Clear unwanted thoughts
தேவையற்ற எண்ணங்கள் உங்களுக்குக் கவலையையோ மன சோர்வையை ஏற்படுத்தும் அது நம் வாழ்க்கையில் அனுபவிக்கும் மற்ற சந்தோஷங்கள் எல்லாத்தையும் கெடுத்துவிடும். நமக்கு அடிக்கடி வரும் தேவையற்ற எண்ணங்களை அழிப்பது எப்படி ?
முதலில் உங்களுக்கு அடிக்கடி வரும் எண்ணங்களைக் குறித்துக்கொள்ளுங்கள் அதிலே நமக்குத் தேவையானது எது தேவையில்லாத எண்ணங்கள் எது என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும். அதனால் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் அந்தத் தேவையில்லாத எண்ணங்கள் எங்கிருந்து வருகிறது எதன் மூலம் வருதுன்னு யோசிங்க.
இதையும் படிக்கலாமே:பெண்கள் கள்ள உறவில் ஈடுபடுவதற்கான காரணங்கள்
நண்பர்களிடம் பேசும் வார்த்தைகள், பார்க்கும் படம், கேட்கும் பாடல், வீட்டில் பிரச்சனை இப்படி ஏதாவது ஒரு இடத்தில் இருந்துதான் அந்த மாதிரியான எண்ணங்கள் வந்திருக்கும். அப்படி இருந்தால் அதெல்லாம் மாற்றுங்கள். நம்மிடம் இருக்கும் தேவையற்ற எண்ணங்களை நீக்கும் வரைக்கும் மேலும் தேவையற்ற எண்ணங்களைச் சேர்க்க வேண்டாம். அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
இரண்டாவது: தினமும் சில நிமிடம் தனியாக இருந்து எனக்குத் தேவையில்லாத எண்ணங்கள் இதெல்லாம் தேவையில்லை இதை நான் பயன்படுத்தமாட்டேன் என் எண்ணத்திலிருந்து இப்போதே நான் இதை வெளியேற்றுகிறேன் என்று சொல்லுங்கள். உண்மையாகவே நீங்கள் அடிக்கடி இதைச் சொல்லும்போது தேவையில்லாத எண்ணங்கள் உங்களிடமிருந்து வெளியே செல்லும்.
தூங்கும்போது கூட நீங்கள் இந்த எண்ணங்கள் எல்லாம் எனக்கு வேண்டாம் இதனால் நான் பாதிக்கப்படுகிறேன் காலையில் எழும்போது எனக்கு இந்த எண்ணங்கள் இருக்கக் கூடாது என்று உங்கள் மனதுக்கு கட்டளையிடுங்கள். சில மாதங்கள் செய்து பாருங்கள் அவரைக் காலையில் எழுந்து அந்த நாட்களை நீங்கள் பார்த்தாலே தெரியும் எண்ணங்களில் எப்படி மாற்றம் இருக்கிறது என்று.
மூன்றாவது:நல்ல எண்ணத்தை விதியுங்கள்.நமக்கு எது தேவையோ அந்த மாதிரி எண்ணங்களை மட்டும் உள்ளே செலுத்துங்கள். என்னால் முடியும், சந்தோசம், மகிழ்ச்சி, வெற்றி, அமைதி இப்படி உங்களுக்கு எந்த எண்ணம் தேவையோ அதை மட்டும் அடிக்கடி உச்சரித்துக் கொண்டே இருங்கள். நல்ல எண்ணங்கள் உங்களுக்கு நிறைய இருக்கும்போது நம்மிடம் தேவையில்லாத எண்ணங்கள் வராது.
இதையும் படிக்கலாமே: பெண்களை திரும்பி பார்க்க வைக்கும் ஆண்களின் குணங்கள்
அதேபோல எந்த நேரத்தில் உங்களுக்குத் தீய எண்ணம் வருகிறது என்று குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் வேறு ஒன்றை செய்து பாருங்கள். இப்படி சில நாள் செய்தால் உங்களை ஆட்டிப்படைக்கும் தேவையான எண்ணங்கள் பறந்து விடும். இந்த மூன்று விஷயத்தில் நீங்கள் நன்றாகக் கவனித்தாலே தெரியும் எல்லாமே மனம் திரும்பி வேலைதான் என்று எண்ணங்களை மாற்றுவது எளிது கெட்ட நிலை நீக்கத் தினமும் ஒரு பேப்பரில் நல்ல எண்ணங்களை எழுதி அதைச் சில முறை படிக்கலாம்.
மனதுக்குள் மெதுவாக உச்சரிக்கலாம் மந்திரம்போல நல்ல நல்ல வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். பொதுவாகத் தியானம் மற்றும் அமைதியாக இருப்பது அதிகம் பேசாமல் இருப்பது இப்படி இதைச் சரியாகக் கடைபிடித்தால் நல்ல எண்ணங்கள் தான் அதிகம் இருக்கும் இதைக் கடைபிடியுங்கள் மனதை ஆட்டிப்படைக்கும் தேவையில்லாத எண்ணத்தை விரட்டலாம்.