பழங்கள் சாப்பிடுவதில் செய்யும் 7 தவறுகள்

(Top 7 Mistakes in Eating Fruits Tamil)

இயற்கை நமக்கு அளித்த மிகப்பெரிய பரிசுப் பழங்கள் சாப்பிடுவது. மிகவும் ஆரோக்கியமானது என நம் எல்லோருக்குமே தெரியும். பொதுவாகப் பழங்களில் வைட்டமின்கள் மினரல்கள் தாது சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் என நம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களுமே  நிறைந்திருக்கிறது. இதனால்தான் பழங்களை ஒரு கம்ப்ளீட் புட் அதாவது நிறைவுற்ற உணவு என்று சொல்லுவார்கள். தினசரி ஒரு கப் பழங்கள் சாப்பிட்டு வந்தாலே பல்வேறு விதமான நோய்களிலிருந்து உடம்பை எளிதாகப் பாதுகாத்துக்கொள்ள முடியும். ஆனால் பலரும் பழங்களைத் தவறாகதான் சாப்பிடுகிறோம். பழங்கள் சாப்பிடுவதில் செய்யும் 7 தவறுகள்

பழங்கள் சாப்பிடுவதில் நாம் செய்யக்கூடிய ஏழு தவறுகள் என்ன என்று தெரிந்து கொள்வோம்

ஒன்று:  சாப்பிடும்போது பழங்கள் சாப்பிடுவது

பொதுவாக உணவு சாப்பிடும் போதோ அல்லது சாப்பிட்ட பிறகோ பழங்கள் சாப்பிடுவதை பலரும் வழக்கமாக வைத்திருப்பார்கள். இது முற்றிலும் ஒரு தவறான பழக்கம். ஏன் என்றால்

  பழங்கள் நாம் சாப்பிடும் தானிய உணவைவிட பல மடங்கு வேகமாக ஜீரணிக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் சீக்கிரமாகவே வயிற்றில்  பெர்மிட்டேஷன் பிராசஸ் நடக்க ஆரம்பித்துவிடும்.

இதன் விளைவாகப் புளித்த ஏப்பம் வயிறு உப்புசம் போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் மிக எளிதில் உண்டாகும். அது மட்டுமில்லாமல் பழங்கள் மிக எளிதாக  வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கக்கூடியது.

சோ நாம் சாப்பிடும் உணவை முழுமையாகச் சாப்பிட முடியாது. பழங்கள் சாப்பிடும்போது உணவைச் சாப்பிடக் கூடாது. உணவு சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து அல்லது உணவு சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகத் தான் பழங்களைச் சாப்பிடணும்.

இரண்டு:  தோல் நீக்கிய பழங்களைச் சாப்பிடுவது

Top 7 Mistakes in Eating Fruits

பொதுவாகப் பழங்களின் தோலை நீக்கி சாப்பிடுவது நல்ல ஒரு பழக்கம் தான். ஆனால் சில பழங்களுடைய தோல்களை நீக்கணும் என்று அவசியமில்லை. அப்படியே கூடச் சாப்பிடலாம். உதாரணமாக ஆப்பிள். ஆப்பிள் பழத்தைவிட அதன் தோலில் தான் அதிக சத்துக்கள் இருக்கிறது.

ஆனால் பலரும் ஆப்பிள் பழத்தினுடைய தோலை நீக்கிட்டு தான்  சாப்பிடுவார்கள். இது முற்றிலும் ஒரு தவறான பழக்கம். ஆப்பிள் போன்ற சிக்கு சப்போட்டா பேரிக்காய் போன்ற பழங்களையும் கூடத் தோலை நீக்கணும் அப்படின்னு  அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக உப்பு மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரில் பழங்களை நன்றாகக் கழுவி  சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது.

மூன்று:  பழச்சாறு குடிப்பது

 பலரும் தினமும் ஒரு ஃப்ரூட் ஜூஸ் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இது ஒரு தவறான பழக்கம். பழங்களில் உள்ள ஜூஸ் மட்டும் எக்சர்ட் பண்ணி எடுக்கும்போது பழங்களிலிருந்து கிடைக்கக்கூடிய சத்துக்களில் பாதியை இழக்க நேரிடும். அதிலும் குறிப்பாகச் செரிமானம் ஆவதற்கு உதவக்கூடிய டயட்ரிபைபர் சத்து சுத்தமா  கிடைக்காது.

அதுவும் ஜூஸாக குடிக்கும்போது செரிமானத்துக்கு தேவையான உமிழ்நீரும் போதுமான அளவுக்குக் கிடைக்காது. இதன் காரணமாக வைத்து தன்மையை  அதிக அளவில் உண்டாகி செரிமான கோளாறுகளை உண்டாக்கும். அதுமட்டுமில்லாமல் இரத்தத்தில்  சர்க்கரையின் அளவும் வேகமாக  அதிகரிக்கும். சோ கூடுமானவரைக்கும் பழங்களை முழுமையாக மெதுவாக மென்று சாப்பிடுவது மிகவும் நல்லது. பழங்களிலிருந்து கிடைக்கக்கூடிய முழு பலனும் நமக்குக் கிடைக்கும்.

உடல் எடையை குறைக்கும் 10 விதமான காய்கறிகள்

நான்கு:  குளிர்சாதனப்பெட்டியில் பழங்களை வைத்து உண்ணுதல்

 பொதுவாகப் பழங்கள் சீக்கிரம் கெட்டுப் போகக் கூடாது என்பதற்காக ஃப்ரிட்ஜில் பழங்களை  வைப்போம். ஆனால் பழங்களைப் பிரிட்ஜில் ஸ்டோர் பண்ணும்போது பழங்களுடைய இயற்கையான மனமும் அதன் சுவையும் சுத்தமாக இல்லாமல்  போய்விடும். அது மட்டுமில்லாமல் அதனுடைய சத்துக்களும் கூடக் குறைய ஆரம்பிச்சுடும்.

பழங்களைப் பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாகச் சாப்பிடும்போது அது தொண்டை உணவுக் குழாய் மற்றும் இறப்பை போன்ற இடங்களில்  குளிர்ச்சியை உண்டாக்குவதோடு பாதிப்பையும் மிக எளிதாக  உண்டாக்கும். சோ பிரிட்ஜில் வைத்த பழங்களைக் கூடுமானவரை தவிர்த்துவிட்டு பழங்களைப் பிரஷாக சாப்பிடுவது மிகவும் நல்லது.

பழங்கள் சாப்பிடுவதில் செய்யும் 7 தவறுகள்

ஐந்து: வெட்டி வைத்த பழங்களை நேரம் கடந்து சாப்பிடுவது

பொதுவாகப் பழங்களைக் கட் பண்ணிட்டோம் என்றால் எவ்வளவு சீக்கிரம் சாப்பிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சாப்பிடுவது மிகவும் நல்லது. பழங்களைக் கட் பண்ண பிறகு ரொம்ப நேரம் வைத்திருந்தோம் என்றால் அதிலே இருக்கின்ற நியூட்ரிசன் வேலையும் குறைய ஆரம்பித்துவிடும். அது மட்டுமில்லாமல் அதிலே  ஜெம்ஸ்  பாம் ஆகி சீக்கிரமே கெட ஆரம்பிக்கும். சோ பழங்களைக் கட் பண்ணி 10 லிருந்து 20 நிமிஷத்துக்குள் சாப்பிடறது மிகவும் நல்லது.

ஆறு: நம் இடங்களில் கிடைக்கும் பழங்களைச் சாப்பிடாதது.

 நம் இடங்களில் விளையக்கூடிய பழங்களை மக்கள் பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து வாங்குவதில்லை. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யக்கூடிய கிவி பெரி பழங்கள் பெரிய திராட்சை மற்றும் வண்ண வண்ண கலரில் கிடைக்கக்கூடிய ஆப்பிள் வகைகள் போன்றவற்றை தான் மக்கள் பெரிதும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

தினை அரிசியின் மருத்துவ பயன்கள்

ஆனால் நம் இடங்களில் நம் உடலின் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்பக் கிடைக்கக்கூடிய பப்பாளி மாதுளை பன்னீர் திராட்சை சீதா பழம் போன்ற பழங்களில் நம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களுமே அடங்கி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் பழங்களைப் பிரஷ்ஷாக வாங்க முடியும். பழங்கள் சாப்பிடுவது நம் உடலுக்கு மட்டுமல்ல நம்முடைய விவசாயிகளுக்கும் நன்மை பயக்கும்.

ஏழு: இரவு நேரங்களில் பழங்கள் சாப்பிடுவது

இரவு நேரங்களில் பழங்கள் சாப்பிடுவது ஒரு தவறான பழக்கம் என்று சொல்ல முடியாது. பொதுவாக இரவில் உணவு செரிமானம் ஆவதின் வேகம் குறைவாக இருக்கும். இரவில் பழங்களை அதிகமாகச் சாப்பிட்டோம் என்றால் வயிற்றில் அமிலத்தன்மை  அதிகரிக்கும். இதன் விளைவாகச் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் மட்டுமில்லாமல் தூக்கமின்மை போன்ற பிரச்சனையும் கூட ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

இது மட்டுமில்லாமல் பழங்களில் கலோரிகள் மிகவும் அதிகம். அதனால் இரவில் பழங்கள் சாப்பிடும்போது அது உடல் எடையையும்  வேகமாக அதிகரிக்கும். சோ பழங்களைப் பகல் நேரத்தில் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் காலை வெறும் வயிற்றில் முதல் உணவாகப் பழங்களைச் சாப்பிட மிகுந்த பலனைக் கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *