(Top 10 immunity boosting foods)
நோய் எதிர்ப்புச் சக்தி என்றால் என்ன?
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க சாப்பிடவேண்டிய 10 வகையான உணவுகள். நம் உடலைப் பாதிக்கக்கூடிய வைரஸ் மற்றும் பாக்டீரியாவிடமிருந்து நம்மைப் பாதுகாக்கக்கூடிய ஒரு அமைப்புதான் நோய் எதிர்ப்புச் சக்தி. இந்த நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருக்கும்போது தான் பிற நோய்கள் எளிதில் நம்மைத் தொற்றிக் கொள்ளும். ஆனால் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க தேவையான சத்துக்கள் அடங்கிய உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடும்போது நோய் எதிர்ப்புச் சக்தியை மிக எளிதில் அதிகரிக்க முடியும். உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க அவசியமான சத்துக்கள் என்னவென்றால் விட்டமின் சி, இ, டி, விட்டமின் ஏ, ஜிங், ஒமேகா 3, இரும்புச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் தான் நோய்கள் சக்தி அதிகரிக்க தேவையான அடிப்படை சத்துக்கள்.
இந்தச் சத்துக்கள் அடங்கிய உணவுகள் என்னென்ன?
ஒன்று: சிட்ரஸ் பழங்கள்
இதையும் படிக்கலாமே: ஆரோக்கியமற்ற உணவு சேர்க்கை
சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களில் விட்டமின் சி இருக்கிறது. விட்டமின் சி ரத்தத்தில் இருக்கக்கூடிய வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதன் மூலமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும். சோ தினமும் சிட்ரஸ் பழங்களைச் சாப்பிடுங்கள்.
நெல்லிக்காயிலும் விட்டமின் சி இருக்கிறது. சொந்த நெல்லிக்காயை நீங்கள் சாப்பிட்டு வரலாம். இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
இரண்டு: கீரைகள்
விட்டமின் சி மட்டுமில்லாமல் விட்டமின் ஏ, ஜிங், பொட்டாசியம் மற்றும் அளவுக்கு அதிகமான இரும்புச்சத்து அடங்கி இருக்கு. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க தேவையான அனைத்து அடிப்படை சத்துக்களும் கீரையில் அடங்கி இருக்கு. சோ மதிய உணவுகளில் தினமும் கீரை இருக்குமாறு பார்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
மூன்று: முட்டை
முட்டையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கு. இதில் இருக்கக்கூடிய வைட்டமின் டி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மிகவும் அவசியமான ஒரு சத்து. இதில் இருக்கக்கூடிய புரதம் உடலில் புதிய செயல்கள் உருவாவதற்கும் ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதுக்கும் உதவி செய்கிறது. தினமும் ஒரு முட்டையைச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க முடியும்.
நான்கு: மஞ்சள்
ஒரு இயற்கையான ஆன்டிபயாட்டிக் என்று நம் எல்லாருக்குமே தெரியும். மஞ்சளில் இருக்கக்கூடிய குர்குமின் எனும் வேதிப்பொருள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மிக வேகமாக அதிகரிக்க உதவி செய்கிறது. இதன் மூலமாக வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற தொற்று கிருமிகளினால் உண்டாகக்கூடிய காய்ச்சல் சளி இருமல் போன்ற பிரச்சனைகள் வராமலும் தடுக்கும்.
சமைக்கும் உணவுகளில் அதிக அளவு மஞ்சள் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. நோய் எதிர்ப்புச் சக்தியை வேகமாக அதிகரிக்க உதவி செய்யும். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் மஞ்சள் கலந்து வெறுமையாகவும் குடித்து வரலாம். இதன் மூலமாகவும் நோய் எதிர்ப்புச் சக்தியை வேகமாக அதிகரிக்க முடியும்.
ஐந்து: பூண்டு
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவங்களில் தலைவலி முதல் புற்றுநோய்வரை பல நோய்களைக் குணமாக்க பூண்டு பயன்படுகிறது. உடலைப் பாதிக்கக்கூடிய வைரஸ் மற்றும் பாக்டீரியாவை நேரடியாக எதிர்க்கும் ஆற்றல் இந்தப் பூண்டிற்கு உண்டு. பூண்டில் இருக்கக்கூடிய வேதிப்பொருட்கள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உதவி செய்யும். சமைக்கும் உணவுகளில் பூண்டினை அதிகம் சேர்த்து வருவது மிகவும் நல்லது.
ஆறு: பாதாம்
பாதாமில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க தேவையான வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் இருக்கிறது. இது ரத்தத்தில் இருக்கக்கூடிய வெள்ளை அணுக்களைத் தூண்டி நோய் எதிர்ப்புச் சக்தியை வலுவாக்கும். இதன் மூலமாகத் தொற்று நோய்கள் வருவதும் தடுக்கப்படும்.
ஏழு: கிரீன் டீ,
கிரீன் டீயில் கேட்டசீன்ஸ் என்ற ஆன்டிஆக்சிடென்ட் இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். இதன் மூலமாக வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் வராமல் தடுப்பது மட்டுமில்லாமல் புற்றுநோய் மற்றும் இருதய பாதிப்புகள் வராமலும் பாதுகாக்கிறது கிரீன் டீ. மற்ற டீக்களுக்கு பதிலாகக் கிரீன் டீ எடுத்துக்கறது மூலமாகவும் நோய்கள் சக்தியை அதிகரிக்க முடியும்.
எட்டு: சின்ன வெங்காயம்
வெங்காயத்தில் இருக்கக்கூடிய செலினியம் என்னும் தாதுச்சத்து உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டி பல மடங்கு அதிகரிக்க உதவி செய்கிறது மற்றும் சின்ன வெங்காயத்தில் இருக்கக்கூடிய அலிசின் எனும் வேதிப்பொருள் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை அழிப்பது மட்டுமில்லாமல் உடலின் நச்சு கழிவுகளையும் வெளியேற்றி உடலைத் தூய்மையாக்குறது. சமைக்கும் உணவுகளில் சின்ன வெங்காயத்தை அதிகம் சேர்க்கிறதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க முடியும்.
ஒன்பது: தயிர்
தயிரில் நன்மை செய்யக்கூடிய ப்ரோபயாடிக் என்னும் பாக்டீரியாக்கள் இருக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்ஸைம்மான இமினோகுளோபினை அதிக அளவு சுரக்கச் செய்யும் இதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். சோ மதிய உணவுகளில் தயிர் சேர்த்துக் கொள்வதன் மூலமாகவும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.
பத்து: பப்பாளி பழம் மற்றும் காரட்
பப்பாளி பழம் மற்றும் கேரட்டில் கரோட்டினாய்ட் என்னும் வைட்டமின் ஏ நல்லளவில் இருக்கிறது. இது நோய் எதிர்ப்புச் சக்தியை விரைவாக அதிகரிக்கும் மற்றும் பப்பாளியில் இருக்கக்கூடிய பப்பைன் என்னும் வேதிப்பொருள் செரிமானத்திற்கும் உதவி செய்யும். வயிற்றில் இருக்கக்கூடிய கெட்ட பாக்டீரியாவையும் அழிக்கும்.