ஒரு மனிதன் முட்டாளாக இருப்பதற்கும் புத்திசாலியாக இருப்பதற்கும் நம்முடைய மூளையின் செயல்பாடு தான் காரணம். நல்ல ஆரோக்கியமான மூளை ரொம்ப வேகமாகச் செயல்படும். கற்காலத்தில் ஆரம்பித்து மனித வாழ்க்கை இப்பொழுது சந்திரன் 2 வரைக்கும் போய் இருக்கிறது. காரணம் நமது மூளையோட கண்டுபிடிப்புகள் தான். எந்த ஒரு மனிதனும் பிறக்கும்போது ஜீனியஸ்ஸாக பிறக்கிறது இல்லை. சாதாரணமான மனிதனாகத் தான் நாம் பிறக்கிறோம்.
நம்முடைய மூளை நன்றாகச் செயல்பட்டதென்றால் நாமும் ஜீனியஸ் தான். உடம்பில் ஒரு அற்புதமான விஷயம் எதுவென்றால் நம்முடைய மூளை தான். அதனுடைய வேகத்தையும் செயல்பாட்டையும் யாராலும் சரியாகக் கணக்கிட்டு சொல்ல முடியாத அளவிற்கு வேகமாக இருக்கும். மூளை வேகமாகச் செயல்படுவதற்கு நாம் சாப்பிடும் உணவு ரொம்ப முக்கியமானது. மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாமே கிடைக்கும்போது மூளை ரொம்ப ஆரோக்கியமாக இருக்கும். பத்தாததுக்கு நம்மளுடைய சிந்திக்கும் திறன் மற்றும் மெமரி பவரையும் அதிகரிக்கும்.
உடல் எடையை குறைக்கும் 10 விதமான காய்கறிகள்
நம்முடைய உடம்புக்கும் மூளை வளர்ச்சிக்கும் ஹெல்ப் பண்ற ப்ரைன் பவர் கொடுக்கின்ற 12 வகையான உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஒன்று: கொழுப்பு நிறைந்த மீன்கள்
நல்ல கொழுப்பு நிறைந்த மீன் நம்முடைய மூளை வளர்ச்சிக்குத் தேவையான உணவு பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது மீன். இந்த மீன்களில் ஒமேகா 3 நல்ல கொழுப்பு அப்புறம் பேட்டி ஆசிட் இருக்கிறது. இதனால்தான் அதிகமான மீன்களை உணவில் சேர்த்துகிற ஜப்பானியர்கள் இயற்கையாகவே நல்ல மூளை திறனோடு இருக்கிறார்கள்.
நம்முடைய மூளை 60% கொழுப்புகளால் ஆனது ஒமேகா 3 நம்முடைய மூளையின் நரம்புகள் உருவாகுறதுக்கும் சரியாகச் செயல்படுவதற்கும் நம்முடைய ஞாபக சக்தி அதிகமாக இருக்க ரொம்ப முக்கியமானது. அதனால் ஒமேகா 3 அதிகமாக இருக்கின்ற மீன்களை நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது.
இரண்டு: வால்நட்ஸ்
அக்ரூட் பருப்பு என்று சொல்கிறோம். வால்நட்டு மடிந்து மடிந்து இருக்கும் பார்பதற்கு நம்முடைய மூளை மாதிரியே தெரியும். வால்நட்டில் ஒமேகா த்ரீ, டி ஹெச் நிறைய இருக்கிறது. இது நம்முடைய மறதியை போக்கி ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும். அதே நேரத்தில் வால்நட் அல்சைமர் என்று சொல்லப்படுகின்ற மூளை சம்பந்தமான நோய்கள் வராமலும் தடுக்கும்.
வால்நட்டில் உள்ள DHA வளரும் குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும். கர்ப்ப காலத்தில் கருவில் இருக்கின்ற குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு டாக்டர்களால் சிபாரிசு செய்யப்படுகிறது. தினமும் கட்டாயம் ஐந்து வால்நட்ஸ் சாப்பிடுங்கள். இதனால் உங்கள் மூளை மட்டுமில்லாமல் உங்களுடைய உடம்பும் நன்றாக இருக்கும். வால்நட் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமலும் பாதுகாக்கும். இப்படி வால்நட்டோட உபயோகம் நிறைய இருக்கிறது.
மூன்று: முட்டை
மூளை வளர்ச்சிக்குச் சம்பந்தப்பட்ட பல விட்டமின்கள் முட்டையில் இருக்கிறது. முட்டையில் விட்டமின் பி6, பி12 முக்கியமாகக் கொளின் என்று ஒன்று இருக்கிறது. ஒரு முக்கியமான மைக்ரோ நியூட்ரியன்ட். இதைப் பயன்படுத்தி தான் நம்முடைய உடம்பு அதற்குத் தேவையான அசட்டில் கொளினை உருவாக்கிக்கொள்கிறது. இந்த அசட்டில் கொளின் நம்முடைய ஞாபக சக்திக்கு ரொம்ப முக்கியமானது.
பல ஆராய்ச்சி முடிவுகளில் கொளின் அதிகமாகச் சாப்பிடுவது நல்ல ஞாபக சக்தியையும் மூளை திறனையும் தரும் என்று சொல்லுகிறது. கொளின் முட்டை சாப்பிடுவது மூலமாக நம்முடைய உடம்பிற்கு சுலபமாகக் கிடைக்கும். கொளின் முட்டை கருவில் இருக்கிறது. முட்டையில் இருக்கிற பி12 மூளையில் இருக்கிற ரசாயன மாற்றங்களைச் சரியா நடக்க வைக்க ஹெல்ப் பண்ணுகிறது. அதனால் கண்டிப்பாக உங்களுடைய சாப்பாட்டில் அடிக்கடி முட்டையைச் சேர்த்துக்கவும்.
முருங்கைக் கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
நான்கு: பூசணி விதைகள்
பூசணி விதைகளில் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் நிறைய இருக்கிறது. இது நம்முடைய உடலில் ஃப்ரீ ராடிகல்ஸ் என்ற நச்சுப் பொருட்களைத் தடுக்கிறது. மூளைக்கு தேவையான மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் பூசணி விதைகளில் அதிகமாக இருக்கிறது. அதாவது அயன் சிங்க் காப்பர் மாதிரியான மூளைக்கு தேவையான மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் நிறைய இருக்கிறது.
இந்த மைக்ரோ நியூட்ரியண்ட்ஸ் நமக்கு ஏற்பட்ட டிப்ரெஷன்ஸ் அல்சைமர் மாதிரியான நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. அதே நேரத்தில் நம்முடைய நரம்புகள் சரியான வகையில் சிக்னல் அனுப்புறதுக்கும் சிக்னல் வாங்கறதுக்கும் ஜிங்க்கும் காப்பரும் ரொம்ப முக்கியம். மெக்னீசியம் நாம் ஒரு விஷயத்தைச் சீக்கிரமாகக் கத்துகிறதுக்கும் சரியா ஞாபகம் வைத்துக்கொள்வதற்கும் ரொம்ப முக்கியம்.
ஐந்து: பால்
பாலில் ப்ரோட்டீனும் விட்டமினும் நிறைய இருக்கிறது. இது உங்களுடைய மூலையில் தகவல்கள் பாஸ் ஆவதற்கு ரொம்ப முக்கியமானது. சமீபத்தில் செய்த ஒரு ஆய்வில் பால் நிறைய குடிச்சவங்களோட மூளையில் க்ளிட்டாத்தையும் ஒன்னு நிறைய இருக்கிறது என்று தெரிந்தது. இது நிறைய பிரைன் டிஸீஸில் இருந்து உங்களைக் காப்பாற்றும். மேலும் பால் உங்களுடைய மெமரி பவருக்கு ரொம்ப முக்கியமானது.
ஆறு; மஞ்சள்
நம் முன்னோர்கள் சமையலில் மஞ்சள் பயன்படுத்தியதற்கு நிறைய காரணம் இருக்கிறது. அது கிருமி நாசினி மட்டுமல்ல நம்முடைய மெமரி பவருக்கும் நல்லது. ஒரு குரூப்பை இரண்டாக பிரித்து கலிபோனிர்யா யூனிவர்சிட்டியில் ஒரு ஆராய்ச்சி செய்தார்கள். ஒரு பிரிவினருக்கு மஞ்சளில் இருக்கின்ற குறுக்குமினை மருந்தாக 18 மாதத்திற்கு கொடுத்தார்கள். இன்னொரு பிரிவினருக்கு குர்குமின் இல்லாத மருந்தாகக் கொடுத்தார்கள்.
மஞ்சளுடைய குர்குமின் சாப்பிட்ட பிரிவினருக்கு மெமரி பவர் சாப்பிடாதவர்களை விட 28% இந்த 18 மாதத்தில் அதிகமாக இருந்ததை கண்டுபிடித்தார்கள். இப்பொழுது வெளிநாடுகளில் நம்ம ஊரு மஞ்சளை மாத்திரையாகச் சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. மஞ்சள் நம்முடைய உடம்பில் சரட்டோனின் என்கிற ஒரு கெமிக்கலை சுரக்க வைக்கிறது. இது நமக்கு ஹேப்பியான பீலிங்கை தரும். நம்முடைய மூளையிலிருந்து புது செல்கள் வளர்வதற்கு ரொம்ப ஹெல்ப் பண்ணுகிறது. ஆதலால் மஞ்சளை மறந்துவிடாதீர்கள்.
ஏழு: கொண்டைக்கடலை
இதில் நிறைய ப்ரோட்டீனும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸும் இருக்கிறது. கொண்டைக்கடலையில் நிறைய மெக்னீசியம் இருக்கு. இதிலே உள்ள ப்ரோட்டீனும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸும் சுறுசுறுப்பாக இருக்கிறதுக்கும் மூளைக்கு இரத்தம் சரியாகப் போவதற்கும் ஹெல்ப் பண்ணுது.
எட்டு: கிரீன் டீ
கபின் அப்புறம் ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைய இருக்கு. காபியில் இருக்கின்ற அதே கபின் கிரீன் டீயிலும் இருக்கு. மூளை எப்பவும் விழிப்புடன் கவனிக்க உதவி செய்யும். ஹெல்த்தியாமின் மூளையோட எலக்ட்ரிக்கல் சிக்னல்ஸ் வேகமாக அனுப்பும். அதே நேரத்தில் நீங்கள் முக்கியமான நேரங்களில் அதிகமா பதட்டப்படாமல் நிதானமாகச் செயல்படுவதற்கும் ஹெல்தியாவின் ரொம்ப முக்கியமானது. கிரீன் டீ உங்களுடைய மெட்டபாலிசத்தை சீராக்கி உங்களுடைய உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் குறைத்து இல்லாமல் செய்கிறது. கிறீன் டீயில் இருக்கின்ற ஆன்ட்டி ஆக்சிடன்ஸ் உங்களுடைய உடம்பிற்கு நிறைய நல்லது செய்யும்.
ஒன்பது: ஆரஞ்சு
ஆரஞ்சு குடிக்கிறவர்கள் நிறைய பழங்கள் சாப்பிடறவங்களை வைத்து யுனிவர்சிட்டியில் ஒரு பெரிய ஆராய்ச்சி செய்தார்கள். அதிலே கிட்டத்தட்ட 27 ஆயிரம் பேர் கலந்துட்டாங்க அதிலே தொடர்ந்து ஆரஞ்சு ஜூஸ் குடிக்கிறவங்களோட யோசிக்கும் திறன் குடிக்காதவங்களை விட 47% அதிகமாக இருந்தது என்று கண்டுபிடிச்சுருக்காங்க. ஆரஞ்சு குடிக்கிறது உங்களுடைய ஞாபக சக்திக்கு ரொம்ப நல்லது
பத்து: சாக்லேட்
அநேகமாகச் சாக்லேட் உங்கள் எல்லாருக்குமே பிடிக்கும். டார்க் சாக்லெட் அப்புறம் கொக்கோ பவுடர் ஃப்ளவர் ஆயிடுச்சுன்னு நிறைய இருக்கு. நீங்கள் புதுசா கத்துக்கிற விஷயத்தைக் கவனமாகக் கற்றுக்கொள்ளவும் ஞாபகம் வைத்துக்கொள்ளவும் உதவி செய்கிறது. உங்களுடைய ஸ்ட்ரஸை குறைக்கிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். அப்புறம் இன்னொரு ஆராய்ச்சி முடிவில் அதிகமாகச் சாக்லேட் சாப்பிட்டவர்கள் பாசிட்டிவ் பீலிங்ஸோட இருக்கிறார்கள் என்று சொல்கிறது.
பதினொன்று: நட்ஸ்
மூளைக்கு தேவையான நியூட்ரியன்ட்ஸ் வால்நட்ஸில் மட்டும் இல்லை வேறுசில நட்ஸில் எல்லாம் இருக்கு. அது என்னவென்றால் பாதாம், நிலக்கடலை. இந்த நட்ஸ்களில் விட்டமின் ஈ நிறைஞ்சிருக்கும் விட்டமின் ஈ நாம் வயசாகும்போது வரும் ஞாபகமறதி பிரச்சனைகளைத் தீர்க்கும். வேர்க்கடலை நிறைய நீயாஸ் என்று இருக்கிறது. இதன் மூலம் வேகமாகச் செயல்படுவதற்கும் அல்சைமர் நோய் வராமலும் தடுப்பதற்கும் உதவி செய்கிறது. சாப்பாட்டில் நிறைய நட்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பனிரெண்டு: ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலில் மூளையை பாதுகாக்கும் பாலிபினால்ஸ் என்கிற ஆண்ட்டி ஆக்சிடென்ட் இருக்கு. அதே நேரத்தில் மூளைக்கு ரொம்ப தேவையான விட்டமின் ஈ மற்றும் விட்டமின் கேவும் இருக்கு. விட்டமின் ஈயும் விட்டமின் கேவும் நம்முடைய மூளையின் ஞாபக சக்தியை அதிகப்படுத்தும். ஆலிவ் ஆயில் நம்முடைய மனதின் ஸ்ட்ரஸ் லெவல் டிப்ரஷனை குறைக்கிறது. அதனால் எப்பொழுது எல்லாம் முடியுதோ ஆலிவ் ஆயிலை சேர்த்துக்கொள்ளுங்கள்.
இதுவரை சொன்ன எல்லா உணவுகளையும் சரியான முறையில் சாப்பாட்டில் சேர்த்துக்கிறது உங்களுடைய மூளையின் ஆரோக்கியத்திற்கும் நன்றாகச் செயல்படுவதற்கும் உபயோகமாக இருக்கும்.