(Nutrition Facts Of Almonds, badam, dryfruits,healthtips)


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் தினமும் தண்ணீரில் ஊற வைத்த நான்கு பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நம்முடைய உடம்பில் என்ன எல்லாம் நடக்கும் என்பதை நீங்கள் என்றைக்காவது யோசித்து இருக்கீங்களா.


தினமும் நான்கு பாதாமை சாப்பிட மறக்காதீர்கள். ஏன் என்றால் பாதாம் சாப்பிடுவதால் நமக்கு நிறைய நன்மைகள் இருக்கிறது. என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.


நிறைய பேர் பாதாம் சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். அதனால் அதிக உடல் பருமன் இதய நோய் எல்லாம் வரும் என்று தவறாக நினைத்து கொண்டிருக்கிறார்கள்.  அது தவறு. அதாவது பாதாம் நமக்கு பாதகம் இல்லாதது அதில் கொழுப்புச்சத்து இருக்கிறது உண்மைதான். ஆனால் அந்த கொழுப்பு சத்து நம்மளுடைய உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாத கொழுப்புச்சத்து. 


முதல் நாள் இரவு நான்கு பாதாம் பருப்பை எடுத்து தண்ணீரில் ஊற வைக்கவேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த பாதாமை அதன் மேல் உள்ள தோலை உரித்து விட்டு சாப்பிட வேண்டும். பாதாமில் மேல் தோலில் பைட்டிங் ஆசிட் இருக்கிறது. மேலும் நம்முடைய உடல் உணவில் இருக்கும் ஊட்டச்சத்தை உறிஞ்சுவதை அது தடுக்கிறது அதனால் உணவு செரிமானம் ஆகுவது தடை செய்யப்படுகிறது. பாதாமின் மேல் உள்ள தோலை உரித்து உள்ளே  வெண்மை நிறத்தில் இருக்கும் பருப்பினை மட்டும் நாம் சாப்பிட வேண்டும்.


  

நம்முடைய உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கவேண்டும்.  ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும் என்றால் ரத்தத்தில்  ஊட்டச்சத்துக்கள் சரியான விகிதத்தில் இருக்கவேண்டும். அதாவது வெள்ளை அணுக்கள் மற்றும் சிவப்பணுக்கள் சரியான முறையில் இருந்தது என்றால்  நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு மிகவும் உதவியாக இருக்கக்கூடியது பாதாம் பருப்பு. பாதாம் பருப்பு சாப்பிடும்போது உங்களுடைய உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.


 பாதாம் சாப்பிட்டால் இதய நோய் வரும் என்பது உண்மை அல்ல.  பாதாமில் கெட்ட கொலஸ்ட்ரால் துளி கூட கிடையாது நல்ல கொலஸ்ட்ராலான ஒமேகா 3 ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்து இருக்கிறது.  நம்முடைய உடலில் அனைத்து பகுதிகளிலும் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும். அதனால் இதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படக்கூடாது என நினைப்பவர்கள்


 பாதாம் பருப்பை சாப்பிட்டாலே போதுமானது.


நீரிழிவு நோயாளிகள் தினமும் ஊறவைத்த நான்கு பாதாம் பருப்பை சாப்பிடும்போது அவர்களுடைய ரத்தத்தில் கலந்து இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.


உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறப்பான ஒரு பொருள் தான் பாதாம் பருப்பு. தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஊற வைத்த நான்கு பாதாம் பருப்பை அதன் மேல் உள்ள தோலை நீக்கி விட்டு தினமும் தொடர்ந்து சாப்பிட்டு பாருங்கள்.  உங்களுடைய உடலில் சேர்ந்து இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பு எல்லாம் படிப்படியாக கரைந்து 



கொழுகொழு என்று இருக்கக்கூடிய தொப்பை கரையும். உடல் எடையும் மிக விரைவில் குறைய ஆரம்பிக்கும்.  


ஆண்களுக்கு அற்புதத்தை தரக்கூடியது பாதாம் பருப்பு. பாதாம் பருப்பில் நரம்புகளுக்கு நன்மை செய்யக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. ஆண்மை குறைபாடு மற்றும் மலட்டுத்தன்மையால் துவண்டு போய் இருக்கக்கூடிய ஆண்கள் பாதாம் பருப்பை தினமும் நான்கு மட்டும் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். நரம்பு தளர்ச்சி நோய்களை போக்கும் ஆண்மையை பெருக்கெடுக்க வைக்கும். 


கண்பார்வையை அதிகரிக்க கூடியது


கண் பார்வை குறைபாடு, கண் மங்குதல் மற்றும் கண் சம்பந்தப்பட்ட எந்த வியாதியாக இருந்தாலும்   தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு தண்ணீரில் ஊறவைத்த பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் உங்களுடைய கண் பார்வையில் மாற்றம் இருக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்ணாடி போட வேண்டிய அவசியம் இருக்காது. 


செரிமானம் 


பாதாம் பருப்பை தோல் நீக்காமல் சாப்பிட்டால் செரிமானம் ஆகாது. அதையே ஊறவைத்து  தோலை நீக்கி சாப்பிட்டால் சுலபமாக செரிமானம் ஆகும்.  


செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கிறவர்கள் குறிப்பாக குடல் சார்ந்த பிரச்சினை இருக்கிறவர்கள்  பாதாம் பருப்பை தினமும் சாப்பிட்டு வந்தால் குடல் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பிரச்சனையும் வராது. 



மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை மூலம் கழிப்பார்கள். குடலில் இருக்கும் கழிவுகளை தினமும் வெளியேற்றுவது அவசியம். கழிவுகளை வெளியேற்ற தினமும் நான்கு பாதாமை சாப்பிட்டால் அதிலிருக்கும் நார்ச்சத்து மற்றும் ஸ்ட்ராங் ஆன்டி ஆக்ஸிடென்ட் உங்கள் மலக்குடலில் இருக்கும் கழிவுகளை  தினமும் வெளியேற்றி குடலை சுத்தமாக வைத்திருக்கும். குடலில் கழிவுகள் தேங்கினால்    புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்கள் எல்லாம் வர ஆரம்பிக்கும்.


குடல் புற்றுநோய் வரக்கூடாது என நினைப்பவர்கள் தாராளமாக பாதாம் பருப்பை சாப்பிடுங்கள். குடல் புற்றுநோய் மட்டும் இல்லாமல் மார்பக புற்றுநோய், ப்ரோஸ்டேட் புற்றுநோய் போன்ற எந்த விதமான புற்றுநோயும் வராது.


ரத்தத்தில் சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களுடைய உற்பத்தியை அதிகப்படுத்தும்.  வெள்ளை அணுக்கள் குறைபாடு இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு வரும். நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு வராமல் இருக்க பாதாம் பருப்பு சாப்பிட்டாலே போதும். பாதாம் பருப்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.  ஜுரம் வைரஸ் தொற்றுக்கள் வரவிடாமல் தடுக்கும்.


பாதாம் பருப்பு சாப்பிட்டால் உங்களுடைய முகம் பளபளப்பாக இருக்கும். முகத்தில் வரக்கூடிய வறட்சி மற்றும் சுருக்கத்தை போக்கி முகத்தை பொலிவுடன் வைத்திருக்கும்.


பாதாமில் கால்சியம் சத்து நிறைய இருக்கிறது. கால்சியம் சத்து குறைபாடினால் எலும்புகள் மூட்டுகள் தேய்மானம் அடைந்து மூட்டு சார்ந்த பிரச்சனைகள் வரும். பாதாம் பருப்பு சாப்பிட்டால் தசைகள், நரம்புகள், எலும்புகள், மூட்டுகள் அனைத்தையும் பலப்படுத்தும். அதனால் எலும்பு சம்பந்தப்பட்ட எந்த ஒரு பிரச்சனையும் வராது.




பெண்கள் கர்ப்ப காலத்தில் இருக்கும் பொழுது பாதாம் பருப்பு சாப்பிட்டால் அவர்களுடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஊட்டச்சத்து குறைபாடு இருக்காது. அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தை என் மூளை வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். எலும்பு வளர்ச்சி கண் பார்வை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


பாதாம் பருப்பை ஊறவைத்து தோல் உரித்து தினமும் நான்கு சாப்பிட்டால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். இதை சிறியவர்கள் பெரியவர்கள் கர்ப்பிணிகள் அனைவரும் சாப்பிடலாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *