நரம்பு சுண்டி இழுத்தல் , கால் மரத்துப் போதல், கால் நரம்பு வலி / Home remedy for sciatica nerve pain.
நடக்க முடியாதபடிக்கு கால் வலிக்கிறது திடீர்னு கால் இழுக்கிறது கால் அப்படியே மரத்து போறது கால் சுண்டி இழுக்கிற மாதிரி இருக்கிறது இதுபோன்ற பிரச்சனைகளினால் அவதிப்படுறவங்க இந்த விதமான பிரச்சனைகளை தான் நம்ம சிஆர்டிகா அப்படின்னு சொல்றோம். இந்த பிரச்சனைனால அதிக அவதிப்படுறது யாருன்னா பெண்கள் தான் அதிலும் இரவு நேரத்தில் தூங்கிட்டு இருக்கும்போது கூட இந்த பிரச்சினைனால நிறைய பேரு அவதிப்படுறாங்க.
இந்த வலி வந்தால் கால்கள் அசைக்க முடியாத அளவுக்கு கடுமையான வலி வரும். இந்த பிரச்சனைதான் சிஆர்டிகா நரம்பு இழுத்தல். சிஆர்டிகா என்பது ஒரு நரம்பு உடலின் பின்பகுதியில் இருந்து கணுக்கால் வரைக்கும் தொடை கால் நடுப்பகுதியில் அமைந்திருக்கக்கூடிய ஒரு முக்கியமான நரம்பு. இந்த சிஆர்டிகா நரம்பு நம் உடம்பில் இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய நரம்பு. சிஆர்டிகா நரம்பு தான்.
மூளையிலிருந்து கால்களின் இயக்கத்திற்கு தேவையான அனைத்து தகவல்களையும் கடத்தக்கூடிய ஒரு முக்கியமான நரம்பு. இந்த சிஆர்டிகா நரம்பு நம்முடைய கால்களை பயன்படுத்தி செய்யக்கூடிய அனைத்து வேலைகளுக்கும் அடிப்படையாக இருப்பது இந்த சியாட்டிக்க நரம்பு தான்.
இந்த நரம்புகளை ஏதாவது பிரச்சனை ஏற்படும் போது அல்லது பலகீனம் அடையும்போது இந்த சிஆர்டிகா பிரச்சினை வந்து ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை எப்படி சின்ன சின்ன மருத்துவ பொருட்களைக் கொண்டு கம்ப்ளீட்டா நிரந்தரமாக க்யூர் பண்றது.
இதையும் படிக்கலாமே ; காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்
ஜின்ஜர் ஆயில் இஞ்சி எண்ணெய்
இந்த எண்ணெய் மெடிக்கல் ஷாப் அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இது ஒரு ஆன்டி இன்புளமேட்டரி ஆயில் கடுமையான வலியை கூட உடனடியா ஸ்டாப் பண்ணக்கூடியது ஜிஞ்சர் ஆயில். இந்த ஆயில்ல ஒரு நாலு அஞ்சு டிராப் கால்களில் விட்டு நல்ல மசாஜ் பண்ணாலே போதும் வலி வந்து உடனே வந்து குறைவதை உணர முடியும்
அது மட்டும் இல்லாமல் கால்களில் இருக்கக்கூடிய நரம்புல இன்போர்மஷன் குறைந்து சீக்கிரமாவே வந்து க்யூர் பண்றதுக்கு உதவியா இருக்கும். இந்த சிஆர்டிகா பிரச்சனையினால் அவதிப்படுறவங்க கண்டிப்பா இந்த ஜிஞ்சர் ஆயில வாங்கி வச்சுக்கோங்க ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும்.
மிதமான சுடுதண்ணீர்
சுடுதண்ணீர் அல்லது மிதமான சுடுதண்ணீர் பயன்படுத்தி ஒத்தடம் கொடுக்கிறது. மிதமான சூட்ல இருக்கக்கூடிய தண்ணில காட்டன் டவலை டிப் பண்ணி நல்லா புழிஞ்சிட்டு கால்கள் முழுவதும் நல்லா ஒத்தடம் கொடுக்கனும். இப்படி தொடர்ந்து செய்துவருவதன் மூலம் கால்களில் உள்ள நரம்புகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
அதுமட்டுமில்லாமல் நரம்புல இருக்கக்கூடிய இன்பர்மேஷனும் சீக்கிரமாவே கியூர் ஆவதற்கு உபயோகமா இருக்கும். கால் வலியிலிருந்தும் நல்ல நிவாரணம் கிடைக்கும். துண்டு உபயோகப்படுத்த முடியாதவங்க ஹார்ட் பேக் வாங்கி வச்சுக்கலாம். இதுல ஹாட் வாட்டர் ஊத்தி நீங்க ஒத்தடம் கொடுக்கலாம்.
நல்ல ஒரு ரிலீஃப் கொடுக்கும் இந்த மாதிரி தினமும் 12 முறை கூட நீங்க செய்துட்டு வரலாம். இப்படி செய்துட்டு வரும்போது பிரச்சினைக்கு உண்டான கால் வலி விரைவில் குணமாகும்.
இதையும் படிக்கலாமே ; உடல் எடை குறைய தினமும் குடிக்க வேண்டிய சூப்பர் ட்ரின்க்
எப்சம் சால்ட்
எப்சம் சால்ட் இதுவும் மெடிக்கல் ஷாப் அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதுல அதிகப்படியான மெக்னீசியம் இருக்கு இயற்கையாகவே வலிக்கு நல்ல நிவாரணம் கொடுக்கக்கூடியது. நல்ல மிதமான சூட்டில் இருக்கக்கூடிய ஹாட் வாட்டர்ல ரெண்டு ஸ்பூன் எப்சம் சால்ட் விட்டு நல்ல மிக்ஸ் பண்ணிட்டு ஹாட் வாட்டர் தொடையிலிருந்து கால் வரைக்கும் தினமும் ஊத்திட்டு வந்தாலே போதும் இந்த வலியில் இருந்து ஒரு பூரணமான விடுதலை கிடைக்கும். கண்டிப்பா தினமும் முயற்சி பண்ணிட்டு வாங்க.
இப்ப உள் மருந்தா இந்த சிஆர்டிகா பிரச்சனை குணமாவதற்கு என்ன மருந்து எடுத்துக்கலாம் என்றால் பூண்டு பால் ஒரு அற்புதமான தீர்வு கொடுக்கக் கூடியது இந்த சிஆர்டிகா பிரச்சனைக்கு. பூண்டு இயற்கையாகவே ஒரு ஆன்டி இன்ப்லாம்டரி பிராப்பர்ட்டி இது நரம்புல இருக்கக்கூடியது அது மட்டும் இல்லாம ரத்த ஓட்டம் சீராக இயங்குவதற்கு ரொம்பவே உதவியா இருக்கும். இந்த பூண்டு பால் எப்படி செய்வதுன்னா 8 லிருந்து 10 பல் பூண்டுடன் ஒரு கிளாஸ் பால் ஒரு கிளாஸ் தண்ணீர் இந்த மூன்றையும் நன்றாக கலந்து கொண்டு அந்த கலவையை நன்றாக கொதிக்க விடவேண்டும்.
பால் கலவை நன்றாக கொதித்து ஒரு டம்ளராக வந்ததும் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இப்ப நமக்கு இந்த பூண்டு பால் தயாராகிடுச்சு. தினமும் இந்த பூண்டு பாலை குடித்து வந்தால் ஒரு வாரத்திலேயே நல்ல ஒரு மாற்றம் தெரியும். ஒரு 100% நிவாரணம் கொடுக்கக்கூடியது.
மஞ்சள் பால்
மஞ்சள் கலந்த பாலும் நீங்க தினமும் எடுத்துட்டு வரலாம் இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாத்தி மாத்தி கூட நீங்க எடுத்துட்டு வரலாம் ஒரு நாள் பூண்டு பால் குடிக்கலாம் ஒரு நாள் மஞ்சள் பால் குடிச்சிட்டு வரலாம் இப்படி ரெண்டையும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாத்தி மாத்தி குடிச்சிட்டு வரும்போது இந்த சிஆர்டிகா பிரச்சனையிலிருந்து 100% நிவாரணம் ஆவதற்கு ரொம்பவே உபயோகமாக இருக்கும்.
.இதையும் படிக்கலாமே ; அறிந்து கொள்ள வேண்டிய ஏழு ஆரோக்கிய குறிப்புகள்
இந்த சிஆர்டிகா நரம்பு பிரட்சினைக்கு என்ன மாதிரியான உணவு சாப்பிட்டு வரணும். விட்டமின் பி12 மற்றும் விட்டமின் டி ரொம்பவே அவசியமான சத்துன்னு கூட சொல்லலாம் இந்த விட்டமின் பி12 எதிலெல்லாம் அதிகமா இருக்கு. அசைவ உணவுகள் அனைத்திலுமே விட்டமின் பி12 இருக்கு எந்தெந்த உணவுகள் எல்லாம் விட்டமின் பி12 அதிகமா இருக்குனா
கடற்சிப்பிகள் ஈரல் வகைகள்.
உதாரணமா மட்டன் லிவர் சிக்கன் லிவர் இதுல எல்லாம் அதிக அளவில் விட்டமின் பி12 இருக்கு வேற எதுலலாம் இருக்கு என்றால் மீன் இறைச்சி முட்டை அனைத்திலும் அதிக அளவில் விட்டமின் பி12 அடங்கி இருக்கு. சைவ உணவில் எதில் எல்லாம் விட்டமின் பி12 அடங்கி இருக்கு என்றால் பால் சார்ந்த பொருட்கள் பால் தயிர் சீஸ் விட்டமின் பி12 இருக்கு சோயாபால்ல அதிக அளவுல விட்டமின் பி12 இருக்கு. இந்த உணவுகள் எல்லாம் தினமும் சாப்பிட்டு வரும்போது இந்த சிஆர்டிகா நரம்பு வலுப்படுத்த முடியும் அதே மாதிரி விட்டமின் டி ரொம்பவே அவசியம்
சூரிய ஒளி
இது இயற்கையாகவே நமக்கு கிடைக்க கூடியது சூரிய ஒளியில் இருந்து இயற்கையாகவே நமக்கு கிடைக்கும். தினமும் ஒரு அரை மணி நேரம் சூரிய ஒளியில் நிற்க வேண்டும். அப்படியே சூரிய ஒளியில் நிற்க முடியாதவர்கள் சப்ளிமெண்ட்டா எடுத்துக்கலாம்.
விட்டமின் டி3 எளிதாக கிடைக்கூடிய சீனியை வாங்கி பயன்படுத்தலாம் நரம்பு இழுத்தல் பிரச்சனையை எப்படி சரிசெய்வது எவ்வாறு குணமாக்குவது என்பது பற்றி தெரிந்து கொண்டு பயனடையுங்கள்.