பணத்தை ஈர்க்கும் 7 அதிர்ஷ்ட செடிகள்.
(lucky plants for money in tamil)
பணத்தை ஈர்க்கக்கூடிய காந்தமாக செயல்படக்கூடிய ஏழு செடிகளை பற்றி தெரிந்து கொள்வோம். ஏழு செடிகளில் ஓன்று அல்லது இரண்டு செடிகள் இருந்தாலே உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் இருக்காது சந்தோஷமும் மகிழ்ச்சியும் உங்கள் வீட்டில் நிரந்தரமாக இருக்கும் .முன்பெல்லாம் அனைவருடைய வீட்டிலும் நிறைய செடிகளை பார்த்து இருப்பீர்கள். பூச்செடிகள் வாழைமரம் மாதிரி நிறைய வைத்திருப்பார்கள். ஆனால் இப்பொழுது இருக்கும் அவசர வாழ்க்கையில் நம்மால் அதெல்லாம் வைத்து வளர்க்க முடியவில்லை. முக்கியமாக நகரத்தில் இடம் கிடையாது. இருந்தாலும் இப்பொழுது உங்களிடம் சிறிய இடம் இருந்தாலும் அது கூட இல்லையென்றாலும் தொட்டியில் கூட இந்த செடிகளை நீங்க வளர்க்கலாம்.
இந்த செடிகளை வளர்த்து வந்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும். இப்போது நீங்கள் குடியிருக்கும் இல்லங்களில் வாஸ்து முறைப்படி என்னென்ன செடிகளை வளர்க்கலாம் என்று தெரிந்து கொள்வோம்.
வாடாமல்லி
முக்கியமாக வாஸ்து படி உங்களோட வீட்டில் வாடாமல்லி செடியை வளர்த்தீர்கள் என்றால் மிகவும் சிறப்பு. மலர் வகைகளிலேயே வாடாமல் இருக்கும் தன்மை கொண்ட பூ வாடாமல்லி என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
வாஸ்து ரீதியாக வாடாமல்லி செடியை வீட்டில் வளர்த்து வந்தால் உங்களுடைய வீட்டில் நேர்மறை எண்ணங்கள் வளரும். நல்ல ஒரு பாசிட்டிவ் வைப் இருக்கும், அது மட்டுமில்லாமல் அதிர்ஷ்டம் எங்கே இருந்தாலும் வரும். வாடாமல்லி செடிக்கு உங்களுடைய வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும் பணவரவையும் கொண்டு வந்து சேர்க்கக்கூடிய ஒரு சக்தி இருக்கிறது. அதனால் இத்தனை நாள் நீங்கள் வாடாமல்லி செடியை வளர்க்காமல் இருந்தாலும் இனிமேல் ஒரே ஒரு வாடாமல்லி செடி மட்டும் வாங்கி வந்து உங்கள் வீட்டில் வளர்த்து பாருங்கள் கண்டிப்பாக உங்களோட வீட்டில் இன்றைக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் விலகி மிகப்பெரிய அளவில் செல்வமும் அதிர்ஷ்டமும் உங்கள் வீட்டில் இருக்கும் என்பது உண்மை.
இது பல பேர் அவர்கள் வீட்டில் வளர்த்து அவர்களுக்கு நிறைய வெற்றி கிடைத்திருக்கிறது. அதனால நீங்களும் வளர்த்தால் கண்டிப்பாக உங்கள் வீட்டிலும் அதிர்ஷ்டம் பெருகும். நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியது வாடாமல்லி செடி.
இதையும் படிக்கலாமே ; சிறுநீரக கல் கரைய உணவுகள்
கோழிகொண்டை செடி
வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் கட்டாயமாக நாம் வளர்க்க வேண்டிய செடிகளில் ஒன்று கோழிகொண்டை செடி. கோழிக்கொண்டையும் வாடாமல்லி போலவே வாடாத நிலை கொண்ட செடி ஆகும். கோழிக்கொண்டை செடியை வீட்டில் வளர்த்து வந்தால் அந்த பூவை பூஜை அறைக்கும் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கும் தேவைப்படும் மாலைகளுக்கு இந்த பூவை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பூவும் உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் கொண்டு வந்து தரக்கூடிய மிகப்பெரிய சக்தி வாய்ந்த பூ. இது லட்சுமி கடாட்சம் கொண்ட பூ. அதனால் கோழி கொண்டை செடியை உங்கள் வீட்டில் வளருங்கள்.
சங்கு பூ
அனைவருக்கும் தெரிந்த மிகவும் அழகான ஒரு பூ சங்குப்பூ. சங்குப்பூவில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று நீல நிறமும் மற்றொன்று வெள்ளை நிறத்தையும் சேர்ந்தவையாகும். சங்குப்பூ உங்கள் வீட்டுக்கு மிகவும் அழகாக இருக்கும். அழகு சேர்க்கக்கூடிய பூவாகத்தான் இருக்கும் நீளம் அல்லது வெள்ளை நிறம் கொண்ட சங்குப்பூ. சிவன் மற்றும் விநாயகப் பெருமாளுக்கு உகந்த மலராகும். இந்த பூவினை நீங்கள் வீட்டில் வளர்த்து வந்தால் உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டம் அதிக அளவில் வந்து சேரும். உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் விலகி உங்களுக்கு செல்வ செழிப்பும் ஐஸ்வரியமும் கிடைக்கும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கக்கூடிய மிகப்பெரிய உண்மையாகும்.
அதிகமான வீடுகளில் சங்குப்பூ வளர்த்து இருப்பார்கள். அதில் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் நீல நிற பூவை தான் பெரும்பான்மையாக வளர்த்து இருக்கிறார்கள். ஏன் என்றால் அது அவர்களுக்கு நல்ல நேர்மறையான அதிர்வலைகளை குடுக்கிறதினால் தான். அதே போல நீங்களும் உங்க வீட்டில் கண்டிப்பாக சங்குப்பூ வளருங்கள் உங்களுக்கும் நல்ல வெற்றிகரமான வாழ்க்கை கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே ; 15 நாளில் சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும் அற்புத ஜூஸ்,இன்சுலின் தேவைபடாது.
துளசி
துளசி செடியினால் நிறைய நன்மைகள் இருக்கிறது. முக்கியமாக அனைவருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய செடி துளசி செடி.துளசி மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது.வாஸ்து செடியான துளசி செடியினை நீங்கள் வீட்டில் வளர்த்து வரலாம் இந்த
துளசியை சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அது மட்டும் இல்லாமல் அதிர்ஷ்டமும் நம் வீட்டுக்கு நிறைய கிடைக்கும். துளசி செடி ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது. அதனால தான் முன்பெல்லாம் வீட்டின் நடு முட்டத்தில் துளசி செடிய வளர்த்து வந்தார்கள். துளசி செடியில் வாஸ்து மட்டும் இல்லை மருத்துவ பலன்களும் நிறைய இருக்கிறது. அதனால் தான் ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவத்தில் முக்கியமான பொருளாக துளசி செடியை பயன் படுத்துகிறார்கள். புற்றுநோய், மாரடைப்பு, இதய நோய்கள், ஆரோக்கியமான சருமம், புகை பிடிப்பதை நிறுத்துவது போன்றவைகளுக்கு மருந்து செய்வதற்கு துளசியை பயன் படுத்துகிறார்கள்.
துளசி செடி உங்கள் வீட்டில் இருந்தால் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதன் மூலம் உங்க வீட்டுக்கும் உங்களுக்கும் நல்ல நல்ல விஷயங்கள் நடக்கும். யார் வீட்டில் துளசி செடி இருக்கிறதோ அந்த குடும்பம் ரொம்ப சந்தோஷமாகவும் செல்வகரமாகவும் லட்சுமி கடாட்சத்துடன் இருக்கும்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி துளசி மிகவும் மங்களகரமான தாவரமாகும் இத்தனை நாள் உங்க வீட்டில் துளசி செடி இல்லை என்றால் ஒரு துளசி செடி வாங்கி அதை மாடத்தில் வைத்து வளருங்கள். துளசி செடி வளர்ப்பதற்கு நிறைய சாஸ்திர சம்பிரதாயங்கள் உண்டு அதெல்லாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். துளசி செடியை வளர்ப்பதினால் மிகப்பெரிய வெற்றி வந்து சேரும்.
மூங்கில் செடி
பாம்பு ட்ரீ என்பது எல்லாருக்கும் தெரியும் லக்கி பாம்பு அதாவது மூங்கில் செடி. இது நிறைய வீட்டில் இருக்கிறது. நிறைய பேர் வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள் லக்கி பாம்பு ட்ரீ நீங்கள் வளர்ப்பதினால் என்ன பலன் கிடைக்கும் என்றால் உங்களுடைய வீட்டில் சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். பாம்பு ட்ரீ கார்பன் டை ஆக்சைடை எடுத்து கொண்டு ஆக்ஸிஜன் நிறைய கொடுக்கும்.
இது மட்டும் இல்லாமல் நீங்கள் அந்த மூங்கில் செடி வளர்த்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் செல்வ வளம் அதிகமாக இருக்கும். இந்த மூங்கில் செடி வீட்டில் மட்டும் இல்லை நீங்க உங்களுடைய அலுவலகத்திலும் வைத்துக்கொள்ளலாம். உங்களுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கும். நீங்கள் நல்ல செல்வ செழிப்போட வாழவேண்டும் என்று நினைத்தால் உங்கள் வீட்டில் மூங்கில் செடியை வளர்ப்பது நல்லது. மூங்கில் செடியை பாக்கும்போதெல்லாம் உங்களுக்கு நேர்மறை எண்ணம் வளரும். மூங்கில் செடி நேர்மறை ஆற்றலையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் உங்களுக்காக ஈர்த்துக் கொண்டு வரும். நீங்கள் அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தேடுகிறீர்கள் என்றால் உங்களுடைய வீட்டின் நுழைவாயிலின் பக்கத்தில் வைக்க வேண்டும்.
இதுவரை உங்கள் வீட்டில் மூங்கில் செடி இல்லை என்றால் இப்பொழுது வாங்கி வையுங்கள். வாங்கும்போது அதில் இருக்கும் கணு எத்தனை எண்ணிக்கை இருக்க வேண்டும் என்றால் எட்டு அல்லது ஒன்பது எண்ணிக்கையில் இருப்பது போல வாங்கிக் கொள்வது அதிர்ஷ்டத்தை உங்கள் வீட்டிற்கு கொண்டுவரும்.
இதையும் படிக்கலாமே ; இரவில் இதை செய்தால் பகலில் முகம் ஜொலிக்கும்.
செம்பருத்தி செடி
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செம்பருத்தி செடியை வீட்டில் வளர்த்து வர செவ்வாய் தோஷம் நீங்கும். மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் செம்பருத்தி பூ மகாலட்சுமிக்கு ரொம்ப உகந்த பூ. அதனால் செம்பருத்தி செடியினை உங்கள் வீட்டில் வளர்த்து வந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டமும் ஐஸ்வரியமும் வீட்டில் இருக்கக்கூடிய பணக்கஷ்டமும் தீரும் என்கிறது சாஸ்திரம். செம்பருத்தி செடி உங்கள் வீட்டில் வளர்க்கப் பாருங்கள்.
மணி பிளான்ட்
அதிகமானவர்கள் வீட்டில் மணி பிளான்ட் வளர்க்கிறார்கள். மணி பிளான்ட் எதற்க்காக வளர்க்கிறார்கள். உங்களுக்கு நிறைய கடன் இருக்கிறது என்றால் நீங்கள் தாராளமாக மணி பிளான்ட் வளர்க்கலாம். மணி பிளான்ட் உங்கள் வீட்டின் வடக்கு பக்கத்தில் வைத்து வளர்க்காதீர்கள். கிழக்கு திசையில் பார்த்து வளருங்கள். நல்ல கொடி மாதிரி வளரும் தாராளமாக நீங்கள் வளர்க்கலாம் எவ்வளவு பெரிய கொடியாக அது வளர்கிறதோ அந்த அளவுக்கு உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் நீங்கி கடன் தொல்லைகள் எல்லாம் நீங்கி உங்களோட வீட்டில் செல்வ வளம் அதிகரித்து காணப்படும்.
அந்த அளவிற்க்கு மணி பிளான்ட் ரொம்பவே உங்களுக்கு (Success full result) வெற்றிகரமான முடிவை கொடுக்கும். வீட்டில் இருக்கும் கஷ்டம் எல்லாம் நீங்கி ஐஸ்வர்யம் உண்டாகும்.