நுரையீரல் சளியை வெளியேற்ற அற்புதமான வீட்டு வைத்தியம்

 

மார்பில் சளி, இருமல், தொண்டையில் கரகரப்பு ஒரு சிட்டிகையில் மாயமாகும்.


(Cough and Cold Home Remedies}



நண்பர்கள் அனைவரையும் அதிகன் தமிழ் அன்புடன் வரவேற்கிறது.


அனைத்து காலங்களிலும் வயது வித்தியாசம் இல்லாமல் சிறியவர் பெரியவர்கள் அனைவருக்கும் வரக்கூடிய பொதுவான ஒன்று சளி, இருமல் மற்றும் ஜலதோஷம். இந்தப் பிரச்சினைகள் வந்து விட்டால் தொடர்ந்து தொண்டை வலி தொண்டை கரகரப்பு வந்துவிடும்.

மார்பில் அளவிற்கு அதிகமாக சளி தேங்கி இருந்தால் உங்களுக்கு இருமல் அதிகமாக இருக்கும். அதனைப் போக்க வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு 100% இயற்கை முறையில் செய்யக்கூடிய  கசாயம் தயாரித்து ஒரு முறை மட்டும் குடித்தால் உங்களுக்கு 

இருக்கக்கூடிய நாள்பட்ட சளி, இருமல், தொண்டை கரகரப்பு மற்றும் ஜலதோஷம் அனைத்தும் குணமாகும். உங்களுடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைத்து சளி, இருமல் போன்றவைகளை தடுக்கும் கசாயத்தை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

பலரும் நினைப்பது போல் மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் வெயில் காலத்திலும் தான் சளி இருமல் ஜலதோஷம் போன்றவைகள் வரும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் நமக்கு எப்பொழுதெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறதோ அப்பொழுதே வெளிப்புறத்தில் இருக்கக்கூடிய வைரஸ் பாக்டீரியாக்கள் நம் உடலில் புகுந்து நுரையீரலை தாக்கி சளி இருமல் தொண்டை கரகரப்பு போன்றவைகளை  உண்டு பண்ணும்.


இதையும் படிக்கலாமே :உங்கள் வயிற்று பகுதியில் இருக்கும் கொழுப்பை சுலபமாக குறைக்க…



கோடை காலம் முடிந்து காற்றடிக்கும் காலம் துவங்கும் போது மாலையில் குளிர்ந்த காற்று வீசும். அதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த சளி, இருமல், ஜலதோஷம் போன்ற தொந்தரவு வந்துவிடும். இதுபோன்ற தொந்தரவுகள் உங்களுக்கு இருக்கிறது என்றால் இதில் கூறப்பட்டிருக்கும் நான்கு பொருட்களை கொண்டு கஷாயத்தை தயாரித்து நான்கு நாட்கள் குடித்து வந்தால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகி அதனால் உடலில் எந்தவிதமான நோய்தொற்றுகளும் வராது. உங்கள் உடலில் சேர்ந்து இருக்கக்கூடிய சளி வாய் வழியாகவோ அல்லது மனம் வழியாகவோ வெளியேறுவதை நீங்களே காணலாம்.

கசாயம் எப்படி செய்வது?

ஒரு பாத்திரத்தில் 250ml தண்ணீர் ஊற்றி மூன்று பூண்டு பற்களை எடுத்து தோல் உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


பூண்டு



பூண்டில் அதிக அளவில் ஆன்டி பாக்டீரியல், ஆன்டிவைரல், ஆன்ட்டி ஃபங்கர்ஸ் பிராபர்டீஸ் நிறைந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின் சி சத்து இருக்கிறது. மேலும் நிறைய ஊட்டச்சத்துக்களும் நிறைந்து இருக்கிறது.

நாம் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால்  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி, இருமல், ஜலதோஷம், தொண்டை கரகரப்பிற்கு காரணமாக இருக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ் பங்கஸை அழித்து வெளியேற்றும். உங்களை எப்பொழுதும் பாதுகாப்பாக வைத்திருக்க கூடியது. அதனால் இந்த பானத்திற்கு பூண்டு பல் சேர்த்திருக்கிறது. 


கருமிளகு 



நம்முடைய வீட்டில் எப்பவும் தவறாமல் இருக்கக்கூடியது கருமிளகு. ஒரு அஞ்சு கருமிளகு எடுத்து அதை  சிறிய உரலில் போட்டு ஒன்று இரண்டாக தட்டி சேர்க்கவும். கருமிளகு கபத்தை குணமாக்க கூடியது. கரைத்து வாய் வழியாகவோ அல்லது மலம் வழியாகவோ வெளியேற்றக் கூடியது. 

கருமிளகு உங்களுடைய நெஞ்சுக்குழியில் சேர்ந்து இருக்கக்கூடிய எவ்வளவு கெட்டியான சளியாக இருந்தாலும் அதை இலக்கி வெளியேற்றும். நுரையீரல் மூச்சு திணறல், மூச்சுக்குழாய் அலர்ஜி போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் தரக்கூடியது. உங்களுடைய நுரையீரல் என்றைக்குமே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் கருமிளகை தவறாமல் சேர்த்து வரவேண்டும்.  கருமிளகு ஐந்து சேர்த்து கொள்ளவும்.

கருமிளகு உங்களுடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணும். தொண்டை கரகரப்பு, தொண்டை புண், சளி, இருமல், ஜலதோஷம், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வரவிடாமல் உங்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


துளசி 



பத்து துளசி இலைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். நல்ல பிரஷ்ஷா இருக்கக்கூடிய துளசி இலைகளை எடுத்து வந்து அதை தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி சேர்த்து கொள்ளவும்.

துளசி ஒரு அற்புதமான மூலிகை.   சளியை ஒட்டுமொத்தமாக இழக்கும் நீங்கள் எவ்வளவு நாள் இருமலால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலும் அதற்கு  மூன்று துளசி இலையை வெறுமனே வாயில் போட்டு மென்று சாப்பிட்டாலே போதும். உங்களுடைய இருமலுக்கு பத்து நிமிடத்தில் நிவாரணம் கிடைக்கும். இருமலை தணிக்க கூடிய அற்புதமான மூலிகை.

ஜலதோஷம், தலைவலி, காய்ச்சல் இருக்கிறவர்களுக்கு நல்ல ஒரு நிவாரணம் தரக்கூடியது. உங்களுடைய நுரையீரலை சுத்தப்படுத்தக்கூடியது. ஆஸ்துமா, மூச்சு திணறல், மூச்சுக்குழாய் அலர்ஜி, மூக்கில் இருந்து நீர் வடிவது, தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கான நிவாரணத்தை தனக்குள்ளே வைத்து இருக்கக்கூடியது துளசி இலை.


மஞ்சள் 



கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளலாம். மஞ்சள் இயற்கை கிருமி நாசினி. மஞ்சள் சேர்த்திருக்கும் பொழுது நம்முடைய நுரையீரலில் இருக்கக்கூடிய கெட்ட பாக்டீரியா கெட்ட ஃபங்கஸ் வைரஸ் எல்லாத்தையுமே அழித்து வெளியேற்றும். உங்களுடைய நுரையீரலில் சேர்ந்து இருக்கக்கூடிய ஒட்டுமொத்த சளியையுமே வெளியேற்றக் கூடியது. எவ்வளவு நாள்பட்ட சளியையும் கரைக்கக்கூடியது மஞ்சள். நிறத்திருக்கு நீங்கள் மஞ்சள் சேர்த்துகும்பொழுது அது நுரையீரலில் இருக்கும் அசுத்தத்தை சுத்தமாக்கி எப்பவுமே நுரையீரலை சிறப்பாக செயல்பட வைக்கும். உங்களுடைய தொண்டையில் ஆரம்பித்து மார்பு குழி வரைக்கும் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளையும் குணமாக்க கூடியது மஞ்சள். அதனால்  நாம் மஞ்சளை சேர்த்துக் கொள்வோம்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து முதலில் இருந்து கடைசி வரை நெருப்பை மெலிதாக (low flame) வைத்து கொள்ள வேண்டும். எடுத்து வைத்திருக்கும் பூண்டு பல் நான்கு சிறிதாக நறுக்கியது, கருமிளகு, மஞ்சள், துளசி நான்கு பொருட்களையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி கொண்டு வடித்து வைக்கவும்.


இதையும் படிக்கலாமே :பாதாம் பருப்பு பற்றிய நம்பமுடியாத உண்மைகள்.


காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கொதித்த அந்த மூலிகை தண்ணீரை மிதமான சூட்டில் குடிக்க வேண்டும்.  உங்களுக்கு 100% நிவாரணம் கிடைக்கும் உங்களுடைய நெஞ்சுக்குழியில சேர்ந்து இருக்கக்கூடிய சளி அதனால் வரக்கூடிய இருமல், தொண்டை கரகரப்பு, ஜலதோஷம், தலைவலி, காய்ச்சல் போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளை குணமாக்கவும் நீங்கள் இந்த ஒரு கசாயத்தை குடித்தாலே போதும். இந்த கசாயத்தை நீங்கள் குடிப்பதினால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் அதனால் எந்த ஒரு வைரஸ் பாக்டீரியா பங்கஸும் உங்களை நெருங்காது. 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *