நீண்ட ஆயுளை அதிகரிக்க சாப்பிடவேண்டிய 10 உணவுகள்

நீண்ட ஆயுளை அதிகரிக்க சாப்பிடவேண்டிய 10 உணவுகள் 

நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்ற ,ஆசை நம் அனைவருக்குமே இருக்கும் ஒருவர் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு யோகா, தியானம், உடற்பயிற்சி போன்ற வழிகள் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமான வழி என்னவென்றால்  தினசரி சாப்பிடக்கூடிய உணவும் வாழ்க்கை முறை மாற்றமும் தான் காரணம்.

 நம் உடல் பல வருடம் ஆரோக்கியமாக நோய் என்று இல்லாமல் இருப்பதற்கும் நம் உடலில் இருக்கக்கூடிய செல்கள் டிஎன்ஏ என்னும் மரபணுக்கள் மற்றும் உடலின் மெட்டபாலிசம் இந்த மூன்றும் ஆரோக்கியமாகவும் வளமாகவும் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஹார்ட்வேர் பல்கலைக்கழகம் செய்த ஆய்வின் அடிப்படையிலும் ஏற்கனவே பல வருடம் வாழ்ந்தவர்கள் என்ன மாதிரியான உணவுகள் சாப்பிட்டார்கள் என்பதன் அடிப்படையிலும் பல உணவுகளை  வகைப்படுத்தினார்கள். அந்த வகையில் ஆயுளை அதிகரிக்க நமது இடங்களில் கிடைக்கக்கூடிய 10 சிறந்த உணவுகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஒன்று : பச்சை இலை காய்கறிகள்



ஆயுளை அதிகரிக்க கூடிய உணவுகள் பல இருந்தாலும் அதில் முதலிடத்தில் இருப்பது பச்சை இலை காய்களான கீரைகள் தான். கீரைகளில்  நம் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின்ஸ் மினரல்ஸ் அயன் போலிக் ஆசிட் டயட்ரிபைபர் மற்றும் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இது நம் உடலில் செல்கள் சேதமாவதை தடுப்பதோடு புதிய செல்களின் உற்பத்திக்கும் உதவியாக இருக்கிறது. கீரைகள் நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அடிப்படையாக இருப்பது ஆர் பி சி என்னும் ரத்த சிவப்பணுக்கள் தான். இந்த சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கு மிக உதவியாக இருக்கிறது கீரைகள்.


மேலும் வயது மூப்பு காரணமாக வரக்கூடிய கண்பார்வை மங்குதல் எலும்பு தேய்மானம் மற்றும் சரும சுருக்கம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் வராமல் தடுக்கக்கூடியது கீரைகள்.தினசரி ஏதாவது ஒரு வகையில் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து15.8% சார்ந்த பிரச்சினைகள் வருவது தடுக்கப்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  ஆயுள் அதிகரிக்க விரும்புபவர்கள் தினசரி ஒரு கீரையை உணவில் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது. 

இரண்டு : க்ரூசிபெரோஸ்  வெஜிடபில்ஸ்


க்ரூசிபெரோஸ் வெஜிடபிள்ஸ் என்று சொல்லக்கூடிய கேபேஜ், காலிஃப்ளவர், பிரக்கோலி போன்ற காய்கறிகளில் சல்போராபேன் என்னும் ஆன்டி-ஆக்சிடன்ட் அதிக அளவில் இருக்கிறது இது ஒரு சிறந்த ஆன்ட்டி இன்ஃப்ளமேட்ரியாக செயல்பட்டு உடலில் உண்டாக்கக்கூடிய இன்பிளமேஷனை குறைக்கும். இதன் மூலமாக இன்ஃபிளமேஷன் சார்ந்த பல்வேறு விதமான நோய்களிடம் இருந்தும்

 பாதுகாக்ககூடியது இந்த க்ரூசிபெரோஸ் காய்கறிகள் குறிப்பாக ரத்தநாளங்களில் இன்ஃப்ளமேசன் உண்டாவதை தடுக்கிறது. இதனால்  ஹார்ட் அட்டாக் ஸ்டோக் போன்ற ஆபத்தான பிரச்சனைகள் வராமலும் தடுக்கக்கூடியது இந்த க்ரூசிபெரோஸ் காய்கறிகள். இந்த வகை காய்கறிகளை  கார்போஹைட்ரேட் என்னும் மாவுச்சத்து மிக குறைவாகவும் டயட்ரிபர் எனும் நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கிறது. இதன் காரணமாக டைப் டு சர்க்கரை வராமல் தடுப்பதோடு இரத்த சர்க்கரையும்  கட்டுப்பட்டில் வைத்திருக்க உதவுகிறது இந்த க்ரூசிபெரோஸ் காய்கறிகள். முட்டைக்கோஸ் பிரக்கோலி காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்து கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு ஆயுளும் அதிகரிக்கும்.


இதையும் படிக்கலாமே ; கருஞ்சீரகம் யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது

மூன்று :  கொட்டை வகைகள் 



நம் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான புரோட்டின் விட்டமின்ஸ் மினரல்ஸ் மற்றும் ஏராளமான ஆன்டிஆக்சின் நிறைந்திருக்கிறது. மேலும் ஆல்பாலினோலெனிக் ஆசிட் என்னும் நல்ல கொழுப்பு அமிலங்களும் இருக்கிறது. குறிப்பாக பாதாம் வால்நட் போன்ற நட்ஸில் அதிக அளவிலான ஒமேகா 3 பேட்டி இருக்கிறது இது  சிறந்த ஆன்ட்டி இன்பிலமேட்ரியா செயல்படுவது மட்டுமில்லாமல் இரத்த நாளங்களில் கொழுப்பு கட்டிகள் மற்றும் ரத்தம் உறைதல் போன்றவற்றையும்  தடுக்கிறது.


மேலும் எல்டிஎல் மற்றும் கெட்ட கொழுப்பை கரைத்து மாரடைப்பு போன்ற அபாயகரமான பிரச்சனைகள் வராமல் தடுக்கக்கூடியது நட்ஸ் என்னும் கொட்டை வகைகள்.  தினமும் ஒரு கையளவு சராசரியாக 30 கிராம் நட்ஸ் சாப்பிடுவதன் மூலமாக  20% இறப்பை தள்ளிப்போட முடியும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  ஆயுளை அதிகரிக்க வேண்டுமென்றால் முதல் நாள் இரவே ஒரு கையளவு பாதாம் வால்நட் போன்ற நட்ஸை ஊர வைத்து மறுநாள் காலையில் ஊறிய நட்ஸை சாப்பிட்டு வர ஆயுள் அதிகரிக்கும்.

நான்கு : மீன் 



அசைவ உணவுகளில் ஆயுளை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கும் முதன்மையான உணவு மீன். புரதம் விட்டமின் விட்டமின் பி12 போன்ற சத்துக்களையும்‌ ஹைஅமௌனட் ஆஃப் ஒமேகா 3 பேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. நம்முடைய இடங்களில் கிடைக்கக்கூடிய மத்தி  சூரை கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் அதிக அளவில் ஒமேகா 3 இருக்கிறது. 100 கிராம் கானாங்கெளுத்தி மீனில் 4580 மில்லி கிராம் ஒமேகா 3 மத்தி மீனில் 1692 மில்லிகிராம் ஒமேகா 3, சூரை மீனில் 1710 மில்லி கிராம் ஒமேகா 3 இருக்கிறது.

வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த ஒமேகா 3 அதிகம் நிறைந்த மீன் உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு கேன்சர் கார்டியோவாஸ்குல டிசிஸ் அல்சைமர் பேட்டி லிவர் நோய்கள் வராமல் தடுக்கிறது. நோயினால் ஏற்படும் இறப்பையும் குறைக்கிறது.  ஆயுளையும் சுலபமாக அதிகரிக்க கூடியது மீன்கள்.

 ஐந்து : முட்டை 



முட்டை ஒரு ஆரோக்கியமான உணவு என்பது நம் அனைவருக்கும் தெரியும் முட்டையில் அதிகப்படியான புரதம் கொழுப்பு விட்டமின் ஏ பி விட்டமின் டி போன்ற நம் உடலுக்கு தேவையான எல்லாவிதமான சத்துக்களும் நிறைந்திருக்கிறது. இதன் காரணமாக முட்டையை ஒரு முழுமையான உணவு என்று சொல்லாம். முட்டையில் வேறு எந்த உணவிலும் இல்லாத கொலின் சத்து அதிக அளவில் இருக்கிறது. இது இதய ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஹோமோ சிஸ்டின் எனும் ஹார்மோனை கட்டுப்படுத்தி மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. 

மேலும் மூளையில் புதிய செல்களை உற்பத்தி செய்வதற்கும் மூளையின் இயக்கத்திற்கும் தேவையான சத்து இந்த கொளின் முட்டை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கிறது.  வயதான காலத்தில் ஏற்படக்கூடிய அல்சைமர் என்னும் ஞாபக மறதி குறைபாடு வராமல்  தடுக்கும் இது மட்டும் இல்லாமல் லூதின் சியாசந்தின் எனும் இரண்டு வகையான கரெட்டில் இருக்கிறது. இது வயது மூப்பு காரணமாக வரக்கூடிய கண் பார்வை மங்குதல் மற்றும் ஐகாட்ராக் என்னும் கண்புரை வளர்ச்சி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க கூடியது முட்டை.


மேலும் முட்டை 100% பியூர் புரோட்டின் நிறைந்திருக்கிறது. ஒரு முழு முட்டையில் ஐந்திலிருந்து ஆறு கிராம் வரை புரதச்சத்து இருக்கிறது. புரதம் உடலில் புதிய செல்களை உற்பத்தி செய்வதோடு ஹார்மோன்கள் சீராக சுரக்கவும் தசைகள் வளர்ச்சிக்கும் மிகவும் உதவியாக இருக்கிறது. முட்டை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு பல்வேறு விதமான நோய்களை தடுக்கிறதன் விளைவாக ஆயுளையும் அதிகரிக்கிறது முட்டை. தினமும் முட்டை சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும்.


இதையும் படிக்கலாமே ; நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள்

ஆறு : தயிர் 



பல தலைமுறைகளாக பாரம்பரியமாக நாம் சாப்பிட்டு வரக்கூடிய ஒரு உணவு தயிர். தயிரில் சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், புரோட்டின், விட்டமின் ஏ டி பி 12 போன்ற சத்துக்களையும்  லாக்டோபஸிலஸ் ப்ரோபை ஆக்டிக் பாக்டீரியா அதிக அளவில் இருக்கிறது. இதனை கட் ஃப்ரண்ட்லி பாக்டீரியா என்றும் கூறலாம். தயிரில் இருக்கக்கூடிய இந்த பாக்டீரியாக்கள்  வயிற்றில் இருக்கக்கூடிய நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்களை அதிகரித்து தீமை செய்யக்கூடிய பாக்டீரியாவை அழிக்கும். இதன் மூலமாக ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியது தயிர். தயிரில் இருக்கக்கூடிய பொட்டாசியம்  இரத்த அழுத்தம் சீராக இருக்க உதவி செய்கிறது.


மேலும் தயிரில் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் மெக்னீசியம் பாஸ்பரஸ் விட்டமின் டி போன்ற சத்துகளும் அதிக அளவில் இருக்கிறது. இது எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்குவதோடு கழுத்து வலி ஜாயிண்ட் பெயின் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. இது மட்டும் இல்லாமல் உடலில் இன்ஃப்ளமேஷன் உண்டாவதை தடுப்பதோடு வயதான காலத்தில் ஏற்படக்கூடிய எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகள் வராமல்  பாதுகாக்கிறது. அதனால் தினசரி மதிய உணவில் தயிர் சாப்பிடுவதால்  உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு ஆயுளும் அதிகரிக்கிறது.

ஏழு : திராட்சை 



திராட்சை பழத்திற்கு ஆயுளை அதிகரிக்கும் ஆற்றல் அதிக அளவில் இருக்கிறது. திராட்சை பழத்தில்  விட்டமின் சி கே விட்டமின் பி6 போன்ற வைட்டமின் சத்துக்களும் அதிகப்படியான ஃப்லோவநைட்ஸ் மற்றும் ஆன்டிஆக்சைடு ப்ராபர்டிஸ் இருக்கிறது. இதில் இருக்கக்கூடிய ஆன்டிஆக்சன்  செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு ஆயுளும் அதிகரிக்கும். மேலும் திராட்சையில் 

ஆக்ஸிடேடிவ் ஸ்றெஸ்சை குறைத்து செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு ஆயுளும்  அதிகரிக்கும். 

மேலும் திராட்சைகளை  ரிசர்வட்டால் என்னும் பவர்ஃபுல்லான பாலிபெனால் இருக்கிறது. இது எல் டி எல் என்னும் லோ டென்சிட்டி லிப்போ ஃப்ரோட்டினை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்புகள் படிவதை தடுக்கிறது. இதன் மூலம் ஹார்ட் அட்டாக் ஸ்டோக் போன்ற ஆபத்தான பிரச்சனைகள் வராமல் தடுக்கக்கூடியது திராட்சை. இது மட்டும் இல்லாமல் திராட்சையில் ஆன்ட்டி ஏஜிங் ப்ராபர்டீஸ் அதிகம். இது தோல் சுருக்கம் வராமல் தடுக்கிறதினால் முதுமையான தோற்றம் வராது.  தினசரி ஒரு கையளவு திராட்சை பழம் சாப்பிடுவதால் லைஃப் ஸ்பென் இன்னும் ஆயுளும் அதிகரிக்கலாம் 

எட்டு : கிரீன் டீ



கிரீன் டீயில் ஈஜிசிசி என்னும் பவர்ஃபுல்லான ஆன்டிஆக்சன் இருக்கிறது. இது உடலில் இருக்கக்கூடிய செல்கள் மற்றும் டிஎன்ஏ சேதமாவதை தடுத்து ஆயுளை கூட்டுகிறது.  இது மட்டும் இல்லாமல் கேட்டசீம் செல்லும் ஃப்ளோர்நைட்ஸ் செல்லும் அதிக அளவில் இருக்கிறது. இந்த ஸ்லோகன் அதிக நிறைந்த இந்த கிரீன் டீயை வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பினால் உயிரிழப்பு ஏற்படுவது 22% தடுக்கப்படுவதாக பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.  வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த கிரீன் டீ குடிப்பது மிகவும் நல்லது. 

ஒன்பது :  மஞ்சள் 



மஞ்சள் அனைவர் வீட்டு சமையலறையிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு பொருள். மஞ்சளில்  குற்குமின் எனும் பவர்ஃபுல்லான ஆன்டிஆக்சன் இருக்கிறது. இது உடலில் இன்ஃப்ளமேஷன் உண்டாவதை தடுத்து ஆர்த்ரடீஸ் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. கல்லீரலை சுத்தப்படுத்துவதோடு பேட்டி லிவர் என்னும் கொழுப்புக் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்கிறது.  இது மட்டுமில்லாமல் நம் உடலில் இருக்கக்கூடிய டிஎன்ஏ  டெலோமியோஸ் என்னும் ஒரு அமைப்பு இருக்கிறது. டெலோமியாஸ் பகுதி  சிறியதாக  சிறியதாக ஆயுள் குறைந்து கொண்டே வரும் இதனை சாட்டன் ஆகாமல் தடுத்து நீளமாக்குவதோடு ஆயுளையும் அதிகரிக்க கூடியது மஞ்சள்.


பொதுவாகவே வயது ஆக ஆக பெரும்பாலான செல்கள் முதிர்ச்சி அடைந்து வேலை செய்யாமல் இருக்கும். இதனை பென்சன் செல்கள் என்று சொல்லுவார்கள். செனசன் செல்களை குறைத்து புதிய செல்களின் உற்பத்திக்கு உதவி செய்வதோடு வயதாகும் வேகத்தையும் குறைக்கிறது. அதனால் சமைக்கும் உணவுகளில் மஞ்சள் சேர்ப்பது மட்டும் இல்லாமல் இரவு உணவுக்கு பின்பு மஞ்சள் கலந்த பால் குடித்து வருவதன் மூலமாகவும் ஆயுளை அதிகரிக்கலாம்.

பத்து : பருப்பு வகைகள் 



தினசரி நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் லென்டில்ஸ் என்னும் பரப்பு வகைகளுக்கு ஆயுளை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கிறது. இந்த லென்டில்ஸ் நம் உடலின் ஆரோக்கியத்தை ஜிங் பொட்டாசியம் புரோட்டின் போன்ற ஏராளமான மைக்ரோமேக்ஸ் நிறைந்திருக்கிறது இது மட்டும் இல்லாமல் அதிக அளவிலான நார்ச்சத்தும் அசைவ உணவிற்கு சமமான புரதச்சத்தும் இந்த பீன்ஸ் மட்டும் பருப்பு வகைகள் இருக்கு 

பொதுவாகவே புரோட்டின் மற்றும் பைபர் அதிகம் நிறைந்த டயட் ஃபாலோ பண்றவர்கள்  ஹைப்பர் டென்ஷன் டயபடீஸ் ஒபிசிட்டி போன்ற பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும் மேலும் ரெசிஸ்டன்ஸ் சார்ஜ் என்னும் ஒருவகை கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருக்கு இன்னும் வயிற்றில் இருக்கக்கூடிய ப்ரோபயாடிக் எனும் குட்பேக்ட் உணவாக அமைவதோடு குடல் ஆரோக்கியமாக மேம்படும் இதன் மூலமாக ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியது லெக்கின்ஸ் என்னும் பருப்பு வகைகள் தினசரி பச்சை பயிறு கொண்டை கடலை சோயா பீன்ஸ் ராஜ்மா போன்ற உணவுகளை சேர்ப்பதன் மூலமாக ஆயுளைஅதிகரிக்கலாம்.

ஆயுளை அதிகரிக்க உதவக்கூடிய 10 சிறந்த உணவுகள் என்ன என்பது பற்றி  தெரிந்து கொண்டோம்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *