தேங்காய் பூவின் மருத்துவ பயன்கள் | Thengai Poovin Maruthuvam

(Top 10 Health Benefits of Coconut Embryo )

தேங்காய் பூவின் மருத்துவ பயன்கள். தேங்காய் பூ நம் எல்லோருக்கும் தெரிந்த அற்புதமான பூ. ஆனால் இந்த தேங்காய் பூ பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.நன்கு முற்றிய தேங்காயை மண்ணில் புதைத்து வைத்து மூன்று நான்கு மாதங்கள் கழித்து பார்க்கும்போது தேங்காய் முளைவிட்டு வளர ஆரம்பித்திருக்கும். இந்த முளைவிட்ட தேங்காயின் உட்பகுதியில் இருக்கக்கூடிய கரு வளர்ச்சிதான்  தேங்காய் பூ. தேங்காய் பூவை தேங்காய் சீம்பு, தேங்காய் கரு, கோக்கனட் ஆப்பிள், ஸ்ப்ரவுடட் கோகோனெட் என பல பெயர்களில்  அழைக்கிறார்கள்.

தேங்காயை விடவும் தேங்காய் பூவில் பல மடங்கு சத்துக்கள் அதிகம். அதிகமான விட்டமின் சி, விட்டமின் பி1, பி3, பி5, பி6, பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், அயன் என ஏராளமான சத்துக்கள் நிறைந்தது இந்த தேங்காய் பூ. அதிக சத்துக்கள் மட்டும் இல்லாமல் நம் உடலில் ஏற்படக்கூடிய தீராத நோய்களையும் எளிதில் குணமாக்கும் ஆற்றல் இந்த தேங்காய்ப்பூவிற்கு உண்டு. இதன் காரணமாக இதை சூப்பர் ஃபுட் என்று சொல்லுவார்கள்.

சூப்பர் புட் என்று சொல்லக்கூடிய  தேங்காய் பூவை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய 10 சிறந்த நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஒன்று: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

தேங்காய் பூவில் நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாக இருக்க தேவையான விட்டமின் சி ஒமேகா 3, ஒமேகா 6, பேட்ரியாசிட் அதிக அளவில் இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும் இது ஒரு ஆன்டிவைரல் ஆன்டி பங்கள் ஆன்டி பாக்டீரியல் ப்ராபர்டீஸ் அதிக அளவில் நிறைந்து இருக்கிறது. இதனால் பல்வேறு நோய்க்கிருமிகளிடமிருந்தும் வியாதிகளிடமிருந்தும் பாதுகாக்ககூடியது இந்த தேங்காய் பூ.

இரண்டு: செரிமான கோளாறுகளை குணமாக்கும்



முளைவிட்ட தேங்காய் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். எளிதாக ஜீரணிக்க கூடியது. இதில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் செரிமானம் சார்ந்த தொந்தரவுகளான அஜீரணம் அசிடிட்டி வயிற்று புண் போன்ற பிரச்சனைகளையும் குணமாக்கும்.  இதில் இருக்கக்கூடிய  நார்ச்சத்து குடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கழிவுகளை எளிதில்  வெளியேற்றும். இதன் மூலமாக மலச்சிக்களும் நீங்கும்.

மூன்று: இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்

,பொதுவாக தேங்காயில் இனிப்புச் சத்து உண்டு என்கிறதினால் சர்க்கரை நோயாளிகள் அதிகம் சேர்க்கக்கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் இந்த முளைவிட்ட தேங்காய் பூ இன்சுலினை தூண்டி ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவி செய்யும். இதன் மூலமாக சர்க்கரை நோயாளிகளும் எந்த பயமும் இல்லாமல் இந்த தேங்காய் பூவை சாப்பிடலாம். இரத்த சர்க்கரை அளவுகளும் சீராக இருக்கும்.

நான்கு: புற்றுநோய் வராமல் தடுக்கும்

தேங்காய் பூவில்  அதிகப்படியான ஆன்ட்டி நியூட்ரியன்ட்ஸ், ஆன்ட்டி ஆக்சன் மற்றும் ஆன்டி கேன்சர் பிராப்பர்டீஸ் அதிகம் நிறைந்திருக்கிறது. இது கேன்சர் கட்டிகள் உருவாகுவதற்கு காரணமாக இருக்கக்கூடிய ஃப்ரீ ராடிகல்ஸ் என்னும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றும். இதன் மூலமாக  பல்வேறு விதமான கேன்சர் வராமலும் தடுக்கக்கூடியது.

தேங்காய்ப்பூ.

ஐந்து: தைராய்டு சுரப்பை சீராக்கும்



தைராய்டு ஹார்மோன் மிக அதிக அளவிலோ அல்லது குறைவான அளவிலோ சுரக்கும். இப்படி சீரற்று சுரக்கும் தைராய்டு ஹார்மோனை சீராக்கும் ஆற்றல் இந்த தேங்காய்ப்பூவிற்கு உண்டு. தைராய்டு சுரப்பில் இருக்கக்கூடிய செல்களை சீர்படுத்துவதோடு தைராய்டு சுரப்பியின் ஆரம்பத்தையும் பாதுகாக்கும்.

ஆறு: இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

தேங்காயில் சாக்ரெட் பேட் என்னும் கொலஸ்ட்ரால் அதிகளவில் இருக்கிறது என்பதினால் இது எல்டிஎல் கொலஸ்ட்ராலை எளிதில்  அதிகரிக்கும். ஆனால் முளைவிட்ட தேங்காய் பூ எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து எச் டி எல் என்னும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இதன் மூலமாக கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக இருப்பதோடு இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் தேங்காய் பூ. தேங்காய் பூ சாப்பிடும்போது அது உடலில் அமில கார அளவு என்று சொல்லக்கூடிய ph அளவை சீராக வைக்க உதவி செய்யும். இதன் காரணமாக உடலின் அமிலத்தன்மை  உண்டாகும். சிறுநீரக கற்கள் வராமல்  தடுக்கும். இது மட்டுமில்லாமல் யூரின் டிராக் இன்பெக்சன் எனும் சிறுநீரகத் தொற்றுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படக்கூடியது இந்த தேங்காய் பூ.

எட்டு: மாதவிடாய் கோளாறுகளை குணமாக்கும்

பெண்களுக்கு ஏற்படக்கூடிய முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று ஹெவி பீரியட் என்னும் பிலீடிங் டிஸ்ஆர்டர் தேங்காய் பூவில் இருக்கக்கூடிய சத்துக்கள் அதிக உதிரப்போக்கு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். இது மட்டும் இல்லாமல் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெக்டரான் போன்ற ஹார்மோன்களை நடுநிலைப்படுத்தி ஒழுங்கற்ற மாதவிடாயை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் தேங்காய் பூவுக்கு உண்டு.

ஒன்பது: உடல் எடையை குறைக்கும்



தேங்காயில் கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் என்கிறதால் உடல் எடை அதிகமாக இருக்கிறவர்கள் தேங்காயை தவிர்ப்பதுண்டு. ஆனால் தேங்காய் பூவில் கலோரிகள் மிகவும் குறைவு மாறாக உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொழுப்பை கரைக்கும் அதிக உடல் எடை இருக்கிறவங்களும் எந்த பயமும் இல்லாமல் தேங்காய் பூவை  சாப்பிட்டு வரலாம்.

பத்து: சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

தேங்காய் பூவின் மருத்துவ பயன்கள். தேங்காய் பூவில் ஆன்ட்டி ஏஜிங் பிராப்பர்ட்டீஸ் அதிகம் நிறைந்திருக்கிறது. இது மட்டும் இல்லாமல் ஸ்கின் கொலாஜன் செல்களுக்கு தேவையான ஒமேகா 3 ஒமேகா 6 போன்ற நல்ல கொழுப்பு அமிலங்கள் மிகுதியாக இருக்கிறது இதன் காரணமாக சருமம் பளபளப்பாகவும் பொலிவாகவும் இருப்பதற்கு உதவி செய்யும். மேலும் சருமத்தில் ஏற்படக்கூடிய வெண்புள்ளிகள் பருக்கள் தேமல் போன்ற பிரச்சினைகள் வராமலும் தடுக்கக்கூடியது தேங்காய்ப்பூ.

இவ்வளவு நன்மைகள் தரக்கூடிய இந்த தேங்காய் பூவை இனி கண்டிப்பா வாங்கி சாப்பிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *