பல்லி விழும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

அனைவருக்கும் வணக்கம் நம்மை சுற்றியுள்ள பறவைகள் விலங்குகள் சிறு உயிரினங்கள் ஆகியவற்றின் செயற்பாடுகள் நமக்கு வரவிருக்கும் நல்ல அல்லது கெட்ட நிகழ்வுகளை நமக்கு உணர்த்துகின்றன. இதையே நாம் சகுனம் என்று கூறுகிறோம். நம் எல்லோர் வீட்டிலும் இருக்கக்கூடிய ஒன்று பல்லி. நம் உடலில் ஏதாவது ஒரு இடத்தில் பல்லி விழுந்தால் அது நல்லதா இல்லை கெட்டதா சாஸ்திர விதிகள் என்ன கூறுகின்றன. பல்லி விழும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

இன்றைய பதிவில் பல்லி நம் உடலில் விழுந்தால் ஏற்படும் பலன்கள் மற்றும் அதற்குரிய பரிகாரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

பல்லி என்பது நவக்கிரகங்களில் ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேது பகவானை குறிக்கிறது. முதலில் பல்லி நம் தலை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் விழுந்தால் என்ன அறிகுறி என்பதை காண்போம். பல்லி தலையில் விழுவது கெட்ட சகுனத்தை குறிக்கின்றது. மற்றவர்களுடன் பிரச்சனை ஏற்படுதல் மனதில் குழப்பம் உறவினர் அல்லது நெருங்கியவர்களின் மரணம் ஆகியவற்றை குறிக்கிறது. எனவே எச்சரிக்கை அவசியம். ஆனால் அதுவே தலைமுடியில் பட்டு விழுந்தால் நன்மை ஏற்படுவதை குறிக்கும்.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் வைத்திருக்கக்கூடாத இறந்தவர்களின் பொருட்கள்

நெற்றியின் இடது பகுதியில் விழுந்தால் புகழ் அல்லது கீர்த்தி மற்றும் வலது பகுதியில் விழுந்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். 

முகத்தில்பல்லி விழுந்தால் உறவினர்கள் வீட்டுக்கு வருவதை குறிக்கும்.

புருவத்தில் பல்லி விழுந்தால் அரசாங்க உயர் பதவியில் இருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். 

இடது கண் பக்கம் பல்லி விழுந்தால் சுகம் மற்றும் வலது கண் பக்கம் விழுந்தால் தண்டனை கிடைக்கும்.

மூக்கின் மீது விழுந்தால் நோய் அறிகுறி கவலை உண்டாகும். 

வலது காதின் மீது விழுந்தால் நல்ல ஆயுளும் இடது காதின் மீது விழுந்தால் வியாபார உயர்வும் உண்டு. 

கழுத்தின் இடது பகுதியில் பல்லி விழுந்தால் காரிய வெற்றி வலது பகுதியில் விழுந்தால் பகை உண்டாகும்.

பல்லி விழும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்
பல்லி விழும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

மார்பின் இடது பகுதியில் பல்லி விழுந்தால் சுகம் வலது பகுதியில் விழுந்தால் லாபம் உண்டாகும். 

வயிற்றுப் பகுதியில் விழுந்தால் தானிய லாபம் ஏற்படும். 

தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால் விலை மதிப்பு மிக்க பொருட்களான தங்கம் வைரம் போன்றவற்றை வாங்க வாய்ப்பு உண்டு. 

தோலின் இடது பகுதியில் விழுந்தால் சுகபோகம் வலது பகுதியில் வெற்றி உண்டாகும். 

இடது கை மணிக்கட்டில் விழுந்தால் அன்றைய தினம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

வலது மணிக்கட்டு பகுதியில் விழுந்தால் உடல்நலம் பாதிக்கப்படலாம்.

வலது கை விரல்கள் லாபத்தையும் இடது கைவிரல்கள் நட்பில் விரிசல் ஏற்படும் என்பதையும் குறிக்கும். 

இதையும் படிக்கலாமே:
ஏழு குதிரை வாஸ்து படம் தப்பித்தவறி கூட இந்த திசையில் வைக்காதீர்கள்

முதுகு பகுதியில் விழுந்தால் கவலை மற்றும் துன்பம் ஏற்படலாம். 

தொடை பகுதியில் பல்லி விழுந்தால் பெற்றோர் அல்லது வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்கு தீமை ஏற்பட வாய்ப்பு உண்டு. 

முழங்கால் இடது பகுதியில் பல்லி விழுந்தால் சுகம் வலது பகுதியில் விழுந்தால் பிரயாணம் ஏற்படும். 

பாதத்தின் இடது பகுதியில் பல்லி விழுந்தால் துக்கமும் வலது பகுதியில் பல்லி விழுந்தால் நோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. 

இடது பாதவிரலில் விழுந்தால் நோய் மற்றும் வலது பாதவிரலில் விழுந்தால் பயம் உண்டாகும். 

இது தவிர பல்லி உங்கள் உடலில் ஓடினால் உங்களுக்கு தீர்க்க ஆயுள் என்று அர்த்தம். 

இப்போது பல்லி உடலின் எந்த பாகத்தில் விழுந்தால் என்ன நேரும் என்பதை பார்த்தோம். அப்படி உங்களின் உடலில் பல்லி விழுந்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்பற்றி காண்போம்.

இதையும் படிக்கலாமே:
தீராத கஷ்டங்கள் தீர குலதெய்வ கோவிலுக்கு இந்த பொருளை வாங்கி கொடுங்கள்

முதல் வேலையாக உடனே குளித்து விடுங்கள். அதன் பின் உங்களின் பூஜை அறைக்குச் சென்று விளக்கேற்றி உங்கள் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களிடம் உங்களுக்கு எந்த பாதிப்பும் நேரக்கூடாது என்று வேண்டிக் கொள்ளுங்கள். நேரம் இருந்தால் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று இறைவனை வழிபடுவது நல்லது. வாழ்வில் ஒரு முறையாவது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பல்லியின் சிலையை தொட்டு வணங்குங்கள். அதன் அருகில் சூரியன் மற்றும் சந்திரன் சித்திரத்தையும் காணலாம். இது முன்பு ஏற்பட்ட அல்லது வரவிருக்கும் பல்லி தோஷங்களுக்கு நல்ல தீர்வாக அமையும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *